வாக்காளர் திருநாள்


நெருங்கி விட்டது..!
                                    
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை, மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது. 1 லட்சத்து, 12 ஆயிரத்து, 697 பதவிகளை கைப்பற்ற, 4 லட்சத்து, 11 ஆயிரத்து, 177 வேட்பாளர்கள்  போட்டி யிடுகின்றனர். 19 ஆயிரத்து, 646 பேர், போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில், 1 லட்சத்து, 32 ஆயிரத்து, 467 உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல், அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில், இரண்டு கட்டமாக நடக்கிறது. இதில், ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு மட்டும், அரசியல் சார்பற்றும், மற்ற அனைத்து பதவிகளுக்கும் கட்சி அடிப்படையிலும் தேர்தல் நடக்கிறது.
திருச்சி மாநகராட்சியை தவிர்த்து, மற்ற இடங்களில் உள்ள, 1 லட்சத்து, 32 ஆயிரத்து, 401 பதவிகளுக்கு போட்டியிட, 5 லட்சத்து, 27 ஆயிரத்து, 41 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். திருச்சி மாநகராட்சிக்கான மனு தாக்கல் கடந்த 30ம் தேதி துவங்கி தொடர்ந்து நடந்து வந்தது. மனுக்களை திரும்பப் பெறுவது முடிந்தது.தற்போது 
 ஒன்பது மாநகராட்சிகளில், 94 மேயர், 2,579 கவுன்சிலர், 527 நகராட்சித் தலைவர், 4,351 கவுன்சிலர், 1,322 பேரூராட்சித் தலைவர், 5,323 கவுன்சிலர் பதவிகளுக்கான மனுக்கள் என, மொத்தம், 14 ஆயிரத்து, 196 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன.
                            

கிராமப்புற உள்ளாட்சிப் பகுதிகளில், 1,287 மாவட்ட கவுன்சிலர், 10 ஆயிரத்து, 745 ஒன்றிய கவுன்சிலர், 23 ஆயிரத்து, 237 ஊராட்சித் தலைவர், 37 ஆயிரத்து, 518 ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கான மனுக்கள் என, மொத்தம், 72 ஆயிரத்து, 787 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டன.

நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கும் சேர்த்து, மொத்தம், 86 ஆயிரத்து, 983 பேர் வேட்புமனுக்கள், கடைசி நாளில் வாபஸ் பெறப்பட்டன. மேலும், ஒன்றிய கவுன்சிலராக, 30 பேர், ஊராட்சித் தலைவராக, 341 பேர், ஊராட்சி உறுப்பினராக, 18 ஆயிரத்து, 977 பேர், நகராட்சி கவுன்சிலராக, 8 பேர், பேரூராட்சித் தலைவராக, இரண்டு பேர், பேரூராட்சி கவுன்சிலராக, 288 பேர் என, மொத்தம், 19 ஆயிரத்து, 646 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்தல் நடக்க இருக்கும், 1 லட்சத்து, 12 ஆயிரத்து, 697 பதவிகளுக்கான வேட்பாளர்கள் இறுதி பட்டியலை, மாநில தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது. இப்பதவிகளை கைப்பற்ற, 4 லட்சத்து, 11 ஆயிரத்து, 177 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வேட்பாளர் பட்டியலோடு, சுயேச்சைகளுக்கான சின்னங்களும் வெளியிடப்பட்டு விட்டன.
ஒரு லட்சத்து, 12 ஆயிரம் பதவிகளை கைப்பற்ற மூன்றுமடங்கு வேட்பாளர்கள் போட்டியிடுவதால், போட்டி கடுமையாக இருக்கும் .
உள்ளாட்சித்தேர்தலைப் பொறுத்தவரை சாதி ,மதம் அதன் பின்னே நல்ல வேட்பாளர் என பார்த்து வாக்களிக்கப்படும் என்பதால் கட்சியினர் பணியும் ,கட்சிகளின் சார்பில் வெல்வதும் சற்று கடினமாகவே இருக்கும்.


        சாதி,மதம் அடிப்படையிலானக்கட்சிகளுக்கு சற்று இடங்கள் கிடைக்கும். 
 சென்ற சட்டமன்றத்தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போன பிரபலம்
     இவர்தான்.ஹைதராபாதில் இருந்து படபிடிப்பை நிறுத்திவிட்டு ஒருலட்சம் செலவில் வாக்களிக்க வந்த கமலஹாசன் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. காரணம் கேட்டபோது பரிசீலனைக்கு வந்த போது நீங்கள் வீட்டில் இல்லை.என்று கூறியுள்ளார்கள்.
தவறாமல் வருமான வரி,வீட்டு வரி,மின் கட்டனம்  செலுத்தும் என்னை வீட்டிலேயே இல்லை என சாதாரணமாகக் கூறி விட்டார்களே.தேர்தல் ஆணையம் என்ன செய்யகிறது . என கோபத்துடன் கேட்டார்.படபிடிப்பை நிறுத்தி விட்டு வாக்களிக்க வந்ததால் பல லட்சம் ரூபாய்கள் இழப்பு அவருக்கு. 
இந்தமுறையாவது அவர் பெயர் இருக்கிறதா ?                                                           
----------------------------------------------------------------------------------------------------------------------------------
பெட்ரோல் விலையை அரசே முடிவு செய்யவேண்டும்: வழக்கு.                 

                                      
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் இப்போதைய முறையைக் கைவிட்டு, பழையபடி அரசே நிர்ணயிக்க வேண்டும் என்று கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் பி.சி. தாமஸ் இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார்.
"பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலையை முன்னர் மத்திய அரசே நிர்ணயித்து வந்தது. அரசுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாகக் கூறி,சர்வதேசச் சந்தையில் கச்சா பெட்ரோலியத்தின் விலை உயரும்போதெல்லாம் இந்தியாவிலும் விலையை உயர்த்தும் அதிகாரத்தை அவர்களுக்கே அரசு வழங்கிவிட்டது.
உண்மையில் இந்தியா தன்னுடைய தேவைக்கும் அதிகமாக 30% அளவுக்கு பெட்ரோலியப் பொருள்களை உற்பத்தி செய்கிறது; உபரியாக இருப்பவற்றைப் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது.
நம் நாட்டுத் தேவைக்கான பெட்ரோலியப் பொருள்களை உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களே தர முடியும். அப்படி இருக்க விலை உயர்வு மூலம் யாரோ பணம் சம்பாதிக்க அரசு அனுமதிக்கக்கூடாது' என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவுக்குப் பதில் கூறுமாறு மத்திய அரசு, இந்திய எண்ணெய் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.), ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஆகியவற்றுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது..

                                                           

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?