பதவி விலகுவாரா?
ஊழல் எதிர்ப்புக்குழுவினர் பிரதமர் மீது ஊழல் குற்ற சாட்டை கூறிவிட்டு அதை அவர் நல்லவர் என்று சான்று கொடுக்கிறார்கள்.மன் மோகன் சிங்கோ நிருபித்தால் பதவியை அல்லது பிரதமர் வேலையை விட்டு விலகி விடுவதாக சொல்லி சவால் விடுகிறார்.
தனக்கு கீழே உள்ள்வர்கள் ஆயிரம் கோடிக்கணக்கில் முறைகேடுகள் செய்வதை அனுமதிப்பதே ஒரு வகை ஊழல்தானே.அவரது கையில் உள்ள நிலக்கரி துறையிலேயே பல்லாயிரக்கணக்கான கோடிகளில் மோசடி நடந்துள்ளதே .அதற்கு அவர்தானே பொறுப்பேற்க வேண்டும்.தன்னால் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் கட்டுப் பாடற்ற முறையில் லஞ்ச-லாவண்யத்தில் திளைத்தால் பிரதமரின் கையாலாகத்தனமா?அல்லது பங்கு இருக்கிறதா என்ற கேள்விதானே எழும்?
இரண்டிலே அவர் பிரதமர் பதவிக்கு தகுதியில்லை என்ற முடிவுக்குத்தானே வர வேண்டியிருக்கிறது.தன் கீழ் உள்ளவர்களின் கட்டுபாடற்ற லஞ்சத்தை கட்டுபடுத்த ,நடவடிக்கை எடுக்க முடியாமல் காப்பாற்ற அல்லது அதை மறைக்க துடிப்பவர் எப்படி கண்ணியமான பிரதமராவார்?
இந்தியாவின் இளவரசராக தன்னை எண்ணிக்கொண்டுள்ள ராகுல் கர்நாடகாவை விட ஊழல் மிக்க மாநிலம் இந்தியாவில் இல்லை என்று" பொன் மொழி "ந்துள்ளார்.
அதுபோலே இந்தியாவில் தற்போதைய காங்கிரசு ஆட்சியை விட ஊழல் மிக்க ஆட்சி இதுவரை இருந்ததில்லை என்பதற்காகவும் பெருமை பட்டுக்கொள்ளலாம்.
90 வயது கலைஞர்
+++++++++++++++++
இந்திய சினிமா உலகின் பிதாமகன்களில் ஒருவராக கருதப்படுபவர் இயக்குநர் மிருணாள் சென். வங்காளத்தை சேர்ந்த மிருணாள் சென் தனது திரைப்படங்களின் மூலம் பல புதுமையான சமூக முறையையதார்த்தமான பல்வேறு படைப்புகளின் மூலம் இந்திய சினிமாவிற்கு வழங்கியவர்.
இவர் இயக்கிய ஏக் தின் ப்ரதி தின், புவன் ஷோம், காந்தர் உள்ளிட்ட படங்கள் பலதரப்பட்டவர்களின் பாராட்டுகளைப் பெற்ற திரைப்படங்களாகும். இவரது இயக்கத்தில் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தின்போது இந்திய பெண்ணுக்கும், புலம் பெயர்ந்த சீன நாட்டைச் சேர்ந்தவருக்கும் இடையிலான அன்பை அரசியல் பின்னணியுடன் சொல்லும் வகையில் சித்தரிக்கப்பட்டது ‘நீல் ஆகாஷெர் நீச்சே‘ என்ற திரைப்படம். இப்படத்தை இந்திய அரசு அப்போது தடை செய்து உத்தரவிட்டது. சுதந்திர இந்தியாவின் அரசு தடை செய்த முதல் திரைப்படம் இப்படமாகும். இதன்பின்னரும், அரசியல் கருத்துக்களை முன்வைத்தே பல திரைப்படங்களை எடுத்தார்.
இதனிடையே இந்தியாவின் ஐந்தாயிரம் ஆண்டு வரலாற்றை இயக்கித் தருமாறு இந்திய அரசு வேண்டிக்கொண்டதன் அடிப்படையில் ‘மூவிங் பெர்ஸ் பெக்டிவ்ஸ்‘ என்ற ஆவணப்படத்தை மிருணாள் சென் இயக்கினார். உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாவில் இவரது திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன. இந்நிலையில் மிருணாள் சென் தன்னுடைய 90 வது பிறந்தநாளை சமீபத்தில் எளிமையாக கொண்டாடினார்.
அப்போது, மிருணாள் சென் “இன்று என்னிடம் 5 கோடி ரூபாய் கொடுத்து படம் இயக்கித் தரக் கேட்கி
றார்கள். அந்தப்பணத்தில் நான் ஐந்து படங்களை எடுத்துவிடுவேன்” என பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற கூட்டத்தினரிடையே தெரிவித்துள்ளார். மேலும், திரைப்பட இயக்குநர்கள் எல்லாம் சமூக விஞ்ஞானிகளாகவும் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்,
________________________________________________________________
காமிக்ஸ் அன்பர்களுக்கு
__________________________
''டின்டின் இன் அமெரிக்கா'' என்ற சித்திரக் கதையின் கையால் வரையப்பட்ட அட்டை பாரிஸில் நடந்த ஏலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக விலையைப் பெற்றிருக்கிறது.
1932 இல் வரையப்பட்ட இது[1,338,509.20 யூரோக்கள்]16 லட்சம் டாலர்களுக்கு விலைபோயுள்ளது.
பிரபலமான பெல்ஜிய நகைச்சுவைக் சிறுவனைக் கதாநாயகனாகக் கொண்ட இந்த புத்தகத்தின் முதலாவது வெளியீடு, அதன் மூலப்பிரதி மற்றும் அது சார்ந்த விளையாட்டுப்பொருட்களும் அங்கு விலைபோயின.
டின்டின்னின் சாகசங்கள் நிறைந்த இந்தச் சித்திரக் கதைகள் முதன் முதலில் 1920 களில் ஹேர்ஜ் என்ற பெயரில் எழுதிய பெல்ஜிய நாட்டு சித்திரக் கதை எழுத்தாளரான ஜோர்ஜஸ் றெமியினால் எழுதப்பட்டவையாகும்.
கதையில் தன்னுடைய ஸ்நோவி என்ற நாயுடன் சாகசங்களை செய்யும் இந்த இளைஞன் காப்டன் கடுக் என்பவரின் உதவிகளையும் பெறுவார்.
டின்டின்னின் நினைவுப் பொருட்களான சுமர் 700 பொருட்கள் இந்த ஏலத்தில் விற்கப்பட்டன.
இந்த புத்தகத்தின் அட்டையில் கதாநாயகன் ''கௌ பாய்'' போன்று காட்சியளிக்கிறார், அவருக்கு பின்னால் ஒரு கோடரியுடன் ஒரு செவ்விந்தியர் இருப்பார்.
இந்த புத்தகத்தை வாங்குவதற்கான ஏலத்தில் போட்டி மிகவும் அதிகமாக இருந்தது.
சித்திரக் கதைகளில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு தனிநபரால் இது வாங்கப்பட்டுள்ளது.
இது போல டின்டின் சந்திரனுக்கு சென்று செய்யும் சாகசங்கள் பற்றிய ஒரு புத்தகத்தில், சந்திரனுக்கு சென்ற நீல் ஆம்ன்ட்ராங்கின் கையெழுத்து இடப்பட்டு, அதுவும் அங்கு ஏலத்தில் நல்ல விலைக்கு விற்கப்பட்டது.
______________________________________________________________________________
ஆப்பிள் ஐபோனில் நீங்கள் உபயோகிக்கும் வசதிகள்