திருச்சி -குறைந்த வாக்கு

திருச்சி மேற்கு சட்ட மன்றத் தொகுதியில் பலத்த பாதுகாப்புடன் நேற்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற் றது. சுமார் 61 சதவீதம் வாக்குகள்மட்டும் பதிவாகியுள்ளன.
                                                 

திருச்சி மேற்கு சட்ட மன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் நேருவைவிட 7000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற் றிபெற்ற அதிமுக மரியம் பிச்சை அமைச்சராக அறிவிக்கப் பட்டு பதவி யேற்பதற்காக சென்று கொண்டிருந்தபோது விபத் தில் சிக்கி பலியானார்.[அதற்கு தனியே விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.முடிவு அறிவிக்கப்படவில்லை] இதையொட்டி இத்தொகு திக்கு இடைத்தேர்தல் அறி விக்கப்பட்டது.

அதிமுக அரசு பதவி யேற்று சில மாதங்களிலேயே சந்தித்துள்ளஇடைத்தேர்தல் இது .

இத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக எம்.பரஞ் சோதியும், திமுகவின் வேட் பாளராக கே.என்.நேருவும், இதர சில கட்சிகளின் வேட் பாளர்களும் போட்டியில் உள்ளனர்.

திமுக வேட்பாளர் நேரு மீது நில அபகரிப்பு தொடர் பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை யொட்டி அவர் கைது செய் யப்பட்டு சிறையில் அடைக் கப்பட்டிருந்தார். இந்நிலை யில் நேரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக மு.க. ஸ்டாலினே பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கடைசி நாளில் ஜாமீன் பெற்று நேரு பிரச்சாரத்திற்கு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தொகுதியில் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 497 பெண்கள் உட்பட 2 லட் சத்து 8 ஆயிரத்து 427 வாக் காளர்கள் வாக்களிக்கும் தகுதி பெற்றவர்கள். இவர் களில் மாலை 5 மணிவரை 61 சதவீதம்பேர் வாக்களித் ததாக தெரியவந்தது.

. அசம்பாவிதம் ஏதுமின்றி வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஆனால் இதுவரை நடந்த இடைத்தேர்தல்களை விட மிகக் குறைவான வாக்கு சதவிகிதமே திருச்சியில் பதிவாகிஉள்ளது.மற்றைய இடைத்தேர்தல்களில் 80இல் இருந்து 94 வரை பதிவாகியிருந்தது.
திருச்சி மக்களிடம் இந்த இடைத்தேர்தலில் வாக்களிக்கும் ஆர்வம் மிகக் குறைவாகவே இருந்தது.கடந்த சட்டமன்றத்தேர்தலை விட வாக்குப்பதிவு குறைவாகவே உள்ளது.
ஒரு வேட்பாளர் மீது பலதார வழக்கு.மற்றவர்மீது நில அபகரிப்பு வழக்கு இதுவே வாக்காளர் ஆர்வக்குறைவுக்கு காரணமாக இருந்திருக்குமோ?


                                                       
(((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((((()))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))
வால்மார்ட் -சீனா தடை?
சீனாவில் உள்ள வால்-மார்ட் கடைகளை மூடிடவும் அதன் ஊழியர்களை கைது செய்யவும் சீன அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த வால் மார்ட் நிறுவனம் உலகில் பல்வேறு நாடுகளில் சில்லறை விற்பனை கடைகளை நடத்திவருகிறது. சீனாவில் 120க்கும் ‌ மேற்பட்ட நகரங்களில் மூன்றாயிரத்திற்கும் மேறபட்ட கடைகளை நடத்தி வருகிறது.இந்நிலையில் சீனாவில் உள்ள13 கடைகளில் விற்கப்படு்ம் பன்றி இறைச்சி் சுகாதாரமி்ன்றி விற்பனை செய்யப்படுவதாக சீனாவின் சுகாதாரத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் விசாரணை நடத்திய சீனஅதிகாரிகள் இறைச்சி பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ததுடன் இரண்டு அதிகாரிகளையும் கைது செய்தனர்.  நான்கு லட்சத்து 21 ஆயிரம் அமெரிக்கா டாலர் அளவிற்கு அபராதம் விதி்த்துள்ளது. அரசு விதிக்கும் அபராதங்களில் இது தான் மிக அதிகமானதாகும். அது தவிர கடந்த 2006-08 ஆண்டுகளில் பன்றி இறைச்சியை அதிக விலைக்கு விற்பனை செய்ததாகவும்,பால் பாக்கெட்டுகளில் தண்ணீர் கலப்படம் செய்து விற்பனை செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.வால்மார்ட் என்றாலே முறைகேடுகள்தானே.இதுவரையும் எப்படி மாட்டாமல் இருந்தனர்.அது சரி மற்ற வால்மார்ட் கடைகள் எல்லாம் சீனாவில் ஒழுங்காக நடத்தப்படுகிறதா? மூவாயிரத்துக்கும் அதிகமான கடைகளில் 13 தான் மாட்டியுள்ளதா?
                                                

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?