ஒருவரே வாட்ச்மேனாகவும், திருடனாகவும்
இருக்க முடியுமா?”
திவால் அரசின் வரவு -செலவு தாக்கல் .
n கஜா புயல் பாதிப்புக்கு ஏற்கனவே அறிவித்த நிவாரணத்தை தவிர புதிய நிவாரணங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.
ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் நிவாரணம் மத்திய அரசிடம் கோரிய தமிழக அரசு, தற்போது 825 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கியது யானைப் பசிக்கு சோளப் பொறியிட்டது போல் உள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட, இன்னமும் துயரில் வாடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த வரவு - செலவு திட்ட அறிவிப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
n மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்றுள்ள கடன்களையாவது தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற பெண்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை.
n விவசாயத் துறை எதிர்நோக்கும் கடுமையான பிரச்சனைகளான விளை பொருளுக்கு போதிய ஆதார விலை, கடன் சுமை உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு எந்த தீர்வும் இல்லை.
நெல்லுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் விலையை மீண்டும் வழங்குவதாக அறிவித்துள்ளது நிதியமைச்சரின் இமாலய சாதனையாக உள்ளது.
கரும்புக்கான மாநில அரசின் விலை கை கழுவப்பட்டுள்ளது.
ஆலை முதலாளிகள் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய 1800 கோடி ரூபாய் கரும்பு பண பாக்கி விவசாயிகளுக்கு பெற்றுத் தருவதற்கான வழி ஏதும் குறிப்பிடப்படவில்லை.
n நிதியமைச்சர் இந்த ஆண்டு 44,176.36 பற்றாக்குறை எனக் குறிப்பிட்டுள்ள நிலையில் இதனை சமாளிக்க எந்த நடவடிக்கiயும் அறிவிக்கப்படவில்லை. மாறாக, இந்த சுமை சாமானிய மக்கள் மீதே திணிக்கப்படும்.
n பொது விநியோகத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களோ, உரிய நிதி ஒதுக்கீடோ அறிவிக்கப்படவில்லை.
முறையாக உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்படாத நிலையில், மக்களின் அடிப்படைத் தேவைகள் புறக்கணிக்கப்படும் நிலை உள்ளது.
உள்ளாட்சி மன்றங்களுக்கு மத்திய அரசின் மானியங்கள் அளிக்கப்படாத நிலை தொடருகிறது. மாநில அரசும் தேவையான அளவில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
n தமிழகத்தில் நகர்ப்புற மக்களின் வாழ்க்கை நெருக்கடி தீவிரமாகியுள்ள நிலையில், நகர்ப்புற குடிசைவாழ் மக்களின் மேம்பாடு, கல்வி, சுகாதாரம், வேலை நிலைமைகளை மேம்படுத்துகிற அடிப்படைத் திட்டங்களில் கவனம் செலுத்தாத அரசு, ஸ்மார்ட் சிட்டி போன்ற சொல்லாடல்களை உச்சரித்து, மேம்போக்கான சில திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கியுள்ளனர்.
சொத்து வரி உயர்வு, குப்பை வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு என நகர்ப்புற மக்களை கசக்கிப் பிழிந்து வரும் அரசு, நகர மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு எவ்வித உறுதியான நடவடிக்கையும் பட்ஜெட்டில் முன்மொழியவில்லை.
n வறுமை ஒழிப்புக்கு வெறும் ரூ. 1031.53 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இது எவ்விதத்திலும் இப்பிரச்சனையில் தாக்கத்தை ஏற்படுத்தாது.
n அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கவோ, அனைத்துக்குழந்தைகளுக்கும் கல்வி கிட்டுகிற வகையிலோ உரிய நடவடிக்கைகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. உயர் கல்வித்துறையில் ஊழலும், முறைகேடுகளும் மலிந்துள்ள நிலையில், வெற்று அறிவிப்புக்கள் மட்டுமே சொல்லப்பட்டுள்ளன.
n அங்கன்வாடிகளை ஆங்கில வழி மழலைப் பள்ளியாக மாற்றியதன் மூலம் தமிழ் மொழி புறந்தள்ளப்படும் ஆபத்தான நிலையினை உருவாக்கி விட்டு, ஐ.நா. மொழி பட்டியலில் தமிழை 10 வது இடத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது.
n சுகாதாரத்தைப் பொறுத்த வரையில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்கள் அவ்வப்போது மக்களை பாதித்து வரும் நிலையில், அடிப்படை சுகாதார மேம்பாடு, மற்றும் தடுப்பு நடவடிக்கைகளும், ஆரம்ப சுகாதாரத்தை விரிவுபடுத்துவதும் தேவையாக உள்ளது. இதில் போதிய நடவடிக்கைகள் இல்லை.
n படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் போராடி வரும் நிலையில், அரசுத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து எந்த அறிவிப்பும் நிதிநிலையில் அறிவிக்கப்பட
வில்லை. மத்திய அரசு அலுவலகங்களில் வட மாநில இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில்
பணியில் சேர்வதும், தமிழக இளைஞர்களுக்கு வேலை மறுப்பதுமான அவல நிலை தொடர்கிறது.
இதை தடுப்பதற்கான நடவடிக்கை ஏதுமில்லை.
அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகளில் தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் நியமிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை நிரந்தரப்படுத்துவது பற்றி ஏதும் கூறவில்லை.
n முறைசாராத் தொழிலாளர் எண்ணிக்கை அதிக அளவில் உள்ள நிலையில் அவர்களது வாழ்க்கை பாதுகாப்பான நடவடிக்கையோ உரிய தொகையோ ஒதுக்கப்படவில்லை.
n அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிட்டு அனைத்து தரப்பு ஊழியர்களும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களை தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பது, சட்டவிரோதமாக பணி மாறுதல் செய்து அலைக்கழிப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
n ஏற்கனவே மூடப்பட்ட சட்டமன்றத்திலேயே அறிவிக்கப்பட்ட சிறு - குறு தொழில் நிறுவனங்களை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளவில்லை.
n தமிழகத்திற்கு 14வது நிதிக்குழுவின் சிபாரிசு அடிப்படையில் ஒதுக்க வேண்டிய நிதியையும், ஜி.எஸ்.டி.யின் தமிழகத்திற்கான வரி பகிர்வையும், பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய நிதியையும் மத்திய பாஜக அரசு கொடுக்காமல் தமிழகத்தை மாற்றந்தாய் மனப்போக்கோடு தமிழகத்தை பழிவாங்கும் போக்கினை நிதி நிலை அறிக்கையில் நிதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகம் சந்திக்கும் நிதி நெருக்கடிக்கு இது முக்கிய காரணமாக உள்ள நிலையில் பாஜக அரசை எதிர்த்து குரல்கொடுப்பதற்கு மாறாக, இணக்கமாக இருக்கிறோம் என்கிற பெயரில் மோடி அரசுக்கு அடிபணிந்து செயல்படும் அரசாக அதிமுக அரசு உள்ளது என்பதை நிதிநிலை அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
n நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன், மேக தாது அணை, ஸ்டெர்லைட், பட்டாசு தொழில், மின்கோபுரங்கள் அமைப்பது உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து நிதியமைச்சர் மறந்தும் அறிக்கையில் சொல்லாமல் மூடி மறைத்திருப்பது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம்.
தமிழக அரசின் வருவாய்ப் பற்றாக்குறை 14 ஆயிரத்து 314 கோடி ரூபாயாக இருக்கும்என மதிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலத்தின் மொத்த வருவாய் வரவுகள் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 721 கோடி ரூபாயாவும், மொத்த வருவாய் செல வினங்கள் 2 லட்சத்து 12 ஆயிரத்து 35 கோடிரூபாயாக இருக்கும்.
இதனால் வருவாய் பற்றாக்குறை 14 ஆயிரத்து 314 என கணக்கிடப்பட்டுள்ளது.
2019-20ம் நிதியாண்டின் திட்ட மதிப்பீடுகளில் மூலதனச்செலவுக்கு 31 ஆயிரத்து 251 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதால், மொத்த மாநில உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 44 ஆயிரத்து 176 கோடி ரூபாயாக இருக்கும்.
மாநில அரசு 51 ஆயிரத்து 800 கோடிரூபாய் கடன் வாங்க அனுமதிக்கப் பட்டிருந்தாலும் வரும் நிதியாண்டில் 43 ஆயிரம் கோடி ரூபாயை கடன் வாங்க திட்டமிட்டள்ளது.
எனவே நிகர நிலுவை கடன் மதிப்பு 3 லட்சத்து 97 ஆயிரத்து 496 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 8.16 விழுக்காடாக இருக்கும் என எதிர்பார்ப்பதால், வரும் நிதியாண்டில் அது உயர் வளர்ச்சிப் பாதையில் மாநிலம் செல்லும் என கருதுவதாகவும்
மாநிலங்களுக்கிடையேயான ஒருங்கிணைந்த பொருட்கள் மற்றும் சேவைகள் (ஜிஎஸ்டி) வரிவருவாயில் 2017-18ல் கிடைக்க வேண்டிய 5 ஆயிரத்து 545 கோடி ரூபாயும், இழப்பீட்டுத்தொகை 455 கோடி ரூபாயும் ,
அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் ஆகியவற்றின் கீழ் நிலுவையாக உள்ள 3 ஆயிரத்து 201 கோடி ரூபாயையும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய 4 ஆயிரத்து 412 கோடி ரூபாயையும் மத்திய அரசு மத்திய அரசு வழங்காமல் உள்ளது.
இதனால் மாநிலத்தின் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
'தயவு செய்து இந்தியா வாங்க."
கடிதம் எழுத செலவு ரூ. 435 கோடிகள்!
இந்திய வங்கிகளை சூறையாடிவிட்டு வெளிநாட்டில் பதுங்கியிருப்பவர்களை, மீண்டும் இந்தியா கொண்டு வருவதாக சொல்லும் மோடி அரசு, கடிதச் செலவு என்ற பெயரில் மட்டும் ரூ. 435 கோடியை செலவிட்டு உள்ளது.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, வியாழனன்று மக்களவையில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், எம்.பி.யுமான முகம்மது சலீம் பேசியிருப்பதாவது:“நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றிருக்கிறது.
நாட்டிலுள்ள செல்வத்தில் 50 சதவிகிதம், வெறும் ஒன்பது கார்ப்பரேட்டுகளின் கைகளுக்குச் சென்றிருக்கிறது. மக்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வு மிகவும் அதிகரித்திருக்கிறது. விவசாயிகளுக்கு, அவர்களின் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கவில்லை.
வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்திருக் கிறது.
இதுதொடர்பாக 2016-17-ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை கூட பாஜக அரசுவெளியிடவில்லை. இன்னமும் தரவு களைச் சேகரித்துக் கொண்டிருப்பதாக அரசுத்தரப்பில் கூறப்படுகிறது.
இதிலிருந்து நாட்டின் உண்மை நிலை மைகளை சொல்வதற்குக் கூட இந்த அரசாங்கம் அஞ்சுவது நன்கு தெரிகிறது.பிரதமர் மற்றும் அமைச்சர்களால் பயனடைந்தவர்கள் வெளிநாடுகளுக்குப் பறந்தோடி விட்டார்கள். அவர்களை மீண்டும் இந்தியாவிற்குக் கொண்டு வருவதற்காக இந்த அரசாங்கம் 435 கோடி ரூபாய்க்கு இதுவரை கடிதங்கள் மட்டுமே எழுதியிருக்கிறது.
அதேபோன்று “பெண்குழந்தைகளைக் காப்போம், பெண்குழந்தைகளைப் படிக்க வைப்போம்” திட்டத்திற்காக ஒதுக்கப் பட்ட தொகையில் 56 சதவிகிதம் வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே செலவு செய்யப்பட்டிருக்கிறது.நாட்டில் வேலையில்லாக் கொடுமைஇந்த அரசின் ஆட்சியில் அதிகரித்திருக்கிற அளவுக்கு முன்னெப்போதும் இருந்த தில்லை. மாணவர்களின் கல்வி உதவித் தொகையை அதிகரித்திருப்பதாக அரசா ங்கத்தின் தரப்பில் கூறப்பட்டபோதிலும், அவர்களுக்கு முன்பு கிடைத்துவந்த கல்வி உதவித்தொகைகூட தரப்படுவதில்லை.
இதனால் மாணவர்கள், கல்வி உதவித்தொகை கேட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.சாரதா சீட்டு நிதி நிறுவன ஊழல், நாரதா வழக்குகளில், உச்சநீதிமன்ற கட்டளையின் அடிப்படையிலேயே விசாரணை நடப்பதால், மாநில அரசுகளின் அதிகார வரம்பு எல்லைகளை அது மீறுவதாக ஆகாது.
அடுத்தவர்களின் ஊழல் பற்றி பேசும் மத்திய பாஜக அரசு, நாரதா ஊழல் வழக்கு தொடர்பான ஒழுக்கக்கோட்பாட்டுக் குழுவின் கூட்டத்தை இதுவரை நடத்திடவில்லை.
ரபேல் ஊழல்தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைகளின்மீதும் கூட்டு நாடாளுமன்றக் குழுவையும் அமைத்திடவில்லை.
இந்நிலையில், இந்த அரசாங்கம்ஊழலை எந்தவிதத்தில் ஒழிக்கப்போகிறது? என்று நான் கேட்க விரும்புகிறேன்.
இவ்வாறு முகம்மது சலீம் எம்.பி. பேசியுள்ளார்.
====================================================
இன்று,
பிப்ரவரி-09.
வில்லியம் மார்கன், வாலிபாலை கண்டுபிடித்தார்(1895)
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டது(1900)
அமெரிக்கா: பகலொளி சேமிப்புநேரம் அறிமுகப்படுத்தப்பட்டது(1942)
பொதுநலவாய அமைப்பினுள் ஜமைக்கா விடுதலை பெற்றது(1962)
====================================================
"ஒருவரே வாட்ச்மேனாகவும், திருடனாகவும் இருக்க முடியுமா?”
ரபேல் ஒப்பந்தம் பிரதமர் அலுவலக தலையீடு சிக்கியது ஆதாரம்! ரூ.30 ஆயிரம் கோடி மோடிக்கா?
அம்பானிக்கா?
ரபேல் போர் விமானம் வாங்கிய விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான மிக முக்கியமான ஆதாரம் வெளியாகியிருக்கிறது.
ரபேல் விமானம் வாங்குவது தொடர்பாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வக் குழு, பிரான்ஸ் அரசுடன்பேசிவந்தபோதே, பிரதமர் அலுவலகம் தனியாக ஒரு பேச்சுவார்த்தை நடத்தியது இப்போது தெரிய வந்துள்ளது.மூத்த பத்திரிகையாளரும், தி இந்து ஆங்கில நாளேட்டின் முன்னாள் ஆசிரியருமான என்.ராம் இதற்கான ஆவணங்களையும் வெளியிட்டு அம்பலப்படுத்தியிருக்கிறார்.
இதுகுறித்து தி இந்து ஆங்கில நாளேட்டில் வெள்ளியன்று செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.
நடந்தது என்ன?
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ரபேல் விவகாரம் தொடர்பான வழக்கில் தாக்கல் செய்த பதில் மனுவில், “ரபேல்விமானம் வாங்குவது தொடர்பாக பிரான்ஸ் அரசுடன் விமானப் படைப் பிரிவின் துணைத் தலைவரான ஏர் மார்ஷல் சின்ஹா தலைமையிலான ஏழுபேர் கொண்ட குழு பேச்சு நடத்தியது.
அதில் எந்த விதத்திலும் பிரதமர் அலுவலகத்தின் தலையீடு இல்லை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், “பாதுகாப்புத் துறை அமைச்சரே... தயவு செய்து கவனி யுங்கள்.
பிரதமர் அலுவலகத்தால் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் தவிர்க்கப்படவேண்டும் என்பதே எனதுவிருப்பம்.
ஏனெனில் நமதுஅதிகாரப்பூர்வமான பேச்சு வார்த்தையை தாழ்த்தும் வகையில் அது அமைந்துவிடும்” என்று 2015 நவம்பர் 24 ஆம் தேதி அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்க ருக்கு பாதுகாப்புத் துறைச் செயலாளர் ஜி.மோகன் குமார் தன் கைப்பட எழுதிய அலுவலகக் குறிப்பினை, ‘தி இந்து’ ஆங்கில ஏடு வெளியிட்டிருக்கிறது.
பாதுகாப்புத் துறை துணைச் செயலாளர் எஸ்.கே. ஷர்மா, இணைச் செயலாளர், பாதுகாப்புத் தளவாட கொள் முதல் துறை மேலாளர் உள்ளிட்டோர் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு அனுப்பிய குறிப்பில்தான் துறைச் செயலாளர் மோகன் குமாரின் இந்த எதிர்ப்பு கைப்பட எழுதப்பட்டிருக்கிறது.
பிரதமர் அலுவலகம் பேரம்பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் அலுவலகக் குறிப்பின்படி, ரபேல் விவகாரத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் குழு நடத்தும் பேச்சுவார்த்தைக்கு இணையாக இன்னொரு பேச்சுவார்த்தை (பேரலல் நெகோஷி யேஷன்) பிரதமர் அலுவலகம் மூலமாக நடத்தப்படுகிறது என்ற தகவலே பிரான்ஸ் குழுவிடம் இருந்துதான் கிடைத்திருக்கிறது.
2015 அக்டோபர் 23அன்று ரபேல் பேச்சுவார்த்தையில் பிரான்ஸ் குழுவுக்கு தலைமை வகித்த ஜெனரல் ஸ்டீபன் ரெப் எழுதிய கடிதத்தில், “இந்தியபிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளரான ஜாவேத் அஷ்ரப், பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் ராஜீய ஆலோசகர் லூயிஸ் வேஸியுடன் 20-10-2015 அன்று தொலைபேசி யில் பேசியிருக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பிரான்ஸ் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் ஸ்டீபன் ரெப் எழுதியஇந்தக் கடிதம் பற்றி பிரதமர்அலுவலகத்துக்கு பாதுகாப்புத் துறைஅமைச்சகம் தெரியப்படுத்தி யிருக்கிறது.
பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் சார்பிலான ரபேல் பேச்சு வார்த்தைக் குழுவின் தலைவர் ஏர் மார்ஷல் சின்ஹாவும் இதுகுறித்து பிரதமர் அலுவலக இணைச் செயலாளர் அஷ்ரப்புக்கு எழுதியிருக்கிறார்.
இதற்கு பிரதமர் அலுவலக இணைச் செயலாளர் ஜாவேத் அஷ்ரப், 2015 நவம்பர் 11 அன்று அளித்த பதிலில், “எங்களுக்கு இடையே பேச்சு நடந்தது உண்மைதான்.
பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலக ஆலோசனையின்படியே அவர் என்னுடன் பேசினார்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ரபேல் விமான இறக்குமதியில் எந்தத் தலையீடும் இல்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், பாதுகாப்புத் துறைக்குள் நிகழ்ந்துள்ள கடிதப் பரிமாற்றங்களே இதில் பிரதமர் அலுவலகத் தலையீடு இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.
ரூ. 30 ஆயிரம் கோடி எங்கே?
இந்த விபரம் வெளியான நிலையி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்து கூறியதாவது:
“கடந்த ஒருவருடத்துக்கும் மேலாகவே ரபேல் விவகாரத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்று தொடர்ந்து சொல்லி வருகிறோம்
. இன்று வெளியான செய்தி அதை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
ரபேல் விவகாரத்தில் பிரான்சுடன் பாதுகாப்புத் துறை அமைச்சக குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டிருந்த அதே நேரம், பிரதமரும் குறுக்கு வழி மூலம் இன்னொரு பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறார் என்பது பாதுகாப்புத் துறை செயலாளர் எழுதிய கடிதம் மூலமாகவே தெரிய வந்திருக்கிறது.
இதன் மூலம் பிரதமர்மோடி முப்பதாயிரம் கோடி ரூபாயை எடுத்து தன் நண்பர் அனில் அம்பானிக்குக் கொடுத்திருக்கிறார் என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.
நான் இந்த நாட்டு இளைஞர்களைப் பார்த்து சொல்கிறேன், இந்த நாட்டின்விமானப் படை ஜவான்கள், பைலட்டுகள்,வீரர்களைப் பார்த்து சொல்கிறேன்.
உங்கள் பணத்தை, உங்கள் குடும்பங் களுக்குப் பயன்பட வேண்டிய பணத்தை, நம் நாட்டுக்குப் பயன்பட வேண்டிய 30ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் திருடிவிட்டார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். பாதுகாப்புத்துறை அமைச்சகமே இதை சொல்லியிருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பொய்யான ஆவணங்களை அளித்திருக்கிறது.
எனவே உச்சநீதிமன்றத் தீர்ப்பே இப்போது கேள்விக்குறியாகியிருக்கிறது” என்று கூறினார்.
“பிரதமர் தன்னை இந்த நாட்டின் வாட்ச்மேன் என்று சொல்லிக் கொள் கிறார்.
அவர் வாட்ச்மேனா திருடனா என்பதை அவர் விளக்க வேண்டும்.
ஒருவரே வாட்ச்மேனாகவும், திருடனாகவும் இருக்க முடியுமா?”
என்பதே ராகுல்காந்தியின் கடுமையான கேள்வி.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
திவால் அரசின் வரவு -செலவு தாக்கல் .
தமிழக அரசின் கடன் ரூ. 3.97 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
ஆண்டுக்கு செலுத்தும் வட்டி ரூ. 33 ஆயிரம் கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தமிழக அரசின் நிதிநிலை திவலாகி கொண்டு வருவதைக் காட்டுகிறது. அரசின் வருவாயைப் பெருக்குவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.
தமிழக மக்களின் வாழ்க்கையை நாசம் செய்து உழைத்த காசைக் கொள்ளையடிக்கும் டாஸ்மாக்கை மட்டுமே வருவாய் ஈட்டும் இலக்காக அதிமுக அரசு வைத்துக்கொண்டுள்ளது.
கனிம வளம், மணல் கொள்ளை உள்ளிட்டவைகளிலும், தனியார் கல்வி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அரசின் வருவாயை பெருக்குவதற்கு ஆக்கப்பூர்வமான திட்டங்கள் நிதியமைச்சர் யோசிக்கவில்லை.
வருவாயை அதிகரிக்காததால் வளர்ச்சி திட்டங்கள் ஏதுமில்லாமல் பற்றாக்குறையில் மூழ்கியுள்ள பஞ்சத்திற்கான அறிக்கையாகவே நிதிநிலை அறிக்கை உள்ளது.
n கஜா புயல் பாதிப்புக்கு ஏற்கனவே அறிவித்த நிவாரணத்தை தவிர புதிய நிவாரணங்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.
ரூ.15 ஆயிரம் கோடிக்கு மேல் நிவாரணம் மத்திய அரசிடம் கோரிய தமிழக அரசு, தற்போது 825 கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கியது யானைப் பசிக்கு சோளப் பொறியிட்டது போல் உள்ளது.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட, இன்னமும் துயரில் வாடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த வரவு - செலவு திட்ட அறிவிப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
n மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்றுள்ள கடன்களையாவது தள்ளுபடி செய்ய வேண்டுமென்ற பெண்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படவில்லை.
n விவசாயத் துறை எதிர்நோக்கும் கடுமையான பிரச்சனைகளான விளை பொருளுக்கு போதிய ஆதார விலை, கடன் சுமை உள்ளிட்ட பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளுக்கு எந்த தீர்வும் இல்லை.
நெல்லுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் விலையை மீண்டும் வழங்குவதாக அறிவித்துள்ளது நிதியமைச்சரின் இமாலய சாதனையாக உள்ளது.
கரும்புக்கான மாநில அரசின் விலை கை கழுவப்பட்டுள்ளது.
ஆலை முதலாளிகள் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய 1800 கோடி ரூபாய் கரும்பு பண பாக்கி விவசாயிகளுக்கு பெற்றுத் தருவதற்கான வழி ஏதும் குறிப்பிடப்படவில்லை.
n நிதியமைச்சர் இந்த ஆண்டு 44,176.36 பற்றாக்குறை எனக் குறிப்பிட்டுள்ள நிலையில் இதனை சமாளிக்க எந்த நடவடிக்கiயும் அறிவிக்கப்படவில்லை. மாறாக, இந்த சுமை சாமானிய மக்கள் மீதே திணிக்கப்படும்.
n பொது விநியோகத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களோ, உரிய நிதி ஒதுக்கீடோ அறிவிக்கப்படவில்லை.
முறையாக உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்படாத நிலையில், மக்களின் அடிப்படைத் தேவைகள் புறக்கணிக்கப்படும் நிலை உள்ளது.
உள்ளாட்சி மன்றங்களுக்கு மத்திய அரசின் மானியங்கள் அளிக்கப்படாத நிலை தொடருகிறது. மாநில அரசும் தேவையான அளவில் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.
n தமிழகத்தில் நகர்ப்புற மக்களின் வாழ்க்கை நெருக்கடி தீவிரமாகியுள்ள நிலையில், நகர்ப்புற குடிசைவாழ் மக்களின் மேம்பாடு, கல்வி, சுகாதாரம், வேலை நிலைமைகளை மேம்படுத்துகிற அடிப்படைத் திட்டங்களில் கவனம் செலுத்தாத அரசு, ஸ்மார்ட் சிட்டி போன்ற சொல்லாடல்களை உச்சரித்து, மேம்போக்கான சில திட்டங்களுக்கு நிதியை ஒதுக்கியுள்ளனர்.
சொத்து வரி உயர்வு, குப்பை வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு என நகர்ப்புற மக்களை கசக்கிப் பிழிந்து வரும் அரசு, நகர மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு எவ்வித உறுதியான நடவடிக்கையும் பட்ஜெட்டில் முன்மொழியவில்லை.
n வறுமை ஒழிப்புக்கு வெறும் ரூ. 1031.53 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
இது எவ்விதத்திலும் இப்பிரச்சனையில் தாக்கத்தை ஏற்படுத்தாது.
n அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கவோ, அனைத்துக்குழந்தைகளுக்கும் கல்வி கிட்டுகிற வகையிலோ உரிய நடவடிக்கைகள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. உயர் கல்வித்துறையில் ஊழலும், முறைகேடுகளும் மலிந்துள்ள நிலையில், வெற்று அறிவிப்புக்கள் மட்டுமே சொல்லப்பட்டுள்ளன.
n அங்கன்வாடிகளை ஆங்கில வழி மழலைப் பள்ளியாக மாற்றியதன் மூலம் தமிழ் மொழி புறந்தள்ளப்படும் ஆபத்தான நிலையினை உருவாக்கி விட்டு, ஐ.நா. மொழி பட்டியலில் தமிழை 10 வது இடத்திற்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது.
n சுகாதாரத்தைப் பொறுத்த வரையில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்ற நோய்கள் அவ்வப்போது மக்களை பாதித்து வரும் நிலையில், அடிப்படை சுகாதார மேம்பாடு, மற்றும் தடுப்பு நடவடிக்கைகளும், ஆரம்ப சுகாதாரத்தை விரிவுபடுத்துவதும் தேவையாக உள்ளது. இதில் போதிய நடவடிக்கைகள் இல்லை.
n படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் போராடி வரும் நிலையில், அரசுத்துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து எந்த அறிவிப்பும் நிதிநிலையில் அறிவிக்கப்பட
வில்லை. மத்திய அரசு அலுவலகங்களில் வட மாநில இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில்
பணியில் சேர்வதும், தமிழக இளைஞர்களுக்கு வேலை மறுப்பதுமான அவல நிலை தொடர்கிறது.
இதை தடுப்பதற்கான நடவடிக்கை ஏதுமில்லை.
அரசு அலுவலகங்கள், பள்ளிகள், மருத்துவமனைகளில் தொகுப்பூதியம், மதிப்பூதியத்தில் நியமிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான ஊழியர்களை நிரந்தரப்படுத்துவது பற்றி ஏதும் கூறவில்லை.
n முறைசாராத் தொழிலாளர் எண்ணிக்கை அதிக அளவில் உள்ள நிலையில் அவர்களது வாழ்க்கை பாதுகாப்பான நடவடிக்கையோ உரிய தொகையோ ஒதுக்கப்படவில்லை.
n அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிட்டு அனைத்து தரப்பு ஊழியர்களும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் - அரசு ஊழியர்களை தற்காலிக பணி நீக்கம் செய்திருப்பது, சட்டவிரோதமாக பணி மாறுதல் செய்து அலைக்கழிப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்.
n ஏற்கனவே மூடப்பட்ட சட்டமன்றத்திலேயே அறிவிக்கப்பட்ட சிறு - குறு தொழில் நிறுவனங்களை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளவில்லை.
சின்னத்தம்பி ஓய்வில். |
n தமிழகத்திற்கு 14வது நிதிக்குழுவின் சிபாரிசு அடிப்படையில் ஒதுக்க வேண்டிய நிதியையும், ஜி.எஸ்.டி.யின் தமிழகத்திற்கான வரி பகிர்வையும், பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய நிதியையும் மத்திய பாஜக அரசு கொடுக்காமல் தமிழகத்தை மாற்றந்தாய் மனப்போக்கோடு தமிழகத்தை பழிவாங்கும் போக்கினை நிதி நிலை அறிக்கையில் நிதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகம் சந்திக்கும் நிதி நெருக்கடிக்கு இது முக்கிய காரணமாக உள்ள நிலையில் பாஜக அரசை எதிர்த்து குரல்கொடுப்பதற்கு மாறாக, இணக்கமாக இருக்கிறோம் என்கிற பெயரில் மோடி அரசுக்கு அடிபணிந்து செயல்படும் அரசாக அதிமுக அரசு உள்ளது என்பதை நிதிநிலை அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
n நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன், மேக தாது அணை, ஸ்டெர்லைட், பட்டாசு தொழில், மின்கோபுரங்கள் அமைப்பது உள்ளிட்ட மத்திய அரசின் நடவடிக்கைகள் குறித்து நிதியமைச்சர் மறந்தும் அறிக்கையில் சொல்லாமல் மூடி மறைத்திருப்பது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம்.
தமிழக அரசின் வருவாய்ப் பற்றாக்குறை 14 ஆயிரத்து 314 கோடி ரூபாயாக இருக்கும்என மதிப்பிடப்பட்டுள்ளது.
மாநிலத்தின் மொத்த வருவாய் வரவுகள் ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 721 கோடி ரூபாயாவும், மொத்த வருவாய் செல வினங்கள் 2 லட்சத்து 12 ஆயிரத்து 35 கோடிரூபாயாக இருக்கும்.
இதனால் வருவாய் பற்றாக்குறை 14 ஆயிரத்து 314 என கணக்கிடப்பட்டுள்ளது.
2019-20ம் நிதியாண்டின் திட்ட மதிப்பீடுகளில் மூலதனச்செலவுக்கு 31 ஆயிரத்து 251 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதால், மொத்த மாநில உற்பத்தியில் நிதிப்பற்றாக்குறை 44 ஆயிரத்து 176 கோடி ரூபாயாக இருக்கும்.
மத்திய அரசு தராததால் நிதி நிலை பாதிப்பு. |
மாநில அரசு 51 ஆயிரத்து 800 கோடிரூபாய் கடன் வாங்க அனுமதிக்கப் பட்டிருந்தாலும் வரும் நிதியாண்டில் 43 ஆயிரம் கோடி ரூபாயை கடன் வாங்க திட்டமிட்டள்ளது.
எனவே நிகர நிலுவை கடன் மதிப்பு 3 லட்சத்து 97 ஆயிரத்து 496 கோடி ரூபாயாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 8.16 விழுக்காடாக இருக்கும் என எதிர்பார்ப்பதால், வரும் நிதியாண்டில் அது உயர் வளர்ச்சிப் பாதையில் மாநிலம் செல்லும் என கருதுவதாகவும்
மாநிலங்களுக்கிடையேயான ஒருங்கிணைந்த பொருட்கள் மற்றும் சேவைகள் (ஜிஎஸ்டி) வரிவருவாயில் 2017-18ல் கிடைக்க வேண்டிய 5 ஆயிரத்து 545 கோடி ரூபாயும், இழப்பீட்டுத்தொகை 455 கோடி ரூபாயும் ,
அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் ஆகியவற்றின் கீழ் நிலுவையாக உள்ள 3 ஆயிரத்து 201 கோடி ரூபாயையும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய 4 ஆயிரத்து 412 கோடி ரூபாயையும் மத்திய அரசு மத்திய அரசு வழங்காமல் உள்ளது.
இதனால் மாநிலத்தின் நிதிநிலை பாதிக்கப்பட்டுள்ளது.
என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
'தயவு செய்து இந்தியா வாங்க."
கடிதம் எழுத செலவு ரூ. 435 கோடிகள்!
இந்திய வங்கிகளை சூறையாடிவிட்டு வெளிநாட்டில் பதுங்கியிருப்பவர்களை, மீண்டும் இந்தியா கொண்டு வருவதாக சொல்லும் மோடி அரசு, கடிதச் செலவு என்ற பெயரில் மட்டும் ரூ. 435 கோடியை செலவிட்டு உள்ளது.
குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, வியாழனன்று மக்களவையில் விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், எம்.பி.யுமான முகம்மது சலீம் பேசியிருப்பதாவது:“நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றிருக்கிறது.
நாட்டிலுள்ள செல்வத்தில் 50 சதவிகிதம், வெறும் ஒன்பது கார்ப்பரேட்டுகளின் கைகளுக்குச் சென்றிருக்கிறது. மக்களுக்கு இடையேயான ஏற்றத்தாழ்வு மிகவும் அதிகரித்திருக்கிறது. விவசாயிகளுக்கு, அவர்களின் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்கவில்லை.
வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகரித்திருக் கிறது.
இதுதொடர்பாக 2016-17-ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை கூட பாஜக அரசுவெளியிடவில்லை. இன்னமும் தரவு களைச் சேகரித்துக் கொண்டிருப்பதாக அரசுத்தரப்பில் கூறப்படுகிறது.
முகம்மது சலீம் எம்.பி |
இதிலிருந்து நாட்டின் உண்மை நிலை மைகளை சொல்வதற்குக் கூட இந்த அரசாங்கம் அஞ்சுவது நன்கு தெரிகிறது.பிரதமர் மற்றும் அமைச்சர்களால் பயனடைந்தவர்கள் வெளிநாடுகளுக்குப் பறந்தோடி விட்டார்கள். அவர்களை மீண்டும் இந்தியாவிற்குக் கொண்டு வருவதற்காக இந்த அரசாங்கம் 435 கோடி ரூபாய்க்கு இதுவரை கடிதங்கள் மட்டுமே எழுதியிருக்கிறது.
அதேபோன்று “பெண்குழந்தைகளைக் காப்போம், பெண்குழந்தைகளைப் படிக்க வைப்போம்” திட்டத்திற்காக ஒதுக்கப் பட்ட தொகையில் 56 சதவிகிதம் வெறும் விளம்பரத்திற்காக மட்டுமே செலவு செய்யப்பட்டிருக்கிறது.நாட்டில் வேலையில்லாக் கொடுமைஇந்த அரசின் ஆட்சியில் அதிகரித்திருக்கிற அளவுக்கு முன்னெப்போதும் இருந்த தில்லை. மாணவர்களின் கல்வி உதவித் தொகையை அதிகரித்திருப்பதாக அரசா ங்கத்தின் தரப்பில் கூறப்பட்டபோதிலும், அவர்களுக்கு முன்பு கிடைத்துவந்த கல்வி உதவித்தொகைகூட தரப்படுவதில்லை.
இதனால் மாணவர்கள், கல்வி உதவித்தொகை கேட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.சாரதா சீட்டு நிதி நிறுவன ஊழல், நாரதா வழக்குகளில், உச்சநீதிமன்ற கட்டளையின் அடிப்படையிலேயே விசாரணை நடப்பதால், மாநில அரசுகளின் அதிகார வரம்பு எல்லைகளை அது மீறுவதாக ஆகாது.
அடுத்தவர்களின் ஊழல் பற்றி பேசும் மத்திய பாஜக அரசு, நாரதா ஊழல் வழக்கு தொடர்பான ஒழுக்கக்கோட்பாட்டுக் குழுவின் கூட்டத்தை இதுவரை நடத்திடவில்லை.
ரபேல் ஊழல்தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைகளின்மீதும் கூட்டு நாடாளுமன்றக் குழுவையும் அமைத்திடவில்லை.
இந்நிலையில், இந்த அரசாங்கம்ஊழலை எந்தவிதத்தில் ஒழிக்கப்போகிறது? என்று நான் கேட்க விரும்புகிறேன்.
இவ்வாறு முகம்மது சலீம் எம்.பி. பேசியுள்ளார்.
====================================================
பிப்ரவரி-09.
வில்லியம் மார்கன், வாலிபாலை கண்டுபிடித்தார்(1895)
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டது(1900)
அமெரிக்கா: பகலொளி சேமிப்புநேரம் அறிமுகப்படுத்தப்பட்டது(1942)
பொதுநலவாய அமைப்பினுள் ஜமைக்கா விடுதலை பெற்றது(1962)
====================================================
"ஒருவரே வாட்ச்மேனாகவும், திருடனாகவும் இருக்க முடியுமா?”
ரபேல் ஒப்பந்தம் பிரதமர் அலுவலக தலையீடு சிக்கியது ஆதாரம்! ரூ.30 ஆயிரம் கோடி மோடிக்கா?
அம்பானிக்கா?
ரபேல் போர் விமானம் வாங்கிய விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான மிக முக்கியமான ஆதாரம் வெளியாகியிருக்கிறது.
ரபேல் விமானம் வாங்குவது தொடர்பாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் அதிகாரபூர்வக் குழு, பிரான்ஸ் அரசுடன்பேசிவந்தபோதே, பிரதமர் அலுவலகம் தனியாக ஒரு பேச்சுவார்த்தை நடத்தியது இப்போது தெரிய வந்துள்ளது.மூத்த பத்திரிகையாளரும், தி இந்து ஆங்கில நாளேட்டின் முன்னாள் ஆசிரியருமான என்.ராம் இதற்கான ஆவணங்களையும் வெளியிட்டு அம்பலப்படுத்தியிருக்கிறார்.
இதுகுறித்து தி இந்து ஆங்கில நாளேட்டில் வெள்ளியன்று செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது.
நடந்தது என்ன?
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு ரபேல் விவகாரம் தொடர்பான வழக்கில் தாக்கல் செய்த பதில் மனுவில், “ரபேல்விமானம் வாங்குவது தொடர்பாக பிரான்ஸ் அரசுடன் விமானப் படைப் பிரிவின் துணைத் தலைவரான ஏர் மார்ஷல் சின்ஹா தலைமையிலான ஏழுபேர் கொண்ட குழு பேச்சு நடத்தியது.
அதில் எந்த விதத்திலும் பிரதமர் அலுவலகத்தின் தலையீடு இல்லை” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், “பாதுகாப்புத் துறை அமைச்சரே... தயவு செய்து கவனி யுங்கள்.
பிரதமர் அலுவலகத்தால் நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் தவிர்க்கப்படவேண்டும் என்பதே எனதுவிருப்பம்.
ஏனெனில் நமதுஅதிகாரப்பூர்வமான பேச்சு வார்த்தையை தாழ்த்தும் வகையில் அது அமைந்துவிடும்” என்று 2015 நவம்பர் 24 ஆம் தேதி அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்க ருக்கு பாதுகாப்புத் துறைச் செயலாளர் ஜி.மோகன் குமார் தன் கைப்பட எழுதிய அலுவலகக் குறிப்பினை, ‘தி இந்து’ ஆங்கில ஏடு வெளியிட்டிருக்கிறது.
பாதுகாப்புத் துறை துணைச் செயலாளர் எஸ்.கே. ஷர்மா, இணைச் செயலாளர், பாதுகாப்புத் தளவாட கொள் முதல் துறை மேலாளர் உள்ளிட்டோர் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு அனுப்பிய குறிப்பில்தான் துறைச் செயலாளர் மோகன் குமாரின் இந்த எதிர்ப்பு கைப்பட எழுதப்பட்டிருக்கிறது.
பிரதமர் அலுவலகம் பேரம்பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் அலுவலகக் குறிப்பின்படி, ரபேல் விவகாரத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் குழு நடத்தும் பேச்சுவார்த்தைக்கு இணையாக இன்னொரு பேச்சுவார்த்தை (பேரலல் நெகோஷி யேஷன்) பிரதமர் அலுவலகம் மூலமாக நடத்தப்படுகிறது என்ற தகவலே பிரான்ஸ் குழுவிடம் இருந்துதான் கிடைத்திருக்கிறது.
2015 அக்டோபர் 23அன்று ரபேல் பேச்சுவார்த்தையில் பிரான்ஸ் குழுவுக்கு தலைமை வகித்த ஜெனரல் ஸ்டீபன் ரெப் எழுதிய கடிதத்தில், “இந்தியபிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளரான ஜாவேத் அஷ்ரப், பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் ராஜீய ஆலோசகர் லூயிஸ் வேஸியுடன் 20-10-2015 அன்று தொலைபேசி யில் பேசியிருக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பிரான்ஸ் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் ஸ்டீபன் ரெப் எழுதியஇந்தக் கடிதம் பற்றி பிரதமர்அலுவலகத்துக்கு பாதுகாப்புத் துறைஅமைச்சகம் தெரியப்படுத்தி யிருக்கிறது.
பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் சார்பிலான ரபேல் பேச்சு வார்த்தைக் குழுவின் தலைவர் ஏர் மார்ஷல் சின்ஹாவும் இதுகுறித்து பிரதமர் அலுவலக இணைச் செயலாளர் அஷ்ரப்புக்கு எழுதியிருக்கிறார்.
இதற்கு பிரதமர் அலுவலக இணைச் செயலாளர் ஜாவேத் அஷ்ரப், 2015 நவம்பர் 11 அன்று அளித்த பதிலில், “எங்களுக்கு இடையே பேச்சு நடந்தது உண்மைதான்.
பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலக ஆலோசனையின்படியே அவர் என்னுடன் பேசினார்’’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ரபேல் விமான இறக்குமதியில் எந்தத் தலையீடும் இல்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து மறுத்து வரும் நிலையில், பாதுகாப்புத் துறைக்குள் நிகழ்ந்துள்ள கடிதப் பரிமாற்றங்களே இதில் பிரதமர் அலுவலகத் தலையீடு இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.
ரூ. 30 ஆயிரம் கோடி எங்கே?
இந்த விபரம் வெளியான நிலையி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை சந்தித்து கூறியதாவது:
“கடந்த ஒருவருடத்துக்கும் மேலாகவே ரபேல் விவகாரத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்று தொடர்ந்து சொல்லி வருகிறோம்
. இன்று வெளியான செய்தி அதை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது.
ரபேல் விவகாரத்தில் பிரான்சுடன் பாதுகாப்புத் துறை அமைச்சக குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடு பட்டிருந்த அதே நேரம், பிரதமரும் குறுக்கு வழி மூலம் இன்னொரு பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறார் என்பது பாதுகாப்புத் துறை செயலாளர் எழுதிய கடிதம் மூலமாகவே தெரிய வந்திருக்கிறது.
இதன் மூலம் பிரதமர்மோடி முப்பதாயிரம் கோடி ரூபாயை எடுத்து தன் நண்பர் அனில் அம்பானிக்குக் கொடுத்திருக்கிறார் என்பது மிகத் தெளிவாக தெரிகிறது.
நான் இந்த நாட்டு இளைஞர்களைப் பார்த்து சொல்கிறேன், இந்த நாட்டின்விமானப் படை ஜவான்கள், பைலட்டுகள்,வீரர்களைப் பார்த்து சொல்கிறேன்.
உங்கள் பணத்தை, உங்கள் குடும்பங் களுக்குப் பயன்பட வேண்டிய பணத்தை, நம் நாட்டுக்குப் பயன்பட வேண்டிய 30ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் திருடிவிட்டார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். பாதுகாப்புத்துறை அமைச்சகமே இதை சொல்லியிருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பொய்யான ஆவணங்களை அளித்திருக்கிறது.
எனவே உச்சநீதிமன்றத் தீர்ப்பே இப்போது கேள்விக்குறியாகியிருக்கிறது” என்று கூறினார்.
“பிரதமர் தன்னை இந்த நாட்டின் வாட்ச்மேன் என்று சொல்லிக் கொள் கிறார்.
அவர் வாட்ச்மேனா திருடனா என்பதை அவர் விளக்க வேண்டும்.
ஒருவரே வாட்ச்மேனாகவும், திருடனாகவும் இருக்க முடியுமா?”
என்பதே ராகுல்காந்தியின் கடுமையான கேள்வி.
சாரதா,ரொஸ்வெலி காரர்களிடமிருந்தே ஊழல்களின் "தல" சான்று வாங்குவது எவ்வளவு அரிது.