திருச்சி [20-10-11]
திருச்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று.பல்வேறு கருத்துக்கள் கொண்டவர்கள் தங்களின் திருச்சி தேர்தல் முடிவுகளைப்பற்றி ய கணிப்புகளை வெளியிட்டு விட்டார்கள்.
நாமும் நமது பங்குக்கு ஏதாவது கூறாவிட்டால் அவ்வளவாக நல்லா இருக்காது.
தமிழகம் முழுக்க ஜெயலலிதா கட்சியின் கூட்டணிக்கு அலை வீசிய போது திருச்சியில் நேரு-பிச்சை ஆகியோரின் வாக்கு வித்தியாசம் வெறும் 7000 தான்.
அதில் இடது சாரிகள்,விஜயகாந்த் கட்சியினரின் வாக்குகளும் உண்டு.
அதற்கு முந்தைய தேர்தலில் விஜயகாந்த் கட்சி போட்டியிட்டு பெற்ற வாக்குகள் 13200.
அவர்கள் கூட்டணி இல்லாமல் போயிருந்தால் அன்றைய கணிப்புப்படி அதிமுக வேட்பாளர் பிச்சை நேருவிடம் 6000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருப்பார் என எடுத்துக்கொள்ளலாம்.
இப்போது விஜயகாந்த்,இடது சாரிகள் கட்சிகளின் வாக்குகளைக்கழித்துக் கொண்டு வாக்குகள் வித்தியாசத்தை கணக்கிட்டு நீங்களே முடிவெடுங்கள்.
17 அமைச்சர்களை களம் இறக்கி விட்டு பணத்தையும் வாரி இறைக்கிறது அ.தி.மு.க.காரணம் மேற்கண்ட கனிப்பை அவர்களும் போட்டு பார்த்ததுதான்.தி.மு.க.விற்கான 27% வாக்குகள் எப்படியும் மாறப்போவடில்லை.இதில் தலித் இயக்கங்கள் [புதிய தமிழகம்,விடுதலை சிறுத்தைகள்,ஜான் பாண்டியன் கட்சி].மனித நேய மக்கள் கட்சி[இசுலாமியர்கள்],
வாக்குகள் மற்றைய அ.தி.மு.க,ஆட்சியின் மீதான அதிருப்தி வாக்குகள் ஆகியவை களை கூட்டிக்கழித்துப்பாருங்கள்.
அதிலும் சென்ற முறை தனக்கு கூடிய கூட்டத்தை விட மிகக் குறைவாகவே
இப்போது வாக்கு சேகர்க்கும் போது கூடியதாக ஜெயலலிதா செங்கோட்டையனிடம் கோபப்பட்டாராம்.
எவ்வளவு செலவானாலும் ,எந்த முறையானாலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்றும் உணர்த்தப்பட்டுள்ளனர் 17 அமைச்சர்களும்.
பார்க்கலாம்.
தேர்தல் ஆணைய[பிரவிண்குமார்]மும் சென்ற பொதுத்தேர்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகளை ஆளும் கட்சிக்கு எதிராக எடுக்காமல்.கண்டும் -காணாமல் தான் தேர்தலை நடத்துகிறது.
அதுவும் அ.தி.மு.க.விற்கு சாதகமானது.
இன்றைய நிலையில் நேரு ஒரு குற்றவாளியாக சிறையில் இருந்து வெளிவந்துள்ளார்.அது அவருக்கு சாதகமாக இருக்குமா?பாதகத்தை ஏற்படுத்தி விடுமா? திருச்சி மக்களின் தீர்ப்பு வழங்க இப்போது எந்த அலையும் இல்லை.இடைத்தேர்தல்களில் தனது முழு அதிகாரத்தையும் செலவிட்டு ஆளுங்கட்சிகள் வெல்வதுதான் இதுவரை நடந்துள்ளது .திருச்சி அதற்கு திருப்பத்தை தருமா?
அது எல்லாம் சரி என்னதான் சொல்லுகிறீர்கள் என்கிறீர்களா?
இதுவரை அலசியதில் நேருக்கு வாய்ப்புள்ளது. [அல்லது பரஞ்சோதி வெல்வார்]
கடைசி வார்த்தை
சென்ற முறை சுரனின் கணிப்பு முற்றிலும் தவறாகப் போய்விட்டது.கனிப்புகளை நாங்கள் கணித்தாலும் தவறாகிப்போனால் நாங்கள் பொறுப்பேற்க முடியாது.