விளையாட்டு வினையானது,,,,,,.
சிறை செல்லும் முன்னாள்தலைவர் நான் யோங் |
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் சீனா மோசமாக விளையாடியதற்கு ஊழலே காரணம்.அந்த ஊழல்களால்தான் நாட்டில் கால்பந்து விளையாடுக்கு மக்கள் மத்தியில்இருந்த ஆதரவு குறைத்துவிட்டது என்றும்சீனாவில் பரவலாக குற்றஞ்சாட்டப்பட்டது.
இதை அடுத்து அந்நாட்டு அரசு விசாரணையில் இறங்கியது.கால்பந்து சங்கத்தின் முன்னாள் தலைவர் நான் யோங் மற்றும் அவருக்கு முன் அந்தப்பொறுப்பிலிருந்த ஷி யாலாங்,தேசிய கால்பந்து அணியின் முன்னாள் மேலாளர் வை ஷௌயுய்ஆகியோர் செய்த முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.பின் இவர்களுக்கு தலா பத்தரை ஆண்டுகள் சிறை தண்டனை அந்நாட்டு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதே போல தேசிய அணியின் முன்னாள் தொழில்நுட்ப இயக்குநர் லி டாங்க் ஷென்னுக்கு ஒன்பது வருடம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அது போக சீன தேசிய கால்பந்து அணியில் விளையாடிய நான்கு வீரர்களுக்கு முறைகேடுகளுக்காக ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சிலருக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இப்போது நம்ம இந்தியாவுக்கு அப்படியே திரும்புங்கள்.இங்கே மக்கள் கிறுக்குப்பிடித்தது போல் வெறியுடன் ரசிக்கும் கிரிக்கெட்டை வைத்து எத்தனை முறைகேடுகள் நடக்கின்றன.
படம் நன்றி:வினவு |
கிரிக்கெட் வாரியம் முதல் அணியின் சொந்தக்காரர்கள்,விளையாட்டு வீரர்கள் வரை செய்யும் ஊழல்,பணத்துக்கு சோரம் போவது,போன்றவைகள் மீது அரசு என்றாவது நடவடிக்கை எடுத்ததுண்டா?அல்லது எடுக்கப்போவதாக பேசியதாவதுண்டா?
அப்படி அரசுகிரிக்கெட் முறைகேடுகளுக்கு நடவடிகை எடுப்பதாயிருந்தால் இங்கு பலருக்கு ஆயுள்தண்டனைதான் கொடுக்க வேண்டியிருக்கும்.
கிரிக்கெட்விளையாட்டை ஊழல்வாதிகளிடமிருந்து காப்பாற்ற வேண்டிய அமைச்சர்களும்,அரசியல்வாதிகளும் அதில் சம்பந்தப்படும் போது எங்கே போய் இதை சொல்லி அழுவதென்றே தெரியவில்லை.
________________________________________________________________________________
நாற்காலில் அமர்வது யார்?
குடியரசு குழப்பம் கொஞ்சம் இந்திய பொருளாதார வளர்ச்சிபோல் ஒரு நிலைக்கு வந்துள்ளது.
அதற்கு காரணம் காங்கிரசு தனது கட்சி வேட்பாளராக பிரணாப் முகர்ஜியை அறிவித்து விட்டதுதான்.
அவருக்கு முன்பே கருணாநிதி,இப்போது முலாயம் சிங் ஆதரவை அறிவித்து விட்டனர்.
ஜெயலலிதா-நவீன் பட்நாயக் கூட்டணி அறிவித்த சங்மா அலைந்து பார்த்தும் ஆதரவை பெறமுடியவில்லை.இடையில் நவீன்பட்நாயக்கே தனது முதல்வர் பதவியை காப்பாற்றிக்கொள்ள ஆதரவு தேட வேண்டிய நிலைக்கு போய்விட்டார்.
பாஜக தனது சார்பில் வேட்பாளரை அறிவிக்க இன்னமும் குழப்பத்தில்தான் உள்ளது.
மேற்கு வங்க மம்தா பானர்ஜி தனது முன்னாள் அரசியல் எதிரியான பிரணாப் முகர்ஜிக்கு எதிராக கங்கணம் கட்டி ஆட்களை தேடினாலும் இப்போது ஆதரவின்றி அப்துல் கலாமை மீண்டும் கொணர முயற்சிக்கிறார்.
அதை ஜெயலலிதா,பாஜக புதிய கூட்டணி ஆதரிக்க வாய்ப்புள்ளது.கலாம் பாஜக ஆதரவுடன் தான் முன்பு குடியரசராக இருந்தார்.
கலாமுக்கு இடது சாரிகள் ஆதரவை தர மாட்டார்கள்.அவர்கள் இப்போதைய துணை குடியரசர் அமீது அன்சாரியை முன்னிறுத்தவே முயற்சிப்பார்கள்.
கலாம்-அன்சாரி-பிரணாப் தேர்வுகளில் நாற்காலியில் பிரணாப்ஜி அமரும் வாய்ப்புதான் அதிகம் உள்ளது.
________________________________________________________________________________
புதுக்கோட்டை வாக்கு எண்ணிக்கை முடிந்து மணிக்கணக்கில் வெற்றி சான்றை அதிமுக கார்த்திக் தொண்டைமானிடம் கொடுக்க முடியவில்லை
.
காரணம் பதிவான் வாக்கும் எண்ணப்பட்ட வாக்கும் 39 வாக்குகள் வித்தியாசத்தில் இருந்ததால்தான்.ஒருபடியா சரி[?] செய்த பின்னர் வெற்றி சான்றை வழங்கியுள்ளனர்.
வாக்குபதிவில் எது செய்தாலும் ஒழுங்கா ஒரு கணக்கு வைத்து செய்ய வேண்டாமா?
இப்படியா குழப்பி எல்லோருக்கும் தெரிய வைப்பது.உங்க விசுவாசத்துக்கு அளவே இல்லையா ?

இரண்டு புலிகள்