கண்ணீருடன் எதிர்கொள்ள வேண்டும்

காப்பீடு குறித்து விழிப்புணர்வு மாரத்தான்தண்ணீர் இனி...?

தமிழகத்தில் இந்தாண்டு வெயிலின் தாக்கம்மிகக் கடுமையாக இருக்கும் என வானிலை நிபுணர்கள் கணிக்கின்றனர்.
அதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படத் துவங்கிவிட்டன. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தாங்கமுடியாத அளவுக்கு வெப்பம் இருக்கும் என்பதோடு குடிநீருக்கு மக்கள் அல்லாடும் நிலை ஏற்படுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இப்போதே மக்கள் குடிநீருக்காக மறியல் செய்யும் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.
இந்தாண்டுபல பகுதிகளில் பெய்த மழைநீர் சேமிக்கப்படாமல் கடலில் சென்று கலந்து விட்டது.
 தண்ணீர் சேமிப்பில் எந்தவிதமான முன் தயாரிப்பும் இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது. ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்டக்கோரி தொடுக்கப்பட்ட வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை எழுப்பியுள்ள கேள்விகள் அர்த்தமுள்ளவை.
 தமிழகத்தில் ஏன் தடுப்பணைகள் கட்ட முயற்சிக்கவில்லை என்று கேட்டுள்ளதோடு எந்தெந்த ஆறுகளுக்கு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.
மழைக்காலங்களிலும், பிற காலங்களிலும் கடலில் சென்று வீணாக கலக்கும் நீரின்அளவு எவ்வளவு என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் கூறியுள்ளது.

மறுபுறத்தில் அனைத்தையுமே வியாபாரமாக மட்டுமே கருதும் தனியார் துறை, வரப்போகும்குடிநீர் பஞ்சத்தையும் காசாக்க இப்பொழுதே திட்டமிட்டு வருகிறது.

கோவையைத் தொடர்ந்து மதுரையிலும் குடிநீர் விநியோகத்தை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான அபாயச் சங்கு ஏற்கெனவே ஊதப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாநகராட்சியில் குடிநீர் ஏடிஎம்என்கிற பெயரில் இருபது லிட்டர் தண்ணீரைஏழு ரூபாய்க்கு விற்பதற்கான அறிவிப்புவெளியாகியுள்ளது.
தனியார் நிறுவனங்களின்பங்கேற்புடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பதற்கான இடம் மாநகராட்சியின் சார்பில் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 இதற்கான உரிமங்கள் ஏற்கெனவே தனியார் நிறுவனங்களுக்கு தரப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் இந்த ஏற்பாடு குடிநீர் விநியோகத்தை முற்றிலும் தனியார்மயமாக்குவதற்கான முதல்படி. குடிமக்கள் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கடமை.அதை கைகழுவிவிட்டு குடிநீரை காசுக்கு விற்பது கொடுமை.
 ஏழை மக்கள் பசியால் வாடிஇறப்பது போல, இனிமேல் குடிக்க தண்ணீர் கூடஇல்லாமல் துடித்துச் சாகும் காட்சிகள் அரங்கேறவேண்டுமா?
தண்ணீரை தனியார்மயமாக்குவது மனிதகுலத்திற்கு மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளுக்கும் எதிரான வன்முறையாகும்.

தேர்தல் காலம் என்பதால் பணம் தரப்போவதாக பசப்பும்மத்திய, மாநில ஆட்சியாளர்கள், மறுபுறத்தில் மக்களுக்கான தண்ணீரையும் தட்டிப் பறித்துக்கொண்டிருக்கின்றனர்.

கரப்பரேட்கள் கையில் தண்ணீர் போனால் இன்று தினசரி பெட்ரோல் விலை கூடி மக்கள் கழுத்தை நெறிப்பதை விட  அதிக அபாயம்.
பெட்ரோலாவது வாகனங்கள் என்ணிக்கையில் சமாளிக்கமுடியும்.
ஆனால் தண்ணீர் ஒவ்வொரு உயிருக்கும் உயிர்வாழ அவசியமானது.
அதை வைத்துக்கொண்டு பணமுதலைகள் என்ன ஆட்டம் ஆடுவார்கள்.
ஏற்கனவே மூன்றாவது உலகப்போர் தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்பது இன்றைய கணிப்பு.

 தண்ணீர் பிரச்னையில் மக்கள் விழித்துக் கொள்ளவில்லை என்றால், இதனால் ஏற்படும்அவலங்களை  மக்கள்தான் கண்ணீருடன் எதிர்கொள்ள  வேண்டும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
 கணினிப்  பணியாளரா?
இன்று எந்த வேலையாக இருப்பினும் கணினி முன்பு அதிக நேரம் செலவிட வேண்டி இருக்கிறது.
இதனால் கணினியின் பயன்பாடுகள் அதிகம் கொண்டவர்கள் உடல் நலத்திலும் அக்கறை எடுத்து கொள்வது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது.
கம்ப்யூட்டர் முன்பு அதிகம் வேலை செய்பவர்கள், உடல்நலத்தில் அக்கறை எடுத்து கொள்வதற்கான சில டிப்ஸ்கள் இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

முதலில் அதிக நேரம் கம்ப்யூட்டரை பார்ப்பவர்கள் கண்கள் மேல் கவனம் செலுத்த வேண்டும். மிக பக்கத்தில் இருந்து கம்ப்யூட்டர் திரையில் வெளிச்சத்தினை பார்ப்பதால், கண்கள் பாதிப்படைய நிறைய வாய்ப்பிருக்கிறது. இதனால் 15 நிமிடத்திற்கு ஒருமுறை கண்களுக்கு ஓய்வு கொடுப்பது நல்லது.


அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இது சாத்தியப்படாது. இதற்கும் வழி இருக்கிறது.
உள்ளங்கையை கண்கள் மேல் வைத்து ஒரு இரண்டு நிமிடம் ஓய்வு கொடுக்கலாம்.
இது ஓரளவு கண்களை பாதிப்பில் இருந்து காப்பாற்றும்.

 தொடர்ந்து கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்யும் நபர்கள், பத்து நிமிடத்திற்கொருமுறை கைகளையும், உடலையும் நீட்டி மடக்கி சிறிய உடற்பயிற்சி செய்து கொள்வது மிக நல்லது.
கணினியின் முன் அமர்ந்து டைப் செய்கையில் உடலை நேர்கோட்டில் வைத்திருப்பது மிக அவசியமான ஒன்று. இதனால் முதுகுத்தண்டு நேராக இருக்கும்.
 இது போல் செய்வதால் உடல் வலி அதிகம் வருவதை குறைக்கலாம்.

 பாதங்களை தரை மீது சமமாக வைத்திருப்பது இன்னும் சிறந்தது.
உடலின் அனைத்து பலமும் பாதத்தின் மேல் இருப்பதால், பாதத்தினை சமநிலையில் வைத்து கொள்ள வேண்டும்.
டைப் செய்யும் போது முழங்கைகள், இடையின் பக்கத்தில் வைத்திருப்பது கைகளுக்கு சிறப்பாக சப்போர்ட் கொடுக்கும். இதனால் சரியான முறையில் அமர்ந்து டைப் செய்ய முடியும்.
அதோடு தோள்பட்டை வலியினையும் எளிதாக குறைக்க முடியும்.

 கம்ப்யூட்டர் திரையின் வெளிச்சத்தினை குறைத்து வைத்து கொள்வது மிக அவசியமான ஒன்றாகும்.
இதனால் கண்களை எளிதாக பாதுகாக்கலாம்.

 இங்கே கூறப்பட்டுள்ளதெல்லாம் அனைவரும் எளிதில் செய்யக்கூடிய வழிகள்தான் .
ஆயினும்  இதை புறந்தள்ளாமல் பின்பற்றுவதால் உடலை நல்லமுறையில் பாதுகாக்க முடியும்.
 
====================================================
ன்று,
பிப்ரவரி-23.
புளூட்டோனியம்


ருடொல்ஃப், டீசல் இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1893)


ரோட்டரி அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது(1905)


புளூட்டோனியம் முதல் முறையாக உருவாக்கப்பட்டது(1941)


 உலக தரநிர்ணய அமைப்பு( ஐ.எஸ்.ஓ.,) ஆரம்பிக்கப்பட்டது(1947)


 கயானா குடியரசு தினம்(1970)
====================================================

 பாஜக எப்படி வெல்கிறது..?
"முன்னெப்பொதும் இல்லாத அளவிற்கு ஆர்எஸ்எஸின் நேரடி களப்பணி கூடுதல் பலம். இனி பாஜகவை உயர்சாதியினருக்கான கட்சி என கூற முடியாது எனவும்  பல்வேறு சமூக மக்களிடம்  அவர்களின் சித்தாந்தம் ஊடுருவிகொண்டே வருகிறது என்பதையும் எச்சரிக்கிறார். 
எதிர் கட்சிகளின் ஒற்றுமைதான் பாஜகவின் வெற்றியை தடுக்க முடியும் என்கிறார். உதாரணமாக பீகார் நிதிஷ்-லாலு-காங்கிரஸ் வெற்றியை குறிப்பிடுகிறார்.
 ஆனால் வெறும் கட்சிகளின் ஒருங்கிணைப்பு போதாது தற்காலிகமாக பாஜகவை வீழ்த்த பயன்படுமே  தவிர அது விதைக்கும் விஷ விதைகளை பிடுங்க அது பயன்படாது.
 அதற்கு அதே பீகாரை நாம் உதாரணமாக சொல்லலாம் மீண்டும் நீதிஷ் பாஜக கூட்டணி அமைந்ததை வைத்து புரிந்து கொள்ளலாம்.

நிதிஷின் சித்தாந்த தெளிவின்மை சுய அரசியல் லாபம் இதற்கு முக்கிய காரணம். இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் இந்துத்துவ சித்தாந்த  எதிர்ப்பின் அடிப்படையிலான கட்சிகளின் ஒருங்கிணைப்பே பாஜகவை நிரந்தரமாக வீழ்த்த பயன்படும் என்று நாம் சேர்த்து புரிந்துகொள்வோம்."
“எதிர் ” வெளியீட்டின் புத்தகம் இந்துஸ்தான் டைம்ஸ் இதழில் பணிபுரியும் பிரசாந்த் ஜா என்ற பத்திரிக்கையாளரால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு சசிகலா பாபு என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது 2018 டிசம்பரில் வெளியானது..


பாஜக 2014 நாடாளமன்ற தேர்தலில் தனிம்பெரும்பாண்மை பெற்று ஆட்சியமைத்ததில் துவங்கி  அதற்கு பிறகு நடைபெற்ற “பீகார்-டெல்லி” தவிர்த்து மற்ற மாநில  சட்டமன்ற  தேர்தல்களில் பாஜக எவ்வாறு  வெற்றிபெற்றது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விரிவாக எழுதப்பட்டுள்ள புத்தகம்.

“மோடி அலை”உருவாக்கப்பட்ட விதம் , உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அமீத்ஷா பயன்படுத்திய தேர்தல் யுக்தி, ஆர்எஸ்எஸின் நேரடியான களப்பணி, இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரத்தை தூண்டிய விதம், ஊடகங்களின் துணை என 7 முக்கிய தலைப்புகளைக்கொண்டு  பாஜக வெற்றி பெற்ற விதத்தை  விவரித்திருக்கிறார்.

மோடி பலூன் ஊத அரும்பாடுபட்ட   கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் அதன் ஊடகங்களின் பங்களிப்பை அதிகம் பேசவில்லை  என்றாலும் முந்தைய பாஜக அனுகுமுறையிலிருந்து என்னென்ன மாற்றங்களை செய்திருக்கிறார்கள் என்பதை  ஆராய்ந்திருக்கிறார். எதிரிகளின் பலத்தை சாதாரணமாக நினைக்க கூடாது என்ற பாடத்தை வாசிக்கும் போது கற்றுக்கொள்வோம்.

தமிழ்நாட்டை பொறுத்த வரை அமித்ஷா கிண்டலுக்குரியவர் ஆனால் மோடியின் பிரதமர் கனவு பலித்ததில்  முக்கிய காரணம் அவர்தான். இந்தி பேசும் மாநிலங்களான உத்தர்பிரேதசம், உத்ராகண்ட், இமாச்சல், பீகார்,டெல்லி,ஜார்கண்ட்,மத்திய பிரதேசம் ராஜஸ்தான்,அரியானா ஆகிய மாநிலங்களில் பாஜக போட்டியிட்ட 225 பாராளமன்ற தொகுதிகளில் 190 தொகுதிகள் வெற்றிபெற்றுள்ளது இது சாதாரண புள்ளிவிவரம் அல்ல ஆபத்தான புள்ளிவிவரம்.

நாடே நடுத்தெருவிற்கு வந்த 200க்கும் மேற்பட்ட மக்கள்  உயிரழந்த, பல தொழில்கள் நாசமடைந்து வேலை இழப்புகளை உருவாக்கிய  பணமதிப்பிழப்பு நடவடிக்கையை  “கருப்புப்பணம்”  -“தீவிரவாத” ஒழிப்பு நடவடிக்கைகள்  என மிகசாதுர்யமாக மோடி  தன் பேச்சு திறமையால் உத்திரபிரதேச மக்களை நம்ப வைத்தார். அதில் எதிர்கட்சிகள் விட்ட அத்தனை அம்புகளும் புஸ்ஸாகி கீழே விழுந்தது.
ராகுலின் பேச்சும்  மக்களிடம் எடுபடவில்லை,   அதன் அறுவடைதான்  2017 உ.பியின்  சட்டமன்ற தேர்தல் வெற்றி..

இவ்வெற்றிக்காக 64 நாட்கள் உத்திரபிரதேச மாநிலத்திலயே தங்கி வேலை பார்த்தவர் அமீத் ஷா. 2014 நாடாளமன்ற தேர்தலில் உ.பியில்  மொத்தமாக உள்ள 1லட்சத்து 40 ஆயிரம் வாக்குச்சாவடியில் 13ஆயிரம் வாக்குச்சாவடியில் ஒரு ஓட்டுகூட மோடி வாங்கவில்லை இதை கண்டறிந்து அவ்விடங்களில் ஒரு வாக்குச்சாவடிக்கு 100 உறுப்பினர் சேர்ப்பு நடைபெற்று 2017 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது பாஜக. இதெல்லாம் அமீத்ஷாவின் தலைமையில் நடந்ததுதான்.
பல்வேறு சாதிகளை ஒருங்கிணைப்பது, அவர்களுக்கான பிரதிநிதித்துவத்தை வழங்கியது, பெருமளவு தலித் மக்கள் பிற்படுத்தப்பட்ட மக்களின் ஆதரவை பெற்றது என களம் அறிந்து செயல்பட்டு அடுத்தடுத்து வெற்றிகளை குவித்துள்ளனர்.

இந்திய மக்கள் தொகையில் 20% உள்ள இஸ்லாமிய மக்களை கழித்துவிட்டுதான் தேர்தல் யுக்தியை கையாள்கிறது பாஜக அவர்களை எதிரிகளாக சித்தரிப்பதன் மூலம் இந்து ஓட்டுக்களை ஒருங்கிணைக்கிறது அதற்கு பொய்யான செய்திகளை பரப்பும் வேலையிலும் ஈடுபடுகிறது..
 இது உ.பியில் எடுபட்டுள்ளது. மேலும் பணமும் இங்கே பிரதான பங்கு வகித்துள்ளது உள்ளூர் முதலாளிகள் முதல் பெரு முதலாளிகள் வரை பணத்தை வாரி வழங்குகின்றனர். உ.பி. சட்டமன்ற தேர்தலில் மட்டும் 1500 கோடி செலவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கிறார்.

மிஸ்டுகால் உறுப்பினர் சேர்ப்பு நமக்கு கிண்டலுக்குரியதாய் இருந்தாலும் அதுவும் அவர்களுக்கு  சாதமாகி உள்ளது என்று நிறுவுகிறார் எழுத்தாளர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
வறட்சி-வேலையின்மை
சூறையாடப்படும் மக்கள் திட்டம்


மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் மோடி அரசு 100 நாள் வேலை திட்டத்திற்குரூ.60 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
2018-ல் ஒதுக்கிய நிதி ரூ.61,426 கோடியாகும். 2018-ஆம் ஆண்டுவேலை கூலி பாக்கி மட்டும் ரூ.5,173கோடி ஆகும். தொடர்ந்து மத்திய அரசு 100நாள் வேலைத் திட்டத்தை பல வழிகளில் ஒழித்துக்கட்டவே முயற்சி செய்து வருகிறது.
2017- 2018 ல்வேலைக் கோரி மனு கொடுத்தவர்களில் 1.24 கோடி தொழிலாளர்களுக்கு வேலை மறுக்கப்பட்டது.
2018 ஆம் ஆண்டில் தென்மேற்கு பருவமழை 34 சதவீதம்குறைவாகவே பெய்துள்ளது.
மகாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் கடுமையான வறட்சியில் சிக்கியுள்ளன. தமிழ்நாட்டில், தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை இரண்டும் குறைவாகவே பெய்துள்ளன. கஜா புயல் தமிழகத்தில் 12 மாவட்டங்களை கடுமையான பாதிப்பிற்குள்ளாக்கியது.
100 நாள் வேலைத் திட்டம் 12மாவட்டங்களில் 150 நாட்கள் எனகாலங்கடந்து உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் கோடையில் தமிழகம் உட்பட பல மாநிலங்கள் கடும் வறட்சியை எதிர்நோக்கி உள்ளன. எனவே மத்திய அரசு வறட்சி பாதித்த மாநிலங்களில் 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்திக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
அப்படி பார்க்கும் போது 2019- 2020 ல் 100நாள் வேலைத் திட்டத்தின் நிதித் தேவை ரூ.2 லட்சம் கோடியாக உயரும். ஒதுக்கியிருப்பதோ வெறும் 60 ஆயிரம் கோடி மட்டுமே. தமிழக அரசு 100 நாள்வேலைத் திட்டத்தை முறையாகபயன்படுத்தவில்லை.
224 ரூபாய்கூலிக்கு பதிலாக 100, 120க்கு மேல் கொடுப்பதில்லை. பல ஊராட்சிகளில் முற்றிலும் வேலையே கொடுப்பதில்லை.

திருப்பி விடப்படும் நிதி
100 நாள் வேலைக்கான கூலியைகொண்டு கிராமங்களில் அரசுகட்டிடங்கள் கட்டி வருகிறது. 2017- 2018 ல் சராசரியாக 55 நாட்களும் 2018- 2019 ல் இதுநாள் வரை சராசரியாக 36 நாட்கள் மட்டுமே அரசால் வேலை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த லட்சணத்தில் தமிழக அரசுக்கு 100 நாள் வேலைத் திட்டத்தை மிகச்சிறப்பாக செயல்படுத்தியதற்காக மத்திய அரசு விருது வழங்கியுள்ளது.
தமிழகத்தில்
சராசரியாக
குடும்பத்திற்கு
அளிக்கப்பட்ட
வேலை நாட்கள் 2017-18 2018-19
காஞ்சிபுரம் 73 66
திருவள்ளூர் 75 61
கடலூர் 52 32
விழுப்புரம் 55 25
வேலூர் 75 28
தி. மலை 68 22
சேலம் 60 45
நாமக்கல் 71 42
தர்மபுரி 49 29
ஈரோடு 71 51
கோவை 54 45
நீலகிரி 41 38
தஞ்சாவூர் 63 41
நாகை 60 36
திருவாரூர் 49 37
திருச்சி 77 56
கரூர் 63 59
கிருஷ்ணகிரி 73 52
அரியலூர் 46 27
திருப்பூர் 69 66
தேனி 46 24
திண்டுக்கல் 58 43
இராமநாதபுரம் 68 33
விருதுநகர் 51 36
சிவகங்கை 62 46
திருநெல்வேலி 67 42
தூத்துக்குடி 87 61
கன்னியாகுமரி 78 58
பெரம்பலூர் 40 27
கடும் வறட்சி வேலையின்மையால் வறுமையில் வாழும் விவசாயத்தொழிலாளர்களை பாதுகாக்க கொண்டு வரப்பட்ட தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் என்பது மத்திய, மாநில அரசுகளால் சூறையாடப்படுகிறது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?