தற்கொலைப் பாதைதான்
மோடியின்..,மேக் இன்இந்தியா
மோடி, ஜெட்லி, நிர்மலா சீதாராமன் இவர்களால் அடிக்கடி அதிகம் பயன்படுத்தப்படும் மூன்று சாக்லெட் வார்த்தைகள்தான் தற்சார்பு, உள்நாட்டு உற்பத்தி, மேக் இன் இந்தியா.
பாஜகவின் அகராதியில் உள்நாட்டு உற்பத்தி என்பதன் அர்த்தம் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு கார்ப்பரேட்டுகளோடு கூட்டு சேர்ந்து பொதுத் துறை அரசுத்துறை நிறுவனங்களின் முதுகில்சவாரி செய்தவாரே உள்நாட்டில் தயாரிப்பது.
2019 ஜனவரி 20 அன்று திருச்சியில் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறைமுனையத்தை நிர்மலா அம்மையார் துவக்கி வைத்தார்.
இதன் திட்டவரைவிற்கு இந்திய தொழில் துறை, தொழில்நுட்பத்துறை மற்றும் நிதித்துறை வல்லுனர்கள் அடங்கிய குழு நியமிக்கப்படவில்லை.
மாறாக, ‘ஏர்ன்ஸ்ட் அண்ட் யங்க்’ என்ற பன்னாட்டு நிறுவனம் நியமிக்கப் பட்டுள்ளது.
இது உள்நாட்டு உற்பத்தி என்ற கோட்பாட்டிற்கு எதிரான மோடி அரசின் அவமானகரமான முடிவாகும். இந்நிறுவனம் உலகெங்கும் பெருநிறுவனங்களுக்கு ஆடிட்டிங் உள்பட ஏராளமான கார்ப்பரேட் வேலைகளை செய்து வருகிறது.
சண்டை விமானங் கள் மற்றும் மின்னணு ஆயுத உற்பத்தியில் உலகில் முதன்மை நிறுவனமான அமெரிக்காவின் ‘லாக்ஹீட் மார்ட்டின்’ நிறுவனத்தின் ஆடிட் நிதி மேலாண்மை விவகாரங்களையும் இந்த நிறுவனம் தான் கவனிக்கிறது.
இந்நிலையில் தான் ‘லாக்ஹீட் மார்ட்டின்’ நிறுவனம் 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள எப்.16 ரக சண்டை விமானங்களின் கோர்க்கும் பிரிவை இந்தியாவில் அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. (ராய்ட்டர் 21.1.2019). இந்நிறுவனம் தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை முனையத்தில் முதலீடு செய்ய விருப்பதாகவும் ஒரே சமயத்தில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த செய்திகளின் தொடர்ச்சியில் பல கேள்விகள் எழுந்துள்ளன. முதலாவதாக 2008- உலக பொருளாதார சிக்கல்களால் அமெரிக்க நிறுவனங்களின் ஆயுத விற்பனை சரிந்தது.
உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் (குறிப்பாக ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளிடம் இருந்து) கடும் போட்டிகள் உருவாகின.
அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனங்களில் 39 சதமானோர் 45 வயதிற்குட்பட்ட தொழிலாளர்கள். 1.5. சதமானோர்தான் கல்வித் தகுதியில் பட்டம் பெற்றவர்கள்.
இது மிகப் பெரிய பிரச்சனையாக அமெரிக்காவில் உருவெடுத்தது. (டிபென்ஸ்நியூஸ் 22.5.2018)
எனவே தங்கள் வருவாயை அதிகரிக்க தகுதியான, மலிவான மனிதவளம்கொண்ட வெளிநாடுகளில் தங்கள் உற்பத்திப் பிரிவுகளை துவங்க இந்த ஆயுத நிறுவனங்கள் ஏற்கனவே முடிவு செய்திருந்தன.
இந்நிலையில் தான் தனது பிரியமான கார்ப்பரேட் நாயகர்களோடு இணைந்தோ அல்லது தனித்தோ அமெரிக்க - ஐரோப்பிய நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பிரிவுகளை துவக்குவதற்கான பிளாட்டினம் வாய்ப்பை நமது டிஜிட்டல் சக்திமான் மோடிஜி ஏராளமான சலுகைகளுடன் மேக் இன் இந்தியா என்ற தங்கத் தாம்பாளத்தில் வைத்துக் கொடுக்கத் தயாராகி விட்டார்.
இரண்டாவதாக ஆண்டிற்கு 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள சர்வதேச ஆயுத விற்பனையில் குறிப்பாக சண்டை விமானங்கள் தயாரிப்புதான் மிகப்பெரும் லாபத்தை குவிக்கும் தொழிலாக இன்று உள்ளது.
இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட நான்காம் (4+) தலைமுறை சண்டை விமானத்திற்கான தேவையும் அதற்கான அழுத்தமும் மிகப்பெரும் அளவில் உள்ளதால் லாக்ஹீட் மார்ட்டின், சாப், போயிங், டசால்ட்ஈரோபைட்டர் போன்ற அமெரிக்க - ஐரோப்பியநிறுவனங்கள் மேக் இன் இந்தியா மூலம் இந்தியாவிற்குள் நுழைவதற்கு காத்திருக்கின்றன.
தங்களுக்குள் போட்டி யிருந்தாலும் பாரம்பரியமான ரஷ்ய - இந்திய வர்த்தக பரிவர்த்தனைகளை துண்டித்து மேக் இன் இந்தியாவையும் பாதுகாப்பு உற்பத்திமுனையங்களையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வதில் இந்த அமெரிக்க - ஐரோப்பிய நிறுவனங்கள் குறியாக உள்ளன.
இந்நிலையில்தான் எர்ன்ஸ்ட் அண்ட் யங் பன்னாட்டு நிறுவனம் தற்காப்பு தொழில்துறை முனையத்தின் திட்டத்தை உருவாக்கித்தரும் வாய்ப்பை பெற்றுள்ளது.
இந்தியாவின் மாபெரும் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் தயாரித்த 4-ஆம் தலைமுறை தேஜஸ் சண்டைவிமானம் இந்திய சுயசார்பை நோக்கிய ஒருமைல்கல் எனலாம். சிக்கலான நேரங்களில் நொடிக்குள் தேவைப்படும் நிகழ்நேர இயக்க முறைமை மற்றும் அதன் மென்பொருள் கட்டமைப்புடன் எச்ஏஎல் தயாரித்த ஹாவ்க்-ஐ சண்டை பயிற்சி விமானம், மிக அதிக உயரத்தில் பறந்தவாறே ராக்கெட் தாக்குதல் சோதனையில் வெற்றி பெற்ற ஹெலிகாப்டர் என போட்டிகள்- துரோகங்களுக்கு மத்தியிலும் கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும் எச்ஏஎல் சாதனைகளை தொடர்ந்தவாறு உள்ளது.
ஆனால் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா எச்ஏஎல் நிறுவனத்தின் திறன் குறித்து திட்டமிட்டே சிறுமைப்படுத்தும் தகவல்களை வெளிப்படையாக தொடர்ந்து கூறி வருகிறார். இந்திய விமானப்படை பணப்பட்டு வாடா பிரச்சனைகள் குறித்து டைம்ஸ் ஆப்இந்தியா (28.1.2019)நிருபர் சண்முக சுந்தரத்தின் கேள்விக்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.
‘‘பணம் வழங்குவதில் இந்திய விமானப்படை தாமதம் செய்வதாக எச்ஏஎல் கூறுகிறது. எச்ஏஎல்- தாமதமாக டெலிவரி செய்வதாக விமானப்படை கூறுகிறது.
விமானப்படை அடிக்கடி தனது தர நிலையை மாற்றுகிறது; எனவே டெலிவரியில் தாமதம் ஏற்படுகிறது என எச்ஏஎல் கூறுகிறது.
டெலிவரி செய்வதில் ஆண்டுக்கணக்கில் தாமதமானால் காலாவதியானதை வாங்க வேண்டியகட்டாயமும் ஏற்படுகிறது என விமானப்படை கூறுகிறது’’ - நிர்மலா அம்மையாரின் பதில்இது தான்.
ஒருசில முத்தரப்பு அமர்வுகளில் நான்கு சுவர்களுக்குள் பேசித் தீர்க்கப் படவேண்டிய தனது துறைப்பிரச்சனையை உலகம் முழுவதும் சென்றடையும் ஒரு பேட்டியில் பகிரங்கமாக தெரிவிக்கும் பாது காப்பு அமைச்சரின் இந்த பதில் கூறும் முறை சுதந்திர இந்தியாவின் 25 பாதுகாப்பு அமைச்சர்களிடம் கேட்டிராத ஒன்றாகும்.
டிஆர்டிஓ, விமானவியல் மேம்பாட்டு முகமை, எச்ஏஎல் ஆகிய மூன்று அரசு நிறுவனங்கள் இணைந்து நவீன விமான மின்னணுவியல் மற்றும் அதன் மென்பொருள் திட்டங்கள் ஏர் பிரேம் மற்றும் காவிரி எஞ்சின் திட்டத்துடன் கூடிய 5-ஆம் தலைமுறை நவீன சண்டை விமானத்திட்டத்தின் தயாரிப்பு சாத்தியக்கூறு அறிக்கை, 2012இல் இந்திய விமானப்படையிடம் அளிக்கப்பட்டது.
இந்த செய்தி பிரமிப்புடன் உலகெங்கும் பரவியது.2013 பெங்களூரு ஏரோ இந்தியா கண்காட்சியில் விமானப்படையின் பெங்களூரு பயிற்சி தலைமையிட அதிகாரிஒருவர் மற்றவர்களால் உருவாக்கப்பட்ட சண்டை விமானங்களை வாங்குபவர் களாகவே தொடர்ந்து நாம் இருக்க முடியாது;இதுபோன்ற திட்டங்களால் சொந்த தொழில்நுட்ப களங்களை அபிவிருத்தி செய்வது கட்டாயம் எனக் கூறினார். (ஏவியேஷன் வீக்4.3.2013)
இத்திட்டத்திற்காக ரூ.9060 கோடி ஒதுக்கிடுமாறு மத்திய அரசை மேம்பாட்டு முகமை கோரியிருந்தது.
26.5.2014-இல் மோடி பிரதமரானார்.
25.9.2014 இல் அவரது கார்ப்பரேட் கனவான மேக் இன்இந்தியா வந்தது.
5ஆம் தலைமுறை சண்டை விமானத்தின் 2010-2013 ஆண்டுகளில் வரையப்பட்ட முற்றிலும் சுயமான மூல உள்நாட்டுத் திட்டம் கேள்விக்குறியானது.
பெங்களூருக்கு வெளியே முதன் முறையாக கோவை சூலூரில் 5-ஆம் தலைமுறை சண்டை விமானம் தயாரிப்பில் தனியார் நிறுவனங்களும் இணைந்து கொள்ள வேண்டும் என விமானவியல் மேம்பாட்டு முகமையின் திட்ட இயக்குநர் தியோதர் முதன்முறையாக கூறினார்.
மேக் இன் இந்தியா திட்டத்தில் இத்திட்டம் அமையும் என பாது காப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. (எக்கானமிக் டைம்ஸ் 18.5.2018).
2013ஆம் ஆண்டில் மூன்று இந்திய பொதுத்துறை நிறுவன பொறியாளர்கள், விஞ்ஞானிகளால் இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு பெங்களூரு எச்ஏஎல் நிறுவனத்தால் தயாரிக்கப்படவிருந்த முற்றிலும் உள்நாட்டு திட்டத்தின் இந்திய பொறியியல் அனுபவம் உயர் உணர் தொழில்நுட்ப வளர்ச்சி தடைபட்டுள்ளதும் மேக் இன் இந்தியா சிங்கத்தால் மெல்ல விழுங்கப்பட்டு வருவதும் அப்போது தான் தெரியவந்தது.
பல பில்லியன் மடங்கு டாலர் இந்தியச் செல்வம் இனி அந்நிய நிறுவனங்களுக்கு உற்பத்தி லாபமாகவும் ராயல்ட்டியாகவும் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு வழிவகுக்கும் மேக் இன் இந்தியா முழுமையான உள்நாட்டு தயாரிப்பும் அல்ல; சுயசார்பை நோக்கிய பாதையுமல்ல.
இந்திய பாதுகாப்பின் தொழில்நுட்பத் துறையின் தற்கொலைப் பாதையாகும்.
- சுஜித் அச்சுக்குட்டன்
கேவலமான அரசியல் செய்வது யார்?
உயிர்நீத்த
ராணுவத்தினரின் ரத்தத்தை குடிக்கும் ஓநாய்கள் தான் இந்த பாஜகவினர் என்பது மீண்டும் உண்மையாகிறது.
தீவிரவாதிகளின் தாக்குதலால் உயிரிழந்த இராணுவத்தினரின் ரத்தம்
காய்வதற்குள், ஓட்டுப் பிச்சை கேட்கிறது பாஜக
கடந்த 5 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருப்பது பிஜேபி மோடி தான்..
காஷ்மீர் மாநிலத்திலும் நேரடியான குடியரசுத்தலைவர் ஆட்சி தான்..
அப்படியானால் யாருடைய ஆட்சியில் ராணுவ வீரர்களுக்கு பாதுகாப்பு இல்லை??
இந்த ஆட்சி காலத்திலேயே இராணுவ வீரர்களை பாதுகாக்க முடியாதவர்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு இன்னும் ஆட்சி வேண்டும் என கேட்கிறார்கள்??
====================================================
இன்று,
பிப்ரவரி-16.
ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.(1934)
வொலஸ் கரோத்தேர்ஸ் நைலோனுக்கான காப்புரிமம் பெற்றார் (1937)
இந்திய திரைப்பட முன்னோடி தாதாசாஹெப் பால்கே மரணம் ( 1944)
இரண்டாம் உலகப் போர். அமெரிக்கப் போர் விமானம் டோக்கியோவைத் தாக்கியது.(1945)
மரண தண்டனையை ஒழிக்கும் சட்டத்தைப் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் நிறைவேற்றியது.(1956)
தோழர் பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் புதிய தலைவரானார்.(1959)
எக்ஸ்புளோரர் 9 (S-56a) விண்ணுக்கு ஏவப்பட்டது.(1961)