நல்லா பார்த்துக்கோங்க.....
நாங்களும் ஏழைகள்தான்.....!
நாள் ஒன்றுக்கு ரூ.32-க்கு கீழ் சம்பாதித்து செலவிடுபவர்கள்தான் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என்று மத்திய திட்டக்குழு மான்டேக் சிங் அலுவாலியா முடிவு செய்துள்ள நிலையில், மாதம் ரூ.90 ஆயிரத்தை தங்களின் ஏழ்மை நிலைக்கு எல்லையாக மும்பை பார்சி மக்கள் நிர்ணயித்துள்ளனர்.இதுவரை அந்த வறுமைக்கோடு மாதம் 50ஆயிரமாக இருந்துள்ளது.அதை அரசும் ஒத்துக்கொண்டிருந்தது பெரும் வியப்பை தருகிறது.
இவர்களை மட்டும் 50000,90000 ஏழைகள் என்று அரசு மானிய விலையில் அதுவும் மும்பையில் வீடுகள் வழங்க காரணம் என்ன?மாதம் 90,000/- சம்பாதிப்பவன் ஏழை என்று மானிய விலையில் வீடுகள் வழங்கினால் அலுவாலியா மாண்டேக் சிங் கூறியபடி மாதம்9,200/- சம்பாதிக்கும் ஏழைக்கு இலவசமாக அல்லவா வீடுகள் வழங்க வேண்டும்?
90000/-மாத வருமானக்காரர்கள் ஏழைகள் என்று நீதிமன்றமும்,அரசும் ஒத்துக்கொண்டால் அது இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும்[?]பொருந்தும் அல்லவா?பொருந்த வேண்டும்.
======================
புதுக்கோட்டை தேர்தல் அவ்வளவாக விறு,விறுப்பு இல்லாமல் தொடங்கி முடிந்துள்ளது.
மொத்தம் 73.56 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளதாக தெரிகிறது.இடைத்தேர்தல்களில் இதுவரை 85 % மேலாகத்தான் வாக்குகள் பதிவாகியுள்ளன.74 என்பது மிகக்குறைவே.
ஆனால் இதனுடன் நடந்த திரிபுரா இடைத்தேர்தலில் 95%வாக்குகள் பதிவாகியிருக்கிறத.முந்தைய சங்கரன் கோவில் வாக்கு% அதிகம்தானே.
"ஜெயிக்கப் போவது யாரு"னு தெரிந்த பிறகும்,தமிழக முதல்வர்,எதிர்கட்சித்தலைவர்,அவரது மனைவி-மாப்பிள்ளை, 32 அமைச்சர்கள்100க்கும் மேற்பட்ட ச.ம உக்கள் ,அதற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள்,கோடிக்கணக்கில் பணம் ஆகியவை இத்தேர்தலில் வாக்குகளுக்காக வெயிலில் அலைந்த பின்னரும் மக்களை பெருவாரியாக வாக்களிக்க சாவடிக்கு கொண்டு வர முடியாதது ஒருசெய்தியை மறைமுகமாக சொல்வது போல் இருக்கிறது.அரசியல் செய்வோர் கவனிக்க வேண்டும்.
_____________________________________________________________________________
பார்வைக்கு வைக்கப்பட்ட கணினி.கண்ணாடி கூண்டுக்குள் மலை சிங்கம்?
______________________________________________________________________