அரசு தொ[ல்]லைக் காட்சி,,,,
பெரும் ஆரவாரத்துடனும்,மக்களின் பெரும் எதிர்பார்ப்புடனும் துவக்கப்பட்ட அரசு கேபிள் குறை பிரசவக்குழந்தையாகத்தான் உள்ளது.நடக்க திராணியற்ற போலியோ கால்களுடன் தவழ்ந்து செல்லக்கூட இயலாமல் உள்ளது.
மக்களின் எதிர்பார்ப்பை மட்டுமின்றி,ஆப்ரேட்டர்களின் ஆவலையும் குழியில் புதைத்து விட்டது.
70 ரூபாயில் அனைத்து சானல்களும் என்ற குரலுடன் ஆரம்பமான அரசு கேபிள் ஒளிபரப்பில்
முன் போன்றே 100முதல்150 வரையிலுமே பணம் மக்களிடம் இருந்து பிடுங்கப்படுகிறது.
அதை தட்டிக்கேட்கவும் இயலவில்லை.அதிகாரிகளிடம் கூறினால் கண்டுகொள்வதும் இல்லை.
அவர்கள் இருக்கும் வேலையையே பார்க்கத் தினறும் போது இது ஒரு புதிய தொல்லையா?ஆகட்டும் பார்க்கலாம் என்று தட்டிக்கழித்து விடுகிறார்கள்.ஆளும் கட்சியாளர்களின் துணையுடன் மக்களிடம் 70க்குப்பதில் 130 ரூபாய் பறிக்கப்படுகிறது.
கேட்டால் ’முன் போலவே சன்,கே டி.வி நாங்கள் தருகிறோம் ‘அரசு ஒரு சானலும் தரவில்லை.நாங்களாகத்தான் தருகிறோம் என்கிறார்கல்.
அவர்கள் கூறியபடியே ”டாடா ஸ்கை”.’சன் டைரக்ட்”,டிஷ் டி.வி.’ என்ற பெயர்கள்தான் பல முக்கிய சானல்களின் கீழ் தெரிகிறது.
அந்த தனியார் டி.டி.எச் ஓளிபரப்பில் இருந்து திருட்டுத்தனமாக களவாடியே கேபிள் மூலம் ஒளிபரப்புகிறார்கள்.கேட்டால் அரசு தரும் சானல்களை யார் பார்க்கிறார்கள் எனற பதிலே கிடைக்கிறது.
இது அரசு ரொம்ப தீவிரமாக செயல்படுத்த ஆரம்பித்த அரசு கேபிள் நிறுவனத்தின் முடக்கமாகத்தான் தெரிகிறது.
’தேமே’னு தொலைக்காட்சியை பார்த்து ரசித்துக்கொண்டும்,நெடுந்தொடர்களைப் பார்த்துக் கண்ணீர் விட்டு அழுது கொண்டுமிருந்த தமிழக மக்களை தேரை இழுத்து தெருவில் விட்டக்கதையாகி விட்டது.ஒழுங்காக நடத்த கையாளாகாத அரசு இப்படி கேபிள் ஆரம்பிக்க வேண்டும் என்று யார் அழுதார்கள்.யார் கோரினார்கள்.
தயாநிதி சண்டையில் கருணாநிதியும்,சன் டி.வி.-ஜெயா டி.வி.சண்டையில் ஜெயலலிதாவும் அரசு சார்பில் கேபிளை நடத்துவதாக நாடகமாடி மக்களைத்தான் சிரமப்படுத்துகிறார்கள்.
முதல்லில் அரசு நிர்னயித்த 70 ரூபாய் மட்டுமே கேபிள் ஆப்ரேட்டர்கள் வாக்குகிறார்களா?என அரசு கண்காணிக்க வேண்டும்.
சன் குழுமம்,மற்ற கட்டண சானல்களை ஆப்ரேட்டர்கள் டி.டி.எச்.மூலம் திருடி ஒளிபரப்புவதை தடுக்க வேண்டும்.
கட்டண சானல்களையும் அரசு முன் அறிவித்தபடியே உடனே ஒளிபரப்ப வேண்டும்.
அரசே கேபிள்களை பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசே கள்ளத்தனமாக-சன் குழும கேபிள்களை ஆக்கிரமித்து ஒளிபரப்புவது நல்ல நடைமுறை அல்ல.நீதி மன்றம் போயுள்ள ’சன்’க்கு ஆதரவாக தீர்ப்பு கிடைக்கும் .அப்போது அரசு கேபிள் நடுத்தெருவில் நிறுத்தப்படும்.[கொஞ்ச நாளில் அதுதான் நடக்கப் போகிறது.]
கடைசியாக அரசு தனது வேலைகளை விட்டு விட்டு கேபிள் நடத்துவது சரியான செயலாகத்தெரியவில்லை.
கட்டுப்பாடான கேபிள் ஒளிபரப்பு சட்டங்களைக் கொண்டுவந்து அதை முறையாக செயல்படுத்தி,கண்காணிப்பை தொடர்ந்தாலே போதும்.
சட்டங்களை ஒழுங்குபடுத்தாமல் இது போன்று அரை வேக்காடு அரசு கேபிள் நிறுவனம் நடத்துவதும்-கேபிள் ஆப்ரேட்டர்கள் அரசையும் -மக்களையும் ஒரு சேர ஏமாற்றுவது எதிர் மாறான விளைவுகளையே ஏற்படுத்தி வருகிறது.
முதலில் கேபிள் ஆப்ரேட்டர்கள் அரசு கட்டணமான ரூ 70/-மட்டுமே வாங்குகிறார்களா? என கண்காணியுங்கள்.மக்களிடம்130இல் இருந்து வாங்கிக்கொண்டும் அரசிடம் குறைவான இணைப்புகள கணக்கைக் காட்டியும் கொள்ளையடிக்கும் செயலுக்கு முதலில் முற்றும் போடுங்கள்.
0 இந்த பதிவுக்கு வந்த எதிர்வினை கீழே:
தமிழர்களின் சிந்தனைக்களம்.
இந்த மொக்கை பதிவு தேவைதான ? உங்களுக்கு . அரசு கேபிள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும். இ தற்கு முன் சன் குழுமம் நடத்திய கேபிள் மூலம் ஒரு தனிப்பட்ட குடும்பத்திற்கு எவ்வளவு வருமானம் போனது தெரியுமா ? .எவ்வளவு கேபிள் ஒபெரடேர்கள் த ற்கொலை செய்து கொண்டார்கள் என்று தெரியுமா ? இன்னும் பல சொல்லிக்கொண்டு போகலாம் .
நமது அல்லது எனது பதில்;
அரசு கேபிள் பற்றி எனக்கு தெரிந்த அளவில் எழுதியுள்ளேன்.எனக்கு அவ்வளவு உங்களைப்போன்ற ஞானம் கிடையாது.
நான் இன்றைய நிலையில் அரசு கேபிள் நடக்கும் விதத்தில் உள்ள குறைபாடுகளைத்தான் சுட்டிக்காட்டியுள்ளேன்.
அதில் உங்களுக்கு இவ்வளவு கோபம் வரக்காரணம் தெரியவில்லை.ஒன்று நீங்கள் கேபிள் ஆப்ரேட்டராக இருக்கக்கூடும் .
அல்லது அ.தி.மு.க.ஆதரவாளராகவோ-அல்லது சன் குழுமம் செய்து வரும் அதன் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவராகவோ கூட இருக்கலாம்.கேபிள் நிர்வாகத்தை
சன் குழுமத்திடம் ஒப்படைக்கக் கூறவில்லை.சன் குழுமம் செய்தவைகள் நியாயம் என்றும் எங்கும் குறிப்பிடவில்லை.ஆனால் சன் குழுமம் வடங்களை அரசு திருட்டுத்தன மாக உபயோகிப்பது நிச்சயம் நல்லதல்ல.அது தனக்கு என தனியே வடங்களை பதிப்பதே எதிர்வரும் காலங்களில் உபயோகமாக இருக்கும்.
ஒளிபரப்பை முறைபடுத்தவும் தர்போதைய அரசு கேபிள் நிர்வாகமின்மையையும்.அரசு நிர்னயித்த கட்டணத்தை வசூலிக்கவுமே மக்களின் சார்பில்,தொலைக்காட்சி நேயர் என்ற முறையில் குறிப்பிட்டுள்ளேன். சன் குழுமத்திடம் ஒப்படைக்கக் கூறவில்லை.சன் குழுமம் செய்தவைகள் நியாயம் என்றும் எங்கும் குறிப்பிடவில்லை.ஆனால் சன் குழுமம் வடங்களை அரசு திருட்டுத்தன மாக உபயோகிப்பது நிச்சயம் நல்லதல்ல.அது தனக்கு என தனியே வடங்களை பதிப்பதே எதிர்வரும் காலங்களில் உபயோகமாக இருக்கும்.
மற்றைய” டாடா ஸ்கை,சன் டைரக்ட்,டிஷ் டி.வி-’ டிஷ் ஆண்டெனாவில் சானல்களைத்திருடி அதை ஒளிபரப்புவதும் அரசு கூறியுள்ள 70 ரூபாயை விட்டு ரூ130/-முதல் ரூ150/- வரையிலுமான முந்தையக் கட்டணத்தையே வசூலிப்பதும் கேட்டால்’நாங்கள் அரசு கேபிளில் இல்லை சன்.கே.டி.வி,விஜய் ஒளிபரப்புகிறோமே”எனக் கூறிபணம் வசூலிப்பதும்,இணைப்புக்கு 110ரூபாய் லாபம் கிடைத்தும் ஆப்ரேட்டர் தனது இணைப்பு 400 வைத்துக்கொண்டு 150க்கு கணக்கு தருவதும் எந்தவகையிலும் நியாயப்படுத்தவே இயலாது.
சன் செய்த முறைகேடுகளுக்கு இது எந்தவகையிலும் குறைந்தது அல்ல.400க்கு 110 என்றால் எவ்வளவு லாபம்.?[அதாவது 130 இல் அரசுக்கு 20 ரூபாய் மட்டுமே கொடுக்கிறார்கள்]அரசு இணப்புக்கு ரூ70 நிர்னயித்து ரூ20 கட்டக்கூறியுள்ளது ,ஆப்ரேட்டர்களுக்கு ரூ50/-லாபம். வரும் ஆனால் இப்போது ரூ110/- கிடைக்கிறது.சில ஆப்ரேட்டர்கள்.800 இணைப்புகள் வரை வைத்திருக்கின்றனர்.