25 சிறந்த வலைப்பூக்கள்

------------------------------------------------------------------------------------------------------
இங்கிலாந்து அரண்மனை முன்பு ராணிக்கு வாழ்த்து சொல்ல வந்த கூட்டம்.

லஞ்சபதி?

ஜாமீன் வழங்க நீதிபதிக்கு ரூ.10 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் ஆந்திர சட்ட அமைச்சர் எரசு பிரதாப் ரெட்டிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

சட்டவிரோத சுரங்க வழக்கில் சிக்கியவர் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி. இவர் மீதான வழக்கு, ஹைதராபாதில் உள்ள சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் கூடுதல் சிறப்பு நீதிபதி டி.பட்டாபிராம் ராவ் முன்னிலையில் நடைபெற்று வந்தது.
ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி பட்டாபிராம் கடந்த மாதம் உத்தரவிட்டார். ஆனால் சிபிஐ மேல்முறையீடு செய்து ஜாமீனுக்கு தடை உத்தரவு பெற்றது.
இந்நிலையில் நீதிபதி பட்டாபிராம் ரூ.10 கோடி பெற்றுக் கொண்டு ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்கியதாக சிபிஐ விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பட்டாபிராம் விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் தெரிகிறது.

ஜாமீனுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் ஆந்திரத்தில் மட்டுமின்றி நாடு முழுவதுமே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஆந்திர மாநில காங்கிரஸ் அமைச்சர் எரசு பிரதாப் ரெட்டிக்கு தொடர்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லஞ்சம் கொடுத்து ஜாமீன் பெற்ற ஜனார்த்தன ரெட்டி, பிரதாப் ரெட்டிக்கு மிகவும் நெருக்கமானவர். இதன் அடிப்படையில் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் பெற லஞ்சம் கொடுக்கும் நடவடிக்கையில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார் என்று சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
இந்த விவகாரத்தில் பிரதாப் ரெட்டிக்கு எதிராக முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், அதனை விரைவில் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாகவும் சிபிஐ கூறியுள்ளது.

சுரன்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?