வியட்நாம்-"மால்வேர் "
இரண்டுமே யுத்தங்கள்தான்.
நீங்கள் அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டுகிறதே என்று ஈரான் அதிபர் முகமது அகமதி நிஜாதிடம் சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் கேட்டார்கள். அதைக் கேட்டு அவர் கோபப்படவில்லை. ""இந்த உலகம் வேறு எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. இன்னமும் அணுகுண்டு தயாரிப்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்களே. அதெல்லாம் பழைய கதை'' என்றார்.
ஒருவேளை குற்றச்சாட்டை திசை திருப்புவதற்காகவோ அல்லது ராஜதந்திர யுத்தங்கள், ரசாயன ஆயுதங்கள், உயிரிப் போர் பற்றியோ அவர் குறிப்பிட்டிருக்கலாம் என்று அப்போது கருதப்பட்டது. ஆனால், இப்போது நடப்பதையெல்லாம் பார்த்தால், அவர் குறிப்பால் உணர்த்தியது சைபர் யுத்தமாகக் கூட இருக்கலாம்போல தெரிகிறது.
கணினி இல்லாவிட்டால் இன்றைய உலகம் இல்லை. மளிகைக்கடையில் இருந்து விமானம் இயக்குவது வரை எல்லாமே கணினியின் கட்டுப்பாட்டில்.
போக்குவரத்து சிக்னல், ரயில் சேவை, மெட்ரோ ரயில் போன்றவை பெரும்பாலும் ஏதோ ஒருவகையில் கணினியால் இயக்கப்படுபவையே. நிர்வாகம் செய்வது எளிமையாகிவிட்டது என்ற வகையில் இது மிகப்பெரிய நன்மை. ஆனால், கெட்ட நோக்கம் கொண்டவர்களுக்கும் இந்த கணினிமயம் வசதியாகப் போயிருக்கிறது.
ரயிலைக் கவிழ்க்க வேண்டும், விமானப் போக்குவரத்தை நிறுத்த வேண்டும், பங்குச் சந்தையை முடக்க வேண்டுமென்றால் வருங்காலத்தில் தீவிரவாதிகள் மெனக்கெட வேண்டியதில்லை. தங்கள் இடத்தில் இருந்தபடியே கட்டளைகளைப் பிறப்பித்து விட்டு விளைவுகளைத் தொலைக்காட்சியில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
நாடுகளுக்கு இடையேயான போர்களும் இப்படித்தான். மின் உற்பத்தி நிலையங்களை முடக்குவது, ஏவுகணைகளைப் பாதை மாறச் செய்வது உள்ளிட்டவற்றுக்கும் கணினித் தொழில்நுட்பம் பயன்படப் போகிறது அல்லது இப்போதேகூட பயன்பட்டுக் கொண்டிருக்கலாம்.
இதுபோல கெட்ட நோக்கத்துக்காக உருவாக்கப்படும் மென்பொருள்களைத்தான் "மால்வேர்' என்கிறார்கள். பல்கிப் பெருகும் திறன்கொண்ட வைரஸ், நல்லது போல காட்டிக் கொண்டு தீங்கு செய்யும் "ட்ரோஜன் ஹார்ஸ்', வலையமைப்பைச் சிதைக்கும் "வோர்ம்', வேவு பார்ப்பதற்கும் தகவல் திருட்டுக்கும் பயன்படும் "ஸ்பைவேர்', தன்னிச்சையாக விளம்பரங்களைத் திணிப்பதுடன் கண்காணிக்கவும் பயன்படும் "ஆட்வேர்' போன்றவையெல்லாம் மால்வேரின் சில வகைகள்.
இந்தக் கெட்ட மென்பொருள்கள்தான் வருங்காலத்தின் பயங்கர ஆயுதங்கள். இணையக் குறும்பர்கள், இணையக் குற்றவாளிகள், அரசுகள் போன்றோரால் இவை பயன்படுத்தப்படுகின்றன.
முதல் இரு தரப்பினரும் மால்வேர்களைப் பயன்படுத்துவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், அரசுகள் இவற்றைப் பயன்படுத்தினால் அதுதான் சைபர் யுத்தம். இப்போது அப்படிப்பட்ட ஒரு பெரிய தாக்குதல் கண்டறியப்பட்டிருக்கிறது. அந்தத் தாக்குதலுக்குப் பயன்பட்ட மால்வேரின் பெயர் "ஃபிளேம்'.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்ட "ஸ்டக்ஸ்நெட்' என்ற மால்வேரைப் போன்றதுதான் இந்த "ஃபிளேம்'. ஆனால், அதைவிடவும் பல வகையிலும் திறன் கொண்டது.
சுமார் 20 மெகாபைட் அளவுள்ள இந்த மால்வேரின் நடமாட்டத்தை ரஷியாவின் "காஸ்பர்ஸ்கை' நிறுவனம் அண்மையில் கண்டுபிடித்து அறிவித்தது. நமது வீட்டுக் கணினிகளுக்காக ஆன்டி-வைரஸ் மென்பொருளை உருவாக்கித் தருகிறதே அதே நிறுவனம்தான். இதற்கு முன் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக யாராலும் கண்டுபிடிக்கப்படாமல் "ஃபிளேம்' உலகமெங்கும் உலவி வந்திருப்பதாகவும் காஸ்பர்ஸ்கை கண்டறிந்திருக்கிறது.
உங்கள் வங்கிக் கணக்கில் பணத்தைக் கொள்ளையடிப்பது, படுக்கையறையைக் கண்காணிப்பது போன்ற "உப்புச் சப்பில்லாத' வேலைகளுக்காக "ஃபிளேம்' உருவாக்கப்படவில்லை. வேறு எந்த வகையான நிதி ஆதாய நோக்கமும் அதற்குக் கிடையாது. நாடுகளின் அணு ஆயுத ரகசியங்கள், எண்ணெய்க் கிணறுகள் பற்றிய தகவல்களைத் திருடுவதற்காகவே இது பரவவிடப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.
"ஃபிளேமின்' முக்கிய இலக்கு ஈரான், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள்தான். எகிப்து, லெபனான், சூடான், லிபியா ஆகிய நாடுகளிலும் இந்த மால்வேரின் பாதிப்பு இருப்பதாக காஸ்பர்ஸ்கை தெரிவித்திருக்கிறது.
தாக்குதலுக்கு உள்ளான கணினியின் வெப்கேம், மைக்ரோபோன், ப்ளூடூத் போன்றவற்றை தேவைப்படும்போது இயங்க வைப்பது, அதில் புதிய குறியீடுகளைச் சேர்த்து கண்காணிப்பை அதிகப்படுத்துவது, 20 வகை சர்வர்களைக் கையாளும் திறன் போன்ற வசதிகள் பிளேமில் அடங்கியிருக்கிறதாம். இவை தவிர, வழக்கமாக ஸ்பைவேர்களில் பயன்படுத்தப்படும் விசைப் பலகையைக் கண்காணிக்கும் கீ லாக்கர்கள், திரையைப் படம்பிடித்து அனுப்பும் வசதிகளும் உண்டு.
ஃபிளேமின் அளவு, அதை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும் சிக்கலான குறியீட்டு மொழி, அதன் இயங்கு திறன் போன்றவற்றையெல்லாம் வைத்து அது தனி நபராலோ குழுவாலோ உருவாக்கப்படவில்லை என்கிற முடிவுக்கு உலகம் வந்துவிட்டது. அது நிச்சயமாக ஒரு நாட்டால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உருவாக்கப்பட்டதுதான்.
உலகில் அரசு சார்ந்த பல கணினி வலையமைப்புகள் இந்த கெட்ட மென்பொருள்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வசதியே இல்லாதவை என்று கருதப்படுகிறது. நமது கணினியிலோ, செல்போனிலோ தகவல் திருட்டு நடந்துவிடக் கூடாது என்பதற்காக இருநூறு முந்நூறு ரூபாய் கொடுத்து வைரஸ், ஸ்பைவேர் தடுப்பு மென்பொருள்களை நிறுவிக் கொள்கிறோம். ஆனால், உலகின் பல அரசு வலையமைப்புகள் இந்த அளவுக்குக்கூட பாதுகாப்பு அம்சங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லையாம். இதை எங்கே போய்க் கூறுவது?
இப்போதைக்கு "ஃபிளேம்' பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. அதை அழிக்கும் எதிர் நிரல் கண்டுபிடித்தாகிவிட்டது. ஆனால், அது சொல்லியிருக்கும் செய்திதான் முக்கியம். புதிய வகை யுத்தம் தொடங்கிவிட்டது.
வியட்நாம் யுத்தம் அமெரிக்க ஜனாதி பதி நிக்சனின் ஆட்சிக்காலத்திலும் நடந் தது. நிக் உட் எடுத்த புகைப்படம் உலகள வில் விவாதிக்கப்பட்டது. அவ்வாண்டிற் கான புலிட்சர் விருதும் இப்படத்திற்கு வழங்கப்பட்டது. ஆனால் இப்படத்தின் நம்பகத்தன்மை குறித்து நிக்சன் தனது தலைமை நிர்வாக அதிகாரியுடன் நடத்திய உரையாடல் பதிவு கள் வெளியாயின. பதிவுகள் வெளியான வுடன் வியட்நாம் யுத்தம் எவ்வளவு நம்ப கமான உண்மையோ, அதுபோன்று இப் படமும் நம்பகமிக்க உண்மை என்று நிக் உட் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். உயிரை வெறுத்து பீதியுடன் ஓடிவரும் அச்சிறுமி இன்றும் உயிருடன் இருக்கிறார். அவர் இப்படத்திற்கு உயிர்ச்சாட்சியாக விளங்கு கிறார் என்றும் அவர் கூறினார்.இந்தப் புகைப்படத்தை எடுத்தவுடன் நிக் உட், கிம் புக்கையும் காயமடைந்த மற்ற குழந்தைகளையும் சைகோனில் (இன்று ஹோசிமின் நகரம்) உள்ள பர்ஸ்கி மருத் துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித் தார். அவரைச் சோதித்த மருத்துவர்கள் கிம் புக்கின் தீக்காயங்கள் மோசமாக உள் ளதால் அவர் உயிர் பிழைக்க மாட்டார் என்று கூறினர். ஆனால் 14 மாதங்கள் அவர் மருத்துவமனையில் இருந்தார். அக் கால கட்டத்தில் அவருக்கு 17 அறுவை சிகிச்சைகளும் நடைபெற்றன. அதற் குப்பின் கிம் புக் வீடு திரும்பினார். சை கோன் வீழ்ச்சி அடைந்தபின் நிக் உட் வியட்நாமிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதுவரை அவர் கிம் புக்கை அடிக்கடி சென்று பார்த்துவந்தார்.
மால்வேர் யுத்தம்
நீங்கள் அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டுகிறதே என்று ஈரான் அதிபர் முகமது அகமதி நிஜாதிடம் சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் கேட்டார்கள். அதைக் கேட்டு அவர் கோபப்படவில்லை. ""இந்த உலகம் வேறு எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. இன்னமும் அணுகுண்டு தயாரிப்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்களே. அதெல்லாம் பழைய கதை'' என்றார்.
உலகில் அரசு சார்ந்த பல கணினி வலையமைப்புகள் இந்த கெட்ட மென்பொருள்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வசதியே இல்லாதவை என்று கருதப்படுகிறது. நமது கணினியிலோ, செல்போனிலோ தகவல் திருட்டு நடந்துவிடக் கூடாது என்பதற்காக இருநூறு முந்நூறு ரூபாய் கொடுத்து வைரஸ், ஸ்பைவேர் தடுப்பு மென்பொருள்களை நிறுவிக் கொள்கிறோம். ஆனால், உலகின் பல அரசு வலையமைப்புகள் இந்த அளவுக்குக்கூட பாதுகாப்பு அம்சங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லையாம். இதை எங்கே போய்க் கூறுவது?
-புளியங்குடி பூலியன்[தினமணி]
_______________________________________________________________________________________________________________________________
வியட்நாம் யுத்தம்
------------------------------
------------------------------
அமெரிக்க ஏகாதிபத்தியத் தின் கோர தாண்டவத்தை நினைவூட்டும் இப்படத்திற்கு 40 ஆண்டுகள் நிறை வுறுகிறது. அமெரிக்க மக்களே அவர் களின் அரசுக்கு எதிராக வீறு கொண் டெழுந்த வியட்நாம் போரின் போது 1972ம் ஆண்டில் ஜூன் 8ம் நாளில் எடுக்கப் பட்ட இப்படம் உலக மக்களின் மனச் சாட்சியைக் கிழித்துப்போட்டது.வியட்நாமின் தென்பகுதியை ஆக்கிர மித்திருந்த அமெரிக்கப் படைகளுக்கு எதிராக வியட்நாம் மக்கள் நடத்திய வீரஞ் செறிந்த போராட்டத்தின் அவலமான நினைவுக் குறிப்புகளில் இப்புகைப்படம் முக்கியமான இடத்தை வகிக்கிறது. போர்க்களத்தின் மத்தியில் நிக் உட் என்ற அசோசியேட்டட் பிரஸ் புகைப் படக் கலைஞரால் எடுக்கப்பட்ட புகைப் படம் இது.இந்தப் புகைப்படத்தில் ஆடையின்றி ஓடிவரும் ஒன்பது வயதுப் பெண்ணின் பெயர் கிம் புக் .நாபாம் குண் டால் தாக்கப்பட்ட கிம் புக் உடலின் வேத னையால் கதறியபடி சாலையின் நடுவே ஓடி வருகிறார். அமெரிக்கப்படைகள் வீசிய நாபாம் எரிகுண்டு அவர் மேல் தாக் கியது. குண்டின் கலவையில் இருந்த வேதியியல் பொருட்கள் அவருடைய சதையை எரித்து எலும்பையும் தாக்கின. அவர் அதன் பாதிப்பிலிருந்து மீள பல ஆண்டுகள் கழிந்தன. 17 அறுவைச் சிகிச் சைகளும் தேவைப்பட்டன.
கொடிய நாபாம்
நாப்தனிக் அமிலம், பால்ம்டிக் அமிலம் ஆகிய இரு அமிலங்களின் கலவை இது. வெல்லப்பாகு போன்று இறுகக்கூடிய தன்மை உடையது. இதை பெட்ரோலியம் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட் களில் கலந்து பயன்படுத்துவார்கள். காலாட்படை, ஆயுத வாகனங்கள் ஆகிய வற்றில் பயன்படுத்தப்படும் தீயெறி சாத னங்கள் மூலமும் விமானங்கள் மூலமும் நாபாம் குண்டுகள் வீசப்படும்.வீசியெறியப்பட்டவுடன் நாபாம் குண் டுகள், கலவையில் உள்ள தீப்பற்றக்கூடிய பொருட்கள் காரணமாக பளீரென்று தீப் பிடித்துவிடும். சுற்றிலும் காற்றில் உள்ள பிராண வாயுவை உட்கொண்டு கார்பன் மோனாக்சைடு, கார்பன் டை ஆக் சைடை உற்பத்தி செய்யக்கூடியது.இக்குண்டுகளை அமெரிக்கா இரண் டாவது உலகப் போரில் சோதித்துப் பார்த் தது. வியட்நாம் போரிலும் கொரியப் போரி லும் இதை அமெரிக்கா முழு வீச்சுடன் பயன்படுத்தியது. “தண்ணீர் கொதிக்க 100 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படும். நாபாம் குண்டுகள் 800 டிகிரி முதல் 1300 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை உற்பத்தி செய்யக் கூடியவை’’ என்று கிம் புக் கூறு கிறார். ஒரு விமானத்தில் இருந்து வீசப் படும் நாபாம் குண்டு 2100 ச.மீ பரப்பளவு நிலத்தை நாசப்படுத்தும். நாபாம் கலவை மனித உடலில் தெறித்தவுடன் உடம்பே எரிவது போல் அனல்தகிக்கும். ஜெல் போன்ற அது உடலில் ஒட்டிக்கொள்ளும். அதை உட லில் இருந்து அகற்ற வழிமுறைகள் இல்லை. அதை எடுக்க முயன்றால் சதையையும் பிய்த்துக் கொண்டு வரும். அதை அகற்ற கையையும் பயன்படுத்த முடியாது. உடல் எரிகிறதே என்று தண் ணீரில் குதிக்கவும் முடியாது. நாபாமில் கலந்திருக்கும் பாஸ்பரஸ் தண்ணீரில் எரி யக்கூடியது. பெட்ரோலில் அது எரியாது. எனவே நாபாம் கலவையில் செயலற்று இருக்கும் பாஸ்பரஸ் தண்ணீர் பட்டவுடன் தீப்பிடித்து எரியத் தொடங்கும். ஏகாதிபத் தியத்தின் கொடுமையை என்னவென்று கூறுவது?1965 முதல் 1969 வரை, போபால் விஷவாயு புகழ் டௌ கெமிக்கல்ஸ் நிறு வனம் அமெரிக்காவில் நாபாமைத் தயா ரித்து வந்தது. வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கம் அமெரிக்காவில் வேரூன்றிய வுடன், டௌ நிறுவன ஊழியர்கள் நாபாம் ஆயுதத் தயாரிப்பை புறக்கணித்தனர். குறிப்பிட்ட மரபு வழி ஆயுத ஒழிப்பு சிறப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அமெரிக்கா, மாநாட்டில் தயாரான ஐந்து சாசனங்களுக் கும் பின் ஒப்புதல் அளிக்க இன்றுவரை மறுத்து வருகிறது. சாசனங்களில் குறிப் பிட்டுள்ள ஆயுதங்களில் நாப்தாவும் ஒன்று.
வியட்நாம்
யுத்தம்இரண்டாம் உலகப் போரின் முடிவில் நாஜி படைகள் தோற்கடிக்கப்பட்ட போதும் பிரான்ஸ் மிகவும் பாதிக்கப் பட்டது. இந்தோ சீனாவில் இருந்த பிரெஞ்சு காலனிகளை அதனால் மேலா திக்கம் செய்ய இயலவில்லை. வியட்நா மில் ஹோசிமின் தலைமையில் வியட் நாம் கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்குடன் விளங்கியது. வியட்நாமில் கம்யூனிசம் பரவுவதை விரும்பாத நேச நாடுகள் அதை இரண்டாகப் பிரிக்க முடிவு செய் தன. வட வியட்நாம் ஹோசிமின் தலை மையிலான ஆட்சியின் கீழும், தெற்கு வியட்நாமை பிரான்சின் கட்டுப்பாட் டிலும் வைக்க ஜெனீவா மாநாடு முடிவு செய்தது.பிரான்சின் இயலாமை காரணமாக அமெரிக்கா தென் வியட்நாமில் தன் படைகளை இறக்கியது. ஜெனீவா மாநாடு முன்மொழிந்த பொதுத்தேர்தல் நடை பெறவில்லை. கம்யூனிசத்தைக் கட்டுப் படுத்தல் என்று கூறிக்கொண்டு வியட் நாமில் அமெரிக்கா படைகளை மும்மடங் காகக் குவித்தது. வியட்நாமை ஒன்றி ணைக்கும் முயற்சியில் வட வியட்நாம் மரபு ரீதியான போரில் இறங்கியது. தென் வியட்நாமில் இருந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு படைகள் கொரில்லா போர் முறையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சமர்புரிந்தன. அமெரிக்கா மரபு ரீதியான போரை நடத்தாமல் ரசாயனப் போரை நடத்தியது. மக்களை அழிக்கும் பேரழிவு ஆயுதங்களைப் பயன்படுத்தி பெருமளவில் மக்களைக் கொன்று குவித் தது. வியட்நாம் மக்களின் தீரமிகு போராட் டத்தால் ஏகாதிபத்தியம் தோற்று வெளி யேறியது.ஹோசிமின் தலைமையில் வடவியட் நாம் படைகள் தென் வியட்நாமிலிருந்து அமெரிக்கப் படைகளை விரட்டின. 1975ம் ஆண்டில் சைகோன் வீழ்ச்சியுடன் வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது. வியட் நாம் மீண்டும் ஒன்றிணைந்த நாடாக மாறியது.
தற்போது 49 வயதாகும் கிம் புக் இரண்டு குழந்தைகளுடன் கனடாவில் வாழ்ந்து வருகிறார். கியூபாவில் மருத் துவம் படித்த கிம் புக் தன்னுடன் படித்த புயி ஹூய் டோவான் என்பவரை மணந்து கொண்டு சிறப்பாக வாழ்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ணத் தூது வராக கிம் புக் நியமிக்கப்பட்டுள்ளார்.வியட்நாமின் போராட்ட வாழ்க்கைக்கு இணையானது கிம் புக் வாழ்க்கை. கிம் புக்கின் வேதனைகளும் வலியும் அவ ருடைய துணிச்சலான மறுவாழ்வும் வியட் நாம் மக்களின் தீரத்தையும் தியாகத்தை யும் இன்றைய வளத்தையும் பிரதிபலிக் கின்றன.