வலையில் சிக்கிய இணையம்

                                                                     சுரன்  


அனைத்து தரப்பு மக் களும் இலவசமாகவும் சுதந் திரமாகவும் இணையதளங் களை பார்த்து, தேடி தக வல்களை அறிந்து கொள் ளும் வாய்ப்பை மறுக்கும் விதமாக ரிலையன்ஸ் கம் யூனிகேஷன்ஸ் நிறுவனம் உள்பட மிகப்பெரிய இணை யதள சேவை வழங்குநர்கள் தடைகளைஏற்படுத்துவதற்கு எதிராக நாடு முழுவதும் சனிக்கிழமை கணினி நிபு ணர்களும், இணைய ஆர்வ லர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்திய சுதந்திர மென் பொருள் இயக்கம் (எப்எஸ் எம்ஐ) தலைமையில் இந்தப் போராட்டம் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், புதுதில்லி உள்பட 18 பெரும் நகரங்களில் நடைபெற்றது.
சுரன்

.இந்தியாவில் இணை யதளங்களில் பல்வேறு வித மான தகவல்களை தாராள மாக பார்க்கவும், படிக்க வும், அறிந்துகொள்ளவும் வாய்ப்புள்ளது. 
அனைத்து தரப்பு மக்களும் இந்தத்தக வல்களை எளிமையான முறையில் அணுகுவதற்கு சுதந்திரம் இருக்கிறது. ஆனால் இணையதளங்க ளைப் பயன்படுத்தும் இத்த கைய சுதந்திரத்தின் மீது சமீப காலமாகதனியார் இணைய இணைப்பாளர்கள் தடை உண்டாக்கி தாக்குதல் தொடுத்து வருகின்றனர்.
இந்தியஅரசிடமிருந்து இது தொடர்பாக எந்தவிதமான உத்தரவும் இல்லாதபோதி லும், மத்திய தகவல் தொடர் புத்துறை அமைச்சகமும் சில மாநில அரசாங்கங்க ளும் அவற்றின் காவல்துறை களும் இணையதளச் சேவை யின் மீது கட்டுப்பாடுகளை விதிக்க அம்பானிக்கு ஆதரவாக செயல்பட முனைகின்றன. 
சுரன்

பெரிய அளவிலான இணை யதள சேவை வழங்குநர்கள்தான் இப்போது தடை போடும் கூட்டத்தில் இணைந்துள்ளனர். 
குறிப்பாக இந்தியாவில் இணையதளச் சேவை வழங்கும் பெரு நிறுவனங்க ளான ரிலையன்ஸ் கம்யூனி கேஷன்ஸ், ஏர்டெல், எம்டி என்எல் போன்ற நிறுவனங் கள், பெரிய அளவிற்கு பண முதலீடு செய்ய வாய்ப்பில் லாதவர்கள் எளிமையான முறையில் அதிக அளவு கொண்ட ஆவணங்களை பதிவிறக்கம் செய்துகொள்ள பொதுவாக பயன்படுத்தி வரும் டோரண்ட் எனப்ப டும் தளங்களையோ அல் லது விமியோ போன்ற தளங்களையோ பயன்படுத்த முடியாதவாறு தடுத்து நிறுத்தியுள்ளன.
அதேபோல, சமீப கால மாக அரசாங்கத்தைப் பற்றி விமர்சனப்பூர்வமாக எழு தப்படும் கட்டுரைகள் அல் லது ஆவணங்களையோ அல்லது அரசியல் தலைவர் களைப் பற்றி விமர்சித்து எழுதப்படும் எழுத்துக்கள், கார்ட்டூன்கள் போன்றவற் றையோ கூகுள், பேஸ்புக் போன்ற பல்வேறு தளங்க ளின் வாயிலாக பரிமாறிக் கொள்வது கூட ஒரு ‘சைபர் குற்றம்’ என்ற ரீதியில் அர சுத்தரப்பில் அணுகப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக எந்த ஒரு அரசு ஆணை ஏதும் முறையாக பிறப்பிக்கவில்லை.
சுரன்

இதுபோன்ற நடவடிக் கைகள் இந்திய அரசியல மைப்புச்சட்டத்தின் கீழ் அனைத்துக் குடிமக்களுக் கும் உறுதி செய்யப்பட்டுள்ள ஜனநாயக சுதந்திரத்தின் மீதான தாக்குதலே ஆகும். 
ரிலையன்ஸ் கம்யூனிகே ஷன்ஸ் போன்ற பெரிய தனியார் நிறுவனங்களும்,அரசின் காவல்துறையும் பணம் சம்பாதிக்க இணைந்து இணைய பயனர்களின் மீது தொழில் ரீதியாக நட்ததும் தாக்குதலுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டத்திற்கு இந்திய சுதந்திர மென்பொருள் இயக்கம் அழைப்பு விடுத்தது. 
சுரன்

இந்த அழைப்பின்பேரில் சென்னையில் சாந் தோம் கடற்கரையில் நடை பெற்ற போராட்டத்தில் ஏராளமான இணைய பயனீட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வியக்கத்தின் நிர்வா கிஅழகு நம்பி வெல்கின் , “இணையஉலகில் ஜனநாயகத்திற்கான போராட்டத்திற்காக இங்கு கூடியுள்ளோம். இணைய தளங்களில் குவிந்துகிடக் கும் தகவல்கள் இன்றைய உலகில் மிகவும் முக்கிய மான வளங்கள். இந்த வளங் களை பகிர்ந்துகொள்வதற் கான சுதந்திரம் அனைத்து மக்களுக்கும் உண்டு.ஆனால் மக்கள் அதிகம் உபயோகிக்கும் தளங்களை பணம்தந்தால் மட்டுமே பார்க்க முடியும் அளவில் தடை போடுகின்றனர்.டோரன்ட்.விமியோ போன்ற தளங்களை இந்நிறுவன இணைய வசதி வைத்துள்ளவர்கள் பார்க்க முடியாமல் உள்ளது.பணம் அதிகமாக செலுத்தினால் பார்க்கலாம்.
சுரன்

இந்தவரிசையில் யூடியுப்,பேஸ் புக் போய் விடும் அபாயமும் உள்ளது.அதை கட்டுப்படுத்தும் அதிகாரம் பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக்கொண்ட அம்பானி மற்றும் ஏர்டெல்.போன்ற தொழிலதிபர்கள் கையில் போய் விடாமல் பாதுகாக்க வேண்டும்.ஆனால் அரசு அம்பானி சொல்வதை மட்டுமே கேட்டு அதன் படி தீர்மானம்,சட்டங்களை ஏற்றுவதாக இருக்கிறது.அது மக்கள் நலனுக்காக செயல் பட வேண்டும்.அதுவரை இணைய பயனாளர்கள்-உபயோகிப்பவர்கள்இணைந்து போராட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இந்து அம்பானி வகையறாக்கள் தொழில் நடவடிகையை முதலிலேயே மத்திய அரசு கிள்ளி எறிய வேண்டும்.
சுரன்

ஆனால் அம்பானி காட்டிய வழியிலேயே பீடு நடை போடும் மன்மோகன் சிங் அரசு அதை செய்வது போல் தெரியவில்லை.அதற்கும் சேவை வரி போட்டு இன்னும் இணைய பயனர்களை வதைக்காலாமா என்றுதான் சிந்திக்கும்.
இனைய பயனர்கள்தான் தங்கள் போராட்டம்-எதிர்ப்பு மூலம் இந்த நிலையை மாற்ற வேண்டும்.
அதற்கு அவர்கள் ரிலையன்ஸ்,ஏர்டெல் இணைய வசதியை விட்டு விலகினாலே போதுமானது.செய்வார்களா?
_______________________________________________________________________

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?