ஒரு வரலாற்றுப் பார்வை ?

கடைசியாக குடியரசுத்தலைவராக சோனியா கூட்டம் பிரணாப் முகர்ஜியை அடையாளம் காட்டியுள்ளது.
இன்றைய நிலையில் காங்கிரசு கூட்டணி கைகாட்டுபவர்தான் நம் இந்திய குடியரசுக்கு தலைவராகும் வாய்ப்புள்ளவர்.வேறு வழி கிடையாது.மம்தாவின் கலாமும்,ஜெயலலிதாவின் சங்மாவும் ஓய்வூதியத்தை வாங்கிக்கொண்டு காலம் தள்ள வேண்டியதுதான்.
சுரன்

இப்போதைக்கு குடியரசுத்தலைவராக வாய்ப்பை அதிகம் கொண்டுள்ள பிரணாப் முகர்ஜி வாழ்க்கை கதையை ஒரு வரலாற்றுப்பார்வை பார்ப்போம்.[அரசுத்தேர்வில் கேட்டாலும் கேட்பார்கள்.நன்றாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்]

0பிரணாப் முகர்ஜி, 1935ம் ஆண்டு டிச.11ம் தேதி, மேற்குவங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள மிரதி எனும் கிராமத்தில் பிறந்தார். தந்தை கமதா கின்கர் முகர்ஜி, தாயார் ராஜலட்சுமி. பிரணாப்பின் தந்தை, காங்., கட்சியைச் சேர்ந்தவர். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் இருந்தவர். 1952-64 வரை மேற்குவங்க சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார்.
பிரணாப், எம்.ஏ., வரலாறு, எம்.ஏ., அரசியல் அறிவியல், எல்.எல்.பி., டி.லிட்., ஆகிய பட்டங்களைப் பெற்றார். பிரணாப் கல்லூரி ஆசிரியராகவும், சமூக சேவகராகவும், பத்திரிகை ஆசிரியராகவும் இருந்துள்ளார். 
1957ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி சுவ்ரா என்பவரை மணந்தார். இவர்களுக்கு அபிஜித், இந்திரஜித் என்ற மகன்களும், சர்மிஷ்தா என்ற மகளும் உள்ளனர். அபிஜித், மேற்குவங்க காங்., கட்சி எம்.எல்.ஏ.,வாக உள்ளார். 
பிரணாப், 1969ல் அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். ராஜ்யசபா உறுப்பினராக 1969, 1975, 1981, 1993, 1999 ஆகிய ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திரா அமைச்சரவையில் 1982 - 84ல் நிதியமைச்சராகப் பணியாற்றினார். அப்போது ரிசர்வ் வங்கி கவர்னராக மன்மோகன் இருந்தார். 
இந்திராவின் மறைவுக்குப்பின், 1986-89 வரை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, ராஷ்ட்ரீய சமாஜ்வாடி காங்கிரஸ் கட்சியில் இருந்தார். 2004-06ல் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், 1995-96, 2006-09 ஆகிய ஆண்டுகளில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார். 2009ம் ஆண்டிலிருந்து நிதியமைச்சராகச் செயல்பட்டு வருகிறார் பிரணாப்,
சுரன்

கடந்த லோக்சபா தேர்தலில்பிரணாப் போட்டியிட்டபோது, "இனிமேல் எம்.பி.,யாக களத்தில் நிற்க மாட்டேன்' என்று கூறினார்.
முன்பு மன்மோகன் சிங்குக்கு போட்டியாக பிரதமர் பதவி க்கு கண் வைத்தவர்.ஆனால் சோனியா காந்தி மனது வைக்காததால் பிரதமர் ஆக இயலவில்லை. மாறாக அவர் இப்போது குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.ஆகியும் விடுவார்.இப்போதே பார்க்க வேண்டிய நாடுகள் பட்டியலை தயாரிக்க ஆரம்பித்து விடலாம்.
என்ன ஒரு வருத்தம்.பிரணாப் முகர்ஜிக்கு நம் தமிழர்களை விட இனவழி முறையில் சிங்களர்கள் மீதுதான் இனப்பாசம் அதிகம்.
[சிங்களர்கள் இந்திய கலிங்கம் பகுதியில் இருந்து இலங்கைக்குப்போனவரகள்.அவர்களின் பூர்வீக கலிங்கம் பீகார்,ஒரிசா,மேற்கு வங்கம் சேர்ந்தது என்து வங்காளிகளின் நம்பிக்கை.]
_______________________________________________________________________

சுரன்


குடியரசுத் தலைவர் வாக்குப்பதிவு எப்படி?.

குடியரசுத்தலைவர்தேர்தலுக்கான மொத்த ஓட்டு மதிப்பு = (எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு + எம்.பி.,க்களின் ஓட்டு)
மொத்த ஓட்டுகள் = 10,98,882 (5,49,474 + 5,49,408).
இந்தியாவில் மொத்தம் 4,120 எம்.எல்.ஏ.,க்களும், 776 எம்.பி.,க்களும் (மக்களவை 543 + மாநிலங்களவை233) உள்ளனர்.
எம்.எல்.ஏ.,க்களில் 28 மாநிலங்கள் மற்றும் டில்லி, புதுச்சேரி ஆகிய 2 யூனியன் பிரதேச எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே இத்தேர்தலுக்கு கணக்கில் கொள்ளப்படுகிறது.
எம்.எல்ஏ.,வின் ஓட்டு மதிப்பு: ஒரு எம்.எல்.ஏ.,வுக்கு எத்தனை ஓட்டு என்பது கீழ்க்கண்டவாறு கணக்கிடப்படுகிறது.
மாநிலத்தின் மக்கள்தொகை
----------------------------------------- =
எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை * 1000

விதி 52 (2)ன் படி, "1971 மக்கள்தொகை கணக்கெடுப்பு படிதான், தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் கணக்கில் கொள்ளப்படுகிறது. 
தமிழகத்தின் மக்கள் தொகை (1971ன் படி) 4,11,99,168 பேர். 
எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 234. இதன்படி 4,11,99,168/ (234 *1000)= 176. தமிழத்தின் ஒரு எம்.எல்.ஏ., வுக்கு 176 ஓட்டு. அதன்படி தமிழக எம்.எல்.ஏ.,க்களின் மொத்த ஓட்டு மதிப்பு (234 *176) 41,184. 
1971 ஆண்டுமக்கள் தொகை அடிப்படையில் ஓட்டு மதிப்பு மாநிலத்துக்கு, மாநிலம் வேறுபடும்.
அனைத்து மாநிலங்களையும் சேர்த்து எம்.எல்.ஏ.,க்களின் மொத்த ஓட்டு மதிப்பு 5,49,474.


எம்.பி.,க்களின் ஓட்டு மதிப்பு: எம்.பி.,க்களின் ஓட்டு கீழ்க்கண்டவாறு கணக்கிடுபடுகிறது. அனைத்து மாநில எம்.பி.,க்களுக்கும் சமமான ஓட்டு மதிப்புதான்.
அனைத்து மாநில எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதிப்பு 
------------------------------------------------------------------------------------ = 
மொத்த எம்.பி.,க்களின் எண்ணிக்கை
இதன் படி 5,49,474/776 = 708. இதன் மூலம் ஒரு எம்.பி.,யின் ஓட்டு மதிப்பு 708. இந்திய ஒட்டுமொத்த எம்.பி.,க்களின் ஓட்டுமதிப்பு (776 *708) = 5,49, 408.
சுரன்


ஏதாச்சும் புரிந்ததா? புரியாவிட்டால் போகிறது.இந்திய குடியரசுத்தலைவர் பொறுப்பு என்ன அவர் வெளி நாடுகள் சுற்றுப்பயணம் போனது போக மற்ற நேரங்களில் நாட்டுக்கு என்ன செய்கிறார்.பிரதமருக்கும் அவருக்கும் பொம்மையாக இருப்பதில் எட்டு வித்தியாசங்கள் என்ன என்பது மட்டும் புரிந்தா வைத்திருக்கிறோம்?.
_____________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?