அபூர்வங்கள்

நாஜி ஹிட்லரிடமிருந்து காப்பாற்றியதற்கு நன்றி....

                     
ஜெர்மனியின் நாஜி படைகளால் போட்ட வழக்குகளில் இருந்து யூதர்கள் மீள உதவிய தொழிலதிபருக்கு பாராட்டு தெரிவித்து  இயற்பியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன் 1939ம் ஆண்டில் எழுதிய கடிதம் ரூ.7 லட்சத்துக்கு ஏலம் போனது. 
ஜெர்மனியில் 1879ல் பிறந்த பிறந்த இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பற்றி அறியாதவர்கள் அரிது.இவர் 1955ல் மறைந்தார். இயற்பியல் துறையில் தனது சிறந்த கண்டுபிடிப்புகளுக்காக 1921ல் நோபல் பரிசு பெற்றார்.
ஜெர்மனியில் 1933ல் நாஜிஅடால்ப் ஹிட்லர் ஆட்சிக்கு வந்ததும் அங்கிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினார் ஐன்ஸ்டீன். நியூயார்க்கில் வசித்த தொழிலதிபர் ஹைமன் ஜின்னுக்கு 1939ல் அவர் ஒரு கடிதம் எழுதினார்.
அதில் அவர்”ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரின் பிடியில் இருந்து யூதர்கள் தப்ப உதவியதற்காக” ஹைமனை  ஐன்ஸ்டீன் பாராட்டிஎழுதியிருந்தார்..
                        
”நாஜிக்களால் யூதர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு அபாயத்தில் இருந்த நேரத்தில் அவர்களை மீட்க நீங்கள் ஆற்றிய பங்கு அபாரமானது. சிறந்த எதிர்காலத்தை நோக்கி அவர்களை அழைத்து சென்றதற்கு எனது பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவிக்கிறேன்” என்ற அந்தக் கடிதத்தை அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த நாட் டி சாண்டர்ஸ் நிறுவனம் ஏலம் விட்டது.
குறைந்தஅளவு ஏலக் கேட்பாக ரூ.2.5 லட்சம் நிர்ணயமாகியிருந்தது. ஆனால் இரு மடங்கு அதிகமாக ரூ.7 லட்சத்துக்கு கடிதம் ஏலம் போயுள்ளது.
                 000000000000000000000000008888888888888880000000000000000000000000000
புது ஸ்பெக்ட்ரம் விலை,
                       
தேசிய தொலை தொடர்பு கொள்கையை வெளியிடுவதற்கு முன்பாக ஸ்பெக்ட்ரம் விலை வெளியிடப்படும் என்று மத்திய தொலை தொடர்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
                                           
மத்திய அரசு விரைவில், 2011-ம் ஆண்டின் புதிய தொலைத் தொடர்பு கொள்கையை அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்கான வரைவு அறிக்கையை, மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் கபில் சிபல் கடந்த 10-ம் திகதி வெளியிட்டார்.
மொபைல் போன் சேவையில், நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான லைசென்ஸ் முறையை கொண்டு வர, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, லைசென்ஸ் தனித்தனியாக பிரிக்கப்படும். இருப்பினும் இந்தாண்டு ஸ்பெக்ட்ரம் ஏலம் ஒதுக்கீடு இருக்காது. ஸ்பெக்ட்ரம் விற்பனை, சந்தை விலையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதிய தொலை தொடர்பு கொள்கை வரும் டிசம்பர் மாதத்திற்குள் அறிவிக்கப்படலாம் எனவும், அதற்கு முன்பாக ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் குறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படலாம் என தொலை தொடர்புத் துறை செயலர் ஆர். சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இப்போவாட்டும் ஒழுங்கா விலையை  நிர்ண்யம் செய்யுங்க.இல்லே திகாரில் இடம் ரிசர்வ் செய்து வச்சுக்கோங்க.அவ்வளவுதான்.
     111111111111111111111111111111111000000000000011111111111111111111111111111111111111
சீன பெருஞ்சுவருக்கும் ஆபத்து?

              
    உலகப்புகழ் பெற்றவைகளுக்கு எல்லாம் இப்போது போதாத காலம் அல்ல சிதைவுண்டு போகிற காலம் போலும்.
உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தியவின் தாஜ்மகால் இன்னும் சில ஆண்டுகளில் சிதந்து விடும் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தி கொஞ்சம் அமுங்கிப் போயுள்ள நிலையில் இப்போது சீனப்பெருஞ்சுவர் சிதைந்து போவதாக செய்திகள் வருகின்றது. உலகின் அதிசயங்களின் பட்டியலில் தோடர்ந்து இடம் பிடித்துவரும் சீனப் பெருஞ்சுவர் சீனாவில் கி.பி மூன்றாம் நூற்றாண்டில் மிங் அரசர் காலத்தில் கட்டப்பட்டது.
5,500 மைல் நீளமுள்ள இந்த சுவர் சீனாவின் 11 மாகாணங்களை உள்ளடக்கியுள்ளது. இத்தனை சிறப்பு வாய்ந்த சீனபெருஞ்சுவர் தற்போது இடிந்து வருகிறது.
அதற்கு பல இடங்களில் அந்த சுவர் சேதமடைந்து இருப்பதுதான் காரணமாக கருதப்படுகிறது. மோசமான தட்பவெப்ப நிலையும் இந்த சுவர் சிதிலமடைந்து வருவதற்கு மற்றொரு காரணமாகும்.
மேலும் சீனா – ஜப்பான் நாடுகளுக்கு இடையே நடந்த போரின் போது இது பல கட்ட தாக்குதலுக்கு ஆளானது. அதே நேரத்தில் 1950 முதல் 1960-ம் ஆண்டுகளில் சீன பெருஞ்சுவரில் இருந்த செங்கற்களை அப்பகுதி கிராம மக்கள் இடித்து கொள்ளையடித்தனர். அவற்றை அதிக விலைக்கு விற்றனர்.
                                                                            மொட்டையாகியுள்ள சுவர் பகுதி.
இதனாலும் சுவர் சேதம் அடைந்தது. அவை தவிர சீனபெருஞ்சுவர் கட்டப்பட்ட பகுதியில் தங்கம், இரும்பு போன்ற உலோக தாதுக்கள் இருப்பதாக கருதப்படுகிறது. எனவே அங்கு நிலத்தை தோண்டும் பணியில் சிலர் திருட்டுத்தனமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த காரணத்தினாலும் பெருஞ்சுவர் இடிந்து வருகிறது.
சீன அரசு சுவரின் பெருமையைக்காப்பாற்ற முயற்சிகளை எடுத்து வருகிறது.

                                    

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?