முதல் கணினி ஏலம்...

"ஆப்பிள்" ஜாப்ஸ் தயாரித்தது, 

சுரன்
பிரபல ஏல நிறுவனமான ஸ்தபிஸ் ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்உருவாக்கிய முதல் ஆப்பிள் மக் கணினியை ஏலத்துக்கு விடுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தை தோற்றுவித்தவர்களான ஸ்டீவ் ஜாப்ஸ், ஸ்டீவ் வாஸ்னியாக் இதனைத் தங்கள் கைப்படவே தயார் செய்தனர்.
1976-ம் ஆண்டு ஜூலையில் இந்த மக் கணினி விற்பனைக்கு வந்த போது இதன் விலை 666.66 டாலர்களாக நிர்ணயம் செய்யப்பட்டது. ரூபாய் மதிப்பில் [அப்போதை மதிப்பில்]ரூ. 6 ஆயிரம்.
சுரன்

வருகின்ற ஜூன்15-ந் தேதி நியூயார்க்கில் நடக்கவுள்ள ஏலத்தில் இவ் ஆப்பிள் கணினி அதிக தொகைக்கு ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் ஆரம்ப கால தன் உபயோக கணினிகள் அதிக எண்ணிக்கையில் உருவாக்கி விற்பனைக்கு கொண்டு வந்த நிறுவனம் ஆப்பிள்தான். இன்றைய மிகப் பிரபலமான ஐ-போன், ஐ-பாட், ஐ-பேட் உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்தின் முதல் படைப்பு இக் கணினிதான்.
தற்போதைய செய்தி.தற்போது நடை பெற உள்ள நவீன தொழில் நுட்ப கண்காட்சியில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய இயங்குதளமான iOS 6 வெளியிட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. அத்துடன் முப்பரிமான தன்மையுடன் கூடிய கணினியையும் அறிமுகப்படுத்தலாம் என தெரிகிறது.

இப் புதிய iOS 6 இல்… முப்பரிமான வரைபடங்கள்(3D maps ) வசதிஇருக்குமென ஏற்கனவே தகவல்கள் வந்துள்ளது.எனவே iOS 6 தொடர்பான எதிர்பார்ப்பு தகவல் தொழில்நுட்ப உலகில்அதிகமாகியுள்ளது. iOS 6 உடன் இணைந்து செயலாற்றும் 7 புதிய விளையாட்டுக்களும் இணைப்பாக வெளியிடப்பட உள்ளது எனவும் தெரிகிறது.
________________________________________________________________



____________________________________________________________________

மாமனிதன் லெனின் உடல் புதைப்பா?
______________________________________

சோவியத் யூனியனை நிர்மானித்தவரான மாபெரும் கம்யூனிச தலைவர் லெனினின் உடல் அவர் இறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படவுள்ளது.
லெனினின் உடல் பதப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 88 ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ளது. மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் லெனின் உடல் கடந்த 88 வருடகாலமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் ஏராளமான மக்கள் இந்த உடலைப் பார்வையிட்டு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
சோவியத் யூனியன் சிதறுண்டு போன பின்னரும் கூட லெனின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது லெனின் உடலை அடக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சுரன்

1924ம் ஆண்டு தனது 53வது வயதில் புரட்சித்தலைவர்-மாமனிதன் லெனின் மரணமடைந்தார். 

அப்போதைய சோவியத் தலைவர் ஸ்டாலின் லெனின் உடலை பதப்படுத்தி பாதுகாப்புடன் மக்கள் பார்ப்பதற்காக வைத்தார்.அன்று முதல் இன்று வரை லெனினின் உடல் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுவருகிறது.இன்று வரை மக்கள் அவரது உடலை பார்த்து மரியாதை செலுத்தி வருகிறார்கள்.
ஆனால் இப்போது ரசிய பிரதமருக்கு நெருக்கமான விளாமிடிர் மெடின்ஸ்கி "மிகுந்த மரியாதைக்குரியவரான லெனின் உரிய அரசு மரியாதைகளுடன் அடக்கம் செய்யப்பட வேண்டும்தனது உடலை மிகச் சாதாரணமான முறையில் அடக்கம் செய்ய வேண்டும் என்பதே லெனினின் கடைசி ஆசை. அதைக் கூட இதுவரை நிறைவேற்றாமல் இருப்பது தவறானது. அவரது விருப்ப்பபடி சாதாரண கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்படும்.
மிகவும் மரியாதைக்குரிய இடத்தில், மரியாதையான, கௌரவமான முறையில் லெனின் உடல் அடக்கம் செய்யப்படும். தற்போது லெனின் உடல் அடங்கியுள்ள நினைவிடம், சோவியத் வரலாற்று நினைவிடமாக மாற்றப்படும்" என்று கூறியுள்ளார்.
லெனின் உடலை அடக்கம் செய்ய ரஷ்ய அரசு தீர்மானித்திருப்பதையே மெடின்ஸ்கியின் பேச்சு குறிப்பிடுவதாக கூறப்படுகிறது. லெனினின் தாயார் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அடக்கம் செய்யப்பட்டார். அவரது கல்லறைக்கு அருகிலேயே லெனின் உடலும் அடக்கம் செய்யப்படலாம்.
இதற்கு முன் புடின் அதிபராக இருக்கும்போதும் ஒரு முறை லெனின் உடலை புதைக்கப்போவதாக பேச்சு எழுந்தது.ஆனால் அப்போது ரஷ்ய,மற்றும் வெளி நாடுகளில் உள்ள மக்களின் எதிர்ப்பால் கை விடப்பட்டது.இப்போதும்
தற்போதைய அதிபர் புடின் மாமனிதன் லெனின் உடலை அடக்கம் செய்வதை தாமதப்படுத்தி வருகிறார். மூத்த ரஷ்யமக்களால் லெனின் ஒரு மாபெரும் தலைவராக -ரஷ்ய நாட்டை உருவாக்கிய தலைவராக மதிக்கப்படுவதால் லெனின் உடலை அடக்கம் செய்ய புடின் தயக்கம் காட்டி வருகிறார்.
கம்யூனிசத்தையே குழி தோண்டி புதைத்தவர்களுக்கு லெனின் உடலை புதைப்பது பெரிய காரியமாக இராது.
______________________________________________________________________.
சுரன்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?