எப்படி சாத்தியம்?


30,000/-கோடிகள் கடனை
வெறும்  5,000/- கோடிகளில் அடைப்பது 
எப்படி சாத்தியம்?-1
'Alok textiles' ன்ற கம்பெனிக்கு பதினைஞ்சி பேங்க் சேந்து 30 ஆயிரம் கோடி ரூபா கடன் கொடுக்குறாங்க.

30 ஆயிரம் கோடி ரூபா கடன வாங்கிட்டு கம்பெனிக்காரனுங்க வட்டியும் கட்டாம,அசலும் கட்டாம ஏமாத்திட்டு இருக்கானுங்க.
இதனால செம காண்டான நம்ம பேங்க் ஆட்கள், டேய் வாங்குன கடனுக்கு வட்டி கட்டாம ஏமாத்துறீங்களே நீங்கெல்லாம் உருப்படுவீங்களடானு கேட்டதுக்கு,
தோ பாருங்க சார் கம்பெனி நட்டமாயிடுச்சி, வட்டியெல்லாம் கட்ட முடியாது ,உன்னால முடிஞ்சது பாத்துக்கோனு அசிங்கப்படுத்தி அனுப்பிட்றானுங்க.


ரொம்ப டென்சன் ஆன நம்ம பேங்க்காரங்க, நேரா NCLT ன்ற தீர்ப்பாயத்துக்கிட்ட போயி கடன வாங்கிட்டு திருப்பி கட்டாம ஏமாத்தினு இருக்கானுங்கயானு பிராது கொடுக்குறாங்க...

அந்த பிராத பாத்துட்டு செம டென்சனான NCLT, அந்த கம்பெனிக்காரனுங்கள கூப்பிட்டு, யோவ் கடனை கட்ட முடியுமா முடியாதானு கேக்குறாங்க, அவனுங்க ஏய் ச்சீ ப்பே கட்ட முடியாதுனு சொல்லி NCLT யையும் அசிங்கப்படுத்துறானுங்க.

வேற‌ வழி இல்லாம NCLT யும்,அதான் இவ்வளோ அடக்கமா நட்டமாயிடுச்சி, கடன கட்டமுடியாதுனு சொல்றானேப்பா,அவன் என்ன வச்சிக்கிட்டா இல்லனு சொல்றான்.
நம்ம வேணும்னா இந்த கம்பெனிய திவால்னு அறிவிச்சு ஏலம் விடலாம், ஏலத்துல வர்ற காச வச்சி கடன கட்டிடலாம்னு ஒரு மாஸ்டர் ப்ளான் போட்றாங்க.

அதே மாதிரி மறுநாள் ஏலத்த நடத்துறாங்க, அந்த ஏலத்துல இந்தியாவோட பரம ஏழை அம்பானி அந்த 30 ஆயிரம் கோடி‌ கடன,5000 கோடிக்கு வாங்கிக்கிறேன்னு பெருந்தன்மையா சொல்றாரு.

NCLT ஆபிசர் எல்லா பேங்க் ஆட்களையும் கூப்ட்டு ,என்னப்பா 5000 கோடிக்கு கொடுத்துடலாமானு ஓட்டெடுப்பு நடத்துறாரு. ஓட்டுப்பதிவுல குறைஞ்சது 75 சதவீதம் ஆதரவு இருந்தாதான் ஜெயிக்க முடியும்.ஆனா கிடைக்கிறது என்னமோ 72 சதவீத ஆதரவுதான்.

அதானால அம்பானி வெறும் கையோட வீட்டுக்கு போய்ட்றாரு.

வீட்டுக்கு போன நம்ம பரம ஏழை, நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லுனு கத்திக்கிட்டே நம்ம ஏழைத்தாயோட மகனுக்கு கால் பண்ணி, நீதி செத்துப்போச்சி,நியாயம் புதைஞ்சி போச்சினு அழுவுறாரு.

இதக்கேட்டு இரத்தக்கண்ணீர் வடிச்ச நம்ம ஏழைத்தாயின் மகன், உடனே...அந்த NCLT ஆபிசர்க்கு ஃபோன் பண்ணி, யோவ் 75 சதவீத ஆதரவெல்லாம் தேவையில்லை 66 சதவீதமே போதும்னு ரூல்ஸ மாத்துயானு சொல்லி கோவமா சொல்றாரு.

மறுநாள் நம்ம பரம ஏழை அம்பானி NCLT ஆபிசர் கிட்ட போயி,அதான் 66 சதவீதம்னு மாத்தியாச்சுல,குடுயா கம்பெனியனு 5000 கோடிக்கு அந்தக்கம்பெனிய வாங்கிட்றாரு.

5000 கோடிய பதினஞ்சு பேங்க்கும் சண்ட போடாம பிரிச்சி எடுத்துக்கோங்க...25000 கோடிய ரூபாய காந்தி கணக்குல எழுதுங்கனு நம்ம NCLT ஆபிசர் கடைய சாத்திட்றாரு.
இதுல ட்விஸ்ட் என்னனா ...30ஆயிரம் கோடி கடன் வாங்குனவனும் ஒரே ஆள்தான், 5000 கோடி கொடுத்து அந்த கடன அடைச்சவனும் ஒரே ஆள்தான்.அவன் அம்பானிதான்.

ஆகமொத்தம் 25000 கோடி மக்கள் பணம் ..அவுட்டூ.
                                  ஊழல் நடந்தால் கடும் தண்டனை என்ற விதியையே நீக்கிய யோக்கியர்கள்.

 
எப்படி சாத்தியம்?                -2
வருகிற 2030ஆம் ஆண்டுக்குள் உலகின் இரண்டாவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்று கிரேட்டர் நொய்டாவில் ‘பெட்ரோடெக் 2019’ நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
‘‘சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் இந்திய வளர்ச்சி குறித்த தங்களது மதிப்பீடுகளில் இந்திய வளர்ச்சி வரும் ஆண்டுகளில் சிறப்பாகஇருக்கும் என்று தெரிவித்துள்ளன. உலகப் பொருளாதாரம் நிலையற்ற சூழலில் இருக்கும்நிலையிலும் இந்தியா நிலையான வளர்ச்சியைக் கொண்டிருக்கிறது.
 தற்போதைய நிலையில் உலகின் மிக வேகமாக வளரும் மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா திகழ்வதோடு, உலகின் ஆறாவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்தது. சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி 2030ஆம்ஆண்டுக்குள் இந்தியா இரண்டாவது இடத்துக்கு முன்னேறிவிடும். முதல் இடத்தில் சீனாவும்,இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும் தற்போது இருக்கின்றன’’ என்று அடுக்கியுள்ளார் மோடி.

பிரதமர் மோடி பேசி வாயை மூடவில்லை; உலகப் பட்டினி அட்டவணையில் அங்கம் வகிக்கும் 119 நாடுகளில் இந்தியா 103ஆவது இடத்தில் இருக்கிறது என்று, மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது உறுப்பினர் ஒருவர் கூறிய வார்த்தைகள் நாடாளுமன்ற சுவர்களில் மோதி எதிரொலித்தன.

உலகப் பட்டினி அட்டவணை என்பது குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைவு; போதிய அளவிற்கு தன்னுடைய உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமல் குறைந்த எடையுடன் காணப்படுதல்; போதிய வளர்ச்சியின்றி காணப்படுதல்; குழந்தை இறப்பு ஆகியவற்றைக் கொண்டு அளவிடப்படுகிறது.

இந்தியாவில் குழந்தைகள் தங்கள் உயரத்திற்கேற்ற எடையின்றி குறைவாக இருப்பவர்கள் 21சதவீதமாகும். சென்ற ஆண்டைக்காட்டிலும் இப்போது இது அதிகமாகும். சென்ற ஆண்டு இது 17.1 சதவீதமாக இருந்தது. இப்போது21 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.

அதேபோன்று ஊட்டச்சத்துக் குறைவால் போதிய எடை இல்லாமல் இருக்கும் குழந்தைகளும் இந்தியாவில் அதிகம். 2018ஆம் ஆண்டு உலக ஊட்டச்சத்து அறிக்கையின்படி இந்தியாவில் 4 கோடியே 66 லட்சம் குழந்தைகள் நலிந்த நிலையில் இருக்கின்றனர்.

 அதேபோன்று நாட்டின் உணவுப்பாதுகாப்பு நிலைமையும் மிகவும் மோசமாக இருக்கிறது.அவையில் இந்த விவரங்களைத் தெரிவித்தவர்திரிணாமுல் உறுப்பினர் தினேஷ் திரிவேதி.

அவர் பேசி முடித்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஜிதேந்திர சவுத்ரி, மத்திய அரசின் துறைகளில் மட்டும் 24 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன; அதே வேளையில் இளைஞர்களின் வேலையின்மை அதிகபட்சமாக 13.6 சதவீதமாக அதிகரித்துள்ளது என்ற விபரத்தை சுட்டிக்காட்டினார்.

இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள், நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் எதிரொலித்த வண்ணம் இருக்கின்றன.

 இதற்கெல்லாம் பதில் சொல்லாமல் எப்படி இந்தியா இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாறுவது எப்படி சாத்தியம்?

===================================================

ன்று,
பிப்ரவரி-12.

உலக  வானொலி தினம்


ஸ்பெயின், போர்ச்சுக்கலை தனிநாடாக அங்கீகரித்தது(1668)



 சரோஜினி நாயுடு பிறந்த தினம்(1879)


பிரான்ஸ் தனது முதலாவது அணுகுண்டை சோதித்தது(1960)
=================================================
 ஒரு லட்சம் பேருக்கு!
நிலம் கிடைத்தது!!
பல்லாண்டுகாலமாக காத்திருந்து சலித்துப்போன லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு, ஆட்சிப்பொறுப்புக்கு வந்த ஆயிரம் நாட்களுக்குள் பட்டா வழங்கியுள்ளது கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு.

கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு அனைத்து கட்டுப்பாடுகளையும் விலக்கி 1,02,681 நபர்களுக்கு பட்டா வழங்கியுள்ளது.
மேலும் 3,000 பேருக்கு உடனடியாக பட்டாக்கள் வழங்கப்பட உள்ளன.

ஆட்சிப் பொறுப்பேற்று ஆயிரம் நாள் கொண்டாட்டத்தின் பகுதியாக தகுதியுள்ள அனைவருக்கும் பட்டா வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து அனைத்து மாவட்டங்களிலும் வருவாய்த்துறை அலுவலர் களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதோடு அரசு நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கவும் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பல்வேறு இடங்களில் தனியார் மற்றும் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பிலிருந்த 203 ஹெக்டேர் அரசு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
 திருச்சூர் மாவட்டத்தில் மிக அதிக அளவாக 30,123 பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இடுக்கியில் 20354 பட்டாக்கள், மலப்புறம் 16, 400 என பட்டியல் நீள்கிறது.

முன்னதாக காங்கிரஸ் தலைமையிலான உம்மன்சாண்டியின் யுடிஎப் அரசு வழங்கிய பல பட்டாக்கள் எவ்வித ஆய்வுக்கும் உட்படுத்தப்படாமல் வசதி படைத்தவர்களுக்கு தான்தோன்றித்தனமாக வழங்கப்பட்டது என புகார் எழுந்தது.
பலரும் தங்களது நிலத்தை தேடி வருகிறார்கள்.
 எல்டிஎப் அரசின் துவக்க மாதங்களில் இதுகுறித்த விசாரணையில் காலவிரயம் ஆனது. மிகவும் தாமதமாகவே பட்டா வழங்கும் நடவடிக்கைக்கு செல்ல முடிந்தது.
தகுதியுள்ள அனைவருக்கும் பட்டா வழங்கப்படும் என இடது ஜனநாயக முன்னணி தனது தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்திருந்தது.
 அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் நிலச் சீர்திருத்த துணை ஆட்சியர்களிடம் பட்டா வழங்குவதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஆவணங்கள் சரிபார்ப்பதற்கான அதாலத்துகள் (சிறப்பு முகாம்) நடத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து பட்டாக்கள் வழங்கும் விழாக்கள் நடந்தன.

 அதோடு இதர மனுக்கள் மீதும் உடனுக்குடன் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன.
முதல்வர் பினராயி விஜயனும் வருவாய்த்துறை அமைச்சர் இ.சந்திரசேகரனும் இப்பணிகளை நேரடியாக கண்காணித்து வருகின்றனர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
வங்கிகளில் பணம் டெபாசிட் ஆவது குறைந்தது.
கடந்த 2016 நவம்பர் 8-ஆம் தேதி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையைக் கொண்டுவந்து, 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக் களை செல்லாது என்று அறிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இதன்மூலம் கறுப்புப் பணம்,கள்ளப் பணம் ஒழியும் என்றார்.

 ரொக்கப் பரிவர்த்தனை குறைந்து, டிஜிட்டல் பரிவர்த்தனையும் அதிகரிக்கும் என்றார்.
ஆனால், பணமதிப்பு நீக்கத்தின் போது செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ. 15 லட்சத்து 41 ஆயிரம் கோடி மதிப்பிலான நோட்டுக்களில் 99.3 சதவிகிதம்-

அதாவது ரூ. 15 லட்சத்து 31 ஆயிரம் கோடி அளவிற் கான பணம் வங்கிக்கு திரும்பிவிட்டன.

 பணமதிப்பு நீக்கத்தைத் தொடர்ந்து, ரூ. 5 லட்சம் கோடி கறுப்புப் பணம், வங்கிக்கு வராது என்று மோடி கூறியிருந்தார்.
ஆனால்,வெறும் ரூ. 10 ஆயிரத்து 700 கோடி மட்டுமேவங்கி முறைக்குத் திரும்பி வரவில்லை.

தற்போது ரொக்கப் பணப்புழக்கமும் நாட்டில் அதிகரித்துள்ளது.
இந்தியாவில், பணமதிப்பு நீக்க நடவடிக்கை கொண்டுவரப்பட்ட போது, பணப்புழக்கம் 17 லட்சத்து97 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது.

இது2019 ஜனவரி 18-ஆம் தேதி 20 லட்சத்து 65 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வங்கி அமைப்புக்களும் அதனை ஒப்புக் கொண்டுள்ளன. மேலும், வங்கிக் கணக்குகளிலிருந்து எடுக்கப்படும் பணம் மறுபடியும்டெபாசிட் ஆவதில்லை; அவை புழக்கத்திலேயே உள்ளன.

 ஜனவரி மாதம்பணம் எடுக்கும் விகிதம் 8.2 சதவிகிதமாக இருந்த நிலையில் டெபாசிட் விகிதம் 4.9 சதவிகிதமாக குறைந்துள்ளது என்று வங்கிகள் தெரிவித்துள்ளன.-------------------------------------------------------------------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?