அமெரிக்க கனவு
உலக வல்லரசுகளில் முதலிடத்தில் இருக்கிறோம் என்ற மிதப்பில் உலக நாடுகளின் பிரச்சனைகளில் மூக்கை நுழைத்து தீர்ப்பு வழங்கும் நாட்டாண்மை அமெரிக்காவில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக வால்ஸ்ட்ரீட்டைக் கைப்பற்றுவோம் இயக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அமெரிக்காவில் வாழும் மக்களில் 99 சதவிகித மக்களின் நலன்களை புறக்கணித்துவிட்டு, அனைத்து வளங்களையும், வருமானங்களையும் ஒரு சதவிதமாக இருக்கும் பெரும் பணக்காரர்களுக்கே வழங்கப்பட்டு வருகிறது. இதற்கெல்லாம் காரணமாக இருக்கும் பங்குவர்த்தக கட்டிடம் நிறைந்த ‘வால்ட்ஸ்ட்ரீட்டை கைப்பற்றுவோம்’ எனும் இளைஞர்கள் போராட்டம் வெடித்தது.
இப்போராட்டம் அமெரிக்காவின் மற்றொரு முகத்தை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டி வருகிறது. தொடர்ந்து பல மாதங்களாக லட்சக்கணக்கானோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு, தங்களது எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர். இப்போராட்டம் இப்போது தீவிரமாகி வருகிறது.
“நாங்கள் 99 சதவிகிதத்தினர்” என்ற முழக்கத்துடன் அவர்கள்போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் கடந்த பல வருடங்களாக பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவில்லை.
ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகள் வெட்டப்பட்டிருக்கிறது. கடந்த 1973ம் ஆண்டு பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளத்தோடு ஒப்பிடுகையில், தற்போது வரை வெறும் 7 சதவிகிதமே அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் என்பது ஒரு நோயைப்போலஎங்களைதுரத்திவருகிறது. தற்போது நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால், இக்குறைந்த சம்பளத்தை வைத்துக் கொண்டு வாழ முடிவதில்லை என போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்காவில் வாழும் குடும்பங்களில் 103 மில்லியன் குடும்பங்கள் ஆண்டுவருமானமாக 36 ஆயிரம் டாலர்களை மட்டுமே பெற்று வருகின்றனர். இது அமெரிக்கா நிர்ணயம் செய்துள்ள, வறுமைக்கோடுஅளவை விட இருமடங்கு குறைந்த அளவில் பணத்தை கொண்டு வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் ஏற்படும் செலவினங்களை ஈடுகட்ட முடியாமல், தங்களின் தேவைகளில் பலவற்றை சுருக்கிக் கொள்வதோடு, பல நேரங்களில் அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத அவல நிலையில் இருக்கின்றனர்.இதுமட்டுமன்றி, அவசர மருத்துவச் செலவுகள் மற்றும் நீண்ட கால நோய்களுக்குக் கூட சிகிச்சையளிக்க முடியாத நிலையே நீடிக்கிறது.
அமெரிக்காவில் வருமானம் கொழிக்கக் கூடிய பெரும்பாலான நிறுவனங்கள் காணாமல் போய்விட்டன.
அதேபோல், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய தொழிற்சங்கங்கள் வலுவாக இல்லை. மேலும், இன்றைக்கு போட்டிகள் அனைத்தும் உலகளாவிய நிலையில் உள்ளது. இதனால், பெரும்பாலான நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கான அடிப்படை உரிமைகளைக் கூட தரமறுக்கின்றன. கொத்தடிமைபோல்தொழிலாளர்களை நடத்தி வருகின்றன. அமெரிக்காவில் பணி செய்யும் மொத்த தொழிலாளர்களில் 50 சதவிகிதத்தினர்ஆண்டுவருமானமாக34ஆயிரம் டாலர் அல்லது அதற்கு குறைவாகவே பெறுகின்றனர். இதேபோல், 25 சதவிகிதத் தொழிலாளர்கள் ஆண்டு வருமானமாக 22 ஆயிரம் டாலர்கள் என மிகவும் சொற்பமான சம்பளத்திற்கே வேலை செய்து வருகின்றனர்.
கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்காவில் பல தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வே அளிக்கப்படவில்லை.
இதன்மூலம், வறுமைப்பட்டியலில் இவர்கள் 4 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதேபோல், அமெரிக்காவில் தற்போது பணி நீக்கம் வெகுவாக அதிகரித்து வருகிறது. இதனால், குடும்பத்தில் இரண்டு பேர் வேலைக்கு செல்லும் சூழல் அடியோடு மாறி குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கிடைத்தாலே பெரிய விஷயம் என்ற அளவிற்கு நிலைமை மாறியுள்ளது.
அமெரிக்காவில் தனிமையில் வாழும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இவர்கள் 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளையும் பாதுகாக்க வேண்டிய கடுமையான சூழலில் வாழ்ந்து வருகின்றனர். இப்படி ஏழைகளாக வாழ்பவர்கள் 42 சதவிகிதமாக அதிகரித்துள்ளனர். அதேசமயம், அமெரிக்காவில் 20.5 மில்லியன் மக்கள் ஆண்டிற்கு 9,500 டாலர்களுக்கும் குறைவாகவே வருமானம் பெறுகின்றனர். இந்த எண்ணிக்கை கடந்த 2000 மற்றும் 2010ம் ஆண்டிற்கிடையில் 8 மில்லியன் அதிகரித்துள்ளது.
இதற்கு காரணம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக அமெரிக்க அரசு வழங்கி வரும்நிதியுதவியைகுறைத்ததேஆகும்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் ஆட்சியின்போது எதிர்க்கட்சிகளின் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு, வறுமையில் வாடும் குடும்பங்கள் மற்றும் அக்குடும்பத்தில் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் தற்காலிக நிதி உதவி வழங்கும் திட்டம் ஏற்படுத்தப்பட்டது.
இப்போது நாடு முழுவதும் இத்திட்டம் நாளுக்கு நாள் வெட்டி சுருக்கப்பட்டு வருகிறது. அதாவது 68 சதவிகிதத்தில் இருந்து தற்போது 27 சதவிகிதமாக பயனாளிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, மக்களின் ஒட்டுமொத்த வரிப்பணமும், மிகப்பெரிய நிறுவனங்களை மீட்பதற்கே பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக கார்ப்பரேட் நிறுவனங்களை காப்பாற்ற வரிச்சலுகைகள் அளிக்கும் அமெரிக்க அரசு அந்த அக்கறையில் ஒரு சத விகிதம் கூட சாதாரண மக்கள் மீது இல்லை என போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அமெரிக்காவில் தற்போதுஅதிகரிக்கும் இந்த ஏற்றத்தாழ்வு அமெரிக்க முதலாளித்துவத்தையே கேள்விக்குறியாக்கிவிட்டது.
இது போன்ற நிலை அமெரிக்காவுக்கு ஆபத்தானது எனஎதிர்கட்சிகள் எச்சரித்துவருகின்றன.
பார்ப்போம் ஓபாமா இந்த போரட்டத்தையும் பொருளாதார சரிவையும் எப்படி மீட்கின்றார் என்றுஆனால் ஒபாம நம் இந்தியர்கள் அமெரிக்காவில் குவிந்து மென்போருள் தொழிலை தங்கள் வசப்படுத்திக்கொண்டதால்தான் அமெரிக்க இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போவதாக குற்றம் சாட்டி வருகிறார்.
____________________________________________________________________