கங்கா (ஸ்நானம்) சுத்தம் ஆச்சா?

 கடைசிக் கட்ட ஏமாற்று முயற்சி
பாஜக அரசின் பட்ஜெட் மோசடி
பாஜக  மோடி அரசு தாக்கல் செய்த 6-ஆவது பட்ஜெட், அரசியல் சட்ட நெறிமுறைகளை மீறுவதாகவும், நாட்டு மக்களை ஏமாற்றிமோசடி செய்வதாகவும் இருக்கிறது என்று பாஜக-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், வாஜ்பாய் ஆட்சியில் 1998 முதல் 2002 வரை நிதியமைச்சர்- 2002 முதல் 2004 வரை அயல்துறை அமைச்சர் பதவிகளை வகித்தவருமான யஷ்வந்த் சின்ஹா குற்றம் சாட்டியுள்ளார்.

என்டிடிவி-க்கு அளித்த பேட்டியில், பட்ஜெட் தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:
"மத்திய இடைக்கால நிதியமைச்சர், பியூஷ் கோயல், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்குப் பதில், ஒரு முழு பட்ஜெட்தாக்கல் செய்வதற்கு முயற்சித்திருக்கிறார்.முழு பட்ஜெட்டிற்கும், இடைக்கால பட்ஜெட்டிற்கும் இடையேயான வித்தியாசத்தை வாசகர்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

முழு பட்ஜெட் தாக்கல் செய் யப்படுகையில் அதனையொட்டி பொருளாதார ஆய்வறிக்கையும் தாக்கல் செய்யப்படும்.
அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட வேண்டிய செலவினங்கள்குறித்தும், பல்வேறு அமைச்சகங் களுக்கு ஒதுக்கப்படவேண்டிய தொகைகள் குறித்தும், அதே போன்று அரசாங்கத்திற்கு எவ் வகைகளில் எல்லாம் வருவாய் ஈட்டுவதற்கான வழிகள் உள்ளன என்றும் கூறப்படும்.
இடைக்கால பட்ஜெட்டைப்பொறுத்தவரை, புதிய செலவினங்கள் சேர்க்கப்படுவதில்லை.
முழு பட்ஜெட்டில்தான் அது இடம்பெறும். மேலும் இடைக்கால ப,ட ஜெட்டுடன் நிதி சட்டமுன்வடிவும் இணைக்கப்பட்டிருக்காது.

ஆனால், ஆகையால், இந்த இடைக்கால பட்ஜெட்டைப் பொறுத்தவரை, பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக் கல் செய்யாத நிலையிலும், ஒருமுழு பட்ஜெட்டிற்குரிய இதர அம்சங்களையும் சேர்த்து, தாக்கல்செய்யப்பட்டிருப்பது, நாட்டில்கடந்த எழுபதாண்டு காலமாகக்கடைப்பிடித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் விதிமுறைகளையும், நடைமுறையையும் முற்றிலும் மீறிய செயலாகும்.
 இதைப்பற்றி யாரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

அடுத்ததாக, இந்த பட் ஜெட்டை, மக்களுக்கு இலவசத் திட்டங்களை அளித்திடும் ஒருபட்ஜெட்  என்பதோடு, “வாக்குகளுக்குக் காசு கொடுக்கும்”  பட்ஜெட் என்றும் சொல்லலாம்.
நிதியமைச்சர், சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு ஓராண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

அதிலும் மிகவும் விசித்திரமான விதத்தில் இந்த செலவினம் மட்டும் முன்தேதியிட்டு, அதாவது2018 டிசம்பர் 1 முதல் அமல்படுத்தப்படும் என்று, அறிவித்திருக்கிறார்.
 என்னே விநோதம்!

மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவிருக்கிறது.
ஆனால், மார்ச் மாத இறுதிக்குள் ஒவ்வொரு விவசாயியின் வங்கிக் கணக்கிலும் ஈராயிரம் ரூபாய் அரசாங்கத்தால் வரவு வைக்கப்பட இருக்கிறது.
இதிலிருந்து, தேர்தலுக்கு முன்னரே, அவருடைய வாக்குகளை அபகரிப்பதற்காக, ஒவ்வொரு விவசாயிக்கும் ஈராயிரம் ரூபாய் கொடுத்துவிட வேண்டும் என்பதும், தேர்தல் சமயத்தில் அதிகாரப்பூர்வமாகவும், தனிப்பட்டமுறையிலும் வாக்காளர்களின் பைகளுக்குப் பணம் போய்ச்சேர உள்ளதும் தெளிவாகத் தெரிகிறது.

ஒரு வேட்பாளர் இதனைச் செய்தால், அது சட்ட விரோத செயலாகும். அதற்காக அவர் சிறைக்குச் செல்ல வேண்டியிருக்கும்.
 இதனையே ஓர் அரசாங்கம் தன்னுடைய அரசின் நிதியிலிருந்து செய்வது என்பது எந்த அளவிற்கு அறநெறிக்கு உட்பட்டதாக இருக்க முடியும்?
விவசாயிக்கு மாதத்திற்கு 500ரூபாய் என்பது ஓர் அற்பத்தொகையாகும். விவசாயி ஒன்றும் பிச்சைக்காரனல்ல, அவன் கண்ணியமானவன்.
அவனுக்கு உங்களின் கருணைஎதுவும் தேவையில்லை. அவனுக்குத் தேவை அவனுடைய உரிமையேயாகும்.



அதேபோன்றுதான் முறைசாராத் தொழிலாளர்களுக்கான இன்சூரன்ஸ் திட்டமும் மோசடியான ஒரு திட்டமாகும்.
ஒரு முறைசாராத் தொழிலாளி மாதந்தோறும்100 ரூபாய் விகிதம் 32 ஆண்டுகளுக்கு அளித்துவந்தால், அதன்பின், அவருக்கு 60 வயது நிறைவடைந்த பின்னர், அவருக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படுமாம்.

முறைசாராத் தொழிலாளர்களில் பலர், நாட்கூலி பெறுபவர்களாவார்கள். அவர்களால் மாதந்தோறும் இவ் வாறு ஒரு தொகையை செலுத்த முடியாது என்பதே என்னுடைய அனுபவமாகும்.
அவர்களைப் பொறுத்தவரை, எதிர்கால வாழ்க்கையைவிட இன்றைய தினம்எப்பாடுபட்டாவது வாழ்ந்திட வேண் டும் என்பதே முக்கியமானதாகும்.

அதேபோன்று வருமான வரிக்கான வருவாயை ஐந்துலட்சம் ரூபாயாக அதிகரித்திருப்பதும்கூட வரிசெலுத்துவோர் அனைவருக்கும் பயனளித்திடாது. ஏனெனில் இது ஒரு கழிவு(Rebate)தானேயொழிய, விலக்கு (Exemption) அல்ல.
நாட்டின் பொருளாதாரத்தில் வேலையின்மை மிகப்பெரிய பிரச்சனையாக உருவாகி இருக்கிறது.

நிதியமைச்சர், தேசிய மாதிரிசர்வே நிறுவனத்தின் விவரங்களைவெளியிடாமல் மறைத்துள்ள அதேசமயத்தில், ஊழியர் வைப்பு நிதிஅமைப்பின் (EPFO) விவரங் களை மட்டும் அளித்து மக்களைத்திசைத்திருப்ப முயற்சித்திருக்கிறார்.
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம்
(MNREGA)உட்பட மத்தியஅரசின் திட்டங்கள் பலவற்றிற்கும்ஒதுக்கப்பட்டுள்ள தொகைகள் மிகவும் குறைவு.
அல்லது மிகச்சிறிய அளவில் உயர்வு அளிக்கப் பட்டிருக்கிறது.

 விவசாயிகளுக்கு அளித்துள்ள மேலேகூறியுள்ள அற்பத்தொகையும்கூட விவசாயத்துறையில் உள்ள இதர திட்டங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ள தொகையேயாகும்.
எந்த விதத்திலாவது ஆட்சியில் நீடித்தாக வேண்டும்;
அதற் காக மக்களுக்குக் காசு கொடுத்து, எப்படியாவது அவர்களின் வாக்குகளைப் பெற்றுவிட வேண்டும்;

இதைத்தவிர வேறு சிந்தனை தங்களுக்கு இல்லை என்பதை இந்த பட்ஜெட் மூலம் மோடி அரசு உலகத்திற்கு காட்டியிருக்கிறது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
2006ல் தமிழக அரசின் வருவாயில் 18%வட்டி கட்டவேண்டிய ஜெயலலிதா ஆட்சி கொண்டுவந்த நிலையில் ஆட்சிப்பொறுப்பேற்ற திமுக அரசு, 2011ல் 16%வட்டி கட்டினால் போதும் என்ற மேம்பட்டநிலையை உருவாக்கியது!
 ஆனால் 8ஆண்டு அதிமுக  ஆட்சிஇன்று வருவாயில் 25%வட்டி கட்ட வேண்டியநிலை.எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில்.
இது அரசு தந்த புள்ளி விபரம்.
தவிக்கிறது தமிழகம்!
====================================================
ன்று,
பிப்ரவரி-07.

புளூட்டோ


சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது(1971)


  கிரனடா விடுதலை தினம்(1974)


புளூட்டோ, நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது(1979)


 ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது(1992)
====================================================
 கங்கா ஸ்நானம்  சுத்தம் ஆச்சா?
 
#5YearChallenge மற்றும் #10YearChallenge என்ற ஹாஷ்டாகுடன் சமூக ஊடகங்களில் இந்த புகைப்படமானது பகிரப்பட்டுள்ளது. கங்கை நதியின் நிலை மிக மோசமாக இருந்ததாகவும், பாரதிய ஜனதா கட்சி அந்த நதியின் நிலையை மேம்படுத்துவதில் வியத்தகு சாதனை புரிந்துள்ளதாகவும் அந்த சமூக ஊடக பகிர்வு கூறுகிறது.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் பொது செயலாளர் வானதி ஸ்ரீனிவாசனும் அந்த புகைப்படங்களை ட்வீட் செய்துள்ளார்.
கங்கை நதியின் மாற்றத்தை பாருங்கள். 2014ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி ஆட்சியின் போதும், 2019ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சியின் போது எப்படி உள்ளது என்று பாருங்கள் என்கிறது ட்வீட்.

வேறு சில தென் மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர்களும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.
வலதுசாரி சமூக ஊடக குழுக்களான "The Fortified Indian" and "Right Log Dot In" குழுக்களும் இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளன. ஆயிரக்கணக்கானோர் தங்கள் பக்கங்களில் இந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர்.

"BJP for 2019 - Modi Mattomme," என்கிற கன்னட ஃபேஸ்புக் குழுவும் இந்த புகைப்படத்தை கடந்த வாரம் பகிர்ந்துள்ளது.
அதில், "இந்த மாற்றத்தை பாருங்கள். மீண்டும் நரேந்திர மோடி  ஆட்சி வேண்டும் என்பதற்கு இந்த மாற்றங்களே போதும்." என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 ஆய்வில், அந்த புகைப்படங்கள் உண்மையானவைதான். ஆனால்,எந்த மோடி ஆட்சியில் என்று சொல்வதில் உண்மை இல்லை என தெரியவந்துள்ளது.
அந்த குழுக்கள் இந்துக்களின் புனிதநகரமான வாரணாசியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளன.


ஆனால் அவை 2009 மற்றும் 2019 காலகட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அல்ல.

  2009ஆம் ஆண்டு புகைப்படம் என கோரப்படும் அந்த புகைப்படம், அவுட்லுக் சஞ்சிகையால் 2015 - 2018 இடையிலான காலக்கட்டத்தில் கோப்புப் படம் என பல முறை பகிரப்பட்டு இருக்கிறது.

அவுட்லுக் ஆசிரியர், "இப்படம் 2011இல் நான் எடுத்தது.அந்த ஆண்டு மத்தியில் கங்கை நதியின் நிலை குறித்து ஒரு புகைப்பட கட்டுரைக்காக நான் வாரணாசி சென்றேன். அப்போதுதான் இந்த புகைப்படம் அந்தக் கட்டுரைக்காக எடுக்கப்பட்டது. பல முறை நாங்கள் பல்வேறு கட்டுரைகளுக்காக அந்த புகைப்படங்களை பயன்படுத்தி உள்ளோம்".என்றார்.

இரண்டாவது மோடி ஆட்சியில் கங்கை எனப்படும் படம் வாராணாசி குறித்து செய்திகள் கொண்ட வட ஐரோப்பாவின் விக்கிபீடியா பக்கத்திலிருந்து அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த புகைப்படத்தை ஃப்ளிக்காருக்காக அமெரிக்க புகைப்பட கலைஞர் கென் வைலாண்ட் எடுத்தது.
இந்த புகைப்படம் 2009ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்கிறார் அவர்.

இந்த காலக்கட்டத்தில் மத்தியில் ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சி.
மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது பகுஜன் சமாஜ் கட்சி.

பாரதிய ஜனதா கட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என பகிரப்பட்டுள்ள இந்த புகைப்படங்கள் இரண்டுமே காங்கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்டவை.

தற்போது கங்கையின் நிலை என்ன?

கங்கை நதியை சுத்தம் செய்வதில் மத்திய அரசின் முயற்சிகள் போதுமான அளவு இல்லை என்கிறது பாராளுமன்ற நிலைக் குழுவின் கடந்தாண்டு(2018)அறிக்கை.கங்கையை சுத்தம் செய்யும் விஷயத்தில் போதுமான அளவு நடவடிக்கை எடுக்கவில்லை என தேசிய பசுமை ஆணையமும் அரசை குற்றஞ்சாட்டி உள்ளது.
கங்கையை சுத்தம் செய்ய வேண்டி, சுவாமி கியான் சுவரப் என்று அழைக்கப்பட்ட சூழலியல் பேராசிரியர் ஜி.டி. அகர்வால் கடந்தாண்டு 112 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.அவர்  "கங்கையை சுத்தம் செய்வது தொடர்பாக நான் எண்ணற்ற கடிதங்களை பிரதமர் அலுவலகத்திற்கும், நீர் வள துறைக்கும் எழுதினேன். ஆனால், அது குறித்து யாரும் கவலை கொள்ளவில்லை" என்று கடைசி அறிக்கையில் கூறியுள்ளார்.
ஆனால் கங்கை சுத்திகரிப்புக்காக 2014 - 2018 இடையேயான காலகட்டத்தில் ரூபாய் 3,867 கோடி ஒதுக்கப்பட்டது என மாநிலங்களவையில் அமைச்சர் சத்யபால் சிங் கூறியுள்ளார்.
அந்த பணம் எவ்விடத்த்தில் கங்கையில் கொட்டப்பட்டது என்பதற்கு எந்த விளக்கமும் பாஜக மோடி அரசிடம் இல்ல.

ஆனால் மோடி2014 ஆம் ஆண்டு வாராணாசி வேட்பாளராக இருந்த நரேந்திர மோடி , வாராணாசியில் கங்கை சுத்திகரிப்பு குறித்து பேசினார்.அப்போது அவர், "நான் இங்கு நானாக வரவில்லை. வேறு யாரும் என்னை அழைத்து வரவில்லை. கங்கா மாதா அழைப்பின் பெயரிலேயே இங்கே வந்தேன்" என்றார்.
அதன்பின் கங்கா மாதா அவரை அழைக்கவே இல்லை  போலும்.

 

25 லட்சம் மக்களின் பணத்தைச் சுருட்டிய சாரதா சீட்டுக் கம்பெனி ஊழல்
நடந்தது என்ன?

#ஏப்ரல் 2013
சாரதா நிதி நிறுவனம் திவாலாகிறது.
அதன் இயக்குனர்களான சுதிப்தா சென் மற்றும் தேபஞ்சி முகர்ஜி ஆகியோர் தலைமறைவாகினர். பணத்தை இழந்த மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திரிணாமுல் அரசு, நீதிபதி ஷியாமள் சென் தலைமையில் நீதிவிசாரணைக்கும், ராஜீவ் குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவும் அமைத்தது. சுதிப்தா சென், முகர்ஜி காஷ்மீரில் கைது செய்யபட்டார்கள்.
#ஜுலை2013
சிபிஐ விசாரிக்க கோரி பொது நல வழக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அது தள்ளுபடி செய்யப்படுகிறது.
# நவம்பர் 2013
திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் குனால் கோஷ், சிறப்பு புலனாய்வு குழுவினால் கைது செய்யப்படுகிறார்.
# பிப்ரவரி 2014
சுதிப்தா சென் - முகர்ஜி மீது குற்றப்பத்திரிகை சிறப்பு புலனாய்வு குழுவால் தாக்கல் செய்யப்படுகிறது. ஆனால், இந்த ஊழல் சதித்திட்டத்தில் சம்பந்தப்பட்ட அரசியல் பிரமுகர்களை விசாரிக்கவோ, குற்றப்பத்திரிகையோ தாக்கல் செய்யப்படவில்லை.
# மே 9, 2014
மார்க்சிஸ்ட் கட்சி தொடுத்த வழக்கில் வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிடுகிறது.
#செப்டம்பர்2014
முன்னாள் டிஜிபியும், திரிணாமுல் காங்கிரசின் துணைத்தலைவருமான ராஜுட் மஜும்தாரை சிபிஐ கைது செய்கிறது.
#அக்டோபர்2014
சுதிப்தா சென், முகர்ஜி, திரிணாமுல் எம்.பி.குனால் கோஷ் ஆகியோர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கிறது.
#டிசம்பர்2014
மேற்குவங்க மம்தா அரசின் போக்குவரத்து அமைச்சர் மதன் மித்ரா கைது செய்யப்படுகிறார்.
#ஜனவரி2015
திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய தலைவராக இருந்த, மம்தாவின் வலதுகரமாக செயல்பட்ட முகுல்ராய் சிபிஐயால் விசாரிக்கப்படுகிறார். பின்னர் 2017ல் அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துவிட்டார்.
#மார்ச்2016
அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
#டிசம்பர்2016 ஜனவரி2017
திரிணாமுல் மக்களவை எம்.பிக்கள் தபஸ் பால், சுதிப் பந்தோ பாத்யாயா ஆகியோர் சிபிஐயால் கைது செய்யப்படுகிறார்கள்.
#ஆகஸ்ட்2017
இவ்வழக்கில் ஆதாரங்களை சமர்பிக்க உத்தரவிட்டு கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு ஆஜராக சொல்லி முதல் சம்மனை சிபிஐ அனுப்புகிறது.அதற்கு பதில் இல்லாததால் மீண்டும் சம்மன் அனுப்புகிறது.
#மார்ச்2018
கொல்கத்தா காவல் ஆணையர் ராஜுவ் குமாருக்கு மூன்றாவது சம்மன் அனுப்பப்படுகிறது. அப்போதும் ஆஜராகவில்லை.
#ஜுலை2018
ராஜீவ் குமாருக்கு எதிராக சிபிஐ உச்சநீதிமன்றத்தை அணுகுகிறது. உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றத்தை அணுக உத்தரவிடுகிறது.
#ஆகஸ்ட்2018
ராஜீவ் குமார் உட்பட 4 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விசாரிக்க அனுமதி கேட்டு மேற்குவங்க டிஜிபிக்கு சிபிஐ கடிதம் அனுப்புகிறது.
#டிசம்பர்2018
சிறப்பு புலனாய்வு குழுவின் உறுப்பினர்களான 4 பேரில் ராஜீவ் குமார் தவிர்த்து மற்ற 3 பேர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தை அணுகி, சம்மனுக்கு பிப்ரவரி 13 வரை தடை பெறுகிறார்கள். ஏன் ராஜீவ் குமார் தடைபெறவில்லை? என்பதுதான் இந்த நாடகத்தின் முக்கியமான ரகசியம்.
#பிப்ரவரி3_2019
ராஜீவ் குமாரை விசாரிக்க சிபிஐ அவரது அலுவலகம் செல்கிறது. சிபிஐக்கும் மம்தாவின் போலீசுக்கும் இடையே மோதல் நாடகம் அரங்கேறியது. கமிஷனர் வீட்டின் வெளியே மம்தா தர்ணா இருந்தார். அந்த தர்ணாவில் அரசு அதிகாரிகளான காவல்துறை ஆணையர் சட்டத்திற்கு புறம்பாக கலந்துகொண்டார்.
#பிப்ரவரி5_2019
ராஜீவ்குமாரை மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டும், அவரை கைது செய்யக்கூடாது என அறிவுறுத்தியும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நாடகத்தின் முதல் காட்சிகள் முடிந்தன!
                                                                                                                                   தொகுப்பு : வழக்கறிஞர் பிரதாபன்
------------------------------------------------------------------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?