நேருவின் ஆதிவாசி மனைவி....?


-கி. இலக்குவன்
பஞ்சட் அணையைத் திறந்து வைப்பதற்காக 1959 டிசம்பர் 6ந்தேதி வருகை புரிந்த அன்றைய பாரதப்பிரதமர் ஜவகர்லால் நேருவை வரவேற்கும் குழுவில் தன்னையும் இணைத்ததற்காக 15 வயது சந்தல் இனப்பெண்ணான புத்னி மெஜான் மிகவும்மகிழ்ச்சி அடைந்தாள்.

ஆதிவாசிப்பெண்களின்பாரம்பரிய ஆடை அணிகலன்களுடன், வரவேற்பு நிகழ்ச்சியில் பஙகேற்ற அவரிடம் நேருவுக்கு மாலையணிவித்து வரவேற்கும் கவுரவம் அளிக்கப்பட்டது. அதனை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றிய அவரை, நேரு விழா மேடைக்கு அழைத்துச்சென்றார்.
சுரன்


கட்டுமானப்பணியில் பங்கேற்ற ஒரு தொழிலாளிதான் பொத்தானை அழுத்தி அணையைத் திறக்கவேண்டும் என்று கருதிய நேருவின் வேண்டுகோளுக்கு இணங்க புத்னியே பொத்தானை அழுத்தி அணையைத் திறந்துவைத்தார்.

தனக்கு அளிக்கப்பட்ட கவுரவத்தை தனது குடும்பத்தாருடன் பகிர்ந்து கொள்ளும் பரபரப்புடன் தனது கிராமமான கர்பானாவுக்குத்திரும்பிய அந்த ஆதிவாசிப்பெண்ணிற்குபேரதிர்ச்சி காத்திருந்தது.

அந்த அப்பாவிப்பெண்ணின் எதிர்காலமே இருளில் தள்ளப்பட்டது. நீ நேருவுக்கு மாலை அணிவித்ததால் நடைமுறையில் உனக்கும் அவருக்கும் திருமணமாகிவிட்டதாகப் பொருள் என்று அந்த கிராம வாசிகள் தெரிவித்தனர்.

அடுத்தநாள் ஊர்ப்பெரியவர்கள் நடத்திய கூட்டத்தில் அவள் நேருவின் மனைவியாகிவிட்டாள் என்றுதீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

அதனால் அந்த கிராமத்தைச்சேர்ந்தஎவரையும் திருமணம் செய்து கொள்ளும் தகுதியையும்அவள் இழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் ஆதிவாசிப்பெண்ணான அவள், சந்தல் இனத்தைச்சாராத ஒருவரைத் திருமணம் செய்து கொண்டதால் அந்த கிராமத்திலிருந்தே விலக்கி வைக்கப்படுவதாகவும் முடிவு செய்யப்பட்டது. 


இந்த முடிவை ஏற்றுக்கொள்ளாவிட்டால் சமூகப்புறக்கணிப்பை எதிர்கொள்ள நேரிடும்என்று அஞ்சிய அவளது குடும்பத்தார், அவளை கைவிட்டுவிட்டனர். அனாதையாக்கப்பட்டஅவளுக்குக் குடிக்கத்தண்ணீர் அளிப்பதற்குக்கூட எவரும் முன்வரவில்லை.

பஞ்சட் அணைக்கட்டுமானப் பிரதேசத்துக்கு திரும்பியஅவளுக்கு சுதிர் தத்தா என்றஒருவர் அடைக்கலம் அளித்தார் .கணவன் -மனைவியாக வாழ்ந்த அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது. 1962ம் ஆண்டில்அவளது வேலையும் பறிபோய்விட்டது. சிறு சிறு வேலைகளை செய்து தனது பிழைப்பை நடத்தி வந்தாள். 23ஆண்டுகள் கழித்து ராஜீவ் காந்தியை சந்தித்து தாமோதர் பள்ளத்தாக்கு கழகத்தில் தனக்கு வேலைக்கு ஏற்பாடு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தாள். நேருவின் பேரனின் தயவினால் அவளுக்கு வேலை திரும்பவும் கிடைத்தது.


இதன் மூலம் எனது வயிற்றுப்பசி நீங்கியது என்ற போதிலும் தான்பிறந்து வளர்ந்த கிராமத்துக்கு திரும்ப வேண்டும் என்ற ஏக்கம் நிறைவேறவில்லையே என்ற வேதனையுடனேயே வாழ்ந்துவிட்டு கடந்த ஆண்டில் அந்த அப்பாவிப்பெண் மரணமடைந்தார். நல்ல எண்ணத்துடன்
செய்யப்பட்ட நேருவின் செயல் இத்தகைய விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று அவர் கற்பனை செய்து கூட பார்த்திருக்கமாட்டார்.

 ‘தி இந்து’ 
___________________________________________________________________________________________________________


இரண்டாவது முறை 

லண்டனில் காமன்வெல்த் பொருளாதார மன்றத்தின் ஏற்பாட்டில் மன்சன் ஹவுசில் இன்று உரையாற்ற இருந்த இலங்கைஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிகழ்வு இறுதி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக லண்டனில் தமிழர்கள் நடத்தும் போராட்டங்களின் எதிரொலியாக – அவரது உரை இடம்பெறவிருந்த இன்றைய காலை நிகழ்ச்சி முற்றிலுமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

சுரன்

காமன்வெல்த் பொருளாதார மன்றத்தின் ஏற்பாட்டில் மன்சன் ஹவுசில் – உலகம் வளமாக மற்றும் நிலைத்திருக்க கூடிய வகையில் முதலாளித்துவத்தை வடிவமைப்பது என்பது தொடர்பான கருத்தரங்கு ஒன்று நடைபெறவிருந்தது. இந்தக் கருத்தரங்கில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் உட்பட மூவர் பேசவிருந்தனர்.
அதன் பின்னர் இன்று காலை 10 மணியளவில் மஹிந்தராஜபக்ஷ சிறப்புரையாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 
எனினும், மிக கவனமாக பல விடயங்களை ஆராய்ந்த பின்னர் அந்த அமர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் காலை அமர்வு இடம்பெறாது என்றும் காமன்வெல்த் பொருளாதார மன்றம் நேற்று மாலை வெளியிட்டசெய்திக் குறிப்பு கூறியது.
சுரன்

புலம்பெயர் தமிழர்களின் எதிர்ப்புப் போராட்டங்களினால் தான் பக்‌ஷேயின் உரை நீக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு 795 ஸ்ரேலிங் பவுண்ட்களும், மதிப்புக்கூட்டு வரியும் சேர்த்து – முன்னரே அனுமதிச்சீட்டுகள் விற்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 
இன்றைய மற்றையஅமர்வுகள் திட்டமிட்டபடி இடம்பெறும். மதிய விருந்து முன்னர் திட்டமிட்டது போல பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாவதற்குப் பதிலாக பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் Pall Mallஇல் உள்ள Marlborough House இல் பிரித்தானிய மகாராணிக்கு காமன்வெல்த் செயலர் ஒழுங்கு செய்துள்ள மதிய விருந்தில் மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்கவுள்ளார்.
அதேவேளை – இன்று மன்சன் ஹவுசில் உரையாற்றவிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு போதிய பாதுகாப்பு அளிக்க தாம் இணங்கியிருந்ததாகவும், ஆனால், காமன்வெல்த் வர்த்தக மன்றம் நிகழ்வை நடத்த விரும்பவில்லை என்றும் ஸ்கொட்லன்ட்யார்ட் காவல்துறைகூறியுள்ளது.
சுரன்

இதே போல் சென்ற2010ம் ஆண்டு டிசம்பரில் லண்டன் சென்றிருந்த மஹிந்த ராஜபக்ஷ ஆக்ஸ்போர்டில் நிகழ்த்தவிருந்த உரையும் தமிழர்கள் போராட்டத்தால் இதுபோலவே கடைசி நேரத்தில் நீக்கப்பட்டது.
இது இங்கிலாந்தில் மஹிந்த வாயடைக்கப்பட்டது இரண்டாம் முறை.ஆனால் இந்த முறை பக்‌ஷே தமிழர்கள் போராட்டத்தை குழப்பியடிக்க சில முன்னேற்பாடுகள் செய்திருந்தார்.சிங்களர்களை தமிழர்கள் போராட்டப்பகுதிக்கு இறக்குமதி செய்து கலகம் ஏற்படுத்துவது அதில் ஒன்று.
ஆனால் அவர் திட்டங்கள் சரிவரவில்லை.பேசாமல் திரும்ப வேண்டியதாகி விட்டது.
சுரன்

மல்பரோ இல்ல விருந்தில் கலந்து கொண்ட போது தனது காரில் இருந்த சிங்கள கொடியை பக்‌ஷே போராட்டத்திற்கு பயந்து கழற்றி விட்டு கலந்து கொண்டார்.
_______________________________________________________________________


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?