அப்படியா ?

குடியரசுத்தலைவர் தேர்தலில் தன்னை யாரும் கண்டு கொள்ள வில்லை .ஆதரவை நாடியும் இதுவரை வர வில்லை என்ற கோபம் அவருக்கு.
ஜெயலலிதாவின் மாநில அரசு எவ்வளவோ கொடுமைகள் செய்வதாக கூறும் நடிகர் விஜய் காந்த் கட்சி புதுக்கோட்டை தேர்தலில் போட்டியிட்டது.
ஆனால் தமிழர்களை கண்டு கொள்ளாததால் குடியரசுத்தலைவர் தேர்தலை புறக்கணிக்கிறாராம்.
சுரன்

அவருக்கு29 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.அதாவது 5,104 வாக்குகள் வைத்திருக்கிறார்.
ஆனால் அவர் 'காவிரி, முல்லைப் பெரியாறு, இலங்கைத் தமிழர் பிரச்னை, நதிகளை இணைக்காதது, இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது உள்பட தமிழர் தொடர்பான எந்தப் பிரச்னையிலும் மத்திய அரசு தமிழர்கள் பக்கம் இல்லை. இந்த நிலையில் குடியரசுத் தலைவர் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்களித்தால் தமிழக மக்களுக்கு  கிடைக்கும் பயன்தான் என்ன?' என்று கேள்வி எழுப்பியுள்ளார். 
அப்படி என்றால் இவர் அரசியலுக்கு வந்த பயந்தான் என்ன?
போராடி ,வாதாடி தான் கோரிக்கைகளை அரசியலில் பெற முடியும்.அப்படி என்றால் இவர் மக்களவை தேர்தலையும் புறக்கணிப்பாரா?மத்திய அரசால்தான் ஒன்றும் நடக்காதே.பி ன் ஏன் மக்களவை தேர்தலில் போட்டி?

அப்படியா?-2
===
ஜெயலலிதா சென்ற ஆட்சியின்போது 2003 நவம்பரில் தனியாரிடமிருந்த மது விறபனையை அரசே ஏற்று நடத்த ஆரம்பித்தது,
"டாஸ்மாக்' மது விற்பனையை துவக்கிய ஆண்டில், 7,000 கோடி ரூபாய் என்ற அளவில் இருந்த மது விற்பனை, தற்போது, 18 ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டி விட்டது.இந்த விற்பனை அளவை 21 ஆயிரம் கோடிகளாக்க அரசு முயற்சிக்கிறது.
சுரன்

தமிழகம் முழுவதும் செயல்படும், 6,900க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் மூலம், 21 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய, 2012 -13ம் ஆண்டுக்கு, இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
அதன் ஒரு பகுதியாக, ஜூன் 14ம் தேதி முதல் பீர் விலையில், ஐந்து ரூபாய் முதல், 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தற்போது ஐ.எம்.எப்.எல்., மதுபானங்களான பிராந்தி, ரம், விஸ்கி, ஜின், ஸ்காட்ச் உள்ளிட்ட அனைத்து மதுபானங்களின் விலையையும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது .
இந்த விலை உயர்வு ரூ10 முதல் 130 வரை இருக்கும்.இந்த விலை .உயர்வு ஜூலை 10இல் இருந்து இருக்கலாம்.
சுரன்

விலை குறைவான இப்போதே வாங்கி ஸ்டாக் வைக்கலாம் என்றால் வீட்டில் மதுபானம் பதுக்கல் என்று படத்துடன் செய்தி வந்து விடும்.

பாவம் குடி மக்கள் இன்றைய விலைவாசி உயர்வு போன்ற துயரங்களை மறக்க டாஸ்மாக் போகலாம் என்றால் அங்கு இப்படியா.
விலையை உயர்த்த ,உயர்த்த மதுக்களில் உற்சாகம் குறைந்து விடுகிறதாம்.
காரணம் தயாரிப்பாலா,விலை உயர்வாலா என்றுதான் தெரிய வில்லை.
பாவம் ஜெயலலிதா அரசு விலையில்லா மிக்சி,மாடு,ஆடு கொடுக்கத்தானே .பால்,பேருந்து கட்டணம்,மின் கட்டணம் இப்போது மதுபான கட்டணம் என்று உயர்த்த வேண்டியதிருக்கிறது.
சுரன்

அதற்கு மத்திய அரசு அவர் கேட்கிற நிதியை கொடுத்தால் குடிமக்களுக்கு இப்படி ஒரு நிலை வராது அல்லவா?
இந்த டாஸ்மாக் விலை உயர்வை எதிர்த்து விஜய்காந்த் போராட்டம் நடத்த வேண்டும்.அதற்கான தகுதி மற்ற எல்லோரையும் விட அவருக்குத்தான் அதிகம்.





==============
அப்படியா?-3

சுரன்
சுரன்
லண்டன் ஒலிம்பிக் போட்டி துவக்க விழா நிகழ்ச்சியில், தமிழ்த்திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல் ஒன்று இடம்பெற இருப்பதாக இங்கிலாந்து இதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் துவக்க விழாவில் நடக்கும் பல்வேறு கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளில், உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் அடங்கிய நிகழ்ச்சியும் ஒன்று.

இதில் இடம்பெற்றுள்ள 86 பாடல்களில், தமிழ்த்திரைப்பட பாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக இங்கிலாந்து பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரிட்டிஷ் இசைக்கலைஞர்களின் பெரும்பாலான பாடல்கள் இடம்பெறும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ள வெகு சில வேற்று மொழிப்பாடல்களில்   தமிழ்த்திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா இசையில் வெளியான கமல்ஹாசன் நடித்த 'ராம் லஷ்மண்' படத்தில்இருந்து எஸ்.பி., பாலசுப்ரமணியம் பாடி கமல்ஹாசன் ஆடிய“நான் தான் ஒங்கப்பண்டா” என்ற பாடல் இடம்பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ள இங்கிலாந்து இசைக்குழுவான பீட்டில்ஸ் மற்றும் பிரபல இங்கிலாந்து இசைக்கலைஞர்களான ஏமி வைன்ஹவுஸ், ரோலிங் ஸ்டோன்ஸ், ஷதுகர் பேப்ஸ் போன்றோரின் பாடல்களுடன் இந்த பாடலின் இசையும், ஒலிம்பிக் துவக்க விழா நிகழ்ச்சியில் இடம்பெறக்கூடும் என இங்கிலாந்து பத்திரிகைகளில் செய்தி இடம்பெற்றுள்ளது.
சுரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?