"கொள்கை வேறு கூட்டணி வேறு "
தமிழக மக்களின் நலன் கருதியே தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்தோம் என்று பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்து உள்ளார்.
மக்களவைத் தேர்தல் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடந்துவந்த நிலையில், முதல் ஆளாக அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது பாமக. பாமகவுக்கு 7+1 (மாநிலங்களவை உறுப்பினர்) தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று தெரிவித்த பாமக, அதிமுகவை கடுமையாக விமர்சித்ததோடு மட்டுமல்லாமல் அமைச்சர்களுக்கு எதிராக ஆளுநரிடம் ஊழல் புகாரும் அளித்திருந்தது. இந்த நிலையில் அதிமுகவுடன் பாமக கூட்டணி அமைத்ததை பொருந்தாக் கூட்டணி என்கிற ரீதியில் எதிர்க்கட்சிகளும், சமூக வலைதளங்களிலும் விமர்சனம் செய்துவருகின்றன.
கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தான அன்று செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், கூட்டணி தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் அன்புமணி ராமதாஸ் பதிலளிப்பார் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் சென்னையில் தியாகராய நகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து கூட்டணி தொடர்பாக விளக்கம் அளித்தார் அன்புமணி ராமதாஸ். "காவிரி படுகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வு உள்ளிட்ட திட்டங்கள் வரக்கூடாது என்ற கோரிக்கையை பார்த்துக்கொள்வதாக முதல்வர் தெரிவித்துள்ளார். எங்களுடைய கோரிக்கைகளை பரிசீலிப்பதாக கூறியதால் கூட்டணி அமைக்கப்பட்டது.
2011ல் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி சேர மாட்டோம் என சொன்னது உண்மைதான், அதை மறுக்கவில்லை என்று தெரிவித்த அன்புமணி ராமதாஸ் அப்போது இருந்த சூழல், தற்போது இல்லை. இப்போது இரு பெரும் தலைவர்களும் இல்லை. அதனால் வியூகத்தை மாற்றியுள்ளோம்" என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்தில் இனி எந்த ஒரு கட்சியும் தனியாக போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்பதால் தான் கூட்டணி அமைத்தோம் என்றார். தமிழகத்தில் திமுக அதிமுக போன்று உபியில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் எதிரும் புதிருமாக இருந்தனர்.
ஆனால் இன்று நாடாளுமன்றத் தேர்தலுக்காக கூட்டணி அமைத்தனர். அதுபோன்று சந்திரபாபு நாயுடு காங்கிரஸை விமர்சித்து வந்தார்.
ஆனால் இன்று நாடாளுமன்றத் தேர்தலுக்காக கூட்டணி அமைத்திருக்கின்றனர் என சுட்டிக்காட்டிய அன்புமணி விமர்சனம் செய்தால் கூட்டணி அமைக்க கூடாதா?"என்று கேள்வி எழுப்பினார்.
அப்போது, நீங்கள் அதிமுகவை விமர்சனம் மட்டும் செய்யவில்லை ஆளுநரிடம் அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த புகாரையும் சுமத்தியுள்ளீர்கள். இதுபோன்று ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய கட்சியுடன் கூட்டணி அமைத்தது ஏன் என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அன்புமணி, ஊழல் செய்தவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தான் பாமகவின் நிலைபாடு என்று குறிப்பிட்டார்.
இந்த கூட்டணியால் பாமக கொள்கையை விட்டுவிட மாட்டோம், அதிமுக பாஜகவை நாங்கள் விமர்சனம் செய்தோம், தமிழகத்தின் உரிமைகளை விட்டுகொடுக்க கூடாது என்பதற்காகவே விமர்சனம் செய்தோம். இப்போது கூட்டணிக்கு உள்ளே இருந்து அழுத்தம் கொடுக்க போகிறோம் என்று குறிப்பிட்டார்.
அப்போது இதுபோன்ற விளக்கங்கள் உங்களுக்கு நெருடலாக இல்லையா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, இந்தக் கூட்டணி ஊடகத்துக்கு பிடிக்கவில்லை என்றால் எங்களுக்கு கவலை இல்லை என்றார்.
அதிமுக பாமக கூட்டணியை பணக் கூட்டணி என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இந்த கூட்டணி அமைப்பதற்கு முன்பு திமுகவுடன் பேசப்பட்டதா என்ற கேள்விக்கு, “ திமுக உட்பட அனைத்து கட்சிகளும் எங்களை அணுகினார்கள். அப்போது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டது. நிர்வாகிகள் ஆலோசனையின் பேரில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப்பட்டது. திமுகவுடன் கூட்டணி வைக்கவில்லை என்று ஆதங்கத்தாலும், தோல்வி பயத்தாலும் ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார் என்றார்.
முந்தைய தேர்தல்களில் கடுமையாக உழைத்தும், ஒரு எம்.எல்.ஏ.வை கூட மக்கள் கொடுக்கவில்லை. அதனால் தான் தற்போது கூட்டணி அமைத்துள்ளோம் என்றார்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் "கொள்கை வேறு கூட்டணி வேறு "என்ற பழமொழியை சொல்லியிருக்கிறார்.அதையே ராமதாஸ் ,அன்புமணி போன்றோரும் வழி மொழிகின்றனர்.
இதுவரை ஒத்தக்கொள்கை உள்ளவர்கள்தான் கூட்டணி வைத்துக்கொள்வார்கள் என்று மக்கள் முட்டாள்தனமாக நம்பிக்கொண்டிருந்தார்கள் .
ஆனால் அடிக்கும் கொள்ளையில் பங்கு தர ஒத்துக்கொள்பவர்களுடன் மட்டும்தான் கூட்டணி என்பதையும் கொள்ககை என்று தேவையற்றது,அன்றன்று பெட்ரோல் விலைபோல் நிர்ணயம் செய்யப்படும் என்பதும் பாஜகவுடன் அதிமுக வும்,அதிமுகவுடன் பாமகவும் வைத்துக்கொண்டுள்ள கூட்டணி மூலம் மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்தியா மீது 50 அணுகுண்டுகளை வீச வேண்டுமென்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் சர்ச்சைக் கருத்தைக் கூறியுள்ளார்.
புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு பாகிஸ்தானுடனான மோதல்போக்கு வலுத்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், இந்தியா மீது 50 அணுகுண்டுகளை வீச வேண்டுமென்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் சர்ச்சைக் கருத்தைக் கூறியுள்ளார்.
புல்வாமா தாக்குதல் சம்பவம் குறித்து முஷரப் கூறியதாகப் பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த டான் ஊடகம் இன்று (பிப்ரவரி 25) வெளியிட்டுள்ள செய்தியில், “இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.
அணு ஆயுதத் தாக்குதல் இல்லை. இந்தியா மீது ஒரு அணுகுண்டை வீசித் தாக்கினால், இந்தியா நம்மீது 20 அணுகுண்டுகளை வீசி அழித்துவிடும்.
அதற்கு ஒரே தீர்வு முதலில் நாம் 50 அணுகுண்டுகளை வீசித் தாக்க வேண்டும். அப்போது அவர்களால் நம்மீது 20 அணுகுண்டுகளை வீச முடியாது. 50 அணுகுண்டுகளை முதலில் வீசத் தயாரா என்று கேள்வியெழுப்பியுள்ளார்’ எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், காஷ்மீரில் இந்தியா எதாவது தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தான் உடனடியாக சிந்து மற்றும் பஞ்சாபில் பதிலடி கொடுக்க வேண்டும் எனவும், இந்தியாவுக்குப் பாடம் புகட்ட வேண்டுமென்றும் முஷரப் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் முஷரப் இக்கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இதனிடையே காஷ்மீரில் நேற்று ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் காவல் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜம்மு காஷ்மீரின் குல்கம் பகுதியில் பிப்ரவரி 24ஆம் தேதி தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் குல்கமைச் சேர்ந்த முகமது அமீன் ஷேக்கின் மகன் ரஹீப் அகமது ஷேக் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மற்ற இருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த வாலிட் மற்றும் நியூமன். இவர்கள் இருவரும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த மூத்த காமண்டர்கள்’ என்று தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 5 மணி நேரம் நடந்த இந்தச் சண்டையில் பாதுகாப்புப் படை தரப்பில் துணை கண்காணிப்பாளர் அமன் குமார் தாகூர் மற்றும் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
====================================================புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு பாகிஸ்தானுடனான மோதல்போக்கு வலுத்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையில் ஒரு பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், இந்தியா மீது 50 அணுகுண்டுகளை வீச வேண்டுமென்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் சர்ச்சைக் கருத்தைக் கூறியுள்ளார்.
புல்வாமா தாக்குதல் சம்பவம் குறித்து முஷரப் கூறியதாகப் பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த டான் ஊடகம் இன்று (பிப்ரவரி 25) வெளியிட்டுள்ள செய்தியில், “இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.
அணு ஆயுதத் தாக்குதல் இல்லை. இந்தியா மீது ஒரு அணுகுண்டை வீசித் தாக்கினால், இந்தியா நம்மீது 20 அணுகுண்டுகளை வீசி அழித்துவிடும்.
அதற்கு ஒரே தீர்வு முதலில் நாம் 50 அணுகுண்டுகளை வீசித் தாக்க வேண்டும். அப்போது அவர்களால் நம்மீது 20 அணுகுண்டுகளை வீச முடியாது. 50 அணுகுண்டுகளை முதலில் வீசத் தயாரா என்று கேள்வியெழுப்பியுள்ளார்’ எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், காஷ்மீரில் இந்தியா எதாவது தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தான் உடனடியாக சிந்து மற்றும் பஞ்சாபில் பதிலடி கொடுக்க வேண்டும் எனவும், இந்தியாவுக்குப் பாடம் புகட்ட வேண்டுமென்றும் முஷரப் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில் முஷரப் இக்கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இதனிடையே காஷ்மீரில் நேற்று ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் காவல் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஜம்மு காஷ்மீரின் குல்கம் பகுதியில் பிப்ரவரி 24ஆம் தேதி தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் குல்கமைச் சேர்ந்த முகமது அமீன் ஷேக்கின் மகன் ரஹீப் அகமது ஷேக் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மற்ற இருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த வாலிட் மற்றும் நியூமன். இவர்கள் இருவரும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த மூத்த காமண்டர்கள்’ என்று தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 5 மணி நேரம் நடந்த இந்தச் சண்டையில் பாதுகாப்புப் படை தரப்பில் துணை கண்காணிப்பாளர் அமன் குமார் தாகூர் மற்றும் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
இன்று,
பிப்ரவரி-25.
குவைத் தேசிய தினம்
சாமுவேல் கோல்ட், சுழல் துப்பாக்கிக்கான காப்புரிமம் பெற்றார்(1836)
தாமஸ் டெவன்போர்ட், மின்சார மோட்டருக்கான காப்புரிமம்
பெற்றார்(1837)
இந்தியாவின் முதல் ஏவுகணையான ப்ருத்வி ஏவப்பட்டது(1988)
===================================================