புண்ணியக்கதை கேளுங்க.....

"நித்தியானந்தாவின் லீலைகள்"கதையை கேட்டால் மோட்சம் கிடைக்கிறதோ இல்லையோ.நிச்சயம் திருப்பங்கள் நிறைந்த சுவையான நாவல் படித்த அனுபவம் கிடைக்கும்.நித்தி ஆசிரம கதவைத்திறந்தால் காற்று வராது .பாலியல் காட்சிகள்தான் தெரியும்.
ரஞ்சிதாவுடனான் உறவுகள் காணொளியால் பாலியல் விவகாரங்களில் சிக்கி அவர்சேமித்து வைத்த துறவி பெயர்சின்னா பின்னாமான பின்பும்.இமாச்சல பிரதேசத்தில் தலை மறைவாகி வந்து நீதிமன்றத்தில் பிணை பெற்று அலையும் போதும் அவரின் திருவிளையாடல்கள் குறையவில்லை.
சுரன்

திமுக ஆட்சி போய் அதிமுக வந்தவுடன் ஏதோ தானே ஆட்சிக்கு வந்தது போல் ஆட்டத்தை ஆரம்பித்தார்.
அடித்து ,அடித்து விரட்டினாலும் பேனாவையும் -காமிராவையும் தூக்கிக்கொண்டுசெவ்வி எடுக்க வரும் செய்தியாளர்களி ஒரு சாரார்நித்தியை நல்லவராக சித்தரிக்க முயன்றதையும் மறக்க இயவில்லை.அதற்கும் சேர்த்துதான் பிடதியில் நித்தி சீடர்களால் அடி வாங்கி அலைகிறார்கள்.கொஞ்சமும் நித்தி திருந்தியதாகவோ-திமிர் பேச்சு அடங்கியதாகவோ தெரிய வில்லை.தான் இப்போது பிணையில் வெளியில் இருப்பதையும் மறந்து ஆட்டம் போடுகிறார்.
சரி .இப்போது ஆர்த்தி ராவ் விவகாரத்தைப்பார்ப்போம்.
 சமீபத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த, "சுவர்ணா டிவி'யில், ஆர்த்தி ராவ் என்ற பெண் பேட்டியளித்து இருந்தார். 
நித்யானந்தாவால் தான் பல முறை பாலியல் தொந்தரவுக்கு உள்ளானதாக அந்தப் பேட்டியில் தெரிவித்திருந்தார்.இதற்கு மதுரையில் வைத்து "நித்யானந்தா, அந்தப் பெண்ணுக்கு எச்சில் மூலம் பரவும் "ஹெர்பிஸ் 2' என்ற பயங்கர நோய் இருந்ததாகவும், அதை குணப்படுத்திக் கொள்ளவே அவர் ஆசிரமம் வந்ததாகவும் தெரிவித்தார். மேலும், அவருடன் தான் பாலியல் உறவு கொண்டிருந்தால் தனக்கும் அந்த நோய் வந்திருக்குமே "என்று கூறினார்.
ஹெர்பிஸ்2 நோயை குணப்படுத்த நித்தி என்ன அமெரிக்காவில் படித்து வந்த மருத்துவரா?
ஆர்த்தி ராவ் அதற்குஆதாரத்துடன் பதில் தந்துள்ளார்.
நித்யானந்தா தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளபடி, அவரது ஆசிரமத்திற்கு எப்போதாவது வந்து செல்லும் சாதாரண பக்தை அல்ல நான். 2005ல் அவர் முதன் முதலாக ஒரு குழுவுக்கு, "ஆனந்த ஸ்புரணா தியானம்' என்ற முதல் நிலை தியானப் பயிற்சியை தானே நேரடியாகக் கற்றுக் கொடுத்தார்.இந்தக் குழுவினர் தான் ஆசாரியர்கள் என பெயர் சூட்டப்பட்டு, 2005 முதல் இவர்கள், மற்றவர்களுக்கு ஆனந்த ஸ்புரணா தியானத்தை கற்றுக் கொடுக்கத் துவங்கினர். இந்த குழுவில் நானும், என் தந்தையும் இடம் பெற்றிருந்தோம். இந்தக் குழு நித்யானந்தாவுக்கு மிகவும் நெருக்கமானது. இதற்கான ஆதாரமாக என்னிடம் புகைப்படங்கள் இருக்கின்றன. 
                                     save image
இதில் உள்ள படத்தில்கீழே உட்கார்ந்து இருப்பவர்களில் இடமிருந்து மூன்றாவதாக இருக்கிறேன். அதில்கடைசியாலிருப்பவர் என் தந்தை இப்படத்தில் இருப்பவர்கள் நித்தியானந்தா ஆசிரமத்தில் உள்ள முக்கிய குழுவினர்.
.இதில் இருந்து நித்யானந்தா ஆசிரமத்திற்கு அவ்வப்போது வந்து செல்லும் சாதாரண பக்தைகள் வரிசையில் நான் இல்லை என்பதையும், அவரது மிக முக்கியமான குழுவில் நான் இடம் பெற்றுள்ளேன் என்பதையும் சாதாரண மனிதர் கூட புரிந்து கொள்ள முடியும்.இவ்வாறு ஆர்த்தி ராவ் கூறியுள்ளார்.

மதுரை ஆதீன மடத்தில் இளைய ஆதீனமாக நித்யானந்தா பட்டம் கட்டியது முதல், சர்ச்சையாகவே இருக்கிறது.நித்தியானந்தா ஒரு மாதமாக மதுரையில் தங்கினார். 
ஆர்த்தி ராவ் சுவர்ணா தொலைக்காட்சியில் நித்யானந்தா மீது பாலியல் குற்றச்சாட்டு பதிலடிகொடுப்பதற்காக நித்யானந்தா, மதுரை ஆதீனத்துடன் பிடதி ஆசிரமத்திற்கு சென்றார். பேட்டியின் போது செய்தியாளர்கள்,கன்னட அமைப்புகளுடன்சண்டை போட்டதை தொடர்ந்து, நித்யானந்தா தலைமறைவாகி விட்டார்.
பெங்களூரில் ஓய்வு எடுக்க[?] வந்த இடத்தில் உணடான பிரச்னையை பார்த்து நொந்து போன மதுரை ஆதீனம் மதுரை மடத்திற்கு திரும்பி, ஓய்வு[?] எடுக்கிறார்.
மதுரை ஆதீனம் பிடதி ஆசிரமத்தில் இருந்து நேராக மதுரை திரும்பியதாகக் கூறினாலும், "நித்யானந்தா, மதுரை ஆதீனம், வைஷ்ணவி, அவரது தங்கை கஸ்தூரி, தாயார் கமலா ஆகியோர் நேற்று முன்தினம் இரவு, சேலம் ஐந்து ரோட்டில் உள்ள கிருத்திகா பேலஸ் என்ற மூன்று நட்சத்திர ஓட்டலில் காவி உடைகளை களைந்து, வேறொரு பெயரில் [மாறுவேடத்தில்]தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் நேற்று காலை 11.30 மணியளவில், அநத ஓட்டலை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தகவல் உள்ளது.. மதுரை ஆதீனமும் அங்கிருந்து தான் மதுரை வந்துள்ளதாகத் தெரிகிறது.
எனவே அருணகிரியாருக்கு தனது வாரிசு இருக்கும் இடம் தெரிந்திருக்கலாம்.
முறை கெட்ட சாமிக்கு பட்டம் கட்டி விட்டு இப்படி ஊர்,ஊராக தலைமறைவாக அலையு அருணகிரியாரை பார்த்தால் பாவம்தான்.ஆனாலும் அவர் என்ன காரணத்தினாலோ நித்தியானந்தாமேல் மோகம் கொண்டிருக்கிறார்.அவர்தான் வாரிசு என்று அடம் பிடிக்கிறாரே.
இப்போது கர்நாடக அமைச்சரவையே நித்தியானந்தா கதைக்காக கூடி முக்கிய முடிவு எடுத்துள்ளது.
நித்யானந்தாவுக்கு கர்நாடகாவில் உள்ள சொத்துக்களை முடக்கி வைக்கப்படுகீறது. அவற்றை நிர்வகிக்க அதிகாரி நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கர்நாடக மாநில முதலைமைச்சர் சதானந்த கவுடா தற்போது தெரிவித்துள்ளார்.
நித்தியானந்தா கதை வர,வர திருப்பங்களுடன் சுவையான கதையாக "விஸ்வரூபம்" எடுக்கிறது.
அடுத்த கட்டத்தை எதிர்பார்த்திருப்போமாக.
சுரன்






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?