சில கேள்விகள் ?
திரிணாமுல் காங்கிரசுக்கு இக்கேள்வி
சாரதா நிதி நிறுவன மோசடி மற்றும் ரோஸ் வேலி ஆகிய வழக்குகளில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரை விசாரிக்க கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்திற்கு சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று மாலை சென்றனர். அங்கு, சி.பி.ஐ அதிகாரிகளை கொல்கத்தா போலீசார் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
சிபிஐ அதிகாரிகளை கைது செய்ததுடன் மம்தா இரவு முழுக்க போராட்டம் செய்தது இந்தியா முழுக்க பரபரப்பை உருவாக்கியது.
சிபிஐ அதிகாரிகளை கைது செய்தது மாநில சுயாட்சி மற்றும் ராஜமன்னார் குழு அறிக்கை தொடர்பாக தான் எடுத்த நடவடிக்கை என்று மம்தா கூறியுள்ளார்.
ஆனால் இது ஏற்கனவே விசாரிக்கப்படும் சீட்டுக்கம்பெனி ஊழல் வழக்கு. அதனை சி.பி.ஐ விசாரிக்கிறது.
அதிலேதான் காவல்துறை அதிகாரியும் மாட்டிக்கொண்டுள்ளார்.
அவரை விசாரிக்கக்கூடாது என்பதில் மாநில உரிமைகள்எங்கிருக்கிறது.
அந்த ஊழல் வழக்கே மம்தா கட்சித்தலைவர்கள் பலரும்,திரிணாமுல் காங்கிரஸ் நன்கொடைக்கான வழியும் உள்ளது.அதாவது மம்தா கட்சி அந்நிறுவனத்திடம் பல கோடிகள் பெற்றுள்ளது.
எனவே இந்த கைதும்,மம்தா போராட்டமும் அவரின் தனிப்பட்ட விவகாரம்தான்.
மம்தா துணைக்கழைக்கும் ராஜமன்னார் குழு 1969ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதியால் அமைக்கப்பட்ட ஒன்று.
இக் குழு மத்திய மாநில அரசுகளின் அதிகார பகிர்வு குறித்து ஆராய அமைக்கப்பட்டது.
சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 1969ஆம் ஆண்டு1969 மார்ச் 17-ல் டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கருணாநிதி, மத்திய - மாநில அரசுகளின் அதிகாரங்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் ஒன்றை அமைக்கவும், மத்திய அரசு மாநில அரசைக் கலைக்க அதிகாரம் வழங்கும் இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 365ஐ ஒழிக்கவும் அந்த கமிட்டி பரிந்துரை செய்தது.
அக்குழுவின் அறிக்கை மத்திய-மாநிலங்களிடையே எழுகிற பிரச்சனைகளுக்குத் தீர்வு சொல்லும் முக்கிய சாசனமாக கருதப்பட்டது.
மத்திய - மாநில உறவுகளை ஆராய அமைக்கப்பட்ட சர்க்காரியா குழுவுக்கு ராஜமன்னார் குழுவின் அறிக்கையே முக்கியக் காரணம்.
ராஜமன்னார் குழுவின் அறிக்கை தமிழகத்தில் மட்டுமல்ல, அகில இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு, ராஜமன்னார் குழுவின் அடிப்படையில் மாநிலங்களுக்கு அதிகாரங்கள் வேண்டும் என்று மத்திய அரசுக்கு வெள்ளை அறிக்கை அனுப்பினார். ஐதராபாத்தில் மாநில உரிமைகள் குறித்து என்.டி.ராமாராவ் மாநாடு நடத்தினார். அதுபோல, ஷிலாங்கில் அசாம் கண பரிஷத் மாநாடு நடத்தியது.
சரி, மம்தா தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதற்கும் ராஜமன்னார் குழுவுக்கும் என்ன தொடர்பு?
பலர் மாநில உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுவதாகவும், மத்திய அரசு ஏதேச்சதிகாரத்துடன் மாநிலங்களை அணுகுவதாகவும் நினைக்கிறார்கள்.
மம்தாவும் இதனை பிரதானமாக கூறியே இந்த தர்ணா போராட்டத்தை தொடங்கி உள்ளார்.
ஆனால் இது ஏற்கனவே விசாரிக்கப்படும் சீட்டுக்கம்பெனி ஊழல் வழக்கு. அதனை சி.பி.ஐ விசாரிக்கிறது.
அதிலேதான் காவல்துறை அதிகாரியும் மாட்டிக்கொண்டுள்ளார்.
அவரை விசாரிக்கக்கூடாது என்பதில் மாநில உரிமைகள்எங்கிருக்கிறது.
அந்த ஊழல் வழக்கே மம்தா கட்சித்தலைவர்கள் பலரும்,திரிணாமுல் காங்கிரஸ் நன்கொடைக்கான வழியும் உள்ளது.அதாவது மம்தா கட்சி அந்நிறுவனத்திடம் பல கோடிகள் பெற்றுள்ளது.
எனவே இந்த கைதும்,மம்தா போராட்டமும் அவரின் தனிப்பட்ட விவகாரம்தான்.
இதில் ராஜமன்னார் குழு அறிக்கை வழிகாட்டல் ஒன்றுக்குமே தொடர்பில்லை.
அதை கூறி ஏற்கனவே வழக்கு தொடர்ந்தது பல ஆண்டுகளாக விசாரிக்கும் சிபிஐ.அதிகாரிகளை தற்போது கைது செய்தது சட்டவிரோதம்தான்.
காங்கிரசுக்கு இக்கேள்வி.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து திருநாவுக்கரசர் வீழ்த்தப்பட்ட தகவல்கள் தெரிய வந்திருக்கின்றன.
திருநாவுக்கரசர், தமிழ்நாடு அரசியல் களத்தில் திராவிட பின்னணியில் வந்தவர்.
எம்.ஜி.ஆர். ஆட்சியில் துணை சபாநாயகராகவும், பின்னர் வீட்டு வசதித்துறை அமைச்சராகவும் இருந்தவர்.
ஜெயலலிதாவை அரசியலில் முன்னிலைப்படுத்தி அவர் வளர்ந்த பின்னால் அவரால் உதிர்ந்த ரோமம் என்று தூத்து தள்ளப்பட்டவர்.
பின்னாளில் பாஜக.வில் இணைந்து வாஜ்பாய் அமைச்சரவையில் மத்திய அமைச்சராகவும் இருந்தார்.
2009-ல் காங்கிரஸுக்கு வந்த திருநாவுக்கரசருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாநிலத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் பல்வேறு கட்சித் தலைவர்களுடனுன் இணக்கமான உறவு கொண்டவர் திருநாவுக்கரசர்.
அந்த நட்பை அவர் பேணுகிற விதமும் அலாதியானது.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமை தமிழ்நாட்டில் காங்கிரஸுக்கு களத்தில் சற்று உந்துதலாக இருந்தது உண்மையென்றால், திருநாவுக்கரசரின் தலைமை இடதுசாரிகள், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் காங்கிரஸுக்கு சற்றே இணக்கத்தை அதிகப்படுத்தியது.
அதிமுகாவுடனேயே பாசத்துடன் செயல்பட்டதால் திமுக- திருநாவுக்கரசர் உறவு சரிவர இல்லை.
இந்தச் சூழலில் திருநாவுக்கரசரை மாநிலத் தலைவர் பதவியில் மாற்ற காங்கிரஸில் உள்ள இதர கோஷ்டிகள் கங்கணம் கட்டின.
தொடக்கத்தில் இது தொடர்பாக பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்தார் திருநாவுக்கரசர். ஆனால் 10 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் மாநில தலைமையகமான சத்யமூர்த்தி பவனில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய திருநாவுக்கரசர், ‘நாடாளுமன்றத் தேர்தலை தமிழகத்தில் எனது தலைமையில்தான் காங்கிரஸ் சந்திக்கும்’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மேலிட நிர்வாகிகள் மற்றும் மாநில காங்கிரஸின் இதர கோஷ்டி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
ராகுல் காந்தியின் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு திருநாவுக்கரசர் இப்படி பேசியது, மேலிடப் பார்வையாளர் மூலமாகவே தலைமைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.
இன்னொரு நிகழ்வு, சில வாரங்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சென்னையில் ஒரு கருத்து கேட்பு கூட்டம் நடத்தினார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் பொறுப்பில் இருப்பவர் என்ற அடிப்படையில், ப.சிதம்பரம் தரப்பு அதற்காகவே ஏற்பாடு செய்த கூட்டம் அது.
அந்தக் கூட்டத்தை மாநிலத் தலைவரான திருநாவுக்கரசர் புறக்கணித்தார். இதுவும் புகாராக மேலிடத்திற்கு போனது.
இந்தப் புகார்களைத் தொடர்ந்து திருநாவுக்கரசரை டெல்லிக்கு அழைத்து, மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகி தேசிய செயலாளர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி ராகுல் கேட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அரசர், ஏற்கனவே தேசிய செயலாளர் பொறுப்பில் இருந்துதான் மாநிலத் தலைவர் பதவிக்கு தான் மாற்றப்பட்டதை சுட்டிக் காட்டியதாக கூறப்படுகிறது.
தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில் தன்னை மாற்றுவது குறித்து திருநாவுக்கரசர் அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும், வேறு பதவி இப்போது தேவையில்லை என குறிப்பிட்டதாகவும் தகவல்கள் வருகின்றன.
இதையடுத்தே ப.சிதம்பரம் ஆதரவாளரான கே.எஸ்.அழகிரியை மாநிலத் தலைவராகவும், வசந்தகுமார், மயூரா ஜெயகுமார், தேனி ஜெயகுமார், விஷ்ணுபிரசாத் ஆகிய நால்வரை செயல் தலைவர்களாகவும் நியமித்து மேலிடம் அறிவித்தது.
புதிய தலைவர் கே.எஸ்.அழகிரி, மூத்த தலைவர்களான ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றார். ‘திருநாவுக்கரசருக்கான இடம் காங்கிரஸில் எப்போதும் இருக்கும்’ என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
கே.எஸ்.அழகிரி தலைவர் ஆனதன் மூலமாக வருகிற தேர்தலில் தமிழகத்தில் ப.சிதம்பரத்தின் பிரசாரம் முக்கிய இடம் பெறும்.
இது காங்கிரஸ் கூட்டணிக்கு பலம் சேர்க்கலாம்.
அதேசமயம் தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களில் 60 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் திருநாவுக்கரசரால் நியமிக்கப்பட்டவர்கள்.அனைவரும் அவருடன் அதிமுகவில் இருந்தவர்கள்.பதவியைத்தவிர காங்கிரசுடன் அவர்களுக்கு ஒரு தொடர்பும் இதுவரை இருந்ததில்லை.அனைவரும் திருநாவுக்கரசின் ஆதரவாளர்கள் மட்டுமே.அவர் ஏசல் கட்சிகளுக்கெல்லாம் உடன் செல்பவர்கள்.
ஏனைய நிர்வாகிகளும்கூட ஈ.வி.கே.எஸ். அணியை சேர்ந்தவர்கள். இவர்கள் எப்படி கே.எஸ்.அழகிரியை அனுசரிக்கப் போகிறார்கள்? என்பதைப் பொறுத்தே கட்சியின் செயல்பாடு இருக்கப் போகிறது.
தவிர, ஒரு மாநிலத் தலைவர் இருந்த தருணங்களிலேயே காங்கிரஸில் எந்த முடிவையும் சுலபத்தில் எடுக்க முடியாது.
இனி ஒரு மாநிலத் தலைவர், 4 செயல் தலைவர்கள் இணைந்து முக்கிய முடிவுகளை எப்படி ஒருமுகமாக எடுப்பார்கள்? என்கிற கேள்வி எழுகிறது.
செயல் தலைவர்கள் நால்வரும் கோஷ்டிகளுக்கு அப்பாற்பட்டவர்கள்தான்.
அதேசமயம் நால்வருமே காங்கிரஸில் தனித்தன்மை வாய்ந்த தலைவர்கள்.
இப்படி 5 தலைவர்களை அனுசரித்து கூட்டணிப் பேச்சுவார்த்தையை முடிப்பது அவ்வளவு சுலபமில்லை.
ப.சிதம்பரத்தை இளங்கோவனைப்போல் முழுக்க நம்பாது திமுக.காரணம் 2ஜி வழக்கில் திமுகவை கோர்த்து விட்டு எல்லாம் ஆ.ராசா தான் நான் கைப்புள்ள என தப்பித்துக்கொண்டவர் ப.சி,
அவர் ஆதரவாளர்தான் அழகிரி.ஆனால் அதிமுகவுக்கு ஆதரவான திருநாவுக்கரசை விட அழகிரி காங்கிரஸ் பாரம்பரியம் உள்ளவர்.
காங்கிரஸ் மேலிடத்தின் சொல்லை கேட்பவர்.
இதை திமுக எப்படி எதிர்கொள்ளப் போகிறது? தேர்தல் இட ஒதுக்கீட்டை எப்படி கையாளப் போகிறது என்பதைப் பொறுத்தே காங்கிரஸின் நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி இருக்கும்.
====================================================
பிப்ரவரி-04.
உலக புற்றுநோய் தினம்
பிலிப்பைன்ஸ்-அமெரிக்க போர் ஆரம்பமானது(1899)
முதல் முறையாக ரேடியம் ஈ என்ற செயற்கைக் கதிரியக்க மூலகம் உருவாக்கப்பட்டது(1936)
இலங்கை விடுதலை தினம்(1948)
யூகொஸ்லாவியா: சேர்பியா மற்றும் மொண்டெனேகுரோ எனப் பிரிக்கப்பட்டது(2003)
====================================================