உயிர் காக்கும் மருந்துகள் இல்லை  கை விரிக்கும் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம்-ஆதாரத்துடன் ஒரு பகீர் ரிப்போர்ட்
-ப.கவிதா குமார்
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல் வம் என்கிறார்கள். இன்றைய சூழலில் அப் படிப்பட்ட செல்வம் பெற்றவர்கள் மிகக் குறைவே. இதன் காரணமாகத் தான் தெரு விற்குத் தெரு மல்டி ஸ்பெஷலிட்டி ஹாஸ் பிடல் என்ற பெயரில் மருத்துவமனைகள் உருவாகி வருகின்றன.

சுகாதாரத்தைப் பேண வேண்டியது எப்படி தனிமனித ஒழுக்கமோ, அதேபோல் நோய் வந்தால் அதைத் தடுப்பதும், அதற்கு உரிய சிகிச்சை அளிப்பதும் அரசின் கடமை யாகும். ஆனால், தமிழக அரசு மருத்துவ மனைகளில், ஆரம்ப சுகாதார நிலையங் களில் சர்க்கரை நோய்க்கும், பிரசர் மாத்திரை கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரிக்க ஆரம்பித்தால், உயிர் காக் கும் 25 மிக முக்கியமான மருந்துகள் இருப்பு இல்லை என தமிழ்நாடு சேவைக் கழகம் கையை விரித்துள்ளது என்ற அதிர்ச்சிகர மான செய்தி வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனை களிலும், 1539 ஆரம்ப சுகாதார நிலையங் களிலும் அன்றாடம் சுமார் 25 லட்சம் மக்கள் சிகிச்சைக்கு வருகின்றனர். இதில் உள்ள 26 ஆயிரம் படுக்கை வசதிகளில் சுமார் 50 ஆயி ரம் பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப் பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். உலக சுகாதார நிறுவனம் 500 பேருக்கு ஒரு மருத் துவர் கட்டாயம் இருக்க வேண்டும் என்கிறது. ஆனால் தமிழகத்தில் கிராமப்புறங்களில் 30 ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற விகி தத்திலேயே இருக்கின்றனர். ஒரு லட்சத் திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட 130 நகராட்சிகளில் ஒருங்கிணைக்கப்பட்ட நலவாழ்வு சேவைகள் இல்லை. இன்னும் நூற்றுக்கணக்கான ஆரம்ப சுகாதார நிலை யங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள் தனியார் கட்டடங்களிலேயே இயங்கி வரு கின்றன. சொந்த கட்டடம் இல்லை. இது தவிர மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், பார்மசிஸ்டுகள் இல்லை.

விஷமுறிவு மருந்துகள் இல்லை

இந்த நிலையில் விஷ முறிவு மருந்துக ளான ஞ2 ஹஅ, னுடியீயஅiநே, னுடிரெவயஅiநே, ஆநவாலட யீசநனவளடிடடிசந போன்ற ஊசி மருந்துகள் தமிழக மருத்துவமனைகளில் பல மாதங்களாக இல்லை.

சுமார் 10 பைசா அளவு விலையுள்ள என லார்பிரில், மீதையல் டோபா போன்ற ரத்தக் கொதிப்பு மருந்துகளும், சூடிசஅயட ளுயbசைந,சுiடிதநச டுயநவயவந, னுநஒசடிளந சூடிசஅயட ளுயbசைந போன்ற அறு வைச் சிகிச்சைக்குப் பின்னும், பிரசவ காலத் தில் பயன்படுத்தப்படும் மருந்துகளும் இல்லை.

இவற்றுக்கெல்லாம் மேலாக, சாதாரண மாக மருத்துவமனைகளில் அதிக அளவு தேவைப்படும் கட்டுத்துணி(க்ஷயடினயபந ஊடடிவா), காரத்துணி (ழுயரளந ஊடடிவா), பஞ்சு (ஊடிவடிn) போன்றவைகளும், அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படும் கையுறைகள், ஊசிகள் கூட மருத்துவமனைகளில் இல்லை என்ற செய்தி அதிர்ச்சியை மேலும் இருமடங்காக்கியுள்ளது.

இது மட்டுமின்றி மயக்க மருந்துகள் பல அரசு மருத்துவமனைகளில் இல்லை. சில சமயங்களில் சாதாரண பாராசிடமால், அவில், பி காம்ப்ளக்ஸ் மாத்திரைகள் கூட இல்லாத அவலம் தொடர்கிறது.

இது குறித்து மருந்துகளுக்குப் பொறுப் பான மருந்தாளுநர்கள், மருத்துவர்களைக் கேட்டால் மௌனமாக, அரசுத்துறை நிறுவன மான தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத் தை(கூயஅடை சூயனர ஆநனiஉயட ளுநசஎiஉநள ஊடிசயீடிசயவiடிn டுகூனு) கையைக் காட்டி விலகிக் கொள்கின்றனர்.

வருடத்திற்கு 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

சென்னை எழும்பூரில் இந்நிறுவனம் செயல்படுகிறது. இதன் பணியே அரசு மருத் துவமனைகளுக்குத் தேவைப்படும் மருந்து களையும், அறுவை சிகிச்சை உபகரணக் கருவிகளையும் முறையாக திட்டமிட்டு, ஏலமுறையில் தனியார் கம்பெனி, அரசு மருந் துக்கழக கம்பெனிகளிடமிருந்து பெற்று வழங்க வேண்டும்.

ஏறத்தாழ 260 வகையான மருந்துகளை யும், 75 வகையான அறுவை உபகரணக் கரு விகளையும் வாங்கி வழங்க வேண்டும். அரசு வருடத்திற்கு சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாயை இந்நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்கிறது.

இந்நிறுவனம் ஆரம்பித்ததன் காரணமே தரமான மருந்துகளை, தட்டுப்பாடு இல்லா மல் அரசு மருத்துவமனைகளுக்கு வாங்கி வழங் குவதன் மூலம் மக்களுக்கு பயன் கிட்ட வேண்டும் என்பதாகும்.

ஆனால், நிலைமை தலைகீழாக இன்று மாறியிருக்கிறது. கடந்த ஓராண்டாக இந்நிறு வனத்திற்கு சேர்மன் நியமிக்கப்படவில்லை. அதனால் இந்நிறுவன போர்டு மெம்பர்களாக உள்ள இயக்குநர்களால் எம்முடிவும் எடுக்க முடியவில்லை. அதனால், இந்நிறுவனத்தால் வாங்கி ஏழைகள் பயன்படுத்திய மருந்துகளை வெளிமார்க்கெட்டில் அநியாய விலைக்கு வாங்க வேண்டிய நிலை உள்ளது. உதாரணத் திற்கு ஞ2 ஹஅ என்ற ஊசி மருந்து இந்நிறுவனத் தின் மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கும் விலை 35 ரூபாய் தான். ஆனால், வெளிமார்க்கெட்டுகளில் இந்த ஊசி மருந்து 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

25 முக்கியமான மருந்துகள் இருப்பு இல்லை

ஏறத்தாழ 25 முக்கியமான மருந்துக ளுக்கு தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் இருப்பு இல்லை என்று தடையில்லா சான் றிதழ் வழங்கி, அரசு மருத்துவமனை நிர் வாகங்களை வெளியே மருந்துகளை வாங்க ஊக்குவிக்கிறது.

இதனால், அரசுக்கு லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டமாகிறது. ஆனால், தனியார் நிறு வனம் செழித்துக் கொழுத்துக் கொண்டுள் ளது. மக்களும் மருந்து கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கடந்த1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட இந்நிறுவனம் இன்றைய இக்கட்டான நிலைமையில் எப்போதும் இருந்ததில்லை. மாநிலம் முழுக்க 25 மாவட்ட மருந்துக் கிடங் குகளின் வழியே சேவையாற்றி வருகிறது. தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் ஏன் இந்த நிலைக்கு தள்ளப்பட்டது என்று விசா ரித்ததற்கு, அரசின் முடிவு தான் இதற்குக் காரணம் என்று கூறப் படுகிறது.

அதிகரிக்கப்போகும் வெறிநாய்க்கடி உயிரிழப்பு

மாநிலம் முழுவதும் மருந்துகளை குறை வின்றி தயாரித்து வழங்கும், அதாவது மருந்து கம்பெனிகளின் உற்பத்தித் திறன் அளவைக் கருத்தில் கொண்டு கம்பெனிக்கு சப்ளை ஆர் டர் வழங்க வேண்டும். மருந்துகளை அறிந்த மருந்தாளுநர்களை அதிக அளவில் தலைமை அலுவலகத்தில் நியமனம் செய்திட வேண் டும். ஆனால், கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் இதுவரை மருந்தாளுநர் நியமிக்கப்பட வில்லை என்பதும், தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்திற்கு நிறுவனத் தலைவர் நியமிக்கப்படவில்லை என்பதும் ஏன் என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் இருப்பு இல்லை என்று கையை விரித்துள்ள தால் ஏராளமானோர் வெறிநாய்க்கடியால் உயி ரிழக்கப்போவது மட்டும் உறுதி என்று தெரி கிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனை களில் ஆண்டு தோறும் நாய்க்கடியால் பாதிக் கப்படும் 9 லட்சம் பேருக்கு சிகிச்சை அளிக் கப்படுகிறது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். வெறி நாய்க்கடியால் இந்தியாவில் இரண்டு வினாடிகளுக்கு ஒருவர் பாதிக்கிறார்; 10 நிமிடத்திற்கு ஒருவர் இறக்கிறார்; நாட்டிலேயே தமிழகத்தில் தான் வெறிநாய்க்கடியால் ஏற்படும் ‘ரேபிஸ்’ நோய் அதிகம் பேரை பாதித்துள்ளது; அதிகம் பேர் இறக்கின்றனர் என்று சமீபத்தில் உலக சுகா தார நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித் திருந்தது.

இந்த நிலையில் வெறிநாய்க் கடிக்கான மருந்து இருப்பு இல்லை என்று தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகம் கூறியுள்ளது. ஏற்க னவே, மார்க்கெட்டில் 250 ரூபாய்க்கு விற் பனை செய்யப்படும் வெறிநாய்க்கடி தடுப்பு ஊசி, இனி 500 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. என்ன செய்யப் போகிறது தமிழக அரசு

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?