ஒரு ஊழல் உரிமைக் குரலாகிறது....,
அப்போது சிபிஐ அதிகாரிகளை உள்ளே அனுமதிக்காத்து மட்டுமல்லாமல் அவர்களையே கைது செய்து விடுவித்துள்ளனர் மேற்கு வங்க போலீசார்.இவை அனைத்தும் மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஆணையின்படியே நடந்துள்ளது.
தி ரோஸ் வேலி ஊழல் மற்றும் சாரதாசிட்பண்ட் ஊழல் தொடர்பாக, கொல் கத்தா ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்கு, சிபிஐ அதிகாரிகள் ஞாயிறன்று அவரது இல்லத்திற்குச் சென்றனர்.
இது அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை அதிர்ச்சியடைய வைத்தது.
உண்மை காரணம் :
தி ரோஸ் வேலி ஊழல் மற்றும் சாரதாசிட்பண்ட் ஊழலில் முதல்வர் மம்தா பானர்ஜி துவங்கி, முன்னாள் டிஜிபி ராஜட்மஜூம்தார், அமைச்சராக இருந்த மதன் மித்ரா, அவரது மகன், மகள், எம்.பி. அகமத்ஹசன் உட்பட பலரும் சம்பந்தப்பட்டு இருப்பதால், காவல் துறை ஆணையர் ராஜீவ் குமார் மீதான கைது நடவடிக்கை, அடுத்ததாக தங்கள் மீதும் பாயும்என்று அச்சமடைந்த அவர், சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்த காவல்துறைக்குஉத்தரவிட்டார்.
அதடினப்படையில், சிபிஐ அதிகாரிகளை தடுத்து நிறுத்திகாவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.
மேலும், சிபிஐ அலுவலகத்தையே தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானசாரதா சிட்பண்ட் ஊழலில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, பாஜக எதிர்ப்பு என்ற போர்வைக்குள் மறைந்து கொண்டுள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, தர்ணா நாடகம் ஒன்றையும் அரங்கேற்றி வருகிறார்.
சாரதா சிட்பண்ட் ஊழலில், திரிணாமுல்மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள் ளிட்டோர், மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்திலேயே கைது செய்யப்பட்டு, வழக்கைச் சந்தித்து வருகிறார்கள் என்பதை வசதியாக அவர் மறைத்து வருகிறார்.
இந்நிலையில், மேற்கு வங்க அரசைப் பழிவாங்கும் நோக்கில் பிரதமர்மோடி இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்று குற்றம்சாட்டி மம்தா பானர்ஜி ஞாயிறன்று மாலை முதல்தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவருடன்திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும் ,ஊழல் குற்றம் சாட்டபப்ட்ட சிபிஐ விசாரணைக்குளான காவல் துறை அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
லஞ்சம்,ஊழலில் ஆட்சி செய்ப்பவர்களுடன் கைகோர்த்துள்ள காவல்துறை அதிகாரிகள் தங்களை விசாரிக்கக்கூடாது என்று மத்திய அரசையே எதிர்த்து கட்சியினருடன் போராடுவது இந்தியா முதன்முதலில் காணும் அசிங்கம்.
அதை அரசியல் கட்சியினர் வரவேற்பதும்-ஆதரவு தருவதும் தவறான முன்னுதாரணம்.
அது தமிழக குட்கா புகழ் போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கறைபடிந்த அமைச்சர்கள்,காவல் அதிகாரிகளுக்கு யோசனை சொல்வது போல் ஆகிவிடும்.
திரிணாமுல் தொண்டர்களும் கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் பதற்றமான சூழ்நிலை திட்டமிட்டு உருவாக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில், "எங்கள் போராட்டம் எந்த ஒரு நிறுவனத்துக்கு எதிரானது அல்ல, மோடி அரசின் அட்டூழியங்களுக்கு எதிரானது என்றும், ஜனநாயகம் காப்போம் என்ற தலைப்பில் நடைபெறும் இந்தப் போராட்டம் பிப்ரவரி 8ஆம் தேதி வரை தொடரும்” என்று மம்தா கூறியுள்ளார்.
இதனிடையே, மேற்கு வங்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்குப் பாதுகாப்பு வழங்க அங்கு மத்திய படைகளை அனுப்ப மத்திய அரசுதிட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகின்றது .
பொதுச் சொத்தைச் சூறையாடி யவர்கள் பாஜகவில் இருந்தாலும் சரி திரிணாமுல் காங்கிரசில் இருந்தாலும் சரி அவர்கள் மீது கிரிமினல் வழக்கு கள் தொடுக்கப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்;
அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் .
மேற்கு வங்கத்தில் எழுந்துள்ள நிகழ்ச்சிப் போக்குகள் குறித்து கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது
:2014ஆம் ஆண்டில், மேற்கு வங்கத்தில் சாரதா சீட்டு நிறுவனம்,ரோஸ் வாலி சீட்டு நிறுவனம் போன்றவை, சாமானிய மக்களிட மிருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் சூறையாடியதன் பின்னணியில் உள்ள சதி குறித்து புலன் விசாரணை செய்திடஉச்சநீதிமன்றம், மத்தியக் குற்றப் புல னாய்வுக் கழகத்தை கேட்டிருந்தது.
பாஜக, கடந்த ஐந்தாண்டு காலமாக, வாய்ச்சவடால் ஏராளமாகவே அடித் திருந்த போதிலும்கூட, இந்த விஷயத்தில் ஆழமான முறையில் நட வடிக்கை எதுவும் எடுத்திடவில்லை.
இந்தக் காலகட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகுல்ராய், ஹேமந்தஷர்மா போன்று இந்த ஊழல்களில் பிரதானமாகக் குற்றம்சாட்டப் பட்டிருந்தவர்கள் திரிணாமுல் காங்கிரசிலிருந்து, பாஜகவிற்குத் தாவிவிட்டனர்.
இப்படியாக மக்களின் பணத்தைச் சூறையாடியவர்கள் பாஜகவிலும், திரிணாமுல் காங்கிரசிலும் இருந்ததன் காரணமாக, உச்சநீதி மன்றம் கட்டளையிட்டிருந்த போதி லும்கூட, புலன் விசாரணை நத்தை வேகத்தில் நகர்ந்தது.
இந்தப் பின்னணியில்தான், இப்போது மோடி அரசாங்கம், பாஜக அல்லாத மாநில அரசாங்கங்கள் மீது நடவடிக்கை எடுப்பதும், சிபிஐ உட்பட அரசமைப்புச்சட்ட நிறுவனங்கள் மீதும் தன்னுடைய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்வதற்காக, எதேச்சதிகாரத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளது.
இதற்கு எதிராக வங்கத்தில் ஜனநாயகப் படுகொலை செய்வதில் வரலாறு படைத்திட்ட திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கமும், அதன் முதலமைச்சரும் எடுத்துள்ள நடவடிக்கை களும் அரசியல் நோக்கத்துடன் கூடியவைகளேயாகும்.
மக்களின் பணத்தை மிகப்பெரிய அளவில் சூறையாடிய கயவர்கள் மீதுகிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், அவர்களுடைய சொத்துக் கள் அரசுக்கு ஆதாயம் செய்யப்பட வேண்டும் என்றுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தியும் போராடியும் வந்திருக்கிறது.
ஆனால் நடவடிக்கை எதுவும் எடுத்திடாமல் பாஜகவும், திரிணாமுல் காங்கிரசும் நாசவேலைகளைப் புரிந்து வந்தன.
பிப்ரவரி 3 ஞாயிறன்று இடது முன்னணி சார்பாக கொல்கத்தாவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பிரிகேட் பரேட் மைதானத்தில் பிரம்மாண்டமான பேரணி நடந்து ஒருசில மணி நேரத்திற்குள் சீட்டுக் கம்பெனி ஊழல் வழக்கில் கொல்கத்தா கமிஷனரை விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் சென்றதும்,
அதை எதிர்ப்பதாக, கூறிமுதல்வர் மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தியதும் போன்ற நாடகம் நடந் திருப்பது பாஜகவிற்கும் திரிணாமுல் காங்கிரசுக்கும் எதிராக மேற்குவங்க மக்கள் திரண்டெழுந்திடாமல் தடுத்து விடலாம் என்ற எண்ணத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒரு திசைதிருப்பும் நடவடிக்கையேயாகும்.
இரண்டு கட்சிகளும் இணைந்தே இப்போராட்டத்துக்கு திரைக்கதை எழுதியிருக்கலாம் என்றே ஐயம் கொள்ளவைக்கிறது.
எதுவாக இருந்தாலும் மக்களின் பணத்தைச் சூறையாடி யவர்கள், அவர்கள் பாஜகவில் இருந்தாலும் சரி, அல்லது திரிணாமுல் காங்கிரசில் இருந்தாலும் சரி, அவர்கள் அனைவர்மீதும் கிரிமினல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, விசாரணை மேற்கொள் ளப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும்;
அவர்களின் சொத்துக்கள் அரசுக்கு ஆதாயம் செய்யப்பட வேண்டும்; மக்களிடமிருந்து சூறையாடிய பணத்தை வட்டியுடன் மீண்டும் மக்களிடம் ஒப்படைத்திட வேண்டும்.
ஏற்கனவே நடந்து வரவும் விசாரணையை தொடரவருபவர்கள் மீது கை வைத்தல் மாநில அரசு உரிமையானது.அணைத்து இந்தியாவுக்குமானதுதான் சிபிஐ,தேர்தல் ஆணையம்,உச்சநீதிமன்றம்,ரிசர்வ் வங்கி,வருமானவரித்துறை,அமுலாக்கப்பிரிவு போன்றவை.
அவைகளை மத்திய அரசு தன விருப்பத்துக்கேற்ப வலைப்பதினால்தான்,இது போன்ற கேலிக்கூத்துகள் நடக்க வாய்ப்புகளை உருவாக்குகிறது.
குற்றவாளிகள் மாநில உரிமை போர்வையில் மறைந்து கொள்ள வழிகளை உருவாக்குகிறது.
மேற்கண்ட அமைப்புகள் மோடி அரசாகட்டும்,காங்கிரசு அரசாகட்டும் தனது வழிக்கு பிறரை கொண்டுவரவும்,பழிவாங்கவும் ,பயமுறுத்தவும் பயன்படுத்தாதவரைதான் மக்களாட்சி முறைக்கே பெருமை சேர்க்கும்.
இல்லாவிட்டால் அவை எதை செய்தாலும் மக்களை ஐயத்துடன் அதை நோக்கவே செய்யும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
வழக்கின் கதை.
2013-ம் ஆண்டு சாரதா சிட்பண்ட் நிறுவனம் தொடங்கப்பட்டது.
சாரதா குழுமத்தில் 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சங்கிலி போலச் செயல்பட்டு வந்தன.
இந்த நிறுவனங்களில் சுமார் 16,000 ஊழியர்கள் பணிபுரிந்தனர். மேற்கு வங்கத்தின் முக்கிய அரசியல் புள்ளிகளின் ஆதரவு இந்த நிறுவனத்துக்கு இருந்தது.
அடுத்த ஆண்டே பல ஆயிரம் கோடி அளவுக்கு நிதிமுறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. சாரதா சிட்பண்ட் நிறுவனமும் மூடப்பட்டது. மக்களின் பணம் கோடிக்கணக்கில் சுருட்டப்பட்டதையடுத்து உச்சநீதிமன்றம் தலையிட்டது.
இதைத் தொடர்ந்து சி.பி.ஐ சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த மோசடி தொடர்பான 10 முக்கிய அம்சங்கள்…சாரதா சிட்பண்ட் மூலம் லட்சக்கணக்கான பங்குதாரரர்களின் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டது. சுமார் ரூ.4000 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாகத் தெரிகிறது. இந்நிறுவனம் 2013-ல் மூடப்பட்டது.
சாரதா நிறுவன தலைவர் சுதீப்தா சென்னுக்கும், மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. திரிணமூல் காங்கிரஸ் குணால் கோஷ், சதாப்தி ராய் ஆகியோர் நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தனர்.
மேலும் சாரதா நிறுவனத்தின் சில கிளைகளை மம்தா பானர்ஜி திறந்துவைத்தார் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
மக்களிடையே நற்பெயரைப் பெற பூஜை, கால்பந்து கிளப்புகளுக்கு லட்சக்கணக்கில் நன்கொடை என பல நிகழ்ச்சிகளுக்கு சாரதா நிறுவனம் தொகையை வாரி வழங்கியது.
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக இந்த மோசடி வழக்கை உச்ச நீதிமன்றம் சிபிஐ-க்கு மாற்றியது. தலைவர் சுதீப்தா சென், அவருக்கு நெருங்கிய தோழி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சாரதா சிட்பண்ட் ஊழலை விட ரோஸ்வேலி ஊழல் மிகப்பெரியது.
ரூ.15,000 கோடி அளவுக்கு இதில் ஊழல் நடந்துள்ளது.
சாரதா சிட்பண்ட் ஊழல் வெளியானதும், முதலீட்டாளர்கள் பயப்படவேண்டாம் என்று ரோஸ் வேலி நிறுவனம் பல பத்திரிகைகளில் மேற்கு வங்கத்தில் விளம்பரங்களை வெளியிட்டது.
அதிக முதிர்வுத் தொகை தருவதாகக் கூறி முதலீட்டாளர்கள் ரோஸ்வேலி நிறுவனம் ஏமாற்றியது என்று அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்தது.
ரோஸ்வேலி நிறுவனத் தலைவர் கவுதம் குன்டு மீது 2014-ல் அமலாக்கத்துறை எப்ஐஆர் பதிவு செய்தது. 2015-ல் கவுதம் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக திரைப்படத் தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் மோஹ்தா கைது செய்யப்பட்டார்.
சாரதா, ரோஸ்வேலி ஊழல் தொடர்பாக விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ் குமாரை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மேற்கு வங்க அரசு நியமித்தது.
ஆனால் அவர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கை கண்டுகொள்ளாமல் இழுத்தடித்ததால் எதிர்க்கட்சிகள் கோரிக்கைப்படி மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில்
இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.
இப்போது அந்த வழக்குதொடர்பான ஆவணங்களை கேட்கவும்,விசாரிக்கவும்தான் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை சந்திக்க சிபிஐ அதிகரைகள் சென்றனர்.கைது செய்யப்பட்டுள்ளனர்.
====================================================
பிப்ரவரி-05.
தென் கரோலினா மாநிலம் முதலாவதாக அமெரிக்க அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டது(1778)
மெக்சிகோ அரசியலமைப்பு தினம்(1917)
ரீடர்ஸ் டைஜஸ்ட், மாத இதழின் முதலாவது இதழ் வெளியிடப்பட்டது(1922)
ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் மாஸ்கோவில் ஆரம்பிக்கப்பட்டது(1960)
====================================================
Shabeer Sumaiya
வட நாட்டுக்காரனுக்கும் குறிப்பா சங்கிகளுக்கும் நமக்கும் ஏன் ஒட்டவே மாட்டேங்குது தெரியுமா ?
அரே ! இந்தியாவுல 2020 க்குள்ள எல்லா கிராமத்துக்கும் மின்சார இணைப்பு கொடுக்க மோடி திட்டம்...
அடேய் ! தமிழ்நாட்டுல 70 கள்லயே கலைஞர் செஞ்சு முடிச்சுட்டாரு.
அரே ! இந்தியாவுல 2020 க்குள்ள எல்லா கிராமத்துக்கும் மின்சார இணைப்பு கொடுக்க மோடி திட்டம்...
அடேய் ! தமிழ்நாட்டுல 70 கள்லயே கலைஞர் செஞ்சு முடிச்சுட்டாரு.
அரே ! அரியானாவுல அரசு மருத்துவமனையில சலுகை விலையில் மருந்து கொடுக்கப் போறாங்களாம்
தமிழ்நாட்டுல இலவசமாவே கொடுக்க ஆரம்பிச்சு 4 மாமாங்கம் ஆச்சு
அஞ்சு மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவ கல்லூரி அச்சீவ் பண்ணப் போறதா மோடி சொல்லியிருக்காரு .. பார்க்கல்லியா ?
ஸ்ப்பா ! தமிழ்நாட்டில மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி திட்டத்தை கலைஞர் கொண்டு வந்துட்டாரு. புதிதாக உருவான மாவட்டங்கள் தவிர இங்கே எல்லா மாவட்டத்திலும் ஏற்கனவே இருக்கு..
இலவச கேஸ் இணைப்பு கொடுக்க மோடி திட்டம்..
அதெல்லாம் டபுள் பர்னரோட கலைஞர் எப்பவோ குடுத்துட்டாரு..
ஓகோ ! கிராமங்கள்ல நகரம் மாதிரி வசதி கொண்டு வர ..
உனக்கு ஒண்ணு தெரியுமா ? இந்தியாவுல the most urbanised state தமிழ்நாடு தான் . இங்குள்ள ஒரு கிராமம் வடநாட்டுல உள்ள டவுனுக்கு சமம் ....
ஜி ! என்ன இருந்தாலும் நாமெல்லாம் இந்தியன் . நாம எவ்வளவு ராக்கெட் விட்டிருக்கோம் .
யப்பா ! முதல்ல வடநாட்டுல கிராமத்துக்கு பஸ் விடுங்கடா !
என்ன ஜி ! கடுப்பாவுறீங்க !
பின்ன என்னடா ! நாங்க எப்பவவாவது உனக்கு அறிவுரை சொல்லுறோமா ? மொதல்ல நீ தமிழ்நாட்டு அளவுக்கு உபி , மபி யெல்லாம் முன்னேத்திட்டு இங்க வந்து அறிவுரை சொல்லு . சரியா !
Joe Milton
தமிழ்நாட்டுல இலவசமாவே கொடுக்க ஆரம்பிச்சு 4 மாமாங்கம் ஆச்சு
அஞ்சு மாவட்டத்துக்கு ஒரு அரசு மருத்துவ கல்லூரி அச்சீவ் பண்ணப் போறதா மோடி சொல்லியிருக்காரு .. பார்க்கல்லியா ?
ஸ்ப்பா ! தமிழ்நாட்டில மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி திட்டத்தை கலைஞர் கொண்டு வந்துட்டாரு. புதிதாக உருவான மாவட்டங்கள் தவிர இங்கே எல்லா மாவட்டத்திலும் ஏற்கனவே இருக்கு..
இலவச கேஸ் இணைப்பு கொடுக்க மோடி திட்டம்..
அதெல்லாம் டபுள் பர்னரோட கலைஞர் எப்பவோ குடுத்துட்டாரு..
ஓகோ ! கிராமங்கள்ல நகரம் மாதிரி வசதி கொண்டு வர ..
உனக்கு ஒண்ணு தெரியுமா ? இந்தியாவுல the most urbanised state தமிழ்நாடு தான் . இங்குள்ள ஒரு கிராமம் வடநாட்டுல உள்ள டவுனுக்கு சமம் ....
ஜி ! என்ன இருந்தாலும் நாமெல்லாம் இந்தியன் . நாம எவ்வளவு ராக்கெட் விட்டிருக்கோம் .
யப்பா ! முதல்ல வடநாட்டுல கிராமத்துக்கு பஸ் விடுங்கடா !
என்ன ஜி ! கடுப்பாவுறீங்க !
பின்ன என்னடா ! நாங்க எப்பவவாவது உனக்கு அறிவுரை சொல்லுறோமா ? மொதல்ல நீ தமிழ்நாட்டு அளவுக்கு உபி , மபி யெல்லாம் முன்னேத்திட்டு இங்க வந்து அறிவுரை சொல்லு . சரியா !
Joe Milton
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு நாளுக்கு வெறும் 4 ரூபாய் தருவதுதான்
மாபெரும் உதவியா?
மோடி அரசாங்கம் தேர்தலுக்கு முன்பு தனது இறுதி நிதி நிலை அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
தனது பிடிக்குள் இருந்து வழுக்கிக்கொண்டு போகும் அரசியல் அதிகாரத்தை எப்படியாவது நிலைநிறுத்திக் கொள்ள கடைசி முயற்சியாக இந்த நிதி நிலை அறிக்கையை பயன்படுத்திட மோடி அரசாங்கம் முயலும் என்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான்!
இதற்கு ஏற்பவே மோடி அரசாங்கம் பல ‘ஜூம்லாக்களை’ அதாவது நிறைவேற்ற வேண்டிய அவசியமில்லை என்று முன்கூட்டி திட்டமிடப்பட்ட மோசடி அறிவிப்புகளை வெளி யிட்டுள்ளது. அதில் விவசாயிகளுக்கு தரப்படும் ஆண்டு உதவி ரூ.6000 என்பதும் ஒன்று!
இதனை ‘வரலாற்று முக்கியத்துவம்’ வாய்ந்த அறிவிப்பாக பிரதமர் மோடியிலிருந்து உள்ளூர்தமிழிசை வரை பா.ஜ.க.வினர் புகழ் பாடுகின்ற னர்.
ஆனால் இது உண்மையிலேயே விவசாயி களுக்கு பலன் அளிக்குமா?
இதற்கான நிதி ஒதுக்கீடு எங்கிருந்து வரும்?
இந்த கேள்விகளுக்கு பா.ஜ.க. பதில் தர மறுக்கிறது.
பொதுவாக பட்ஜெட் ஆலோசனைகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு ஏப்ரல் மாதத்திலிருந்துதான் அமலுக்கு வரும். ஆனால் இந்த அறிவிப்பு மட்டும் முதல் தவணை ரூ.2,000 இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தரப்படும் என கூறியுள்ளனர்.
அதாவது விவசாயிகளின் குடும்பத்திற்குதேர்தலுக்கு முன்பே ரூ.2000 தரப்படும்.
இதனை விவசாயிகளுக்கு தரப்படும் உதவி என பா.ஜ.க. சொல்லிக்கொள்ளலாம். உண்மையில் இது வாக்குகளைப் பெற தரப்படும் பணம் என்பதை அரசியல் அறிந்த அனைவரும் அறிவர். சிலஅரசியல் கட்சிகள் மக்களிடமிருந்து கொள்ளை அடித்த பணத்தில் ஒரு சிறு பகுதியை வாக்காளர் களுக்கு தருகின்றன.
பா.ஜ.க.வோ அரசாங்க கஜானாவிலிருந்து இதனை தருகிறது.
அந்த வகையில் பா.ஜ.க. ஒரு மாறுபட்ட வஞ்சகக் கட்சிதான்!
முதல் தவணை ரூ.2000 மார்ச் மாதத்திற்குள் தருவதற்கு ரூ.20,000 கோடி செலவாகும் என நிதிநிலை அறிக்கை கூறுகிறது. அப்படியானால் நடைமுறை ஆண்டில் விவசாய ஒதுக்கீட்டில் குறைந்தபட்சம் ரூ.20,000 கோடி உயர்த்தப்பட வேண்டும்.
ஆனால் அப்படி எதுவும் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.
அப்படி யானால் எங்கிருந்து இந்த தொகை வரும்?
மாநிலங்களுக்கும் சிறு வணிகர்களுக்கும் தர வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகை சுமார் ரூ.38,265 கோடி வெட்டப்பட்டுள்ளது.
இந்த தொகையிலிருந்துதான் விவசாயிகளுக்குத் தருவதற்கான நிதி எடுக்கப்படுகிறது.
பா.ஜ.க.வின் இந்த செயல் மோசடி அல்லாமல் வேறு என்ன?விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 தரப்படும்என்பது ஒரு நாளைக்கு ரூ.16.43 தான்!
அதாவது 4 பேர் கொண்ட ஒரு விவசாயி குடும்பம் எனில் நபர்ஒருவருக்கு வெறும் 4 ரூபாய்தான்!
ஒரு நபருக்குவெறும் 4 ரூபாய் கொடுத்துவிட்டு அதனை ‘வர லாற்றுச் சிறப்பு’ வாய்ந்த உதவி என மார்தட்டிக் கொள்ளும் தைரியம் மோடி அரசாங்கத்துக்கு மட்டுமே உள்ளது.
இதைவிட விவசாயிகளை அவமானப்படுத்த முடியுமா?
இந்த உதவியும் கூட கோடிக்கணக்கான குத்தகை விவசாயிகளுக்கும் விவ சாயத் தொழிலாளர்களுக்கும் கிடையாது.
சிறுநில உடமையாளர்களுக்கு அவமானமும் குத்தகைவிவசாயிகளுக்கும் விவசாய தொழிலாளர் களுக்கும் ஓரவஞ்சனையும் ஒரே நேரத்தில் மோடிஅரசாங்கம் செய்துள்ளது எனில் மிகை அல்ல!
விவசாயிகளுக்கு உடனடித் தேவை என்பது பொருத்தமான முறையில் அமலாகும் கடன் தள்ளுபடியும் அவர்களது விளைபொருட்களுக்கு நியாயமான விலையும் ஆகும்.
ஆனால் கடன் தள்ளுபடி என்பது ‘லாலி பாப்’ மிட்டாய் என கூறும் மோடியின் ஆட்சியிடமிருந்து நாம் என்ன எதிர்பார்க்க முடியும்?
விவசாயிகளின் கடன் தள்ளுபடியில் ஒரு அரசாங்கம் என்ன செய்ய முடியும் என்பதை கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கங்கள் செய்து காட்டியுள்ளன.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
"பக்கத்துல புருஷனும் இருக்கார்ங்க....,"
--------------------------------------------------------------------------------------------------------------------------------------