குடியரசு குழப்பம்


                                                             

இரண்டு மணி நேரத்துக்கு பாஜக கூட்டணி கட்சிகள் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட ஆளை தேர்ந்தெடுக்க ஆலோசித்திருக்கின்றனர்.கடைசியில் நாளை பார்த்துக்கொள்ளலாம் என்று கலைந்து விட்டனர்.
ஆளாளுக்கு ஒருவரை,ஒரு கருத்தை சொல்லி அதிக மாக குழம்பியதுதான் காரணம்.
சுரன்

பிரணாப் முகர்ஜி சரிதான்.ஆனாலும் போட்டியென்று வந்து விட்டால் போட்டி ஆளை நிறுத்தாமல் எப்படி? என்பதில் மட்டும் ஒரு கருத்து முடிவுக்கு பாஜக கூட்டணியினர் வந்துவிட்டதாக தெரிகிறது.
இதில் தோற்பது உறுதி என்று தெரிந்த பின் யாரையாவது நிறுத்தலாம்.ஆனால் அந்த தோல்வியாளரை தேர்வு செய்வதில்தான் அதிக குழப்பம்.
ஜெயலலிதா-நீதின் குமார் கூறிய சங்மாவா?மம்தா பானர்ஜி சொல்லும் கலாமா?
ஜெயலலிதா-மம்தா இருவரையும் இந்த குடியரசுத்தலைவர் தேர்தலை சாக்கு வைத்து பாஜக கூட்டணிக்குள் இழுத்து விட வேண்டும் என்ற நினைப்பு கூட்டணியினருக்கு உள்ளது.
சுரன்
ஆனால் கலாமை சொன்னால் ஜெ' யும்,சங்மாவை சொன்னால் மம்தாவு ம் சரிவர மாட்டார்களே என்ற கவலைதான் இப்போது.
ஒரு தோல்வியாளரை தேர்வு செய்வதில் கூட எவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன?
இவர்கள் இழுப்புக்கு வருவதற்கு சங்மாதான் சரியானவர்.கலாம் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டார்.
தனது வாக்கு கூட தனக்கு விழாவிட்டாலும் குடியரசுத்தலைவர் தேர்தலில் நிற்க அவர் தயாராக உள்ளார்.
சுரன்

ஆனால் அப்துல் கலாம் தோல்வி என்று தெரிந்த பின்னும் போட்டியிட சம்மதிக்க மாட்டார் என்றே தெரிகிறது.
எனவே பாஜக கூட்டணியினர் ரொம்ப குழம்பிக்கொண்டிராமல் சங்மாதான் எங்கள் பலியாடு மன்னிக்கவும்.வேட்பாளர் என்று அறிவித்து விடலாம்.
மம்தா ?அவர் பாஜக கூட்டணிக்கு வந்தால் நீங்கள் படும் பாடு அல்லது பட வேண்டிய பாடுபற்றி சொனியா,மன்மோகன் சிங்கிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

அவருக்கு ஜெயலலிதாவும்-சங்மாவும் எவ்வளவோ பரவாயில்லை.ஆனால் ஆட்சிக்கு வந்து விட்டால் ஜெயலலிதாவை சுப்பிரமணிய சாமியுடன் சேர்ந்து தேநீர் விருந்து மட்டும் நடத்த விட்டு விடாதீர்கள்.
ஏற்கனவே தேநீர் விருந்தால் வாஜ்பாயிடமிருந்து பிரதமர் பதவி காணாமல் போனது அத்வானிக்கு தெரிந்திருக்குமே?
சுரன்




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?