வாக்கும்,வக்கும்


கடாபி சுட்டுக் கொலை,,?

லிபிய அதிபர் கடாபி இன்று சர்வதேச படையினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை நேசனல் டிரான்சிசனல் கவுன்சில் கமாண்டர் உறுதி செய்துள்ளார். லிபியாவை பல ஆண்டுகாலமாக ஆட்சி செய்து வந்த அதிபர் கடாபி ஆட்சியை எதிர்த்து லிபியாவில் போராட்டம் வெடித்தது. லிபிய மக்களோடு இணைந்து அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் இணைந்துகடாபிக்கு எதிரான் உள்நாட்டுப்போரில்இறங்கின. அமெரிக்க ஆதரவு படைகள் தலைநகரையும் கைப்பற்றியதால் கடாபி தலைமறைவானார். அவரது எதிர்ப்பாளர்கள், லிபிய நாட்டில் கடாபிக்கு ஆதரவான பகுதிகளை ஒவ்வொன்றாக கைப்பற்றிவந்தனர். அமெரிக்கப் படைகள் கடாபியின் உறவினர்களை குறி வைத்துக்கொன்றுவந்தது.இதுவரை கடாபியை மட்டும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்து வந்தது. அவரை பிடிக்கும் முயற்சியில், நேட்டோ உள்ளிட்ட சர்வதேச படைகள் ஈடுபட்டிருந்தன. இந்நிலையில், கடாபி பிறந்த இடமான ஷிர்தே நகரில், நேட்டோ படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அங்கு நின்றுகொண்டிருந்த வாகனம் ஒன்றில், காயமடைந்த நிலையில் ஒருவர் மீட்கப்பட்டார். பின், அவர் அதிபர் கடாபி என்பதை நேசனல் டிரான்சிசனல் கவுன்சில் கமாண்டர் உறுதி செய்தார். இந்த தகவலை லிபியா லில் ஹரார் டிவி உறுதி செய்துள்ளது. கடாபியன் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆனால் கடாபி இறந்துவிட்டார் என்று நேட்டோ படைகள் கூறிவருகிறது.இச்செய்தி, அவரது ஆதரவாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
                          
                                                     
பக்‌ஷேயும்-கடாபியும் இரு வல்லவர்கள்?
கடாபி பிடிபட்டதையடுத்து, அவரது எதிர்ப்பாளர்கள்,  பல இடங்களில் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 கடாபிஅமெரிக்கப் படையினரிடம் பிடிபடும் நிலையில், சுடாதீர்கள், சுடாதீர்கள் என்று கூறியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கி்ன்றன. அதனையும் மீறி அவர்கள் சுட்டதில், கடாபி பலியானதாக சர்வதேச படையினர் தெரிவித்துள்ளனர். ஆனால் இத்தகவலை யாரும் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
லிபியா அதிபர கடாபியை பற்றி மேலும் அறிய:
___________________________________________________________________________________________________
                         

உறுப்பினராக வாக்கு இல்லை. 
                                     
ஐ.நா பாதுகாப்புசபையில் நிரந்தர நாடுகளின் வரிசையில் இந்தியா இடம் பெற சீனா உதவி செய்யும் என்று நம்பிக்‌கையுடன் இருந்த நேரத்தில் சீனா ‌திடீரென பாகிஸ்தானிற்கு ஆதரவு அளித்துள்ளது. இதனால் இந்தியா அதிர்ச்சியடைந்துள்ளது. ஐ.நா., பாதுகாப்பு சபையில் வீட்டோ என்றழைக்கப்படும் நிரந்தரஉறுப்பு நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா உட்பட ஐந்து நாடுகள் இடம்பெற்றுள்ளன. உறுப்பினர்களி்ன் எண்ணிக்‌கையை அதிகரிக்க வேண்டு மென வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகள் ‌வேண்டு கோள் விடுத்து வரும் நேரத்தில் இந்தியா உறுப்பு நாடுகளின் வரிசையில் இடம் பெறுவதற்கு சீனா உட்பட பல்வேறு நாடுகளின் ஆதரவை இந்தியா கோரி வருகிறது. இந்த ‌கோரிக்கைக்கு சீனாவும் ஆதரவு தெரிவித்தது. இந்நிலையில் ஆதரவு நிலையி்ல் இருந்து தன் முடிவை சீனா மாற்றிக்‌கொண்டுள்ளது. தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவு தர போவதாக தெரிவித்துள்ளது. இது குறித்து சீனாவின் வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் ஜியாங்யூ கூறியதாவது:” சீனாவும் பாகிஸ்தானும் அனைத்து விசயங்களிலும் ஒத்த கருத்து கொண்டவையாக திகழ்கி்ன்றன. இந்தியா நிரந்தர உறுப்பு நாடு ஆவதற்கு சீனா எவ்வித உறுதியையும் அளிக்கவி்ல்லை” என தெரிவித்தார்.
எப்படியோ ராஜதந்திரத்தில் இந்தியாவை விட பாகிஸ்தான் ஒருபடி மேலேதான்.இந்திராவுக்குப்பின் இந்தியா நடுநிலைக்கொள்கையில் இருந்து அமெரிக்க ஆதரவு நிலையை எடுத்து அதில் இருந்து விலகாமல் இருக்கிறது.பின் சீனா எப்படி இந்தியாவுக்கு ஆதரவைத்தரும் .இன்றைய நிலையில் பாகிஸ்தான் அமெரிக்காவுடன் மறைமுகமாக மோதலில் உள்ளது.சீனாவுடன் குலவுகிறது .சீனா பாகிஸ்தான் ஆதரவை எடுத்து நமக்கு அல்வா கொடுத்து விட்டது.
சரி ஐ.நா.சபையில் உறுப்பினராகி  இந்தியாவுக்கு என்ன நன்மை இருக்கிறது?
வேண்டுமானால் இலங்கைக்கு எதிர்ப்பு கண்டன தீர்மானம் கொண்டு வரும்போது அதை எதிர்த்து வீட்டோவை பயன் படுத்தி ராஜபக்‌ஷேவை காப்பற்றுவீர்கள்.அதற்குத்தான் சீனா,ரஷ்யா இருக்கின்றதே.
___________________________________________________________________________________________

திருச்சி மேற்கு தொகுதிக்கான சட்டப்பேரவை இடைத் தேர்தலில், அதிமுக வேட்பாளர் பரஞ்ஜோதி, 14608 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
                           
பரஞ்ஜோதி 68804 வாக்குகள் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என். நேரு, 54196 வாக்குகள் பெற்றார். அவர், நிலபேர வழக்கில் கைதாகி தற்போது சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரியம்பிச்சை, சாலை விபத்தில் பலியானதை அடுத்து, கடந்த 13-ம் தேதி இந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது.
துவக்கத்தில் இருந்தே, அதிமுக வேட்பாளர் பரஞ்ஜோதி முன்னிலை பெற்றிருந்தார். கடந்த முறை மரியம்பிச்சை சுமார் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், அதைவிட இரண்டு மடங்கு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.
மேலும், கடந்த தேர்தலில், தேமுதிக, இடதுசாரிக் கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அதிமுக இந்த முறை தனியாகப் போட்டியிட்டிருக்கிறது. விஜயகாந்த் கட்சி,இடதுசாரி கட்சிகளின் வாக்குகள் கூட்டணி இல்லை என்றாலும் அதிமுக வுக்கே  வாக்களிக்கப்பட்டுள்ளது எனத்தெரிகிறது.
கருணாநிதி கருத்து.
இந்தத் தேர்தலில், திமுக வேட்பாளர் நேரு தோல்வியடைந்தது குறித்துக் கருத்துத் தெரிவித்த திமுக தலைவர் கருணாநிதி, `ஓட்டப்பந்தயத்தில் காலைக் கட்டிவிட்டு ஓடச்சொன்னால் எப்படி இருக்குமோ, அப்படித்தான் நேருவின் நிலையும் இருந்தது’, என்று பதிலளித்தார்.
என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி
இதனிடையே, புதுச்சேரி இந்திரா நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், என்.ஆர். காங்கிரஸ் கட்சி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வென்ற முதலமைச்சர் ரங்கசாமி, இந்திரா நகர் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்ததால், கடந்த 13-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இன்று வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் தமிழ்செல்வன், 15053 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ஆறுமுகம் 7007 வாக்குகள் பெற்றார். 1578 வாக்குகள் பெற்ற அதிமுக வேட்பாளர் பாஸ்கரன் உள்பட மற்ற ஐந்து வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்”
ஆனால், பொதுத் தேர்தலில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற என்.ஆர். காங்கிரஸ், இந்த முறை 15 ஆயிரம் வாக்குகளை மட்டும் பெற்றுள்ளது.
                                 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?