“போ மோனே மோடி”


தமிழ்நாடு ஆரம்பித்து வைத்தது.
அண்மைக் காலமாக பிரதமர் நரேந்திரமோடி செல்லும்மாநிலங்களில் எல்லாம் அவருக்கு எதிராக பொதுமக்கள் கறுப்புக் கொடி காட்டி போராட்டங் களை நடத்தி வருகிறார்கள்.
#மோடியே திரும்பிப் போ(Go BackModi )முழக்கங்களை எழுப்பியும் சமூக வலைத்தளங்களில் இடுகை
இது ஆந்திரா
மோடி தமிழகத்திற்கு வரும்போதெல்லாம்#மோடியே திரும்பிப் போ(Go BackModi ) என்ற முழக்கம் சமூகவலைத் தளங்களில் உலக அளவில் ட்ரெண்ட்ஆவது வாடிக்கையாகி விட்டது.
சாலைமார்க்கமாக வந்தால், கறுப்புக் கொடி காட்டுவார்கள் என்று பயந்து, ஹெலிகாப்டரில் ஏறினாலும், கறுப்புப் பலூன் களை பறக்கவிட்டு, ‘மோடியே திரும்பிப் போ’ என்றார்கள் தமிழக மக்கள்.

 சென்னை ஐஐடி-க்கு,ஒரு பிரதமர் பின்வாசல் வழியாகசென்ற பெருமையும் மோடிக்கே கிடைத்தது.நீட் திணிப்பு, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம், மேகதாது அணைத் திட்டம், ஸ்டெர்லைட் அனுமதி ஆகியவற்றில் மோடி அரசு செய்த துரோகத்திற்குஇந்த வகையில் தமிழக மக்கள் பதிலடி கொடுத்தனர்.
கேரளம் சென்றபோதும் இதுதான் நிலைமை. “போ மோனே மோடி” என்றனர் கேரள மக்கள்.

 கேரள பழங்குடியின மக்களை, சோமாலியா நாட்டு மக்களுடன் ஒப்பிட்டதற்காகவும், மகாபலியை இழிவுபடுத்தியதற்காகவும் ‘போ மோனே மோடி’ என கேரளாவெங்கும் எதிரொலித்தது.

அந்த வரிசையில் தற்போதுஅசாம் மாநிலமும் இடம்பிடித் துள்ளது.

ஆப்கானிஸ்தான், பாகிஸ் தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து வந்த இந்து, சீக்கியர், பவுத்தர், சமணர், பார்சி, கிறிஸ்தவர் ஆகியோர் 6 ஆண்டுகள் இந்தியாவில் குடியிருந்தால் அவர்களுக்குக் குடியுரிமை வழங்கும் வகையில் 1955ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட் டத்தில், திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அசாம், மேகாலயா, மிசோரம், மணிப்பூர், திரிபுரா, நாகாலாந்து உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங் கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இது நேற்றைய அசாம் தரமான சம்பவம்


இப்பிரச்சனையில், அசாம் கணபரிஷத், பாஜக கூட்டணியை விட்டே வெளியேறி விட்டது.
மேகாலயாவின் ஆளும் கட்சியான தேசிய மக்கள்கட்சி, பாஜக-வுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில்தான், 2 நாள் சுற்றுப்பயணமாக அசாம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக, தலைநகர் கவுகாத்தியில் அம்மாநில மாணவர்கள் கறுப்புக் கொடி காட்டி, தமிழ்நாடு, கேரள மாநிலங்களைப் போலவே ‘மோடியேதிரும்பி போ’ என்று முழக்கமிட் டுள்ளனர்.

மோடியின் விமானம் கவுகாத்தியில் தரையிறங்கியது துவங்கி, ஆளுநர் மாளிகைக்கு செல்வதற்குள், கவுகாத்தி பல்கலைக்கழக வாயில் பகுதி மற்றும் எம்.ஜி. சாலை பகுதி என மொத்தம் நான்கு வெவ்வேறு இடங்களில் மாணவர்கள் கறுப்புக் கொடிகளை காட்டியுள்ளனர்.
சனிக்கிழமையன்று இரண்டாவது நாளாகவும், அவர்கள் கவுகாத்தியில் உசான் கடைவீதியில் மகாத்மா காந்தி சாலை, அசாம் மாணவர் சங்க தலைமையகம் வழியாக பிரதமர் செல்லும்போது கறுப்புக்கொடியுடன் துரத்தியுள்ளனர்.வழக்கமாக தென்மாநிலங்களில்தான் ‘கோ பேக் மோடி’  ஒலிப்பது வாடிக்கை.

தற்போது அது வடகிழக்கு மாநிலங்களுக்கும் பரவியிருப்பது, பாஜக தலைமையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதனிடையே பிரதமர் மோடி,ஞாயிறன்று தமிழ்நாட்டில் திருப்பூர் நகருக்கும், கர்நாடகத்தில் ஹூப்ளிக்கும், ஆந்திராவின் குண்டூருக்கும் பயணப்படுகிறார்.
 தமிழகத்தின் வரவேற்பு எப்படியிருக்கும் என்பது ஏற்கெனவே தெரிந்ததுதான்.

கர்நாடகா இனிமேல்தான் தெரியும்.

 ஆனால், ஆந்திராவில், “பலத்த வரவேற்பை” கொடுப்பதற்காக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவே, “ஏற்பாடுகளுடன்” காத்திருக்கிறார்.

 எப்படிப் பார்த் தாலும் ‘மோடியே திரும்பிப் போ’முழக்கம் ‘பிப்ரவரி 10’இல் மீண்டும் டிரெண்ட் ஆகும் என்பது மட்டும் உறுதி.


                         மோடியை வரவேற்க கருப்புச்சட்டையுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
ரூ.100 கோடிக்கு மேல் வருவாய் காட்டுவோர் வெறும் 61 பேர்கள் மட்டுமே.
2017-18 வரி செலுத்தும் ஆண் டில், வெறும் 61 பேர் மட்டுமே ரூ. 100 கோடிக்கு மேலான வருமானக் கணக்கு காட்டியுள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டிகொண்டுவந்ததன் மூலம் சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனைகள், வரி ஏய்ப்பு ஆகியவற்றை பிரதமர் மோடி ஒழித்து விட்டார் என்று பாஜக-வினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

“இந்நிலையில், ரூ. 100 கோடிக்குமேல் ஆண்டு வருமானம் கொண்டவர்கள் தங்களது வருவாய் விவரங்களை வருமான வரித் துறையிடம் ரிட்டன் தாக்கலில் தெரிவிக்கவேண்டும்; அந்த வகையில், வெறும்61 தனிநபர்கள் மட்டுமே 2017-18 வரி செலுத்தும் ஆண்டில் ரூ. 100 கோடிக்கு மேல் ஆண்டு வருவாய் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளனர்” என்று பொன். ராதாகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்துள்ளார்.

100 கோடி ரூபாய் வருவாய் காட்டுவோரின் எண்ணிக்கை, 2014-15இல் ஆண்டில் 24 ஆகவும், 2016-17இல் 38 ஆகவும் இருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

130 கோடி பேர்களைக் கொண்ட நாட்டில், 61 பேர் மட்டுமே ரூ. 100 கோடிக்கு வருவாய் கணக்கு காட்டுகிறார்கள் என்று அமைச்சர் கூறியிருப்பது, பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி-க்குப் பிறகும் இந்த எண்ணிக்கை பெரியளவில் உயரவில்லை என்பதையே தெளிவாக்கி இருக்கிறது.
====================================================

இன்று,
பிப்ரவரி-10.


பிரான்ஸ், க்யூபெக் மாநிலத்தை யூ.கே.,விற்கு அளித்தது(1763)


அலெக்சன் கிரேன், தீயணைப்பு கருவியின் காப்புரிமம் பெற்றார்(1863)



மடகஸ்கரில் மதச் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது(1897)

 
புதுடில்லி, இந்தியாவின் தலைநகராக்கப்பட்டது(1931)

கலைஞர் கருணாநிதி தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதன்றை பதவியேற்றார்.(1969)                              

====================================================
 மோடியின் பொய்களை உணரும் காலம்,
-நம்ப வைத்து ஏமாற்றியவர் எந்த முகத்தோடு வருகிறார்?

“இப்படி ஒருவரை இதுவரை நாங்கள்பார்த்ததில்லை, அவர் ஒரு தீர்க்கதரிசி, அவரை எல்லோரும் ஆதரிக்க வேண்டும்!”என்று 2014ஆம் ஆண்டு திருப்பூர் புத்தகத் திருவிழா மேடையில் வெளிப்படையாக மோடியைப் புகழ்ந்து பேசி ஆதரவு கோரினார் ராஜா எம்.சண்முகம்.
அப்போது மோடிபிரதமர் கிடையாது, பிரதமர் பதவிக்காக முன்னிறுத்தப்பட்டிருந்தவர் மட்டுமே!


பொருத்தமில்லாத மேடையில் தவிர்க்க வேண்டிய வாசகங்களை ஆர்வத்துடன் உற்சாகமாக உதிர்த்தவர் அப்போது திருப்பூரில் “மாற்றத்துக்கான அணியின்” தலைவராக வலம் வந்து கொண்டிருந்தார்.பின்னர் மோடி பிரதமரானார், இவர்திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவரானார்!

இப்போது இருவரும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய இடத்தில்தான் இருக்கிறார்கள்.
ஆனால் திருப்பூரோ கேள்வி கேட்கக்கூட தெம்பில்லாமல் நிலைகுலைந்து போய் நிற்கிறது.திருப்பூரில் ஏற்றுமதி, உள்நாட்டு வர்த்தகம் என ரூ.35 ஆயிரம் கோடிஅளவுக்கு உற்பத்தி நடைபெறுகிறது.
இத்தொழில் சந்திக்கும் பிரச்சனைகளுக்குத்தீர்வு காண வேண்டும் என தொழில் துறையினர் 2013 செப்டம்பரில் திருச்சிக்குச் சென்றுமோடியை சந்தித்து மனுக் கொடுத்தனர்.

இதை கேட்ட மோடி, “2020ஆம் ஆண்டுக் குள் திருப்பூர் வர்த்தகத்தை ரூ.1 லட்சம்கோடியாக உயர்த்துவதற்குத் தேவையான விசயங்களை, செய்ய வேண்டிய பணிகளைப் பட்டியல் போட்டுக் கொடுங்கள்! என்று கூறியிருக்கிறார். அந்த வார்த்தைகளைத்தான் தீர்க்கதரிசனம் என்று வர்ணித்து ஏற்றுமதியாளர்கள் புளகாங்கிதம் அடைந்தனர்.


பின்னோக்கிச் செல்லும் பின்னலாடை
இந்த ஐந்தாண்டு காலத்தில் அனுபவம் என்ன?
இதை மற்றவர்கள் சொல்வதை விடநேரடியாக அனுபவப்பட்ட திருப்பூர் தொழில்துறையினர் சொல்வதே சரியாக இருக்கும்.என்ன சொல்கிறார்கள் என்று கேட்டபோது, வார்த்தைகள் மடை திறந்த வெள்ளமென கொட்டின.மொத்த வர்த்தகம் ரூ.1லட்சம் கோடியாக உயர்வது இருக்கட்டும், இப்போது இருப்பதையாவது தக்க வைக்க முடியுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது.

சொல்லப்போனால் கடந்த மூன்று நான்காண்டுகளாக பின்னலாடை தொழில் வளர்ச்சி பின்னோக் கிப் போய்க் கொண்டிருக்கிறது. இதைநாங்கள் மிகைப்படுத்திச் சொல்லவில்லை.

 முன்பெல்லாம் ஒவ்வொரு மின் கம்பத்திலும் “வேலைக்கு ஆட்கள் தேவை!” என்றவிளம்பரங்கள் தொங்கிக் கொண்டிருக்கும், இப்போதோ “வாடகைக்கு கட்டிடங்கள் உள்ளன!” என்ற வாசகங்கள்தான் தொங்கிக்கொண்டிருக்கின்றன.

நல்ல நிலையில் பல கோடி ரூபாய் ஏற்றுமதி வர்த்தகம் செய்து கொண்டிருந்த நிறுவனங்கள் இப்போது தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.
 தீபாவளி சமயத்தில் மட்டும் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன. அதன் வெளிப்பாடுதான் காலியான தொழிற்சாலை கட்டிடங்கள் வாடகைக்கு காத்திருக்கும் நிலை!

மோடி அறிவித்த செல்லா பண விவகாரம் இங்கிருந்த சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை சீரழித்துவிட்டது. இந்தியாவைப் பொருத்தவரை சிறு கடைகள், நடைபாதை கடைகளை நம்பித்தான் பெரும் பாலான வர்த்தகம் இருக்கிறது. ஆனால் பணமதிப்பு நீக்கத்தால் இந்தியா முழுவதும் சாலையோர, நடைபாதை மற்றும் சிறு கடைகளின் பொருளாதாரம் நொறுங்கிவிட்டது.
இதனால் திருப்பூரில் உள்நாட்டு பனியன் உற்பத்தித் தொழிலில் 40 முதல் 50 சதவிகிதம் சரிந்துவிட்டது. இதை சார்ந்து வாழ்ந்து வந்த பல லட்சம் பேர் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது.

ஜிஎஸ்டி பயங்கரம்
மற்றொரு தாக்குதல் ஜிஎஸ்டி விதிப்பு. ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வரும்போதும் தொழில் துறையினர் வரவேற்றனர்.
ஆனால்எளிய முறையில் நியாயமான வரி வசூலிக்கப்படும் என்று எதிர்பார்த்தது நடக்கவில்லை.
இந்த வரி விதிப்பு முறையில் கணிசமான தொகை வரியாக செலுத்தப்பட்டு முடங்கிப் போய்விடுகிறது.
 எனவே தொழிற் சாலைக்கான நடைமுறை மூலதனத்தின் ஒரு பகுதி எப்போதும் எங்களுக்குப் பயன்படாத நிலையே தொடர்கிறது என்றனர் தொழில் துறையினர்.

இது போக ஏற்றுமதிக்கு டிராபேக் எனப்படும் ஊக்கத் தொகை 7.5 சதவிகிதமாக இருந்தது வெறும் 2 சதவிகிதமாக வெட்டி விட்டனர்.
இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி ஏற்றுமதி செய்வதில் 7.5 சதவிகித ஊக்கத் தொகையாக ரூ.1875 கோடிகிடைத்து வந்தது.
இப்போது 2 சதவிகிதமாக குறைத்ததால் வெறும் ரூ.500 கோடி மட்டும்தான் கிடைக்கிறது.
ஏறத்தாழ ரூ.1375 கோடி வெட்டப்பட்டுவிட்டது.

அதன்பிறகும் டிராபேக் 1.8 சதவிகிதமாக மேலும் குறைத்தனர். இரண்டு ஆண்டுகளில் மட்டும் மொத்தம் ரூ.2750 கோடி திருப்பூருக்கு வர வேண்டிய தொகை மறுக்கப்பட்டுவிட்டது.
 இந்த பணம் நேரடியாக முதலாளிகள் பாக்கெட்டுக்குச் செல்லக்கூடியது அல்ல, நகரின் பணப்புழக்கமாக மாறி அனைத்து வர்த்தக, தொழில் நடவடிக்கைகளுக்கும் உதவக்கூடியதாகும்.
அதை வெட்டிவிட்டதால் நகரின் இயல்பான வர்த்தக, தொழில்நடவடிக்கைகள் சுருங்கிவிட்டன.

போட்டி போட முடியவில்லை
மற்றொரு பக்கம் ஏற்றுமதி நிறுவனங்கள்உலக நாடுகளுடன் விலையில் போட்டி போடமுடியாமல் போய்விட்டது.
ஐந்தாறு மிகப் பெரிய ஏற்றுமதி நிறுவனங்கள் இங்கிருந்து ஆப்பிரிக்க நாடுகளுக்கு தங்கள் கிளைகளைக் கொண்டு போய்விட்டனர்.
மற்ற பலநிறுவனங்கள் திருப்பூரில் இருந்து அண்டைமாநிலங்களுக்கு மாற்றிச் செல்கின்றனர்.
ஆர்டருக்கு நல்ல விலை கிடைக்காத நிலையில் ஏற்றுமதி நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை உள்நாட்டு தொழிலுக்கு மாற்றுகின்றனர். ஆனால் உள்நாட்டுத் தொழிலிலும் சந்தை சுருங்கிவிட்டது.
 இதனால் உள் நாட்டு உற்பத்தி நிறுவனங்களில் தேக்க நிலைநிலவுகிறது.
 தேங்கியிருக்கும் சரக்குகளை விற்பதற்கே குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் ஆகும் என்று தெரிவித்தனர்.

எங்கே நிம்மதி?
என்ன செய்வது? எப்படிப் பேசுவது?
இவ்வளவு பாதிப்புகள் இருந்தும் தொழில் அமைப்புகள் குரல் கொடுக்கவில்லையே என்று கேட்டபோது, ஒரு பக்கத்தாக்குதல் என்றால் அதை மட்டும் கவனிக்கலாம், எல்லா திசையிலும் நெருக்கடியாக இருக்கும்போது எதைப் பற்றி பேசுவது,

என்ன செய்வதென்றே தெரியாமல்குழம்பிப் போய், போராடுவதற்கும் தெம்பில்லாமல் தள்ளாடிக் கொண்டிருக்கின் றோம் என்று வேதனையோடு தெரிவித்தனர்.


தொழிலின் எதார்த்த நிலை இப்படி இருக்க இதைப் பற்றி பேச வேண்டிய ஏற்றுமதியாளர் சங்கம் உள்ளிட்ட பல தொழில்அமைப்புகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் திருப்பூர் சிறப்பாக இருப்பது போல் பாராமுகமாக இருக்கின்றன.

 ஆர்எஸ்எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகளில் நிர்வாகிகளாக இருப்பவர்களே ஏற்றுமதியாளர் சங்கத்திலும் நிர்வாகியாக இருப்பதால் அவர்கள் மோடி அரசுக்கு சங்கடம்தரும் எந்த பிரச்சனையையும் எழுப்புவதில்லை,

மாறாக தங்கள் காவி அரசியலை,சங் அமைப்பை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதனால்தான் திருப்பூர்தொழில் வீணாகப் போய்க் கொண்டிருக்கிறது.


இதை உற்பத்தியாளர்கள் நன்றாக உணர்ந்துள்ளனர்.


 இந்த சூழ்நிலையில்தான் மோடி இங்கு வருகிறார்.

 இப்போதும் அவரை சந்தித்து தொழில் பிரச்சனைகளை தெரிவிப்பதற்கு தொழில் அமைப்புகள் முயற்சி செய்கிறார்கள்.

ஐந்தாண்டு காலஏமாற்றத்துக்குப் பிறகும் அவரை சந்தித்தால்பலன் கிடைக்கும் என்று நம்புகிறீர்களா எனகேட்டபோது, கோமா நிலையில் இருப்பவருக்கு ஆக்சிஜன் தேவை என்று கேட்கத்தான்,அவரை சந்திக்க நினைக்கிறோம் என்றார்

ஒரு தொழில் அமைப்பின் நிர்வாகி!
ஆக்சிஸன் கிடைக்குமா?
உயிர் பறிக்கப்படுமா?
 மோடிக்கே வெளிச்சம்!!
                                                                                                            நன்றி:-தீக்கதிர்.
 


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?