அமைதியும் - [அமெரிக்க]போரும்
அமைதிக்கான நோபல் பரிசு,
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, லைபீரியாவின் அதிபர் எல்லன் ஜான்ஸன் சர்லீப், அந்நாட்டின் அமைதிப் போராளி லேமா போவீ மற்றும் யேமன் நாட்டைச் சேர்ந்த பெண் உரிமைப் போராளி டவாக்குள் கர்மான் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இந்த மூன்று பெண்களுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து நோபல் பரிசுக்குழுவினர் தெரிவித்துள்ளதாவது: ஆண்களுக்குச் சமமாக பெண்களுக்கும் சமூக வளர்ச்சியில் பங்களிப்பு செய்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்என்றனர்.
எல்லன் ஜான்ஸன் சர்லீப்
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவின் முதல் பெண் அதிபராக 2005-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லன் ஜான்ஸன் சர்லீப், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றவராவார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார்.
இவர் சிறந்த சீர்திருத்தவாதி. அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட பின், அந்நாட்டில் அமைதியை நிலைநாட்ட பாடுபட்டு வருகிறார். உள்நாட்டுப் போரால் 2003 வரை லைபீரியா பாதிக்கப்பட்டிருந்தது. அங்கு அமைதியை நிலைநாட்ட ஐ.நா. அமைதிப் படையினர் உதவி வருகின்றனர்.
டவாக்குள் கர்மான்
யேமன் நாட்டில் செயல்படும் பெண் பத்திரிகையாளர்கள் அமைப்பின் தலைவராக டவாக்குள் கர்மான் உள்ளார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். யேமன் அதிபர் சாலேவின் ஆட்சிக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார். பத்திரிகையாளரான இவர், இஸ்லா கட்சியின் உறுப்பினராக உள்ளார். இவரது தந்தை, அதிபர் சாலேவின் ஆட்சியில் அமைச்சராக இருந்தார்.
லேமா போவீ
லைபீரியாவில் போரில் ஈடுபட்டுவரும் குழுக்களுக்கு எதிராக கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் பெண்களை ஒன்று திரட்டும் பணியில் லேமா போவீ ஈடுபட்டுள்ளார். 2009-ல் இவருக்கு வீரமான செயல்பாடுகளுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று பெண்களுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து நோபல் பரிசுக்குழுவினர் தெரிவித்துள்ளதாவது: ஆண்களுக்குச் சமமாக பெண்களுக்கும் சமூக வளர்ச்சியில் பங்களிப்பு செய்வதற்கான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்என்றனர்.
எல்லன் ஜான்ஸன் சர்லீப்
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவின் முதல் பெண் அதிபராக 2005-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லன் ஜான்ஸன் சர்லீப், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பட்டம் பெற்றவராவார். அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார்.
இவர் சிறந்த சீர்திருத்தவாதி. அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட பின், அந்நாட்டில் அமைதியை நிலைநாட்ட பாடுபட்டு வருகிறார். உள்நாட்டுப் போரால் 2003 வரை லைபீரியா பாதிக்கப்பட்டிருந்தது. அங்கு அமைதியை நிலைநாட்ட ஐ.நா. அமைதிப் படையினர் உதவி வருகின்றனர்.
டவாக்குள் கர்மான்
லேமா போவீ
லைபீரியாவில் போரில் ஈடுபட்டுவரும் குழுக்களுக்கு எதிராக கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம் பெண்களை ஒன்று திரட்டும் பணியில் லேமா போவீ ஈடுபட்டுள்ளார். 2009-ல் இவருக்கு வீரமான செயல்பாடுகளுக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
*************************************************0000000**************************************************
அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்கள்,
அமெரிக்காவில் உண்டாகியுள்ள பொருளாதார நெருக்கடி மக்களிடம் கோபத்தை உருவாக்கி போராட வைத்துள்ளது.தங்கள் நாட்டின் இந்த பொருளாதார நெருக்கடிக்கு ‘வால்ஸ்ட்ரீட்’[அமெரிக்க பங்குச்சந்தை அமைந்துள்ள புகழ் பெற்ற சாலை.[மும்பை பங்குசந்தை போல்]]தான் முக்கிய காரணம். .அங்குள்ள கார்பரேட் புரோக்கர்களால்தான் இந்த நிலை என்ற கோபத்தை அமெரிக்க மக்களிடையே ஏற்படுத்தியுல்ளது.சிரியா,எகிப்து,மக்கள் போராட்டத்தை தூண்டிய அமெரிக்கா தன்நாட்டில் ஏற்பட்டுள்ள் இந்த போராட்டத்தை கண்டு கலங்கி அடக்கி வருகிறது.
மற்றைய நாடுகளின் போராட்டத்தை பக்கம் ,பக்கமாக எழுதி வெளியிட்ட இந்திய ஊடகங்கள் அமெரிக்க ‘வால்ஸ்ட்ரீட்’போராட்டத்தை கண்டு கொள்ள வில்லை.அதனால் இதை படித்து நிலமையை புரிந்து கொள்ளுங்கள்
அமெரிக்காவில் நிலவி வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு எதிராக பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் பரவி வருகின்றன. பொருளாதார சரிவின்போது வங்கிகளுக்கு ஊக்கத்தொகை அளித்த அமெரிக்க அரசு வேலை இழந்தோரை தவிக்க விட்டு விட்டது என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அமெரிக்காவில் “வால் ஸ்டிரீட் ஆக்கிரமிப்பு இயக்கத்தின்” போராட்டம் மூன்றாவது வாரமாகத் தொடர்கிறது. நியூயார்க் மட்டுமல்லாமல் தற்போது நாடு முழுவதும் போராட்டம் பரவி வருகிறது.
இப்போராட்டத்திற்கு அமெரிக்கப் பேரறிஞர் நோம் சாம்ஸ்கி போன்றோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் நியூயார்க், பாஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. நேற்றும் இவை தொடர்ந்தன. இந்நிலையில் இந்த வாரத்தில் டென்னிசி மாகாணத்தின் மெம்பிஸ், மேரிலேண்ட் மாகாணத்தின் பால்டிமோர், மின்னசோட்டா மாகாணத்தின் மின்னபோலிஸ், ஹவாய் தீவின் ஹிலோ, டெக்சாஸ் மாகாணத்தின் மெக்அலன் ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடக்கப் போவதாக “தொடர் ஆக்கிரமிப்பு” என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.
ஆர்ப்பாட்டங்கள் நாடு முழுவதும் பரவ வழி செய்யும் வகையில் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தும்படி தொடர் ஆக்கிரமிப்பு இணையதளம் அறிவுறுத்தியுள்ளது. இதை எதிரொலிக்கும் வகையில் வால் தெரு ஆக்கிரமிப்பு இயக்கம் என்ற இணையதளத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் :
1. சம்பள உயர்வு: தடையற்ற வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். ஒரு மணிநேரத்துக்கு 20 டாலர் என்ற வீதத்தில் சம்பளத்தை உயர்த்த வேண்டும்.
2. தனியார் நிறுவனங்களுக்குத் தடை: நாடு முழுவதுமான ஒரே ஒரு அரசு காப்பீட்டு நிறுவனம் மட்டுமே நிறுவப்பட வேண்டும். தனியார் நிறுவனங்கள் இதில் அடிக்கும் கொள்ளையை வால் தெருவில் உள்ள பங்குச் சந்தையில் பதுக்குவதால், அவற்றுக்கு காப்பீட்டுத் திட்டத்துக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும்.
3. நிரந்தர ஊக்கத் தொகை: வேலைவாய்ப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும், குறைந்த பட்ச ஊக்கத் தொகைக்கு உறுதியளிக்க வேண்டும்.
4. இலவசக் கல்வி: கல்லூரிக் கல்வி கட்டணங்களை அறவே நீக்க வேண்டும்.
5. புதுப்பிக்கத் தக்க எரிசக்தி: நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களைக் கைவிட்டு, மாற்று வழியில் எரிசக்தி உற்பத்திக்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டும்.
6. உடனடிச் செலவு: குடிநீர், சாலைகள், கழிவுநீர்ப் போக்குவரத்து, ரயில், பாலங்கள், மின்கட்டமைப்பு ஆகியவற்றுக்காக உடனடியாக ஒரு டிரில்லியன் டொலர் செலவழிக்க வேண்டும்.
7. வனப் பாதுகாப்பு: அமெரிக்காவின் அனைத்து அணு உலைகளையும் மூடுதல், காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களை உருவாக்குதல், ஆறுகளின் இயற்கையான போக்கை தடுக்காதிருத்தல் போன்றவற்றிற்காக மேலும் ஒரு டிரில்லியன் டொலர் செலவு செய்ய வேண்டும்.
8. சம உரிமை: இனம் மற்றும் பாலியல் சம உரிமைகளுக்கான சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.
9. எல்லைச் சிக்கல்: நாட்டின் அனைத்து மாகாண எல்லைகளையும் திறந்து விட வேண்டும். இதன் மூலம் யாரும் எங்கு வேண்டுமானாலும் போய் வேலை செய்து வாழ வழி செய்தல்.
10. வாக்குச் சீட்டு: அமெரிக்கத் தேர்தல்களில் சர்வதேச நடைமுறைப்படி, வாக்குச் சீட்டைக் கொண்டு வர வேண்டும். சுயேச்சை மற்றும் கட்சி கண்காணிப்பாளர்கள் மத்தியில் வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட வேண்டும்.
11. கடன் தள்ளுபடி: வர்த்தகம், கல்வி, வீட்டு அடமானம் உள்ளிட்ட அனைத்துக் கடன்களையும் உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். அதேபோல், உலக வங்கி அனைத்து நாடுகளுக்கும் வழங்கிய கடன், வங்கிகள் வங்கிகளுக்கு வழங்கிய கடன், அனைத்து கடன் பத்திரங்கள் மீதான கடன் என அனைத்தையும் உலகளவில் தள்ளுபடி செய்ய வேண்டும்.
12. விலக்கம்: அனைத்து கடன் மதிப்பீட்டு குறியீட்டு நிறுவனங்களுக்கும் சட்டப் பாதுகாப்பை விலக்க வேண்டும்.
13. தொழிலாளர் அமைப்பு: தொழிலாளர் அமைப்புகளின் தலைமையைத் தேர்ந்தெடுப்பதில், அனைத்து தொழிலாளர்களும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
நியூயார்க்கில் நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தனியார் நிறுவன தலைவர்களின் பணப் பேராசையை அடையாளப்படுத்தும் விதத்தில் பேய் போல வாயில் பணத்தைக் கவ்வியபடி வேடங்கள் அணிந்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்னொருபுறம் பெரிய நிறுவனங்களில் வேலை இழந்தவர்களும் போராட்டங்களில் குதித்துள்ளனர். இவர்களுடன் கல்லூரி மாணவர்களும், பல்வேறு தொழிற்சங்கங்களும் பங்கேற்றுள்ளனர்.
போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதிபர் ஒபாமா, மக்களின் கோபத்தின் மூலம் நமது நிதி அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. என்று கூறியுள்ளார்.
அமெரிக்கா முழுக்க பரவும் போராட்டம்,
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் அரசு பல்வேறு சிக்கன நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. அதனால் ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு இன்னும் முற்றிலுமாக நீங்காத நிலையில் மற்றொரு அறுவை சிகிச்சைக்கு அமெரிக்க மக்கள் தயாராக இல்லை. இதனை எதிர்த்து மக்கள் போராடிவருகின்றனர். நியூயார்க் நகர ஆக்கிரமிப்பு பிரிவின் ஒருங்கிணைப்பாளர்கள் இதுகுறித்துக் கூறியதாவது: தனியார் நிறுவனங்கள், சட்டவிரோதமான முறையில் எங்கள் வீடுகளைக் கைப்பற்றுகின்றனர். மக்கள் பணத்தில் வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகளுடன் அவர்கள் தங்கள் நிறுவனங்களை கடனில் இருந்து மீட்டுக் கொள்கின்றனர்.
தங்கள் தலைமை அதிகாரிகளுக்கு கணக்கிட முடியாத அளவிற்கு சம்பளத்தை வாரி வழங்குகின்றனர். அதோடு தங்கள் நிறுவனங்களில் பணியாற்றும் எங்களைப் போன்றவர்களை வெளியே தள்ளிவிட்டு வெளியிடப் பணி(அவுட்சோர்சிங்) மூலம் தங்கள் வேலைகளை முடித்துக் கொள்கின்றனர். இதனால் பணியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பளம், காப்பீட்டுத் திட்டச் செலவு எல்லாம் அவர்களுக்கு மிச்சமாகிறது.
அமெரிக்கப் பத்திரிகைகள் இந்த ஆர்ப்பாட்டங்களைப் பற்றி தரக் குறைவான விமர்சனங்களை வாரித் தெளிக்கின்றன. ஆர்ப்பாட்டங்கள் பற்றி அடக்கி வாசிக்கின்றன. அதேநேரம் அமெரிக்கா மட்டுமின்றி உலகளாவிய சிந்தனையாளர்கள் வட்டாரத்தில் இவை பெரும் ஆதரவு பெற்று வருகின்றன.
நியூயார்க்கின் ஜூகோட்டி பூங்காவில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கியுள்ளனர். இவர்கள் தங்களுக்கான அடிப்படைத் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்கின்றனர். இங்கிருந்தபடியேதான் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படுகின்றன. எகிப்து புரட்சிக்கும் இப்போராட்டத்திற்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் எகிப்து புரட்சி, நாட்டின் தலைமையை எதிர்த்து நடந்தது. இப்போதைய அமெரிக்க போராட்டம் நிதி சீர்கேட்டை எதிர்த்து நடக்கிறது.

போராட்டங்கள் வெல்ல வாழ்த்துவோம்.அமெரிக்கா மற்றைய நாடுகளில் அதைத்தானே செய்தது.மே தினத்தை உருவாக்கிய தொழிலாளர் போரட்டமும் அமெரிக்க சிக்காகோவில்தானே கருவாகி உருவானது.