"மனசாட்சிப்படி வாக்களிப்பேன்"
இதனால், விவசாயம், கட்டுமானம், சலவை, மீன் பிடி, நெசவு உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள, ஏழை தொழிலாளர்கள் பயன் பெறுவர்.
கிராமங்களில் வாழும், 35 லட்சம் ஏழை குடும்பங்கள்; நகர பகுதிகளில் வாழும், 25 லட்சம் ஏழை குடும்பங்கள் என, மொத்தம், 60 லட்சம் குடும்பத்தினர், தலா, 2,000 ரூபாய், சிறப்பு நிதியுதவி பெறுவர். இதற்கான செலவுக்கு, 1,200 கோடி ரூபாய், அரசின் துணை மானிய கோரிக்கையில் ஒதுக்கீடு செய்யப்படும். முதல்வர் அறிவித்தார்.
மக்கள் வரிப்பணம் மீண்டும் பாழாகிறது. பொங்கல் பரிசை தொடர்ந்து, அடுத்த அதிரடியாக, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, 'இனாம்' வழங்க, 1,200 கோடி ரூபாயை, அரசு ஒதுக்கியுள்ளது.
லோக்சபா தேர்தலும், 20 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நெருங்குவதால், 'ஐஸ்' வைக்கும் விதமாக, 60 லட்சம் குடும்பங்களுக்கு, தலா, 2,000 ரூபாய் இலவசம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, 4 லட்சம் கோடி ரூபாய் கடனில் தவிக்கும், தமிழக அரசுக்கு, இது, மேலும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தப் போவது உறுதி.
ஆனாலும், இலவசமாக கொடுக்கப்படும் துட்டு, வரும் தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவான ஓட்டாக மாறும் என, அரசு எதிர்பார்க்கிறது.
லோக்சபா தேர்தல், விரைவில் வர உள்ள நிலையில், மத்திய அரசு, பிப்., 1ல், இடைக்கால பட்ஜெட்டை அறிவித்தது. பட்ஜெட்டில், சிறு விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வழங்குவது உட்பட, மக்களை கவரும் வகையில், பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
எதிர்பார்ப்பு:
அதைத் தொடர்ந்து, தமிழக பட்ஜெட்டிலும், லோக்சபா தேர்தலை ஒட்டி, மக்களை கவரும் வகையில், பல்வேறு அறிவிப்புகள் வெளியாகும் என்ற, எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பிப்., 8ல், துணை முதல்வர், பன்னீர்செல்வம், 2019 - 20ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை, தாக்கல் செய்தார்.
அதில், மக்களை கவரும் வகையில், முக்கிய அறிவிப்புகள் எதுவும் இடம் பெறவில்லை. துறை ரீதியான திட்டங்கள் மட்டுமே இருந்தன.
ஏற்கனவே, பொங்கல் பண்டிகையை ஒட்டி, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும், பொங்கல் பரிசு பொருட்களுடன், தலா, 1,000 ரூபாய் இனாம் வழங்கப்பட்டது. இதற்கு, 2,250 கோடி ரூபாய், வரிப்பணம்
செலவிடப்பட்டு விட்டது.
எனவே, கடும் நிதிச் சுமை காரணமாக, பட்ஜெட் அறிவிப்பில் அடக்கி வாசிக்கப்பட்டதாக, அரசு தரப்பில் தகவல் வெளியானது. இந்தச் சூழ்நிலையில், 'வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள, ஏழை குடும்பங்களுக்கு, தலா, 2,000 ரூபாய் வழங்கப்படும்' என, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று திடீர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
இந்த துட்டு, ஓட்டாக மாறும் என்று அவர் எதிர்பார்க்கிறார்.
இயற்கை சதி செய்தலும் தமிழக சிறைத்துறை உள்ளே தள்ளி விட்டது. |
எனினும், மக்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், மக்கள் வரிப்பணம் மீண்டும் பாழாக்கப்பட உள்ளது. அரசின் கடன், 3.97 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ள நிலையில், இந்த அறிவிப்பால், மேலும் கடன் சுமை கூடும்.
எல்லாவகை கணிப்புகளும் அதிமுக-பாஜக மண்ணைக்கவ்வும் என வந்துள்ள நிலையில் அரசுப்பணத்தை ,மக்கள் வரிப்பணத்தை எடுத்து வாரியிறைத்து வாக்குகளாக்க எடப்பாடி பழனிச்சாமி முயல்கிறார்.
அடுத்து அதிமுக ஆட்சி வராத நிலையில் அடுத்து வரும் ஆட்சியாளர்கள் கடும் கடன் சுமையில் சிக்கட்டும் என்ற நல்லெண்ணமும்,அதிமுக வாக்குகள் வாங்க மக்கள் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுக்கும் கேவலமான எண்ணமும்தான் இதில் உள்ளது.
மக்கள் மட்டும் ஒரு உண்மையை உணர்ந்து செயல்பட்டால் போதும்.
இதுவரை அதிமுக தந்தது எதுவுமே அவர்கள் அப்பன் விட்டுப்பணம் அல்ல.மக்களிடம் ஊழல் செய்து குவித்தப்பணம் .
இப்போது தருவது மக்கள் வரிப்பணம்.அரசு கருவூலத்தில் இருந்து தருகிறார்கள்.அதுவும் எப்படிப்பட்டப்பணம்?
போக்குவரத்துத்தொழிலாளர்கள்,அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்து கணக்கில் வராதப்பணம்,பேரிடர் நிவாரனத்துக்கு பலர் அள்ளிக்கொடுத்தப்பணத்தைத்தான் தருகிறார்கள்.
அது உங்கள் பணம்தான்
.
அவைகள் வாங்கும் ஒவ்வொரு வாக்காளரும் மனசாட்சி என்று பொய்யாக எண்ணிக்கொண்டு சத்தியத்துக்கு கட்டுப்பட்டு அதிமுகவுக்கே வாக்களிக்க வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை.
ஆண்டவன் கண்ணையெல்லாம் குத்த மாட்டார்.
சத்தியம் செய்யக்கூறினால் செய்யுங்கள்."மனசாட்சிப்படி வாக்களிப்பேன்" என்று மட்டுமே கூறுங்கள்.
உங்கள் விருப்பப்படி வாக்களியுங்கள்.
கரணம் நீங்கள் அதிமுகவினர் கொடுத்தல் கூட அவரகள் சொந்தப்பணம் அல்ல குட்கா,பொதுப்பணித்துறை மக்கள் நலத்திட்டங்களில் அடித்த ஊழல் கரை படிந்த பணம்தான்.
அரசு வழியில் கொடுத்தால் அது உங்கள் வரிப்பணம்தான்.
யாருக்கு பயப்படவேண்டும்?
நடிகர் சூர்யாவின் வேண்டுகோள்.
===================================================
பிப்ரவரி-12.
இயற்கையியல் அறிஞர் சார்ளஸ் டார்வின் பிறந்த தினம்(1809)
அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் பிறந்த தினம்(1809)
சிலி, ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது(1818)
சீனக் குடியரசில் கிரெகேரியன் நாட்காட்டி அமலுக்கு வந்தது(1912)
====================================================
பாஜகவுடன் அதிமுக ரகசிய பேரம்.
21 தொகுதி இடைத்தேர்தலை ஒத்தி வைக்க சூழ்ச்சி!
தங்களது ஊழல் முறை கேடுகளை கண்டுகொள்ளாமல், அவற்றுக்குத் துணை போகும் மோடி அரசிடம் தமிழக நலன்களை காவு கொடுத்து அதிமுக அரசு சரணாகதி அடைந்துள்ளது மட்டு மன்றி, பாஜகவுடன் தேர்தல் உறவு கொள்ளவும் முனைந்துள்ளது.
நாடு முழுவதும் மக்கள் விரோத கொள்கைகளாலும், இமாலய ஊழல்களாலும் தோல்வி பயத்தில் மூழ்கியுள்ள பாஜகவுடன் கூட்டு சேர்வதற்கு பிரதமர் மோடியிடம் அதிமுக சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. நாடாளுமன்றத் தேர்தலோடு கடந்த 15 மாதங்களாக காலியாக உள்ள சட்டமன்ற இடைத்தேர்தல்களை நடத்தாமல் ஒத்தி வைக்க வேண்டுமென கோரி யுள்ளதாகவும், அதை பிரதமர் பரிசீலிப்பதாகவும் அதிர்ச்சியான செய்திகள் தெரிவிக்கின்றன.
தேர்தல் ஆணையம் தனது தனித்தன்மையை மோடி ஆட்சியில் முற்றிலுமாக இழந்து விட்டது.
தமிழகத்தின் பல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து துவக்கி வைத்திருப்பது தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ள அவ மானமாகும். தமிழகத்திற்கு கடந்தநான்கரை ஆண்டுகளாக நரேந்திரமோடி அரசு தொடர்ந்து துரோகமிழைத்து வருகிறது.
ஏற்கெனவேநீட் தேர்விலிருந்து விதிவிலக்குகோரும் இரண்டு சட்டமசோதாக் களுக்கு ஒப்புதல் வழங்க மறுப்பு, தமிழக அரசு கோரிய வறட்சி, வெள்ளம், கஜா புயல் நிவாரண நிதி வழங்க மறுப்பு, காவிரியில் மேக தாதுவில் அணை கட்டுவதற்கு ஆய்வுப்பணிகள் மேற்கொள்ள கர்நாடக அரசுக்கு ஒப்புதல் போன்றபல செயல்களைக் குறிப்பிட முடியும்.
கஜா புயலால் பாதிக்கப் பட்ட போது, பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்து ஆறுதல் கூறு வதற்குக் கூட வர மறுத்தவர்தான் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி என்பது மறக்க முடியாததாகும்.
2018 -2019ம் ஆண்டு தமிழகசட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப் பட்ட நிதிநிலை அறிக்கையில் நிதி யமைச்சர் மத்திய அரசின் தமிழக விரோதப்போக்கை பட்டியலிட்டுக் காட்டியுள்ளார்.
குறிப்பாக மாநிலங்களுக்கிடையிலான பொருட்கள், மற்றும் சேவை வரி (எஸ்ஜிஎஸ்டி) 2017-2018ம் ஆண்டில் தமிழகத் திற்கு தர வேண்டிய ரூபாய் 5454 கோடி, பொருட்கள் மற்றும் சேவை வரிகள் தமிழகத்திற்கான பங்கில் ரூ.455.16 கோடி, மத்திய நிதிக்குழுவின் பரிந்துரைப்படி வழங்க வேண்டிய ரூ.560.15 கோடி,உள்ளாட்சி மன்றங்களுக்கு வழங்கவேண்டிய ரூ.3852.17 கோடி, மாண வர்களுக்கு வழங்க வேண்டிய போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் பாக்கித்தொகை ரூ.985.08 கோடி ஆகிய தொகைகளை மத்திய அரசு வழங்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போட்டுள்ளது.
மேலும், மத்திய அரசு செயல்படுத்த வேண்டிய பல திட்டங்களுக்கான நிதிஒதுக்கீட்டை குறைத்து மாநி லத்தின் தலையில் சுமையை ஏற்றி யுள்ளது.
இத்தகைய வரலாற்று அநீதிகளை மத்திய மோடி அரசு இழைத்து வருவதாக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டு விட்டு, அவரை அழைத்து தமிழகத்தில் விழா எடுப்பதானது எட்டி உதைக்கும் காலுக்கு கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதற்கு சமமாகும்.
தேர்தல் என்றாலே அதிமுக அஞ்சி நடுங்கி வருகிறது.
தேர்தல்கள் நடந்தால் தங்களது வண்டவாளம் பகிரங்கமாகி விடும் என்பதால், உள்ளாட்சி மன்றத்தேர்தல் களை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சொத்தையான காரணங் களைக் கூறி தள்ளிப்போட்டு வருகிறது. இதனால் உள்ளாட்சி நிர்வா கங்கள் சீரழிந்து மக்கள் அடிப்படை தேவைகளுக்கு ஆலாய்ப் பறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல்கள் நடந்தால் அனைத்திலும் படுதோல்வி அடைவதுடன், அதன் மூலம் பதவி இழக்க நேரிடும் என்ப தாலும், தொடர்ந்து பதவியைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கும் வாய்ப்பை இழந்து விடுவோம் என்பதாலும் தேர்தலை ஒத்திப் போட எடப்பாடி அரசு முயற்சித்து வருகிறது என்பது தெளிவாகும்.
இதற்காகவே, மோடியை தமிழ கத்திற்கு அழைத்து வந்து அதிமுக அரசு விழா எடுத்துள்ளது போலும்.
தமிழகத்தில் 21 சட்டமன்றத் தொகுதிகளை காலியாக வைத்துக் கொண்டு அரசு நிர்வாகம் நடத்து வது வரலாற்றிலேயே முதன் முறை என்பது மட்டுமன்றி அரசியல் சாச னத்திற்கு விரோதமானதாகும்.
இத்தொகுதிகளில் உள்ள மக்களது பிரச்சனைகளை கவனிப்பதற்கு சட்டமன்றப்பிரதிநிதிகள் இல்லாமல் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலையும் கட்டாயம் நடத்த வேண்டுமென அனைத்து எதிர்க் கட்சிகளும், பொதுமக்களும், சம்பந்தப்பட்ட தொகுதி வாக்காளப்பெருமக்களும் கோரி வரு கின்றனர். ஆனால், எடப்பாடி அரசின் வற்புறுத்தல் காரணமாக மோடி அரசும் தேர்தல் ஆணைய மும் தேர்தலை நடத்த மறுத்து வருகின்றன.
நாடாளுமன்றத் தேர்தலோடு 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களையும் நடத்துவதற்கு தாங்கள் தயாராக உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் சட்டமன்ற இடைத் தேர்தல்களை நாடாளுமன்றத் தேர்தலோடு இணைத்து கட்டாயம் நடத்திட வேண்டும்.
மோடி மற்றும்எடப்பாடி அரசுகளின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்து இடைத்தேர் தல்களை தள்ளி வைப்பதாக முடிவெடுத்தால் அது அரசியல் சாசனத்திற்கு விரோதமானது மட்டு மன்றி தேர்தல் ஆணையத்தின் மீதானவரலாற்றுக் கரும்புள்ளியாக பதி வாகும் என்பது திண்ணம்.
ஆளும் கட்சிகளது விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு சட்டம் வகுத்துத் தந்துள்ள விதிப்படி தேர்தல் நடத்துவது தேர்தல் ஆணையத்தின் கடமையாகும்.
அரசியல் காரணங்களுக்காக இதை நிறைவேற்றத் தவறுவது இந்தியமக்களாட்சியையே குழி தோண்டிப் புதைத்து விடும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------------------------