இதுவும் ஒருவகை [அவ] மதிப்புதான்,
சமீபத்தில் இறந்த மூத்தபத்திரிகையாளர் சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை சார்பில் பரிசு கட்டுரையாளர் களுக்கான விருது வழங்கல் விழா வெள்ளியன்று (ஜூன் 15) சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவ நேயப் பாவாணர் நூலகத் தின் கூட்ட அரங்கில் (எல்எல்ஏ பில்டிங்) நடைபெறுவதாக இருந்தது.
திறந்த வெளியில் கார் நிறுத்துமிடத்தில் விழா நடக்கிறது. |
அதற்கான கட்ட ணத்தொகையும் செலுத்தி அனு மதியும் முறைப்படிவாங்கப்பட்டிருந்தது.
திடீரெனநூலக நிர்வாகத்துக்கு அறிவு வந்து நிகழ்ச்சிக்கு அனுமதி இல்லை என்று நிகழ்ச்சி நடைபெறும் நாளில் அறிவித்தது.
இதை எதிர்பார்க்காத அறக்கட்டளை உடனேசென்னை உயர்நீதி மன்றத்தில் அவசர வழக்கு தொடுத்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு, நிகழ்ச்சிக்கு அனுமதிக்க ஆணையிட்டு மாலை 5.15 மணியளவில் தீர்ப்பளித்தார்.
அவர் தமது தீர்ப்பில், “65 ஆண்டுகளாக ஒரு சிறிய அறையில் உட்கார்ந்து கொண்டு அரசியல் விழிப் புணர்வுக் கட்டுரைகள் எழுதி பத்திரிகையாளர் களின் என்சைக்ளோ பீடி யாவாகத் திகழ்ந்தவர் சின் னக்குத்தூசி. காமராஜர் முதல் அனைத்து அரசியல் தலைவர்களுடனும் பழகி சமூக அரசியல் விழிப் புணர்வுக் கட்டுரைகள் எழு திய அவரது பெயரால் நடக் கும் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கக்கூடாது,” என்றுநூலக அலுவலர்களுக்கு புத்தி வேறு கூறினார்.
ஆனால், தீர்ப்பு அறிவிக் கப்பட்டதாக தகவல் வந்தவுடன் நூலக அதிகாரிகள், அரங்கத் திற்கு ஏற்கெனவே வந்தி ருந்த பார்வையாளர்களை அவசர அவசரமாகவெளியேற்றிவிட்டு அரங் கத்தைப் பூட்டிவிட்டு வெளியே ஓடி சென்றுவிட்டார்கள்.
அதைத்தொடர்ந்து அறக்கட்டளை பொறுப் பாளர்கள் நூலக வளாகத் திற்கு உள்ளேயே இருக்கும் வாகனங்கள்நிறுத்தும் இடத்தில் திறந்தவெளியில் கூட்டத்தை நடத்த முடிவு செய்தார்கள். அரையிருட்டில் கூட்டம் நடந்தது.பத்திரிகையாளர் க. திரு நாவுக்கரசு சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு விருதுகளை வழங்கிப் பேசி னார்.வாழ்நாள் சாதனையாள ருக்கான விருது புலவர் வெற்றி மாறனுக்கு வழங் கப்பட்டது. சிறந்த கட்டுரை யாளர்களுக்கான விருது கி. இலக்குவன், பழ. அதிய மான், இரா. உமா ஆகியோ ருக்கு வழங்கப்பட்டன. திருச்சி செல்வேந்திரன், பேராசிரியர் சரஸ்வதி, பத்திரிகையாளர் ‘நக்கீரன்’ கோபால் ஆகியோர் பேசி னர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நண்பர்-ஆதரவாளர் ,மேலும் விழா நடத்துவதில் நக்கீரன் கோபால் முக்கிய பங்கு வகிக்கிறார் என்ற காரணத்தினால்தான் அவரின் எழுத்துலகப்பணியை எண்ணிப்பார்க்காமல் இது நடந்துள்ளது.
நூலக அலுவலர்கள் அரசு அலுவலர்கள்தானே ஒழிய ஆட்சியாளர்களின் அடிவருடிகள்-ஏவல் நாய்கள் அல்ல.இதை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வது அவர்களுக்கு கெட்டபெயரையும்-ஆட்சி மாறும் போது அவலத்தையும் உண்டாக்கி விடும்.
அதிலும் ஒரு சிறந்த உலகறிந்த எழுத்தாளர் விழாவில் நூலகத்துறையினரே இப்படி அசிங்கமாக காழ்ப்புணர்ச்சி அரசியல்தனமாக நடப்பது கேவலம்.மிகவும் கண்டிக்கத்தக்கது.
இது போன்றோருக்கு புத்தி புகட்ட விழாப்பொறுப்பாளர்கள் இவர்கள் மீது பணம் பெற்றுக்கொண்டு அரங்கம் தராததற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்.அத்துடன் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடர வேண்டும்.அப்படியாவது இந்த அடிவருடித்தனம் இவர்களை விட்டு போகிறதா என்று பார்க்கலாம்.