அனைவருக்கும் அகதிகள் தின வாழ்த்துக்கள்...


இன்று [ஜூன் -20]அகில உலக அகதிகள் தினமாம்.
கண்டிப்பாக தமிழர்கள் கொண்டாட வேண்டிய தினம் இது.
காரணம் இந்தியாவிலேயே சில நேரங்களில் எதிலிகளாகத்தான் தமிழர்கள் உணர்கிறார்கள்.
அதில் முக்கியமானது நதி நீர் பிரச்னைகள்.மத்திய அரசு தமிழ் நாட்டை கண்டு கொள்வதே இல்லை.
சுரன்

உலக அளவில் தமிழன் இந்த அகதிகள் நாளை கொண்டாட தகுதி நிறைய கொண்டவன்.
காரணம் .இன்று அதிக நாடுகளில் அகதியாக காலந்தள்ளுவது ஈழத்தமிழர்கள்தானாம்.
யுனிசெப் கணக்குப்படி54 நாடுகள் தற்போதைய கணக்கு.
இதில் இலங்கை,தமிழ் நாடு அதாவது இந்தியா கணக்கில் சேர்க்கப்பட வில்லை.
ஆனால் அங்கு தமிழர்கள் அகதிகள் முகாமிலும்-முள்வேலிக்குள்ளும் காவலில்தான் வாழ்க்கை நடத்துகிறார்கள்.
இன்றைய நிலவரப்படி தனக்கென்று தனி நாடில்லா பழமையான இனம் தமிழினம்தான்.அந்த பெருமையுடன் இப்போது அகில உலக அகதிகள் பெருமையும் சேர்ந்துள்ளது.இதை நாம் நிச்சயம் கொண்டாடித்தான் ஆக வேண்டும்.
நாடின்றி அலைந்த யூத இனம் கூட தனக்கென்று இஸ்ரேலை உருவாக்கிக்கொண்டுள்ளது.
சுரன்

நமக்கு முள்ளிவாய்க்கால்தான் உருவாகியுள்ளது.
இன்னும் நூறு முள்ளிவாய்க்கால்கள் உருவாக்கப்படும் என்று சிங்கள அமைச்சர் ஒருவர் உறுதி கூறியுள்ளார்.
பார்ப்போம்.
மாறுதல் ஒன்றுதான் மாறுதல் இல்லாதது என்று மார்க்ஸ் கூறியுள்ளார்.[கூறியது மார்க்ஸா?லெனினா?]
அந்த மாறுதலை எதிர்பார்த்து அகதிகள் தின வாழ்த்துக்களை தமிழ் உள்ளங்களுக்கு உரித்தாக்குகிறோம்.
0
மம்தா பானர்ஜிக்கு அப்துல் கலாம் எழுதிய கடிதம் முக நூலில் வெளியிடப்பட்டுள்ளது.தன்னை வானளாவ புகழ்ந்துள்ள கடிதத்தை வெளியிட்டவர் மம்தாவே தான்.
தங்க அரியணையையே தியாகம் செய்த புண்ணியவதியாம் மம்தா.தன்னை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்த ஒரே காரணத்துக்காத்தான்  இவ்வளவு புகழ் மாலை.
சுரன்

மம்தா பானரஜி- 'பிரணாப் முகர்ஜி .தான் காங்கிரசில் குப்பை கொட்டிய காலத்தில் அக்கட்சியில் இருந்த அப்போதிருந்தே ஒத்துப்போகாதவர் என்பதாலேயே அவர் குடியரசுத்தலைவராகக்கூடாது" என்ற பரந்த நோக்கில்தான்கலாமை வேட்பாளராக கொண்டாடினார்.அவரை முன்னிறுத்தினால் கணிசமான வாக்குகளை பெறலாம்.பிரணாப்புக்கு சரியான போட்டியை உருவாக்கலாம் என்ற காரணத்தில்தான் கலாம். 
மற்றபடி அவர் மம்தாவின் களம் அல்ல.
இப்போது மம்தா பானர்ஜியின் கட்சியிலேயே அவருக்கு எதிர்ப்பும் பிரணாப்க்கு ஆதரவும் உருவாகியுள்ளது.
மேற்கு வங்கத்தை சார்ந்த மண்ணின் மைந்தர் குடியரசு தலைவராக திரினாமுல் எதிர்ப்பு தெரிவிக்க முக்கிய ,வலுவான காரணம் 
சுரன்


இல்லை.அப்படியிருக்கையில் மம்தா தேவையின்றி எதிர்ப்பது ஏன் என்ற கேள்வி அங்கு உண்டாகி மம்தாவை குடைகிறது.
சில மக்களவை உறுப்பினர்களும்-ச.ம.உ.க்களும் பிரணாப்புக்கு தாங்கள் வாக்களிக்கப் போவதாக மம்தாகட்சியிலேயே பரப்புரை செய்கிறார்களாம்.
அதில் முக்கிய பங்கு ரெயில்வே அமைச்சராக இருந்து விரட்டப்பட்டவர்
வகிக்கிறாராம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?