கனிமொழிக்கு பிணை எதற்கு?


                                
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் யுனிடெக் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா மற்றும் ஸ்வான் டெலிகாம் இயக்குனர் வினோத் கோயங்கா ஆகியோரின் ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம்  விசாரித்தது. 

இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி மற்றும் ஹெச்.எல்.தத்து ஆகியோர் அடங்கிய அமர்வு, ”தொழிலதிபர்களை சிறைக் கம்பிகளுக்கு பின்னால் வைப்பதால் நாட்டின் தொழில் முதலீடு பாதிக்கும்” என்று சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியதாக வெளியான
 செய்தி உண்மை எனில், இது தங்களை ”இடையூறு” செய்கிறது என்றும் இந்த விவகாரத்தின் மத்திய அரசின் நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். 

அப்போது, கோயங்கா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரொஹாத்கி, குர்ஷித் கூறியதாக வெளியான அந்தச் செய்தி உண்மைதான் என்றும், அவை முன்னணி பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் வெளியானது என்றும் குறிப்பிட்டார். 


கனிமொழி பிணையை ஏன் எதிர்க்க வில்லை?
 

மேலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் திமுக எம்.பி. கனிமொழியின் பிணை மனுவை எதிர்ப்பதில்லை என சிபிஐ முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல், தங்களுக்கு வியப்பூட்டுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். 


அப்போது, இந்தத் தகவல் தவறானது என்று மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரன் ராவல் விளக்கம் அளித்தார். 


மேலும், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களின்பிணை மனுக்களை எதிர்க்கக் கூடாது என்று தமக்கு தகவல் அளிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். '
 

அப்போது, அரசு எந்த நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், அவைதங்களைப்பாதிக்காது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கனிமொழிக்கு பிணை வழங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்களா?அது ஏன்?   

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?