களை இழக்கும் முக [நூல்] ம்,.?
பேஸ்புக் பங்குகளின்மதிப்பு சரிந்துவரும் நிலை இனியும்தொடர்ந்து வந்தால்5இல் இருந்து 8 ஆண்டுகளில் அந்த வலைத்தளம் இணையத்தில் மதிப்பிழந்து யாரும் சீண்டாத நிலை ஏற்பட்டுவிடும் என நிறுவன ஆய்வாளர்கள் கூறிஉள்ளனர்.
அது லாபத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது.
எனினும் எதிர்பார்த்த லாபம் வரவில்லை என்று யாகூ கூறிக்கொண்டு இருக்கிறது.
அந்த நிலையை நோக்கித்தான் பேஸ்புக் நிறுவனம் செல்கிறது என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதுசெல்பேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.இந் நிலையில் அவர்களை எப்படி தன் பக்கம் கவர்ந்திழுத்து வருவாயை பெருக்குவது என்ற சிந்தனையில் பேஸ்புக் பல வழிகளை கொண்டு வருகிறது. ஆனாலும் அதன் பங்குசந்தை மதிப்பு குறைந்துகொண்டே செல்கிறது.
மேலும் கொஞ்ச நாட்களில் இந்த பேஸ்புக் இணைய விரும்பிகளுக்கு போரடிக்க ஆரம்பித்து விடும் அப்போது அவர்கள் இதை விட்டு விட்டு வேறு தளத்தை நாட ஆரம்பித்து வீடுவார்கள் என்றும் அவர்கள் கூறிவருகின்றனர்.அது இப்போது கொஞ்சம்,கொஞ்சமாக தெரிய ஆரம்பித்து வருகிறதாம்.அதைத்தான் சந்தை மதிப்பும் சுட்டி காட்டுகிறதாம்.பார்ப்போம் யார் முக[நூல்] ம் தொங்கப்போகிறது என்று.?
______________________________________________________________________________---
புதிய தேர்தல்
ஆணையர்?
இந்தியாவின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக வி.எஸ்.சம்பத் நியமிக்கப்படுகிறார். தற்போதைய தலைமை தேர்தல் ஆணையளரான எஸ்.ஒய்.குரேஷி ஜூன்10மந்தேதியுடன் ஓய்வு பெறுவதை அடுத்து வி.எஸ்.சம்பத்தை புதிய தேர்தல் ஆணையாளராக குடியரசு தலைவர் பிரதிபா படேல் நியமித்துள்ளார்.
இவர் 2015ம் ஆண்டு வரை தலைமை தேர்தல் ஆணையராக பதவிவகிப்பார்
2013ம் ஆண்டு குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல்கள், 2014ம் ஆண்டு ஆந்திரா உள்ளிட்ட 7 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் 2014 இல் நடைபெறவுள்ள இந்திய நாடாளுமன்ற தேர்தல் ஆகியவற்றை இவரது பத்விகாலத்தில் நடத்துவார்..
1973ம் ஆண்டு ஆந்திராவில் ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்ற வி.எஸ்.சம்பத், நிதித்துறை முதன்மை செயலர், மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு பதவிகளை பகித்துவந்தவர். தேர்தல் ஆணையராக பதவி வகித்துள்ளார்.
தற்போது தலைமை தேர்தல் ஆணையராக பதவி உயர்த்தப்பட்டிருப்பதால் அவருடைய தேர்தல் ஆணையர் பதவி வெற்றிடமாகியுள்ளது. இதற்கு, குடியரசு துணை தலைவரின் செயலராக இருக்கும் சம்ஷேர் ஷெரிப், டெல்லி தலைமை செயலர் பி.கே.திரிபாதி ஆகியோரின் பெயர்கள் பரிசீலணையில் உள்ளன.
ஏற்கனவே ஒரு தேர்தல் ஆணையராக இருக்கும் எச்.எஸ்.பிரம்மா பதவி மூப்பு அடிப்படையில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறவுள்ளார்.
தலைமை தேர்தல் ஆணையரை தேர்வு செய்வதற்கு தனிக்குழு அமைக்க வேண்டும் என பா.ஜக வின் எல்.கே.அத்வானி கருத்து தெரிவித்துஅதை திமுக தலைவர் கருணாநிதியும் ஆமோதித்திருக்கும்நிலையில் அதை பற்றி எந்த ஆலோசனையு மேற்கொள்ளாமல் மத்திய அரசு புதிய தலைமை தேர்தல் ஆணையரை தன்னிச்சையாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே இருந்த நவீன் சாவ்லா காங்கிரசு ஆதரவாளர்.அவர் இந்திரா-ராஜீவ் காந்திகளுடன் நெருக்கமானவர்.அவரை முக்கியமான தேர்தல் ஆணையத்தலைவராக நியமிக்கக் கூடாது என்று முன்பு எதிர்ப்பு கிளம்பியது.அதை கண்டு கொள்ளாமல் அவரை நியமித்தது.காங்கிரசு .இப்போதும் அதே நிலை.காங்கிரசு தன் ஆதரவாளர்களையே நியமிக்கிறது என்ற கருத்தை போக்க அனைத்து கட்சி கருத்துக்களை கேட்டு குழு அமைத்து இனி வருங்காலங்களில் தேர்தல் ஆணையர்களை அமைப்பதுதான் நேர்மையான தேர்தலுக்கு வழி கோரும்.
குடியரசுத்தலைவர் மகன் மராட்டிய தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் எடுத்து சென்று பிடிபட்டும் எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை.அது போன்ற குறைகளை நீக்க வேண்டும்.
_________________________________________________________________
சூரியனை வெள்ளி மட்டும்தான் கடக்குமா?