கொக்கென நினைத்தாயோ கொங்கனவா?

நித்தியானந்தா திருந்துவது போலவே தெரியவில்லை.சூழ்நிலை கைதியாக அருணகிரியை ஆக்கி தன்னை மதுரை ஆதினமாக முடி சூட்டவைத்தப்பின் அவரின் அடாவடி அதிகரித்துக்கொண்டே வருகிறது,
ரஞ்சிதா விவகாரத்தில் முதலில் கொஞ்சம் அடக்கி வாசித்த நித்தி ஜெ ஆட்சிக்கு வந்தபின் அவரின் ஆதரவு தனக்கு இருப்பதாகக் கூறிக்கொண்டு ஆடும் ஆட்டம் கொஞ்சம் அதிகமாகத்தான் உள்ளது.

அருணகிரியார் சுய நினைவுடன் நித்தியானந்தாவுக்கு முடிவைத்தது போல் தெரியவில்லை.உள்ளடி நிச்சயம் நடந்துள்ளது.பெண்ணோ-போதையோ அதன் பின்னாள் இருப்பது தெரிகிறது.
நித்தி பெயரைக்கூறிக்கொண்டு அவரின் அடியாட்கள் செய்யும் அடிதடி கேவலமாக இருக்கிறது.ஒரு ஆன்மீகவாதி இப்படி எல்லாம் பேட்டை அடியாள்தனத்துடன் நடந்து கொள்வது .அவர் உடுத்தியுள்ள துறவு உடைக்கு பெருமை சேர்ப்பதில்லை.நித்தியானந்தா ஒரு போலி சாமியார் என்பதைத்தான் காட்டிக்கொடுக்கிறது.
பிடதியில் வெளிநாட்டுப்பெண் நித்தி தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகக்கூறிய விவகாரம் தொடர்பாக கேள்விகள் கேட்ட ஊடகத்தினரிடம் நித்தி கும்பல் நடந்துகொண்ட முறை அவரை ஆதரிக்கும் பத்திரிகைகளுக்கு ஒரு பாடமாக அமையட்டும்.


நித்தியானந்தா தன்னைக் கற்பழித்ததாக ஆர்த்திராவ் என்னும் அமெரிக்க வாழ் இந்தியப் பெண் கூறிய புகார் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.
அப்போது நித்தியானந்தா செய்தியாளர்களை மிரட்டி பேச அவரது அடியாட்கள் -செய்தியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 
இந்ததகராறில் டி.வி நிருபர் ஒருவரை நித்யானந்தாவின் சீடர்கள் தாக்கினர்.இதனால் நிருபர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நவநிர்மாண் சேனா தொண்டர்களும், செய்தியாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்தனர். 
அப்போது சீடர்கள் அவர்களையும் தாக்க நவநிர்மாண் சேனா தொண்டர்களும் காவல்துறையிடம் புகார்அளித்துள்ளனர்.
நவநிர்மாண் சேனா தொண்டர்கள் மற்றும் டி.வி நிருபர்கள் தங்களைத் தாக்கியதாக நித்தியானந்தாவின் சீடர்களும் இரண்டு புகார்களை அளித்தனர். இவ்விரு மனுக்கள் தொடர்பாகவும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சுரன்

இவ்வழக்குகள் தொடர்பாக ராகசுதா, மோக்‌ஷயா என்னும் 2 பெண் சீடர்கள் உட்பட நித்தியானந்தாவின் 17 சீடர்களை தற்போது காவல்துறைகைது செய்துள்ளது.
பிடதி ஆசிரமம் வெளியே போராட்டங்கள் தொடர்வதால் பரபரப்பாகியுள்ளது.வழமை போல் நித்தி அந்தர்த்யானமாகிவிட்டார்.அதாங்க காணாமலாகிவிட்டார்.
இந்த அடி தடி கூத்து நடக்கும் போது மதுரைஅருணகிரி பாவம்போல் இருந்து பார்த்துக்கொண்டிருந்தார்.மாட்டிக்கொண்டு முழிக்கும் அவரால் வேறென்ன செய்ய முடியும்.

_________________________________________________________________
எப்படி இது நடந்தது......
======================
நாம் மேடையில் பரபரப்புக்காக எதையோ கூறப்போக அது நம் காலையே வாரி விட்டு நம்மை பொய்யனாக்கி விடும்.
அப்படித்தான் மேடையில் பேசியே பரபரப்பாக்கும் சீமான் கூறிய கதை அவருக்கே தமிழின ஆப்பு வைத்துவிட்டது.
25.12.2010 அன்று, சென்னை, எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சீமான் ஒருநடந்த[?] நிகழ்ச்சியைக் கூறினார். “எம்.ஜி.ஆர். முதலமைச்சராகி விடுகிறார். தந்தை பெரியார் அவர்களுக்குப் பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம்.
பெரியாரை சக்கர நாற்காலியில் அழைத்து வருகிறார்களாம். தந்தை பெரியார் மேடையிலேயே இருக்கும்போதே, தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., எனக்குத் தலைவர்கள் இருவர் – ஒருவர் கலைவாணர், இன்னொருவர் அறிஞர் அண்ணா என்று கூறினாராம். பெரியாரைப் பற்றிச் சொல்லவில்லையே என்று கூட்டம் கொந்தளிக்க, அந்த இரு தலைவர்களையும் உருவாக்கிய தலைவரே அய்யா பெரியார்தான்’ என்றாராம். கூட்டம் ஆர்ப்பரித்துக் கைதட்டியதாம்.
இதுதான் சீமானின் நடந்த கதை.
1977 ஆம் ஆண்டு முதலமைச்சரான எம்.ஜி.ஆர். 73 ஆம் ஆண்டின் இறுதியிலேயே இறந்துபோய் விட்ட அய்யா பெரியாரை எப்படிச் சக்கர நாற்காலியில் வைத்து அழைத்து வந்திருக்க முடியும்?
-சுப.வீரபாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.விளக்கம் கூறுவாரா? அல்லது அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா.என்று அடுத்த மேடையில் கதை சொல்ல போய் விடுவாரா?
____________________________________________________________________________________________



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?