உலக சாதனையாளர்.எங்கள் முதல்வர்


                   
முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு, பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், அனைத்து சாட்சிகளையும் விசாரித்து முடித்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என, அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா வலியுறுத்தினார். இதையடுத்து, ஜெயலலிதா நேரில் வரநீதிமனறம் உத்தரவிட்டது. ஆனால், ஜெயலலிதா தரப்பில், வீடியோ கான்பரன்ஸ் அல்லது அரிக்கை மூலம் பதிலளிப்பதாகக் கூறி தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் நிராகரித்தனர். இதையடுத்து, உச்சநீதிமன்றம் சென்ற ஜெயலலிதாவுக்கு, அக்., 20ம் தேதி கண்டிப்பாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். "இசட்' பிரிவு பாதுகாப்பில் இருப்பதால் தகுந்த பாதுகாப்பு வழங்கவேண்டும் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதுவரை ஜெயலலிதா 130க்கும் மேல் இவ்வழக்கில் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வரக் கோரும் அழைப்பாணையை தட்டிக்கழித்து பிணை பெறுவதில் சாதனை படைத்துள்ளார். கிட்டத்தட்ட இது ஒரு உலக சாதனையாகும்.

இதனை தொடர்ந்து பெங்களூரூ நீதிமன்றத்தில்நடந்த விசாரணைகளில், ஜெயலலிதா பாதுகாப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி மல்லிகார்ஜுனய்யா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்குரைஞர் ஆச்சார்யா, ஜெ., வழக்குரைஞர் கந்தசாமி, கர்நாடகா போலீஸ் டி.சி.பி., ரமேஷ் ஆகியோர் ஆஜராகினர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பரப்பன அக்ரஹார சிறப்பு நீதிமன்றத்தில்ஆஜராக வேண்டும் அனைத்து வசதிகளும் உள்ளன என நீதிபதி உத்தரவிட்டார். 

அங்கு வரவுள்ளது போல் நேற்றுவரை ஜெயலலிதா தரப்பு நடந்து கொண்டது.ஆனால் 
இன்று ஜெ,, தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் தமது பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில் முழு அறிக்கை வந்ததும் நான் ஆஜராகிறேன். பாதுகாப்பு தொடர்பான விஷயம் குறித்து தமிழக அரசுக்கு இதுவரை எந்தவொரு விவரமும் வந்து சேரவில்லை. இதுவரை இந்த விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என கோரியுள்ளார். கர்நாடக அரசின் வக்கீலிடம் விளக்கம் கேட்டு இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கிறோம் என நீதிபதிகள் கூறி விட்டனர். நாளை இந்த மனுமீதான உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஜெயலலிதா 20 ம் தேதி நீதிமன்றத்தில் நேரில்ஆஜராவாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே இந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிய போது இது வழக்கை தாமதப்படுத்தும் நோக்கம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றத்தில் ஜெயலலிதாவை நேரில் ஆஜராக விக்ரமாதித்தன் போல் நீதிமன்றம் செயல்பட்டாலும் ஒன்றும் செல்லுபடியாகவில்லையே.கனிமொழி பெண் என்பதால்பாவப்பட்டு  பிணை கொடுத்துவிடாதீர்கள் என நீதிபதிகளுக்கு சட்டத்தின் பக்கங்களை கடைபிடிக்கக்கூறிய முதல்வர் தனக்கு என்று வரும் போது மட்டும் முன் மாதிரியாக நடந்து கொள்ளாமல் குதிருக்குள் ஒளிவது ஏன்?
 இப்போது உச்ச நீதிமன்றம் ஜெயலலிதாவின் வேண்டுகோளை நிராகரித்து கண்டிப்பாக நீதிமன்றத்திற்கு வந்தே ஆக வேண்டும்  எனக்கூறியுள்ளது.
133 க்கும் மேற்பட்ட முறைக்கும் மேல் வாய்தா வாங்கி சாதனை படைத்தவர் தனது சாதனையை தானே முறியடிக்க வாய்தா கேட்டால் தர மறுக்கும் நீதிமன்றம் ஒரு உலகசாதனையாளர் மனதை வேதனைக்குள்ளக்கி விட்டது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?