16.5 கோடி மக்களுக்கு பாதிப்பு

இமயமலை மற்றும் இந்து குஷ் பகுதிகளில் உள்ள பனிமலைகளுக்கு பருவநிலை மாற்றம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக வளர்ந்து வருவதாக ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது. 

கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வு உடனடியாக நிறுத்தப்படவில்லையினில் இந்த பெரும் மலைகளில் மூன்றில் இரண்டு பங்கு பனி மலைகள் காணாமல் போகக்கூடும்.


உலகம் முழுவதும் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்நூற்றாண்டில் அதிகரிக்கும் வெப்பநிலையை 1.5 செல்ஸியஸ் அளவுக்குள் கட்டுக்குள் வைத்தாலும் கூட குறைந்தது ஒரு பங்கு மலை பகுதிகள் இருக்காது என இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பனிமலைகள் தான் இப்பகுதியில் உள்ள எட்டு நாடுகளில் வசிக்கும் 250 மில்லியன் மக்களுக்கு முக்கிய தண்ணீர் ஆதாரமாக விளங்கி வருகின்றன.

துருவப்பகுதிகளை தவிர உலகத்தில் அதிகப்படியான பனிக்கட்டிகள் கிடைப்பது இமயமலை மற்றும் இந்து குஷ் பகுதிகளில் உள்ள கே2 மற்றும் எவரெஸ்ட் மலை சிகரப்பகுதிகளில்தான்.
ஆனால் இந்த பனி மலை பிராந்தியம் இன்னும் ஒரு நூற்றாண்டுக்குள் வெறும் பாறைகளை கொண்ட பிராந்தியமாக மாறக்கூடும்.
 ஏனெனில் உலகம் முழுவதும் வெப்பநிலை உயர்ந்து வருகிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

புவி வெப்பமயமாதல் மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தால் அதிகரிக்கும் காற்று மாசு காரணமாக அடுத்த சில தசாப்தங்களிலேயே பனி மலைகள் உருகத்தொடங்கும்.
இந்தோ கேஞ்செட்டிங் பிராந்தியத்தில் அதாவது கிழக்கு பாகிஸ்தான் மற்றும் வட மேற்கு இந்தியாவின் சில பகுதிகளில் இருந்து கங்கை பிராந்தியம் உட்பட கிழக்கில் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு வரையிலான பெரும் பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து வருகிறது.
இது உலகில் மிகவும் மோசமாக மாசடைந்துள்ள பிராந்தியங்களில் ஒன்று.

இந்த மோசமான காற்று காரணமாக பனி மலைகளின் நிலை மேலும் மோசமடையும். கருமை நிற கார்பன் மற்றும் தூசிகள் பனியின் மேல் படர்வதால் பனிக்கட்டிகள் உருகுவது துரிதமாகிறது.
உலக வெப்பநிலையானது இரண்டு டிகிரி செல்ஸியஸ் அளவுக்கு அதிகரிக்கும் எனில் 2100-ல் பனி மலைகளில் பாதி இருக்காது.
உலகம் உடனடியாக சுதாரித்து அதிசயிக்கத்தக்க வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வெப்பநிலை உயர்வை 1.5 செல்ஸியஸ் அளவுக்குள் குறைத்தாலும் கூட பனிமலைகளில் 36% காணாமல் போய்விடும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

பருவ நிலை மாற்றத்தின் இவ்விளைவு இதுவரை நீங்கள் கேள்விப்படாத ஒன்று என்கிறார் இந்த ஆய்வை வழிநடத்திய பிலிப்பஸ் வெஸ்டெர்.
ஒருங்கிணைந்த மலை அபிவிருத்திக்கான சர்வதேச மையம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.
''பெரும் பாதிப்புக்குளாக்கப்போகும் மலை பிராந்தியங்களாக உள்ள இந்த மண்டலங்களில் வாழும் மக்கள் ஏற்கனவே பருவ நிலை மாற்றத்த்தின் விளைவுகளை சந்திக்கத் தொடங்கிவிட்டனர்.
 மோசமான காற்று மாசுபாடு மற்றும் அதிகரிக்கும் அதீத வானிலை நிகழ்வுகளால் பாதிப்புக்குளாகியுள்ளனர்.

எதிர்காலத்தில் பருவமழைக்கு முந்தைய காலகட்டத்தில் ஆறுகளில் தண்ணீர் குறைவது மற்றும் பருவமழையில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக நகரப்பகுதிகளில் உள்ள தண்ணீர் அமைப்புகளும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும்.

இதனால் உணவு உற்பத்தியும் பெரும் பாதிப்புக்குள்ளாகும்'' என பிலிப்பஸ் தெரிவித்துள்ளார்
ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூட்டான், சீனா, இந்தியா, மியான்மர், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 3500 கி.மீ பகுதி கேள்விக்குறியாகும் பிராந்தியமாக உள்ளது.

இமயமலை மற்றும் இந்து குஷ் மலை பகுதிகளில் உள்ள பனிமலைகள் தான் உலகின் முக்கியமான 10 நதிகளுக்கு ஆதாரமாக விளங்குகின்றன.

கங்கை நதி, சிந்து நதி, மஞ்சள் நதி, மேகொங் நதி, ஐராவதி உள்ளிட்டவை அதில் முக்கியமான ஆறுகள்.
 இந்த ஆறுகள் பாதிக்கப்படுவதால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் உணவு, ஆற்றல், சுத்தமான காற்று மற்றும் வருமானம் உள்ளிட்டவற்றில் பாதிப்புகளை சந்திப்பர்.

பனி மலைகள் உருகும் நிகழ்வால் ஏற்படும் விளைவில் பாதிக்கப்படுபவர்கள் தொடர்புடைய மலை பகுதிகளில் வாழும் மக்கள் மட்டுமல்ல நதியையொட்டிய பகுதிகளில் வாழும் 1.65 பில்லியன் மக்களும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்படுவர் மேலும் விவாசாய நிலங்களும் அழிவுறும் என விஞ்ஞானிகள் அச்சப்படுகின்றனர்.

''இந்த பிராந்தியங்கள் பனி மலைகள் உருகுவதால் உண்டாகும் நீரையே நம்பியிருக்கிறேன பனி மலைகள் உருகி வெறும் பாறையானால் அதன் பின்னர் நீர் எங்கிருந்து வரும்?
 பருவ மழை பொய்த்து போகும்போது அங்கு என்ன நிலை ஏற்படும்?
 என்ன விதமான வறட்சி ஏற்படும்?
 இந்த பிராந்தியத்தில் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தண்ணீர் தான் பிரதான விவாத பொருளாக இருக்கிறது.

ஒருவேளை கடும் வறட்சி ஏற்பட்டால் ஏற்கனவே பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இந்த மண்டலம் மிக பயங்கரமான அதிர்ச்சியைச் சந்திக்கும்.
 இந்த அறிக்கை நாம் எதிர்கொள்ள வேண்டிய அதிர்ச்சிகளை, விளைவுகளை எதிர் கொள்ளத் தயாராக வேண்டியதற்கான எச்சரிக்கை மணி.


 
இன்னும் இரண்டே ஆண்டுகளில் சென்னையில் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றிவிடும் அபாயம் உள்ளது என்ற அதிர்ச்சிகர தகவலை மத்திய அரசின் அமைப்பு வெளியிட்டுள்ளது.
====================================================

ன்று,
பிப்ரவரி-06.
===================================================

 அடிச்ச மாதிரி... அழுத மாதிரி... ஒரு நாடகம்
                                                                                     வீ.பா.கணேசன்                                                               
கொல்கத்தாவில் பிப்ரவரி 3 ஞாயிறன்று நடைபெறவிருந்த இடதுமுன்னணியின் மக்கள் பிரிகேட் நிகழ்ச்சியில் பங்கேற்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொல்கத்தாவிற்கு முதல்நாளிரவே வந்திறங்கிய ஆயிரக்கணக்கான மக்கள், ரயில் நிலையத்தில் இரவைக் கழித்துவிட்டு அன்று காலை 6 மணியிலிருந்தே பிரிகேட் மைதானத்தை நோக்கி ஊர்வலமாக வரத்தொடங்கியதை கொல்கத்தா நகரின் அனைத்து ஊடகங்களும் தொடர்ந்து காட்சிப்படுத்தி வந்தன.
 காலை 7 மணியில் இருந்து பிரிகேட் மைதானத்தில் திரண்ட மக்கள் வெள்ளம், முக்கிய சாலை சந்திப்புகளின் வழியாக வந்த ஊர்வலங்கள் என மக்களின் எழுச்சியைத் தொடர்ந்து செய்தி ஊடகங்கள், குறிப்பாக வங்காளி தொலைக்காட்சி நிலையங்கள் ஒளிபரப்பிக் கொண்டேயிருந்தன.

சிங்கூரில் இருந்து தொடங்கி கொல்கத்தாவிலிருந்து பல நூறு கி.மீ தொலைவில் இருந்து புறப்பட்ட மக்களையும் இந்த தொலைக்காட்சிகள் பதிவு, செய்து கொண்டே இருந்தன.

 மக்கள் திரள் மீண்டும் ஊர்வலமாக ரயில் நிலையத்திற்கும்பஸ்களிலும் திரும்புவது வரை தொடர்ந்து இந்தப் பதிவுகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பாக செய்து வந்தன.

 சக தோழர்களின் உற்சாகம் தொற்றிக் கொள்ள மிகுந்த உத்வேகத்தோடு ஊருக்குத் திரும்பிய அந்த தோழர்களைப் போலவே அதில் பங்கேற்ற எனக்கும் தொற்றிக் கொண்டது.
மறுநாள் நாட்டின் அனைத்து தினசரிகளிலும் இதுவே முக்கிய செய்தியாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு மாலையில் தொலைக்காட்சியை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தபோது பேரணிக்காட்சிகளோடு தலைவர்களின் உரைகளும் மேற்கோளாக திரையில் காட்டப்பட்டு வந்தன.
 
அன்று மாலை சுமார் 6.15 மணியளவில் கொல்கத்தா காவல்துறை ஆணையரின் இல்லத்திற்கு முன்பாக சிபிஐ அதிகாரிகள் முகாமிட்டு உள்ளே நுழைய முற்பட்ட பிறகு அனைத்து காட்சி ஊடகங்களின் திசையும் தலைகீழாக மாறியிருந்தது.

இரவு 10 மணியளவில் மாநில காவல் அதிகாரிகள் சகிதமாக முதல்வர்மம்தா பானர்ஜி கொல்கத்தா மெட்ரோ சந்திப்பில் தர்ணா செய்ய அமர்ந்தது வரை காட்சி ஊடகங்களில் வேறு எந்தச் செய்தியும் வெளிவரவே இல்லை.

மறுநாள் காலையில் (கட்சி நாளிதழ்கள் தவிர) மற்ற தினசரிகள் அனைத்திலும் முதல் பக்கத்தில் மம்தா-மோடி மோதல் பற்றிய செய்தியும் பிரிகேட் மக்கள் பேரணி பற்றிய செய்திகள் உள் பக்கங்களில் பெயரளவிலும் வெளியாகியிருந்தன.
ஸ்டேட்ஸ்மென் நாளிதழ் இந்தப் பேரணி பற்றி இரண்டே இரண்டு வரிகள் கூட எழுதாமல் தன் வக்கிரத்தை வெளிப்படுத்தியிருந்தது.
 ஒரு பத்திரிக்கையாளர் என்ற வகையில் இந்தத்தலைகீழ் நிகழ்வு குறித்து சற்று தீவிரமாக யோசித்தபோது, மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாஜக-திரிணாமுல் கட்சிகள் திட்டமிட்டு இந்த மக்கள் பேரணி பற்றிய செய்தியை இருட்டடிப்புசெய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் காய்களை நகர்த்தியுள்ளதாகவே தோன்றியது.

ஏனெனில், சாரதா சீட்டுக் கம்பெனி மோசடி பற்றிய வழக்கு 2013-ம் ஆண்டில் இருந்தே இருந்து வருகிறது. இந்த மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட முகுல் ராய் போன்றவர்கள் இப்போது பாஜகவில் இணைந்த பிறகு திரிணாமுல் கட்சியைப் பார்த்து பாஜக குரல் கொடுப்பதில் எவ்வித தார்மீக உரிமையும் இல்லை.

 மேலும் 2014-ல் இருந்து கடந்த நான்கரை ஆண்டுகளில் இந்த மோசடி குறித்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க எந்தவித முன்முயற்சியும் எடுக்காத பாஜக திடீரென்று முகுல் ராயை பக்கத்தில் வைத்துக் கொண்டே மம்தா அரசின் மீது பாய்வதும் நம்பக்கூடிய ஒரு செயலாக இல்லை.

அதைப் போன்றே கடந்த நான்கரை ஆண்டுகளில் பல்வேறு தருணங்களில் பாஜகவிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து விட்டு, இன்று மாநில உரிமை என்ற போர்வையில் அனைத்து மாநில கட்சிகளையும் இணைத்துக் கொண்டு பாஜகவை எதிர்ப்போம் என்று மம்தா குரல் கொடுப்பதும் நம்பும்படியாக இல்லை.

(பிரிகேட் பேரணிக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி பாஜகவும் திரிணாமுல் கட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று கூறியது போலவே, மேற்குவங்க மாநில செயலாளர் டாக்டர் சூர்யகாந்த மிஸ்ரா இப்போதும் பாஜகவில் நீடிக்கும் மூன்று பேரை மேடையில் வைத்துக் கொண்டு பாஜகவை ஒழிப்போம் என்று பேசுவது கேலிக்குரியது என்றும் மிகச் சரியாகவே சுட்டிக் காட்டியிருந்தார்.)

 பிரிகேட் மக்கள் பேரணிக்கு முன்பு மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற மோடியின் பேரணி, மம்தாவின் பேரணி ஆகியவற்றுக்கான அணிதிரட்டல் அதிகார தோரணையோடு நடைபெற்ற போதிலும் அவை வெற்றி பெறவில்லை என்றபின்னணியில், மேற்குவங்க இடதுமுன்னணி ஏற்பாடு செய்திருந்த மக்கள் பேரணியிலோ இடதுமுன்னணியில் அங்கம் வகிக்கும் அமைப்புகளும், அதன் உறுப்பினர்களும் தன்னெழுச்சியாக அணிதிரண்டு வந்து பிரிகேட் மைதானத்தை நிரப்பியதை இந்த இரண்டு ஆளும் கட்சிகளாலும் ஜீரணிக்க முடியவில்லை.

 காட்சி ஊடகங்கள் காலை 6 மணி முதல் மாநில மக்களிடையே காட்சிப்படுத்தி வந்த மக்களின் பேரெழுச்சியை ‘ஜீபூம்பா’ என காற்றில் மறைத்துவிடவும் அவர்களால் முடியாது.
அப்படியென்றால் என்ன செய்வது?
பக்கத்தில் ஒரு பெரிய கோட்டைப் போட்டால் இது தானாகவே சின்ன கோடாகி விடும் என்றபடி திட்டமிட்ட வகையில் நாடகம் அரங்கேறியுள்ளது.

இல்லையெனில் நான்கரை வருடங்களாக நகராமல் இருந்த சிபிஐக்கு திடீரென துணிவு எப்படி வந்தது மம்தாவின் காவல் ஆணையரின்மீது கைவைக்க?

அனைத்து அதிகாரங்களும் கொண்ட மத்திய அரசின் ஓர் அதிகாரி என்ற வகையில் இப்போது சொல்வது போல காவல்துறை ஆணையர் ஊழல்வாதிகளுக்கு உதவி செய்து வந்தார் என்றால், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படிஇந்த விசாரணையை மேற்கொண்டுள்ள சிபிஐ, ஏன் இந்த அதிகாரியின் போக்கை சுட்டிக்காட்டி மத்திய அரசின் மூலம் அவர் மீது நடவடிக்கை எடுக்கவோ, தற்காலிக நீக்கம் செய்யவோ அல்லது உச்சநீதிமன்றத்தின் முன்பு அவர்மீது புகார் தெரிவிக்கவோ இந்த நான்கரை ஆண்டுகளில் செய்யவில்லை?

இப்போது மாநில அரசு மோசடியை மறைக்கப்பார்க்கிறது என்று விழுந்தடித்துக் கொண்டு உச்சநீதிமன்றத்தில் புகார் பட்டியல் வாசிக்கும் சிபிஐ இதை இந்த நான்கரை ஆண்டுகளில் செய்திருக்கலாமே?

மேற்குவங்க இடது முன்னணிக்கு மக்கள் ஆதரவு பெருகி வருவதை மாநிலத்தின் ஏனைய மக்களின் கண்களில் இருந்து மறைத்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த இரு ஆளும் கட்சிகளும் நடத்திய நாடகமே இது!
                                                                                                               நன்றி:தீக்கதிர்.
 
 நிஜமாவே இவனுங்களுக்கு சிலை செய்யத் தெரியலியா? 
இல்லே, வேணும்னே அந்தம்மாவை அசிங்கப் படுத்துறானுங்களா? 
அடப்பாவிங்களா, ஒரு காலத்துலே அவங்க பத்து நயன்தாரா அழகுடா !
யுவ கிருஷ்ணா முகநூலில் .
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?