இதுதான் இன்றைய நிலை?

இறந்தவனும் வென்றவனும் ஒன்றுதானா?

                                       

ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினத்தில் வசித்து வந்தவர், ஓய்வு பெற்ற வன அலுவலர் பதிர் ஓசாலி,60. அந்த ஊராட்சியின் ஐந்தாவது வார்டு உறுப்பினர் பதவிக்கு, வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருக்கு, "சாவி' சின்னம் ஒதுக்கப்பட்டது.இவர், அக்.,13ல், மாரடைப்பால் இறந்தார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களில் ஒருவர், வெற்றி பெறும் நிலை இருந்தது.நேற்று ஓட்டு எண்ணிக்கையில், பதிர் ஓசாலி 117 ஓட்டுகள் பெற்று, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இறந்தவருக்கும் ஓட்டு போட்டுள்ளனர், அப்பகுதி வாக்காளர்கள். இங்கு, மீண்டும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.

________________________________________________________________________________________

பயனற்றக்கூட்டம்.

                                    

”டில்லியில் நடக்கும் தேசிய வளர்ச்சிக்குழுக் கூட்டம் எவ்விதத்திலும் பயனற்ற, ஒரு சம்பிரதாயமான கூட்டம் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த தேசிய வளர்ச்சி குழுக்கூட்டத்தில் ஜெயலலிதாவின்கடிதத்தைதமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் வாசித்தார். அதில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை ஆளும் காங்கிரஸ் மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் பார்ப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கூட்டணி அரசு என்ற ஒரே காரணத்திற்காக மேற்கு வங்கத்திற்கு அதிக நிதி ஒதுக்கும் மத்திய அரசு, தமிழக அரசு பலமுறை கேட்டும் உரிய நிதியை ஒதுக்குவதில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மதக்கலவர தடுப்பு சட்டம் மாநிலங்களின் அதிகாரங்களை குறைக்கும் செயல் என்று தெரிவித்த அவர், வாட் போன்ற வரிகளால் மத்திய அரசே பலனடைந்துவருவதாகவும் தெரிவித்துள்ளார். தேசிய அளவிலான ஒரே நுழைவுத்தேர்வு போன்ற விஷயங்களில் மாநில அரசுகளில் கருத்தை மத்திய அரசு கேட்பதில்லை என்று குற்றம் சாட்டிய அவர், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதை தமிழக பிரச்னையாக மட்டுமே மத்திய அரசு பார்ப்பதாகவும், அதை தேசிய பிரச்னையாக பார்ப்பதில்லை என்றும் கடிதத்தில் முதல்வர் எழுதியிருந்தார்.

______________________________________________________________________________

உள்ளாட்சி தேர்தல்.சாயம் போன சாதிக்கட்சிகள்.

                          

தமிழக சட்டசபை தேர்தலில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி உடன்பாட்டுக் குழு, தனித்தனி தேர்தல் அறிக்கை என, ஆட்டம் போட்ட  கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளன. காங்கிரஸ், பா.ம.க., - வி.சி., ஆகிய கட்சிகளை, தி.மு.க.,வும், தே.மு.தி.க., - மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை, அ.தி.மு.க.,வும் உள்ளாட்சித் தேர்தலில் கழற்றி விட்டுவிட்டனர்.உள்ளாட்சித்தேர்தலில் எப்போதும் மக்கள் பொதுவாக ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத் தான் ஓட்டளிப்பர். இம்முறையும் அப்படி தான் நிகழ்ந்துள்ளது. .அனைத்து இடங்களிலும்சேர்த்து, அ.தி.மு.க. பெற்ற ஓட்டுகளில், 10ல் ஒரு பங்கு ஓட்டு கூட உதிரிக்கட்சிகள் எடுக்கவில்லை..

தி.மு.க., கழற்றிவிட்டதால், தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ், சேலம், ஈரோடு, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் மட்டும், நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு நகராட்சி தலைவர் பதவியைக் கூட, தேசிய கட்சியான காங்கிரசால் கைப்பற்ற முடியவில்லை. இதன் மூலம், "தமிழகத்தில் தங்களுக்கு கணிசமான அளவு ஓட்டு வங்கி உள்ளது' என்ற காங்கிரசாரின் வாதம் பொய்ப்பிக்கப்பட்டுள்ளது.வட மாவட்டங்களில், பா.ம.க., - வி.சி., கட்சிகள் தங்களுக்கு அதிக செல்வாக்கு இருப்பதாகக் கூறி, திராவிட கட்சிகளை மிரட்டி வந்தன. இவர்களின் தயவு இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது எனக் கூறி, மாறி மாறி ஏதாவதொரு திராவிட கட்சியில் கூட்டணி என்ற பெயரில் சவாரி செய்து, எம்.எல்.ஏ., - எம்.பி., மத்திய அமைச்சர் வரை உயர்ந்த பதவிகளை அனுபவித்து வந்தனர். தற்போது வட மாவட்டங்களிலேயே இக்கட்சி தோல்வியைத் தழுவியதால் அக்கட்சிகளின் உண்மை பலம் தெரியவந்துள்ளது.

                                    

மார்க்சிஸ்ட் கூட்டணியுடன், உள்ளாட்சித் தேர்தலை சந்தித்த, தே.மு.தி.க., சென்னை, ஈரோடு, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சிகளில் மூன்றாவது இடத்தை தான் பிடிக்க முடிந்தது. எதிர்க்கட்சி அந்தஸ்தில் உள்ள, தே.மு.தி.க., ஒரு மாநகராட்சியைக் கூட கைப்பற்றாதது, "அ.தி.மு.க., கூட்டணி பலத்தால் தான், சட்டசபை தேர்தலில், தே.மு.தி.க.,வால் வெற்றி பெற முடிந்தது' என்றகருத்து உண்மையாகியுள்ளது. மா.கம்யூ., வேலூர் மற்றும் கோவை மாநகராட்சிகளில் மூன்றாம் இடம் பிடித்துள்ளது.தா.பாண்டியனின்கம்யூ., இருக்கும் இடம் தெரியவில்லை.உள்ளாட்சித் தேர்தலை தனித்து சந்தித்து, திருச்சி, நெல்லை, தூத்துக்குடி மாநகராட்சிகளில் மேயர் பதவிக்கான போட்டியில் மூன்றாவது இடமும், திருப்பூர், வேலூர், கோவை மாநகராட்சிகளில் நான்காவது இடத்தையும் பிடித்து, ம.தி.மு.க., தமிழக அரசியலில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் முடிவின் மூலம், தமிழகத்தில், காங்கிரஸ் மற்றும்தே.மு.தி.க, பா.ம.க., வி.சி.புதிய தமிழகம் போன்ற சாதிக்கட்சிகளின் சாயம் இத்தேர்தலில் வெளுத்துவிட்டது. ,தாங்கள் கூட்டணி கட்சிகள்,வருங்கால ஆளுங்கட்சிகள் என்று சொல்லி மார்தட்டிக் கொண்டிருந்த கட்சிகள் இனி பெருங்கட்சிகளிடம், தொகுதி பேரம் பேச முடியாத அளவு வலுவை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளிச்சம் போட்டுக்காட்டிவ்ட்டது.

தி.மு.க.இனி தேவை இல்லாமல் காங்கிரசை தூக்கி சுமக்க வேண்டிய நிலை இல்லை.மார்க்சிஸ்ட் கட்சி,ம.தி.மு.க,ஆகிய கட்சிகள் தங்களுக்கென்று தனி வாக்கு வங்கியை வலுவாக வைத்துள்ளதும்அதனால் சில இடங்களை பிடிக்க முடியும் என்பதும் இத்தேர்தல் சுட்டிக்காட்டியுள்ளது.

 

____________________________________________________________________________________

இறைச்சிக் கூடத்தில் கிடக்கும் கடாபி பிணம்,,

                           

புரட்சி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் உடலை புதைப்பதில் இடைக்கால அரசின் அதிகாரிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இறைச்சி கூடமாக பயன்படுத்தப்பட்ட இடத்தில் கடாபி உடல் அனாதையாக கிடக்கிறது. இது லிபிய மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்ரிக்கா நாடான லிபியாவை புரட்சி மூலம் கைப்பற்றி 42 ஆண்டுகள் ஆட்சி செய்தவர் கடாபி(69). கடந்த பிப்ரவரியில் அவருக்கு எதிராக கிளர்ச்சி தொடங்கியது. அவரை எதிர்த்தவர்கள் ஓரணியில் திரண்டு புரட்சி படை என்ற பெயரில் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு அமெரிக்கா உட்பட நேட்டோ படைகளும் ஆதரவு அளித்தன.

கடந்த ஆகஸ்ட் 23ம் திகதி தலைநகர் திரிபோலியை புரட்சி படை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அப்போது முதல் 2 மாதமாக தலைமறைவாகி இருந்த கடாபி அவரது சொந்த ஊரான சிர்தி யில் நெடுஞ்சாலைக்கு அடியில் செல்லும் பாதாள சாக்கடை குழாயில் பதுங்கி வாழ்ந்துள்ளார்.

அவரது இருப்பிடத்தை நேற்று முன்தினம் புரட்சி படையினர் கண்டுபிடித்தனர். துப்பாக்கி முனையில் அவரை வெளியே இழுத்துப் போட்டனர். அப்போது சுட்டு விடாதீர்கள் என்று கடாபி கதறியதாக புரட்சி படை வீரர் ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

இருப்பினும் அவர் தப்ப முயன்றதாகவும், அவரது ஆதரவாளர்கள் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறி புரட்சி படையினர் சுட்டதில் கடாபி பலியானார்.

அவரது உடலை மிஸ்ரடா பகுதியில் முன்பு இறைச்சி கூடமாக பயன்படுத்தப்பட்ட இடத்தில் வைத்துள்ளனர். கடாபி உடலை அடக்கம் செய்வதில் இடைக்கால அரசை சேர்ந்தவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மத வழக்கப்படி உடலை உடனடியாக அடக்கம் செய்ய வேண்டும் என்று ஒரு பிரிவினர் கூறினர்.

ஆனால் சர்வாதிகார ஆட்சி நடத்திய கடாபி பலியானதில் சந்தேகம் ஏற்படாமல் இருக்க சில நாட்கள் அவரது உடலை வைத்திருக்கலாம் என்று சிலர் தெரிவித்தனர்.

ஈராக்கில் தூக்கிலிடப்பட்ட சதாம் உசேனை மத சடங்குகள்படி அடக்கம் செய்தது போல கடாபியையும் அடக்கம் செய்ய ஒரு பிரிவினர் வலியுறுத்தினர்.

ஆனால் கடாபியை அடக்கம் செய்யும் இடத்தை ரகசியமாக வைத்திருக்கவும், அவரது ஆதரவாளர்கள், உறவினர்களுக்கு தெரிந்து நினைவிடமாக வழிபடாமல் தடுக்கவும் வேண்டும் என்று சிலர் கூறினர். வேறு சிலரோ மகன் உட்பட உறவினர்கள் இருப்பதால் அவர்களை கொண்டு இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்றனர்.

இதனால் பலியாகி 2 நாட்கள் ஆகியும் கடாபி உடல் அடக்கம் செய்யப்படாமல் கிடக்கிறது. இதுபற்றி தேசிய மாற்று அரசு கவுன்சில்(என்.டி.சி) கமாண்டர் அப்துல் சலாம் கூறுகையில்,“கடாபி உடல் முழு மரியாதையுடன் இஸ்லாமிய வழக்கப்படி 24 மணி நேரத்துக்குள் அடக்கம் செய்யப்படும்” என்றார்.

இதற்கிடையே கடாபி உயிருடன் பிடிபட்டும் அவரை சுட்டதுடன், ரத்த காயங்களுடன் கதறிய அவரை புரட்சி படையினர் அடித்து சுட்டுக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதை உறுதிப்படுத்தும் வகையில் அதிர்ச்சி அளிக்கும் செல்போன் வீடியோ காட்சிகள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மனித உரிமைகளை காப்பதாக கூறும் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் இதற்கு என்ன பதில் சொல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடாபியிடம் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்த ஐ.நா மனித உரிமை அமைப்பு உத்தரவிட்டுள்ளது. மேலும் கடாபி மறைவுக்கு பிறகு லிபியாவில் ஜனநாயகம் மலர்ந்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ள நிலையில் புதிய அரசு அமைப்பதில் புரட்சி படைக்குள் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாகவும், தலைமை பொறுப்புக்கு மோதல் உருவாகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா கையைக்காட்டுபவரே நாற்காலியில் அமர முடியும்.

                          

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?