யாருக்கு பரிவட்டம்?

“2019 மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக தனிப்பெரும்பான்மைக்காக கடுமையாகப் போராட வேண்டியது இருக்கும் என , ‘பிட்ச் சொல்யூஷன்ஸ் மேக்ரோ ரிசர்ச்’ நிறுவனம்  வெளியிட்டுள்ள ஆய்வில், கூறப்பட்டுள்ளது.

ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மை  காங்கிரஸ், பாஜகஉள்ளிட்ட எந்தக் கட்சிக்குமே கிடைக்க வாய்ப்பில்லை;
எனவே, தேசியக் கட்சிகள் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே மத்தியில் ஆட்சியமைக்க முடியும்; அவ்வாறு, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க, பாஜக-வை விட காங்கிரசுக்கே அதிக வாய்ப்பிருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 காங்கிரஸ் வடமாநிலங்களில் பாஜகவைப்போல் அதிக அளவில்  இடங்களைப்பெறும் என்று தெரிகிறது.பாஜக கணிசமான இடங்களை காங்கிரஸ்,மாநிலக்கட்சிகளிடம் பறி கொடுக்கும் என்றே தெரிகிறது.

தங்களுக்குப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பாஜக - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே பிராந்திய கட்சிகளிடம் ஆதரவைப் பெற முயற்சிக்கும் என்றும் மாநிலக் கட்சிகளுடன் பாஜக பெருமளவில் கருத்து வேறுபாடு கொண்டிருப்பதால், அந்தக் கட்சிகள் பாஜக ஆட்சியமைக்க ஆதரவு தராது என்றும் அநத் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

இதனால் தேர்தலுக்குப் பின்னர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கவே அதிக வாய்ப்பிருக்கிறது.
பாஜக அரசு அறிவித்திருக்கும் ஓய்வூதியம், விவசாயிகளுக்கான உதவித்தொகைகள் வாக்காளர்கள் மத்தியில் எதிர்பார்க்கும் அளவிற்கு ஆதாயத்தைத் தரப்போவதில்லை என்றும், விவசாயிகளிடம் வேண்டுமானால் சிறிய தாக்கத்தை அது பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புல்வாமா தாக்குதலை, வாக்குகளை திரட்டுவதற்கான காரணியாக பாஜக பயன்படுத்தலாம்: ஆனால், அதுவும் எந்த அளவிற்கு பலனளிக்கும் என்பதை இப்போதைக்கு கூற முடியாது” என்று பிட்ச் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.


கடந்த 2014 மக்களவைப் பொதுத்தேர்தலில், மொத்தமுள்ள 543 தொகுதிகளில் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் 336 தொகுதிகளைக் கைப்பற்றின.
பாஜக மட்டும் 282 இடங்களைப் பெற்றது.
 இது தனிப்பெரும்பான்மைக்குத் தேவையான 272 இடங்களைக் காட்டிலும், 10 இடங்கள் கூடுதலாகும்.
ஆனால், இந்தமுறை பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெறும் இடத்தையும் சேர்த்தாலும், ஆட்சிக்கு வர முடியாது என்றே பல்வேறு கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

 பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே 237 தொகுதிகளுக்கு மேல் பெற முடியாது என்று,  ‘இந்தியா டுடே’ கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 பிட்ச் நிறுவனத்தின் ஆய்வும் அதை ஒத்தே அமைந்துள்ளது.
அனைத்துக்கணிப்புகளுமே சென்ற முறை கைக்கொடுத்த வடமாநிலங்கள் இந்த முறை ஆதரவை அல்லித்தராது.ராஜஸ்தான்,ம.பி, போன்றே மக்கலவைத்தேர்தலிலும் இடங்கள் கிடைக்கும் என்றே தெரிவிக்கின்றன.
தென் மாநிலங்களைப்பொறுத்தகவரை எப்போதுமே கர்நாடகாவைத்தவிர்த்து பாஜகவுக்கு சொல்லிக்கொள்கிறது போல் வெற்றி கிடைப்பது இல்லை.
ஆனால் இந்த முறை ஏற்கனவே கிடைத்த இடங்களும் கிடைப்பது கைநழுவி போகும் என்பதாகவே தெரிகிறது.
பெரும் ஆதரவு தந்த வட மாநிலங்களே பாஜகவுக்கு தங்கள் ஆதரவை மறுபரிசீலனை செய்யும் நிலையில் இது உண்மையாகவே அமையும்.
அந்த அளவு மோடி ஆட்சி கார்ப்பரேட்களுக்கு ஆதரவாகவும், விவசாயிகள்-பாமரர்களுக்கு எதிராகவும் அமைந்துள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

புல்வாமா தாக்குதல் மோடிக்கு தெரியாது?
புல்வாமா தாக்குதல் சம்பவம்நடந்தபோது நரேந்திர மோடிக்கு தாமதமாகவே தகவல் தெரிவிக்கப் பட்டதாக, பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.

புல்வாமா தாக்குதலில், 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டது தெரிந்தும், பிரதமர் நரேந்திரமோடி, உத்தர்கண்டில் உள்ள கார்பெட் தேசியப் பூங்காவில், டிஸ்கவரி சேனலுக்கான விளம்பரப்படப்பிடிப்பில் தீவிரமாக நடித்துக்கொண்டு இருந்தது, நாட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள் ளது.

இவ்வளவுதான் பிரதமரின் தேசபக்தியா; ஊருக்குத்தான் உபதேசமா? என்று பொதுமக்கள் தற்போது கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
“புல்வாமா தாக்குதல் சம்பவம் நடந்தது மாலை 3.10 மணிக்கு. ஆனால் பிரதமர் மோடி மாலை 6.40 மணி வரை, படப்பிடிப்பில் நடித்துள்ளார்; நாடே துயரத்தில் இருந்தபோது படப்பிடிப்பிலும், உல்லாச படகு சவாரியிலும் பிசியாக இருந்துள்ளார்; இதுபோன்ற பிரதமரை உலகில் வேறெங்காவது பார்க்க முடியுமா?” என்று காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவும் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இந்நிலையில், மோடி மீதான குற்றச்சாட்டுக்களுக்கு பிரதமர் அலுவலகம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.அதில், பிரதமர் படப்பிடிப்பில் நடிக்கவில்லை; புல்வாமா தாக்குதல் நடந்ததும் அவர் உடனடியாகபடப்பிடிப்பை ரத்து செய்து, அங்கிருந்து கிளம்பி விட்டார் என்றெல் லாம் கூறவில்லை; மாறாக, புல்வாமா தாக்குதல் சம்பவம் பிரதமருக்கு தாமதமாகவே சொல்லப் பட்டதாகவும், விஷயத்தைக் கேள்விப்பட்டதும், தாமதமாக தகவலைக் கூறியதற்காக மோடிகோபப்பட்டதாகவும் சமாளித்துள் ளது.
மனசு உடைஞ்சு போனார், சாப்பிடவே இல்ல..
 இதேபோல பாஜக-வும் சப்பைக்கட்டு கட்டியுள்ளது.
வீரர் களின் சிதைந்த உடற்பாகங்களை சேகரித்துக் கொண்டிருந்தபோது, பிரதமர் மோடி கார்பெட் பூங்காவில் உட்கார்ந்து டீ - சமோசா சாப்பிட்டார் என்று ரன்தீப் சிங் சுர்ஜேவாலா வைத்த குற்றச்சாட்டுக்கு பாஜக பதில் அளித்துள்ளது.
 அதில், புல்வாமா தாக்குதலால் பிரதமர் மோடி மனமுடைந்து போனார்; அந்த தாக்குதலுக்கு பின் மோடி சாப்பிடவேயில்லை என்று பாஜககூறியுள்ளது. காங்கிரஸ் வைக்கும்குற்றச்சாட்டுகள் எல்லாம் பொய்யானது என அக்கட்சி தெரிவித்துள்ளது.
பிரைம் டைம் மினிஸ்டர்
இதனிடையே, மோடியின் விளம்பரப்பட ஷூட்டிங் குறித்து, டுவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ள, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை, பிரைம் டைம் மினிஸ்டர் மோடி என்று கிண்டலடித்துள்ளார்.
 எல்லோரும் பார்ப்பதற்கான நிகழ்ச்சிஒளிபரப்பு நேரத்தை, ‘பிரைம்டைம்’ என்று தொலைக்காட்சி நிறுவனங்கள் வகைப்படுத்துகின் றன. அந்த நேரத்தில் ஒளிபரப் பப்படும் நிகழ்ச்சிகளுக்கு கூடுதல்விளம்பரம் கிடைக்கும். அதேபோல மோடியும் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதிலேயே பொழுதைக் கழிப்பதாக சாடியுள்ளார்.

மேலும், “புல்வாமா தாக்குதல்நடந்த பிறகு சுமார் 3 மணி நேரம்மோடி என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா?” என்று கேள்வியை எழுப்பியிருக்கும் மோடி, “

1. போட்டோ ஷூட்டிங்கில் மோடி பிசியாக கேமராவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்.
2. உல்லாச படகு சவாரி செய்து கொண்டிருந்தார்.
 3. இயற்கையை ரசித்து சிரித்துக்கொண்டிருந்தார்” என்று பதிலும் அளித்துள்ளார்.

அத்துடன் மோடிஅரசை ஒரு “போட்டோ ஷூட் சர்க் கார்” என்றும் விமர்சித்துள்ளார்.
 
====================================================
ன்று,
பிப்ரவரி-24.
மெக்சிகோ கொடி நாள்
கிரிகொரியன் நாட்காட்டி அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது(1582)
எஸ்தோனியா விடுதலையை அறிவித்தது(1918)
ஹிட்லர் (நாசிக்) கட்சி ஆரம்பிக்கப்பட்டது(1920)
====================================================
 இதே தேதியில் 1839 -ஆண்டில்  கந்தகம் கொண்டு ரப்பரை வலிவூட்டும் வல்கனைசேஷன் முறையைக் கண்டுபிடித்த சார்லஸ் குட்இயர், நேதனியேல் ஹேயார்ட் ஆகியோருக்குக் காப்புரிமை வழங்கப்பட்டது.

கந்தகத்துடன் சேரும்போது ஒட்டும் தன்மையை ரப்பர் இழப்பதை 1834இல் நேதனியேல் ஹேயார்ட், ஃப்ரடரிக் லூடர்ஸ்டார்ஃப் ஆகியோர் ஒரு ரப்பர் தொழிற்சாலையில் எதிர்பாராதவிதமாகக் கண்டுபிடித்தனர்.

மீசோஅமெரிக்கா என்றழைக்கப்பட்ட வடஅமெரிக்காவின் தென்பகுதியில், ஆல்மெக்ஸ் நாகரிக மக்கள், கி.மு.1600இலேயே, ரப்பரை வலிவூட்டித் தயாரிக்கப்பட்ட பந்துகளை விளையாடப் பயன்படுத்தியுள்ளனர். அவர்களின் நாவாட்ல் மொழியில் ரப்பரைக் குறிக்கும் ஆல்லி, மக்களைக் குறிக்கும் மெக்காட்ல் ஆகிய சொற்களிலிருந்து உருவான ஆல்மெக்ஸ் என்பதற்கு ரப்பர் மக்கள் என்றுதான் பொருள்.

தென்அமெரிக்காவைச் சேர்ந்த ரப்பர் மரம் கொலம்பஸ் காலத்தில் ஐரோப்பாவுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

பென்சிலால் எழுதப்பட்டவை, ரப்பர் துண்டால் தேய்த்தால் அழிந்துவிடுவதை, 1770இல் கண்டுபிடித்த ஜோசஃப் ப்ரீஸ்ட்லி, ரப்(தேய்த்தல்) என்பதிலிருந்து தேய்க்கக்கூடியது என்ற பொருளில் ரப்பர் என்று குறிப்பிட்டதே அதன் பெயராக நிலைத்துவிட்டது.
ரப்பரைக்கொண்டு எலாஸ்டிக் பட்டைகளை 1820இல் தாமஸ் ஹேங்க்காக் உருவாக்கினார்.

 இவரது நண்பரான வில்லியம் ப்ராக்கெடான் என்பவர்தான், நெருப்புக்கான ரோமானியக் கடவுளான வல்கன் என்பதிலிருந்து வல்கனைசேஷன் என்ற பெயரை உருவாக்கினார்.
 வல்கனைசேஷனும், அதில் குட்இயர் உருவாக்கிய மேம்பாடுகளுமே ரப்பரின் தற்போதைய பயன்பாடுகளுக்கு வழிவகுத்தன.

1850களில் தொடர்வண்டிகளில் அதிர்வுகளைத் தாங்கும் ஸ்ப்ரிங்குகளுக்குப் பதிலாக ரப்பர் துண்டுகள் பயன்படுத்தப்பட்டன. டயர்களில் காற்றடைக்கும் முறையை ராபர்ட் வில்லியம் தாம்சன் 1847இலேயே கண்டுபிடித்துக் காப்புரிமை பெற்றாலும், உற்பத்தி செய்யப்படவில்லை. காற்றடைக்கும் முறையை 1888இல் ஜான் பாய்ட் டன்லப் உருவாக்கும்வரை, முழுவதும் ரப்பராலான டயர்களே பயன்படுத்தப்பட்டன.

தொடக்ககால டயர்கள், ரப்பரின் இயல்பான நிறமான, வெள்ளை நிறத்தில்தான் இருந்தன. பெட்ரோலியப் பொருட்களிலிருந்து கிடைக்கும் கார்பன் ப்ளாக் என்பதைச் சேர்ப்பதன்மூலம் ரப்பரின் உறுதித்தன்மை அதிகரிப்பது 1912ல்தான் கண்டுபிடிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து அம்முறை பரவி, டயர்கள் கருப்பு நிறத்திற்கு மாறின.
மகாராஷ்டிர விவசாயிகளின் இரண்டாம் நெடும் பயணம் மகத்தான வெற்றி பெற்றுள்ளது.முன்பு நடந்த நெடும்பயணத்தின் போது ஒத்துக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றததால் இந்த இரணடாம் நெடும்பயணம் மிகுந்த எழுச்சியுடன் நடந்தது.


 நாசிக் நகரிலிருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுடன் மும்பையை நோக்கி அகில இந்திய விவசாயிகள் சங்கம் நடத்திய மிகப் பிரம்மாண்டமான நெடும் பயணத்தின் இரண்டாவது நாளான பிப்ரவரி 21 அன்று இரவு,
விவசாயிகள் தலைவர்களை மகாராஷ்டிர மாநில பாஜக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.

அகில இந்திய விவசாயிகள் சங்கத் தலைவர் அசோக் தாவ்லே, மாநிலத் தலைவர் அஜித் நவாலே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாசிக் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜே.பி.கேவிட் உள்ளிட்ட தலைவர்களோடு
 மாநில அமைச்சர்கள் கிரிஷ் மகாஜன், ஜெயக்குமார் ராவல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 இரவு கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தையின் முடிவில், விவசாயிகளின் 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும்,
அதை உறுதி செய்யும் வகையில் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கண்காணிப்பதற்கான உத்தரவாதத்தையும் அளித்தனர்.

இதையேற்று பிரம்மாண்டமான இரண்டாம் நெடும் பயணத்தை வெற்றி பெற்றதாக அறிவித்து முடித்துக் கொள்வதாக விவசாயிகள் சங்கத் தலைவர்கள் அறிவித்தனர்.
விவசாயிகள் அனைவரும் மகிழ்வுடன் களைந்து சென்றனர்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
A.PARIMALAM 
River
 @RiverFiree Feb 22
தமிழ்நாடு தேர்தல் களத்தில் 
 திமுகவை எதிர்த்து 
அதிமுக கூட்டணி .
 பாஜக
 பாமக 
தேமுதிக
 மத்திய,மாநில அரசுகள் 
 தேர்தல் ஆணையம்
 திடீர் பலவேசிகள் 
₹ 2000 
₹ 6000
 தந்திடிவி 
புதிய தலைமுறை டிவி
 நியூஸ் 7 டிவி 
நியூஸ் 18 டிவி 
தினமலர் 
தினத்தந்தி 
தினமணி
 விகடன்
 குமுதம்
 இத்துடன் நடுநிலை (?) இணைய  நக்கிகள்
----------------------------------------------------------------------------------- 
ஓனர் போட்டோவ வைக்கிறது தானய்யா ஒலக வழக்கம் ! இதெல்லாம் ஒரு நியூஸ் ன்னு பரப்பின்னு இருக்கீங்க ?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?