இந்திய பொருளாதார வளர்ச்சி அவ்ளோதானா
இந்தியாவின்பணவீக்கம் 7.55 சதவீதமாக அதிகரித்துள்ளது.பண்டங்களின் மொத்த விலைப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் பணவீக்கம் முந்தைய ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் கூடியிருக்கிறது. ஏப்ரல் மாதம் பணவீக்கத்தின் அளவு 7.23 சதவீதமாக இருந்தது. உருளைக்கிழங்கு, பருப்பு, கோதுமை ஆகிய உணவுப் பொருள்களின் விலையேற்றமே பணவீக்கம் உயரக் காரணம் என்று கூறப்பட்டது.
உணவுப் பண்டங்களின் பணவீக்கம் 10.74 சதவீதத்தை தொட்டது. மொத்த விலைப் பட்டியலில் உணவுப் பண்டங்களின் பங்கு 14.3 சதவீதமாக இருக்கின்றது. வருடாந்திர நோக்கில், மே மாதம் உருளைக் கிழங்கின் விலை 68 சதவீதம் அதிகரித்தது. பருப்பு வகைகளின் விலையேற்றம் 16.61 சதவீதம். கோதுமையின் விலையேற்றம் 6.81 சதவீதமாக இருந்தது. மே மாதம் காய்கறிகளின் விலைகள் 49.43 சதவீதம் அதிகரித்தது. முட்டை, இறைச்சி, மீன் விலை 17.89 சதவீதமும் பால் விலை 11.90 சதவீதமும் உயர்ந்தது.
ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் மே மாதம் நடைபெற்ற ஏற்றுமதியின் மதிப்பில் 4.16 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த மாதம் இந்திய ஏற்றுமதிகளின் மதிப்பு சுமார் ரூ. 1 லட்சத்து 28 ஆயிரத்து 400 கோடியாகும். சர்வதேச அளவில் தேவைக் குறைவும் இந்திய உற்பத்தி விகிதத்தின் வீழ்ச்சியும் இதற்கு காரணமாகக் கூறப்பட்டிருக்கிறது.
அடுத்த சில மாதங்கள் ஏற்றுமதிக்கு மிகவும் சோதனையான காலமாக இருக்கும். இதற்குக் காரணம் ஐரோப்பிய தேசங்களில் உள்ள நிலை. எனவே ஏற்றுமதியாளர்கள் புதிய சந்தைகளையும் புதிய நுகர்வோரையும் தேடி வணிகம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்தம் எனற பெயரிலான குளறுபடிகளே இந்த இந்திய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம்.
நினைத்தபோது ரிசர்வ் வங்கி வட்டி வீதங்களை கூட்டுவதும்,குறைப்பதும் வங்கிகளை நோக்கி வரும் மக்களை தனியார் நிதி நிறுவனங்களை நோக்கி போக வைத்துள்ளது.
இந்தபொருளாதார தேக்க நிலையை பற்றி பிரனாப்,மன்மோகன் சிங் கவலை மட்டுமே தெரிவிக்கிறார்களே ஒழிய அதை போக்க எந்த உருப்படியான நடவடிக்கைகளையும் எடுப்பதாக தெரிய வில்லை.
தனியார் பகாசுர நிறுவனங்களுக்கு எல்லாத் துறைகளையும் திறந்து விட்டதும் அவர்களே விலையை நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று அனுமதித்ததும் அரசு தன் கட்டுப்பாட்டில் எதையும் வைத்துக்கொள்ளாததும்தான் இந்த அதிகமான விலையேற்றத்துக்கும்-பணவீக்கத்துக்கும் முக்கிய காரணமாகும்.
ராஜாஜி விற்பனை வரியை கொண்டு வந்து அரசு கருவூலத்தை நிரப்பினார்.ப.சிதமபரம்-மன்மோகன் கூட்டணி இறந்தவ்ர்களை எரிப்பதை தவிர மற்ற அனைத்துக்கும் சேவை வரியை கொண்டு வந்து ஆயிரம் கோடிக்கணக்கில் கருவூலத்தை நிரப்புகிறார்கள்.
ஆனால் அந்த பணம் அனைத்தும் 2-ஜி.கே.ஜி,காமன் வெல்த்,நிலக்கரி முறைகேடுகள் என்றவழியில் வீணாகுகிறது.தனியார்களுக்கே செல்லுகிறது.
முதலில் தனியார் நிறுவனங்கள் நலனை மட்டுமே பார்க்கும் மன்மோகன்சிங் பார்வை மக்கள் நலனுக்கு வரட்டும் .
அமெரிக்க டைம்ஸ் இதழ் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி முடிவுக்க்கு வந்து விட்டதாக கட்டுரை எழுதியுள்ளது.
_______________________________________________________________________
என்.எஸ்.கே.வின் “நல்லதம்பி’, பி.யூ.சின்னப்பா ஹீரோவாக நடிக்க, பானுமதி ஹீரோயினா நடித்த “ரத்னகுமார்’, “சௌபாக்யவதி’, “வனசுந்தரி’, “மனோகரா’, “வீரக்கனல்’ அப்புறம் “மதுரைவீரன்’, “தாய் மகளுக்குக் கட்டிய தாலி’, “தாய்க்கு பின் தாரம்’ உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் காகா ராதாகிருஷ்ணன் நடித்துள்ளார்.
கமல்ஹாசனின் “தேவர்மகன்’படத்தில் குறிப்பிடத்தகுந்த வேடத்தின் மூலம் இரண்டாம் சுற்றில், “வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’, விக்ரமோடு “கண்சிமிட்டும் நேரம்’, விஜயோடு “காதலுக்கு மரியாதை’, பிரபுவோடு “வியட்நாம் காலனி’, பிரபுதேவாவோடு “பெண்ணின் மனதை தொட்டு’, “ஏழையின் சிரிப்பில்..’, அஜித்தோடு “பவித்ரா’, கே.பாலசந்தரோடு “ரோஜா வனம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். .
கலைஞரின் வசனத்தில் உருவான ‘மனோகரா’ படத்தில் வசந்தன் என்ற கேரக்டரில் நடித்து பெயர் பெற்றவர். பிற்காலத்தில் நடிகர் கமல் தனது ‘தேவன் மகன்’ படத்தில் சிவாஜியின் சகோதரனாக நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அந்தப் படத்தில் நாற்காலியில் இருந்தவாறேபடம் முழுக்க நடித்து பெயர் பெற்றார். ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ படத்தில் கேரன் போர்டு விளையாடுகிற கேரட்டரில் நடித்து இன்றைய இளைஞர்களையும் கவர்ந்தவர்.உண்மையிலேயே இவர் கேரம் விளையாட்டை சிறப்பாக விளையாடுவார்.இவர்திமுகவில் இணைந்து அரசியலிலும்இருந்தார்.
________________________________________________________________________