இதுதான்டா தீர்ப்பு,,,,,,
நித்தியானந்தா தற்போது திருவண்ணாமலையில்அவரது மோனதவத்தில் இருப்பதாக தெரிகிறது.
வெளியே கோவிலுக்கு செல்ல நினைத்தாராம்.ஆனால் சிலர் எதிர்ப்பு தெரிவிக்க தயாராக கூட்டத்தைக் கூட்டுவது தெரிந்து ஏன் வம்பு என்று ஆசிரமத்திலேயே ஒரு ஓரமாக உட்கார்ந்து விட்டாராம்.பக்கத்தில் யார் என்பதுதான் உங்களுக்கு தெரியுமே?
இது தெரிந்து நித்தியின் வாயைக்கிளறி வம்பில் மாட்டி விட பத்திரிகையாளர்கள் ஒலிவாங்கி மற்றும் மைவாங்கி[பேனா]களுடன் ஆசிரமம் முன்பு கூடி நுழைய ஆரம்பிக்க நித்தியின் சீடர்கள் அவர்களை நித்தி சந்திக்க மறுப்பதாக கூறி துரத்தி விட்டார்கள்.
இது போன்ற செய்தியாளர்களால்தானே இரண்டாவது முறையும் நித்தி சிறை சென்று ஆனந்தமானார்.
முன்பே பிடதியில் வாயையு,கையையும் சும்மா வைத்து செய்தியாளர்களை பார்க்காமல் சீடர்-சீடிகளுடன் சிடி பார்த்துக்கொண்டிருந்தால் இத்தனை கேவலம் வந்திருக்குமா?
ஆர்த்திராவுக்கு பதிலளிக்கிறேன் என்று பட்டையை கிளப்பியதுதானே இதன் ஆரம்பம்.?
என்றாவது எதிர்ப்பாளர்களுக்கு முறையான பதிலை கூறியிருக்கிறாரா?ஆணவமான திமிர் பேச்சு .சீடர்களை விட்டு மோத செய்வது என்று ஆதினம் அளவு இல்லாமல் சாதா இனம் போல் அலப்பறை செய்ததால்தான் மக்களிடம் இருந்து வெறுப்பை சம்பாதிக்க வேண்டிய தாகி விட்டது.
திருவண்ணாமலையில் ஏதாவது சொல்லப்போய் பிரச்னையாகி விட்டால் இது வரை தமிழ் நாட்டின் மேலிடம் தரும் ஆதரவு துண்டிக்கப் பட்டு விடும் என்ற பயம்தான் இப்போதைக்கு நித்தியானந்தாவுக்கு.அதனால்தான் மதுரையில் தங்கி இருந்து ஆதின மீட்பாளர்களுடன் போராடாமல் திருவண்ணாமலையில் தங்கி ஜோதியில் கலக்க முடிவு செய்து விட்டார்.
நீதிமன்ற தீர்ப்பு படி இனி கலகம் செய்ய மாட்டார்.செய்தால் அடுத்து பிணை கிடைக்காத திமுக அமைச்சர் நிலைதான்.
_______________________________________________________________________________
தகுதி இழந்த பிரதமர்,,,
பாகிஸ்தான் பிரதமர் யூசப் ரஸா கிலானியை தகுதி நீக்கம் செய்து அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட கிலானி,
ஏப்ரல் மாதம் 26-ம் தேதி முதலே பிரதமர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கிலானி இழக்கிறார்.
இந்த தீர்ப்பு கிலானிக்கு மட்டுமல்ல; அவர் சார்ந்துள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து கிலானிக்கு பதிலாக வேறு ஒருவரை பிரதமராக்கவும் அக்கட்சி முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சௌத்ரி அகமது முக்தார், மக்டூம் ஷஹாபுதீன், குர்ஷீத் ஷா ஆகிய மூவரில் ஒருவர் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள பரபரப்பான இந்தத் தீர்ப்பை அடுத்து அதிபர் ஆஸிப் அலி ஜர்தாரி, தனது இரண்டு நாள் ரஷியா பயணத்தை ரத்துச் செய்துள்ளார்.
அதிபர் ஆஸிப் அலி ஜர்தாரி மீது பல கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து அவரிடம் விசாரணை நடத்த வேண்டும். எனவே இந்த வழக்கை விசாரிக்க வசதியாக சுவிட்சர்லாந்து நாட்டு அரசுக்கு கடிதம் எழுதுமாறு பிரதமர் கிலானிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், அதை அவர் பொருள்படுத்தாமல் இருந்ததை அடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது.
எனினும் இந்த வழக்கில் கிலானி தரப்பில் மேல்முறையீடு ஏதும் செய்யப்படாததால் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி வழங்கப்பட்ட தீர்ப்பு இறுதி செய்யப்பட்டு நடைமுறைக்கு வருவதாக தலைமை நீதிபதி இஃப்திகார் சௌத்ரி தலைமையிலான மூவர் கொண்ட பெஞ்ச் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்ற கிலானி, கடந்த ஏப்ரல் 26 முதலே பிரதமர் பதவியை இழந்துவிட்டார். அது முதலே பிரதமர் இடம் காலியாக உள்ளது. எனவே கிலானி நாடாளுமன்ற உறுப்பினராக நீடிக்கவில்லை என்ற தகவலை முறைப்படி அறிவிக்குமாறு தேர்தல் கமிஷனை நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு பாகிஸ்தான் அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு முதலே பாகிஸ்தான் அரசுக்கும் நீதித்துறைக்கும் இடையே மோதல் இருந்து வருகிறது.
இந்தத் தீர்ப்பை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் 26-ம் தேதிக்குப் பிறகு பிரதமர் கிலானியும் அவரது அமைச்சரவையும் எடுத்த முடிவுகள் என்னவாகும் என்று தெரியவில்லை.
ஜர்தாரிக்கு வழங்கப்பட்ட இந்தப் பொது மன்னிப்பு செல்லாது என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் 2009 டிசம்பரில் தீர்ப்பளித்தது. இதனைத் தொடர்ந்து, ஜர்தாரி மீதான பல கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக, சுவிட்சர்லாந்து அரசுக்கு பிரதமர் கிலானி கடிதம் எழுத வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் பாகிஸ்தான் அரசிடம் வற்புறுத்தி வந்தது.
ஆனால், பிரதமர் கிலானி தலைமையிலான அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஊழல் வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை பிரதமர் செயல்படுத்தாததால் நீதிமன்றத்தை அவமதித்ததாக கிலானி மீது 7 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் ஏப்ரல் 26-ல் குற்றஞ்சாட்டியதுடன் இந்தக் குற்றத்துக்காக "நீதிமன்றம் கலையும் வரை' தண்டனை வழங்கியது. நீதிமன்ற தண்டனை பெற்றதால் அவர் தகுதி இழப்பதாக உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியபோதிலும் கிலானி பிரதமர் பதவியில் தொடர்ந்தார்.
ஆனால்நீதிமன்றத்தின் சுதந்திரத் தன்மைக்கும் இறையாண்மைக்கும் எதிராக கிலானி நடந்து கொள்ளவில்லை. எனவே அவர் பிரதமர் பதவியிலிருந்து விலகத் தேவையில்லை. நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் அவர் செயல்படவில்லையாதலால் அவர் தகுதியிழப்பு அடையவில்லை என்று மக்களவைத் தலைவர் ஃபெஹமிதா மிர்ஸா கூறினார்.
இந்த மக்களவைத் தலைவரின் முடிவுக்கு எதிராக பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தனர். இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி இஃப்திகார் சௌத்ரி தலைமையில் மூன்று நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்து கிலானியை தகுதி நீக்கம் செய்து தீர்ப்பு வழங்கி விட்டனர்.
_______________________________________________________________________________
வெளியே கோவிலுக்கு செல்ல நினைத்தாராம்.ஆனால் சிலர் எதிர்ப்பு தெரிவிக்க தயாராக கூட்டத்தைக் கூட்டுவது தெரிந்து ஏன் வம்பு என்று ஆசிரமத்திலேயே ஒரு ஓரமாக உட்கார்ந்து விட்டாராம்.பக்கத்தில் யார் என்பதுதான் உங்களுக்கு தெரியுமே?
இது தெரிந்து நித்தியின் வாயைக்கிளறி வம்பில் மாட்டி விட பத்திரிகையாளர்கள் ஒலிவாங்கி மற்றும் மைவாங்கி[பேனா]களுடன் ஆசிரமம் முன்பு கூடி நுழைய ஆரம்பிக்க நித்தியின் சீடர்கள் அவர்களை நித்தி சந்திக்க மறுப்பதாக கூறி துரத்தி விட்டார்கள்.
இது போன்ற செய்தியாளர்களால்தானே இரண்டாவது முறையும் நித்தி சிறை சென்று ஆனந்தமானார்.
முன்பே பிடதியில் வாயையு,கையையும் சும்மா வைத்து செய்தியாளர்களை பார்க்காமல் சீடர்-சீடிகளுடன் சிடி பார்த்துக்கொண்டிருந்தால் இத்தனை கேவலம் வந்திருக்குமா?
ஆர்த்திராவுக்கு பதிலளிக்கிறேன் என்று பட்டையை கிளப்பியதுதானே இதன் ஆரம்பம்.?
என்றாவது எதிர்ப்பாளர்களுக்கு முறையான பதிலை கூறியிருக்கிறாரா?ஆணவமான திமிர் பேச்சு .சீடர்களை விட்டு மோத செய்வது என்று ஆதினம் அளவு இல்லாமல் சாதா இனம் போல் அலப்பறை செய்ததால்தான் மக்களிடம் இருந்து வெறுப்பை சம்பாதிக்க வேண்டிய தாகி விட்டது.
திருவண்ணாமலையில் ஏதாவது சொல்லப்போய் பிரச்னையாகி விட்டால் இது வரை தமிழ் நாட்டின் மேலிடம் தரும் ஆதரவு துண்டிக்கப் பட்டு விடும் என்ற பயம்தான் இப்போதைக்கு நித்தியானந்தாவுக்கு.அதனால்தான் மதுரையில் தங்கி இருந்து ஆதின மீட்பாளர்களுடன் போராடாமல் திருவண்ணாமலையில் தங்கி ஜோதியில் கலக்க முடிவு செய்து விட்டார்.
நீதிமன்ற தீர்ப்பு படி இனி கலகம் செய்ய மாட்டார்.செய்தால் அடுத்து பிணை கிடைக்காத திமுக அமைச்சர் நிலைதான்.
_______________________________________________________________________________
தகுதி இழந்த பிரதமர்,,,
பாகிஸ்தான் பிரதமர் யூசப் ரஸா கிலானியை தகுதி நீக்கம் செய்து அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட கிலானி,
ஏப்ரல் மாதம் 26-ம் தேதி முதலே பிரதமர் பதவியில் நீடிக்க தகுதியற்றவர் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கிலானி இழக்கிறார்.
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதன் மூலம் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். தற்போது அதிபராக உள்ள ஆசிஃப் அலி ஜர்தாரியும் அதில் ஒருவர்.
_______________________________________________________________________________