மகிழ்ச்சி தரும் தீர்ப்பு.


 


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர். இந்நிலையில் கடந்த 2018-ம் வருடம் மே மாதம் 22-ம் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் நூறாம் நாளை எட்டியது.

அன்று ஆலையை மூட வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி மக்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

 அமைதியாக வந்த மக்கள் மீது தமிழக போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி 13-பேர்களைக் கொன்றனர். அதைத் தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதாக அரசாணை பிறப்பித்து, அதன்படி மே மாதம் 28-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

இன்னொருபுறம் தூத்துக்குடி மக்கள் மீது அடக்குமுறையை அரசு ஏவிவிட்டது. பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 மக்கள் அதிகாரம் தோழர்கள் தென்மாவட்டங்களில் கைது செய்யப்பட்டனர். சிலர் மீது என்.எஸ்.ஏ பிரிவில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த அடக்குமுறைகளை எதிர் கொண்டு மக்கள் அதிகாரம் வென்றது. தமிழக அரசாணை பெயரளவிலானது, ஆலையை மூட நிரந்தரச் சட்டம் இயற்ற வேண்டுமென பலரும் கூறிவந்தனர்.

இந்நிலையில் தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து,  ஆலையை மீண்டும் திறக்கக்கோரி தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மனு அளித்தது. மனுவை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூவர் குழுவை அமைத்து ஆய்வுசெய்தது.

 அதில் தமிழக நீதிபதிகள் இடம்பெறக்கூடாது என சட்டவிரோதமாக முடிவு செய்தனர்.

பசுமைத் தீர்ப்பாயத்தின் விசாரணையின் போது மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டுமென விரும்புவதாக பல தில்லு முல்லு வேலைகளை வேதாந்தா நிறுவனம் செய்தது.
மறுபுறம் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு கூட்டமைப்பினர் விசாரணையில் மக்களின் ஒருமனதான கருத்தான ஆலையை மூடவேண்டும் என்பதை பல இன்னல்களுக்கு இடையில் தெரிவித்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் விசாரணை முடிவில் சில நிபந்தனைகளுடன் மூன்று வாரத்துக்குள் ஆலையைத் திறக்கலாம் என ஸ்டெர்லைட்டுக்குச் சாதகமான தீர்ப்பை வழங்கியது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.

இதை எதிர்த்து தமிழகத்திலும், தூத்துக்குடியிலும்  மக்கள் போராட்டங்கள் நடந்தன. தமிழக அரசும் மேல்முறையீடு செய்தது.

 ஸ்டெர்லைட்டுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்த பிறகும் தமிழக அரசும் அதன் அதிகாரிகளும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருவதாக நீதிபதிகள் நாரிமன் மற்றும் நவின் சின்ஹா அடங்கிய அமர்வில்ல் வேதாந்தா எதிர் புகார் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுக்களின் மீதான விசாரணை நடைபெற்று தற்போது அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
தீர்ப்பில், வேதாந்தா நிறுவனத்தின் மனுவை நிராகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க இடைக்கால தடை விதித்ததுடன், வேதாந்தா  நிறுவனம் உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆலையை திறக்கலாம் என்ற பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு ரத்து செய்யப்படும் அதேவேளையில் ஆலையை மூட உத்தரவிட்ட அரசாணை செல்லும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரமில்லை எனவும் நீதிபதிகள் கூறினர்.
இனி வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து ஆலையை திறக்குமாறு வழக்கு தாக்கல் செய்யும். அதன் பிறகு மீண்டும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என வழக்கு செல்லும்.
 தற்போது ஆலையை திறக்க முடியாது என்பது உண்மையானாலும் நிரந்தரமாக மூடுவதற்கு சட்டம் இயற்றுவதும், கொள்கை முடிவெடுப்பதுமே நிரந்தரத் தீர்வாகும்.
இதை பாஜக-வின் அடிமை அரசான எடப்பாடி அரசு ஏற்க மறுத்து வருகிறது.
  இத் தீர்ப்பையொட்டி தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
பெரும் எண்ணிக்கையிலான போலிசார் குவிக்கப்பட்டிருந்த்தனர்.
ஆலை திறக்க வேண்டுமென்ற உத்தரவு வந்திருந்தால் மக்கள் மத்தியில் சிறு அதிருப்தி கூட வெளியே வரக்கூடாது என்பதற்காகவே இந்த ‘பாதுகாப்பு’! மேலும் தூத்துக்குடியில் போலிசார் நடத்தியிருக்கும் வன்முறை, துப்பாக்கி சூடு மீதான வழக்கு பெரிய அளவில் முன்னேறவில்லை.

 துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட 13 பேர்களின் தியாகம் ஒருபோதும் வீண் போகாது என்பதையே இந்த தீர்ப்பு காட்டுகிறது. மக்களிடையே இருக்கும் எதிர்ப்புணவர்வையும், போராட்ட உறுதியையும் நீதிமன்றங்கள் உணரும் வரை நீதி நம் பக்கம் இருக்கும்.

இந்த மக்கள் பாராட்டும் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கி தமிழக மக்களை மகிழ்வில் ஆழ்த்தியிருக்கையில் 
 ஸ்டெர்லைட் தடைக்காக போராடி,பல ஆதாரங்களை தேடி தந்த முகிலன் சென்னை ரெயிலில் சென்றவர் எழும்பூர் ரெயில் நிலையத்தை விட்டு வெளியே வர நிலையிலே காணாமல் போக்கடிக்கப்பட்டுள்ளார் என்பது 
இம்மகிழ்சியை முற்றாக கொண்டாடமுடியா நிலையை உண்டாக்கியுள்ளது.

முகிலன் காணாமல் போனதற்கும் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக செயல்படும் காவல்துறைக்கும் தொடர்பு இருக்கலாம் என்றே தெரிகிறது.

 காரணம் காவல்துறை முற்றிலும் ஸ்டெர்லைட் ஏவல் துறையாக செயல்ப்டுகிறது என்பதை ஆதாரங்களுடன் மதுரை உயரநிதிமன்றக்கிளையில் முகிலன் உறுதி செய்து காவல்துறைக்கு நீதிமன்றத்திடம் குட்டு வாங்கித்த்தந்தவர்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது அனில் அகர்வால் தலைமையில் காவல்துறையினர் சுட்டுக்கொலை செய்த 14 பேர்கள் கொலை வழக்கையும் விரைவாக சிபிஐ முடிக்க வேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.



 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?