தள்ளாட்டம்......
இந்திய பொருளாதாரம் ஒரு நெருக்கடியை நோக்கி பயணம் செய் கிறது என்று பொருளாதார நிபுணர் வெங்கடேஷ் ஆத்ரேயா கூறியுள்ளார்.
இந்தியாவின் வளர்ச் சியும் நம் முன்னுள்ள சவால்களும்
என்ற தலைப்பில் அவர் பேசியவைகளின் தொகுப்பு:
"சோவியத் யூனியன் வீழ்ச்சியுற்ற சமயத்தில் அதனை ஒரு சாக்காக பயன் படுத்திக் கொண்டு இந்திய நாட்டிற் குள் அந்நிய நிறுவனங்களுக்கு கதவு களை அகலத் திறந்து விட அரசு யோசித்ததோடு, சோசலிசத்திற்கு எதி ராக பிரச்சாரமும் தொடங்கியது. சோசலிசத்தைக் கைவிட்டால் இந்தி யாவில் ராமராஜ்ஜியம் ஏற்படும் என் பது போல் பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆனால் தனியார் மயம், உலகமயம், தாராளமயம் அமல்படுத் தப்பட்டு அரசு கண்ட கனவு நிறை வேறியதா? என்றால் அது இல்லை. பணவீக்கம் மேலும் மேலும் அதி கரித்த வண்ணம் உள்ளது. வறுமை குறையவில்லை. என்.எஸ்.எஸ் என்று சொல்லக் கூடிய ஒரு நிறுவனம் நாடு முழுவதும் ஒன்றரை லட்சம் குடும்பங்களில் ஆய்வு நடத்தியது. 2004-05ல் நடத்தப் பட்ட இந்த சர்வேயில் 45.6 கோடி பேர் தான் வேலை செய்கிறார்கள்.
ஒரு நாடு வளர்ச்சி அடைந்த நாடு என் றால், அந்த நாட்டில் வாழக்கூடிய மக் கள் ஆரோக்கியமாக இருக்க வேண் டும். கல்வியில் சிறந்து விளங்க வேண் டும். கிராமங்கள் தன்னிறைவடைந் திருக்க வேண்டும். இன்னும் கூட தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் நூற்றுக்கு 80 சதவீதம் பேர் குடிசை களில் தான் வாழ்கிறார்கள். இதைத் தான் ஒளிரும் இந்தியா என்றார்கள். இன்னும் 100 நாள் வேலை வாய்ப்பு முறையாக போய் சேராத குடும்பங்கள் கிராமங்களில் உள்ளன. அமெரிக்காவிற்கு ஜலதோசம் பிடித்தால் இந்தியாவிற்கு காய்ச்சல் வரும் என்பது தான் இப்போதைய நிலைமை. பன்னாட்டு நிறுவனங் களின் மூலதன வரவிற்காக, அந்த நிறு வனங்களுக்கு அஞ்சி நடுங்கக் கூடிய ஒரு அரசாக இந்தியா உள்ளது. ஒரு நெருக்கடியான காலக்கட்டத்தில் இந் திய பயணிக்கிறது. எதிர் வரும் காலங் களில் இந்த நெருக்கடி மேலும் அதி கரிக்க வாய்ப்பு உள்ளது.
ஆத்ரேயா வின் பேச்சை இப்போது இந்திய பிரதமரே ஒப்புக்கொள்ள வேண்டியநிலை வந்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டிக் கூட்டம் திங்களன்று நடைபெற்றது. இக்கூட் டத்தில் மன்மோகன் சிங் பேசுகையில், எங் களைப் பற்றி பொய்யான தகவல்கள் பரப் பப்பட்டு வருகின்றன. தினமும் கறுப்புப் பணம் குறித்து அதிக அளவிலான தொகை ஒன்றை குறிப்பிடுகின்றனர். இதில் உண்மையில்லை எனத் தெரிவித்தார்.
இதற்கு முன்னர் இல்லாத அளவில் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அமல் படுத்தியுள்ளோம். மேலும் அதிக அளவில் வளர்ச்சி விகிதத்தை கொண்டுவந்துள் ளோம்.
எனினும் பொருளாதாரம் மோசமான நிலையில் சென்றுகொண்டிருக்கிறது. இப் போது நாட்டுக்கும் நமது பொருளா தாரத்துக்கும் மிகவும் சிரமமான நேரம். நமது மன உறுதியை பரிசோதிக்க இதுவே சரி யான தருணம். நம்மீதே நமக்கு நம்பிக்கை வேண்டும் என மன்மோகன் சிங் தனது பேச்சின் போது வருத்தப்பட்டார்.
இடது சாரிகளின் கட்டுப்பாட்டில் முந்தைய அரசின் போது வந்த உலகளாவிய பொருளாதார மந்தத்தில் தனித்து நின்று காட்டி வென்ற இந்தியா.
இப்போது காங்கிரசுக்கு எந்த கட்டுபாடில்லாமல் இருக்கும் போது தனது பொருளாதார நடவடிக்கைகளால் நாட்டின் பொருளாதார தள்ளாட்டத்துக்கு கொண்டு வந்து விட்டது.அதுதான் உண்மை.
________________________________________________________________________