இன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2019

பட்டது போதாதா போட்டோஷாப் பாலே

 பார்த்தால் அதிர்ச்சிதான்  மிஞ்சும்!
சுகாதாரத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுஇந்த 2019- 20 பட்ஜெட்டில் ரூ. 61398கோடிகள். 2018-19 பட்ஜெட் மறு மதிப்பீட்டு தொகை ரூ.54303கோடிகள்.
அதாவது16 சதவீத உயர்வு.
இதற்குள்தான் ஆயுஷ்மான்பாரத் திட்டத்திற்கான ரூ. 6400 கோடிகளும்அடங்கும்.

எனவே ஒதுக்கீடு அதிகரிப்பான ரூ. 7095 கோடிகளில் கிட்டத்தட்ட ரூ.4400 கோடிகள் ஆயுஷ் மானுக்கு மட்டுமே போயுள்ளது.
 அது போதுமா?

எப்படி இந்த ஒதுக்கீட்டில் ஆயுஷ் மான் நிறைவேறும் என்பதெல்லாம் தனிக் கேள்விகள். இங்கே நாம் விவாதிப்பது சுகாதாரம் குறித்துஅறிவிக்கப்பட்ட இலக்கு என்ன?
அதை நெருங்குவதற்கு இந்த ஒதுக்கீடு உதவுமா? என்பதே.

2025- க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்2.5 சதவீத ஒதுக்கீட்டை எட்டுவோம் என்பது இலக்கு. அப்படியானால் ஒவ்வோர் ஆண்டும் 25 சதவீத உயர்வாவது ஒதுக்கீட்டில் இருக்க வேண்டும். போன ஆண்டு ரூ.54303 கோடிகள் எனில் இந்த ஆண்டு ரூ. 12575 கோடி உயர்வு இருந்திருக்க வேண்டும். ஆனால் உயர்வோ ரூ.7095 கோடிகள். ஓராண்டிலேயே ரூ. 5480 கோடி பள்ளம்.


எஸ்.சி, எஸ்.டி துணைத் திட்டங்களுக்கு முறையே 35 சதவீதம், 28 சதவீதம்பட்ஜெட் ஒதுக்கீட்டில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வந்துள்ளன.
இது மேலோட்டமாக பார்க்கும் போது ஏதோ மத்திய அரசுக்கு புது பரிவு வந்திருக்கிறதோ என்ற எண்ணத்தை உருவாக்குகிறது. ஆனால் எஸ்.சி, எஸ்.டி துணைத் திட்டங்களுக்கான வழிகாட்டல்கள் என்ன? ஒதுக்கப்பட்டுள்ள தொகை எவ்வளவு?
என்று பார்த்தால் அதிர்ச்சியே மிஞ்சும்.

 இப்போது பட்ஜெட்டில் திட்ட செலவுகள்,திட்டமில்லாத செலவுகள் என பிரிக்கப்படுவதில்லை. எனவே திட்ட செலவுகளில் 15 சதவீதம்எஸ்.சி துணைத் திட்டத்திற்கும், ஏழரை சதவீதம் எஸ்.டி துணைத் திட்டத்திற்கும் என்கிறபழைய வழிகாட்டல்களை மாற்ற வேண்டி வந்தது.ஜாதவ் குழு அமைக்கப்பட்டு அது மொத்த பட்ஜெட் செலவினத்தில் முறையே 4.63 சதவீதம்,2.32 சதவீதம் மேற்கண்ட திட்டங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டுமென்று பரிந்துரைத்தது.

 இந்த 2019-20 பட்ஜெட்டில் மொத்த செலவினம் ரூ.27.84 கோடி. ஜாதவ் குழு பரிந்துரைகள் படி எஸ்.சி துணைத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகை ரூ. 1,28,892 கோடிகள்.
ஆனால் பட்ஜெட்தந்திருப்பதோ ரூ. 76801 கோடிகள்.
 ஸ்வாகா ஆகியிருப்பது ரூ.52,091 கோடிகள். எஸ்.டி. துணைத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகை ரூ. 64400 கோடிகள். ஒதுக்கப்பட்டிருப்பது ரூ. 50086 கோடிகள்.
பறிக்கப்பட்டிருப்பது ரூ. 14314 கோடிகள்.

 இது மட்டுமல்ல.
 இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் போட்ட முதல் பட்ஜெட்டில் இருந்த எஸ்.சி துணைத் திட்ட ஒதுக்கீட்டை 39 சதவீதம் குறைத்தார்கள். ரூ. 50548 கோடிகளில் இருந்துரூ. 30851 கோடிகளாக.மூன்றாவது பட்ஜெட்டில்தான் மீண்டும் பழைய ரூ.50,000 கோடியை ஒதுக்கீடு தொட்டது.
இது ஐந்தாவது பட்ஜெட். தேர்தல் நெருங்குகிறது. 35 சதவீத உயர்வு என ஏமாற்றுகிறார்கள்.

மோடி அவர்களை பாராட்ட வேண்டும்.
அவர் முகம் தவிர வேறு முகம் எதுவும் தெரியக் கூடாது என்பதில் கட்சி வித்தியாசமே கிடையாது அடல் பென்சன் யோஜனா வை விட சிறந்த திட்டம் என்ற பெயரில் புதிய பிரதான்மந்திரி ஸ்ராம் யோகி மந்தன் யோஜனா என்பதை அறிவித்துள்ளார்.
 நடைமுறையில் மோடி ஸ்கீம் என்று பக்த கோடிகள் விளம்பரம் செய்வார்கள்.
29 வயதுக்காரர் மாதம் ரூ. 100 வீதம் 31 ஆண்டுகளுக்கு போட்டால் 60 வயதில் மாதா மாதம் ரூ. 3000 மாத பென்சன் கிடைக்கும்.
 இதுகுறித்து பிசினஸ் ஸ்டாண்டர்டு (02.02.2019) இதழில் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ரூ. 3000 என்று 30 ஆண்டுகள் கழித்து அவர்கள் சொல்கிற தொகையின் இன்றைய மதிப்புஎன்னவாக இருக்கும் என ஒரு கணக்கு போட்டுள்ளார்கள்.
கடந்த 10 ஆண்டு பண வீக்க விகிதத்தைஎடுத்துக் கொண்டு அந்த 3000- ன் இன்றைய மதிப்பு என்ன என்று முடிவுக்கு வந்துள்ளார்கள். எவ்வளவு தெரியுமா? ரூ. 500 என்கிறார்கள்.
இந்தகணக்கை போட்டிருப்பவர் தில்லியை சேர்ந்த ஆய்வாளர் கிஞ்சால் சம்பத் ஆவார்.

ஏற்கெனவே இப்படி டாம் டூம் என்று அறிவிக்கப்பட்ட அடல் திட்டம், ஸ்வாலம்பன் திட்டம்இரண்டுமே பெரிதாக வெற்றி பெறவில்லை.
காரணம், பங்களிப்பு மிக அதிகமாகவும் வருவாய்குறைவாகவும் இருப்பதுதான்.
 இதனால்தான் பொலிவியா, லெசொதா, போட்ஸ்வானா போன்ற மிகவும் பின் தங்கிய நாடுகள் கூட ஏழைகளுக்கு இது போன்ற பங்களிப்பு இல்லாத திட்டங்களை அமலாக்குகின்றன.

ஆனால் இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குகீழ் வாழும் முதியவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.7 ம், கைம்பெண்கள்- ஊனமுற்றோர்க்கு ரூ. 10-ம் சமூக நல பென்சனாக வழங்கப்படுகிறது.
இதை ரூ. 3000 ஆக உயர்த்து அதாவது நாளுக்குரூ.100ஆக உயர்த்து என்று கேட்கிறார்கள்அவர்கள்.

வருவாய் திரட்டலில் பணக்காரர்கள் மீது புதிய வரிகள் ஏதும் போடப்படவில்லை.
அம்பானி, அதானிகள் மீதான கருணை தொடர்கிறது.
 “சூப்பர் ரிச்” வரி என்றெல்லாம் உலகம் முழுக்கவிவாதத்திற்கு ஆளான பிரச்சனை பற்றி இவர்கள் போட்ட ஐந்து பட்ஜெட்டும் கவலைப்படவில்லை.ஆனால் விவசாயிகளுக்கு ரூ. 6000 வருமானஆதரவு உள்ளிட்ட திட்டங்கள் இம்முறை அறிவிக்கப்பட்டுள்ளன.
அகப்பை அழகாக இருந்தாலும் சட்டியில் இருக்க வேண்டுமே.வருவாய் மதிப்பீடுகள் சரியாக செய்யப்பட்டுள்ளதா!

முன்னாள் நிதியமைச்சர் யஸ்வந்த் சின்கா பேட்டியை பாருங்கள்.“ஜி.எஸ்.டி இவ்வாண்டு வசூலாகி இருப்பது ரூ. 4,42,000 கோடிகள். கடந்த ஆண்டு பட்ஜெட் செய்யப்பட்டது ரூ.7,44,000 கோடிகள்.
 ஆனால் திருத்திய மதிப்பீடு ரூ. 6,44,000 கோடிகள் தான்.
1 லட்சம் கோடி பள்ளம்.

ஆனாலும் இந்தபுதிய பட்ஜெட்டிலும் ரூ. 7,61,000 கோடி வசூலாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
இதை வைத்துத்தான் நிதிப் பற்றாக்குறையை 3.4 சதவீதத்திற்குள் வைத்திருப்போம் என கணக்கு தரப்பட்டுள்ளது.
நீங்க காகிதத்தில் போடுகிற கணக்குத்தானே!
என்ன வேண்டுமானாலும் எழுதிக் கொள்ளுங்கள்!”


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழின் “சென்னை எக்ஸ்பிரஸ்” இணைப்பு சென்னை பாலங்களுக்கான பட்ஜெட் நிதிஒதுக்கீட்டில் விழுந்துள்ள பள்ளங்கள் குறித்த செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.

ரெயில்வே லெவல் கிராசிங்குகளை கடப்பதற்காக 23 சாலை மேம்பாலங்கள், சாலையடி பாலங்கள் சென்னை நகர், புற நகர் பகுதிகளில்திட்டமிடப்பட்டு பணிகளும் நடந்தேறி வருகின்றன.

 இதற்கான செலவை 50:50 விகிதத்தில் ரயில்வே மற்றும் மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும். 20 கோடி முதல் 30 கோடிரூபாய் வரை மதிப்பீடு உள்ள இத் திட்டங்களுக்கு இது வரை ரூ. 1 கோடி முதல் ரூ. 3 கோடிவரை மட்டுமே கிடைத்துள்ளது.
வெள்ளிக் கிழமை பட்ஜெட்டோடு தாக்கல்செய்யப்பட்டுள்ள “இளம் சிவப்பு புத்தகத்தில்” இத்திட்டங்களுக்கு போதுமான நிதிகிடைக்கவில்லை என்பது வெளிப்பட்டுள்ளது.


வடசென்னையில் பெரும் போக்குவரத்து நெரிசலை தினமும் ஏற்படுத்தக் கூடிய யானைக்கவுனி சாலை மேம்பாலத்திற்கு 2019-20 பட்ஜெட் ஒதுக்கியிருப்பது ரூ. 1 லட்சம்தானாம்.
இது போல தாம்பரம்- கூடுவாஞ்சேரி சாலை மேம்பாலம், தொண்டையார் பேட்டை - திருவொற்றியூர் மேம்பாலம், பேசின் ப்ரிட்ஜ்- கொருக்கு பேட்டை அடி பாலம் ஆகியவற்றுக்கு தலா ரூ .1 லட்சம். மறைமலை நகர்- சிங்கப் பெருமாள் கோவில் மேம்பாலத்திற்கு ரூ.2 லட்சம், தாம்பரம் - வண்டலூர் சாலை மேம்பாலத்திற்கு ரூ.2.5 லட்சம். கிண்டி- பரங்கி மலை பாதசாரி தரையடி பாலத்திற்கு ரூ. 3 லட்சம். இப்படி ஒதுக்கினால் எப்போது அந்த திட்டங்கள் நிறைவேறும்?
 எத்தனை ஆண்டுகள் பிடிக்கும்?
 மூன்று மேம்பாலங்களுக்கு மட்டுமே 10லட்சம் முதல் 50 லட்சம் வரை ஒதுக்கப்பட்டுள்ளதாக அச்செய்தி தகவலில் தெரிய வருகிறது.


கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் இப்படித்தான் உணர்ச்சிகரமாய் முடியும். தமிழக ரயில்வே திட்டங்களும் பட்ஜெட் நிதிக்காக இப்படி காத்திருக்கின்றன.
 தமிழ்நாடு இரட்டை வழி இருப்புப் பாதை திட்டங்களின் மொத்த மதிப்பீட்டிற்கும் பட்ஜெட் ஒதுக்கீட்டிற்கும் பெரும் விரிசல் உள்ளது.
102 கி.மீ வாஞ்சி மணியாச்சி-திருநெல்வேலி-நாகர்கோவில் இருப்பு பாதைக்கு ஒதுக்கீடு ரூ. 183 கோடி.
திட்ட மதிப்பீடு ரூ.1003 கோடி.

 86 கி.மீ கன்னியாகுமரி- நாகர்கோவில்- திருவனந்தபுரம் இருப்பு பாதைக்கு ரூ. 133 கோடி. திட்ட மதிப்பீடு ரூ.1432 கோடி.
160கி.மீ மதுரை- வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி இருப்புப் பாதை திட்டத்திற்கு பட்ஜெட் செய்துள்ள ஒதுக்கீடு ரூ. 169 கோடி.
அதன் மொத்த மதிப்பீடு ரூ.1182 கோடி.
போனஆண்டு ஒதுக்கீடு ரூ. 75 கோடி. உயர்வு என கொண்டாட முடியுமா?
 2020 ஆம் ஆண்டிற்குள்ளாக நிறைவேற வேண்டியரூ. 3615 கோடி ரயில்வே திட்டங்களுக்கான ஒதுக்கீடுரூ.735 கோடிகளாக மட்டுமே உள்ளது.

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள விழுப்புரம்-தஞ்சாவூர் இரு வழிப்பாதைக்கான ஒதுக்கீடு இல்லாதது ஏமாற்றமே. இதுவெல்லாம்தென், மேற்கு மாவட்டங்களின் சமூக, பொருளாதாரவளர்ச்சியோடு தொடர்புடையதாகும்.
                                                                                                     -க.சுவாமிநாதன்
------------------------------------------------------------------------------------------------------------------------------------
இதுவரை  கைகொடுத்த போட்டோ ஷாப் பாலேயே 
இப்போது அசிங்கப்படும்  பாஜக.

துபாய் தெருக்களை குஜராத் தெருக்களாக போட்டோஷாப் செய்ததில் தொடங்கி, ராணுவ பெண் அதிகாரியை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகளாக சித்தரித்தது வரை, தினமும் புதிய புதிய டிசைன்களில் போட்டோஷாப்புகள் உலா வருகின்றன. இதுபோன்ற பொய் செய்திகளை பரப்புவது பி.ஜே.பி.யினர் தான் என்கிற குற்றச்சாட்டு நீண்ட ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. இதனை பி.ஜே.பி. தலைமை மறுத்தும் வந்தது.
இனி அது முடியாதுமக்கள் விழித்துக்கொண்டார்கள்.
பாஜக இடுகை என்றாலே அதன் மெய்தன்மைக்கு சான்றிதழ் கேட்கும் நிலைக்கு வந்து விட்டார்கள்.

ஸ்டாலின் பேசாத ஒன்றை பேசியதாக சமூக வலைதளங்களில் பரவும் ஒரு போட்டோஷாப் பொய் செய்தியை, தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டு, கண்டனம் எழுந்தவுடன் பிறகு நீக்கிவிட்டு தமிழ்நாடு பி.ஜே.பி. அசிங்கப்பட்டு நிற்கிறது. கடந்த ஜனவரி 30ம் தேதி கருணாநிதி சிலைதிறப்பு விழாவுக்காக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஈரோடு சென்றார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் திருப்பூரில் துறைமுகம் அமைக்கப்படும்!" என்று கூறியதாக, பொய்யான செய்தி ஒன்று செய்தி சேனலின் 'ப்ரேக்கிங் நியூஸ்' வடிவில் போட்டோஷாப்பாக பரவி வருகிறது.

இந்த போலி இடுகையை அ.தி.மு.க., பி.ஜே.பி. ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அவர்களோடு முடிந்துபோயிருந்தால் சரி, தமிழ்நாடு பி.ஜே.பி.யும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த போலியான போட்டோஷாப் செய்தியை பிப்ரவரி 2ம் தேதி இரவு 8:14 மணிக்கு பதிவிட்டது.


பதிவில், "திருப்பூரில் துறைமுகமா!! ஒன்பது கிரகங்கள் உச்சத்தில் இருக்கும் ஒருவரால் தான் இந்த லெவலுக்கு யோசிக்க முடியும்" என்று நக்கலாக கமெண்ட் வேறு அடித்திருந்தனர்.


இது போலி செய்தி என்று சமூகவலைத்தளங்களில் பாஜகவை எதிர்த்து கிண்டல் செய்து கண்டனக் குரல்கள் எழும்ப, பதிவிட்ட ஒரு மணிநேரத்திலேயே செய்தி நீக்கப்பட்டது.

 திருப்பூர் அல்லது ஈரோடு மாவட்ட பி.ஜே.பி. தலைவரை அழைத்து விசாரித்திருந்தாலே, ஸ்டாலின் அப்படி கூறினாரா?
இல்லையா? என்பது தெரிந்துவிடும்.

குறைந்தபட்சம் செய்தியை உறுதிப்படுத்திவிட்டு பதிவிடும் எண்ணம் கூட இல்லாமல், அதிகாரப்பூர்வ பக்கத்தில் போட்டோஷாப் பொய்ச் செய்தியை பி.ஜே.பி. பதிவிட்டுள்ளது, சமூக வலைதளவாசிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

 அவ்வப்போது இதுபோன்ற பாஜக வின் பொய்   போட்டோஷாப்புகளை ஆடிட்டர் குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவார் பின் தவறு என கண்டுபிடிக்கப்பட்டால் அதை நீக்கிவிடுவார்.

தான் பதிவிடும் செய்தி விவகாரம் ஆனால்  தனது அட்மின் தான் செய்தியை பதிவிட்டதாக அறிக்கையை ஹெச்.ராஜா சொல்லி விடுவார்.

 திருப்பூர் துறைமுகம் போலிச் செய்திக்கு தமிழ்நாடு பாஜக தலைமை என்ன காரணம் கூறப் போகிறதோ.அல்லது மோடி போல் மேடையில் வாய்கிழிய பொய்களை அவிழ்த்து விட்டு மக்களவையில் வாயே திறக்காமல் இருப்பது போல் இருக்கப்போகிறதோ.
ஆனால் தலைமை முழுக்க பாஜகவினர் கொள்கை பரப்பு செயலாளரே போட்டோ ஷாப் தான்.
எனவே இந்த கிண்டல்களும் ,கண்டனங்களும் எருமை மாட்டின் மீது மழை பொழிந்தது போல்தான்.

அமித் ஷாவே தங்களிடம் லடசக்கணக்கில் இணைய தள அணியினர் இருப்பதாகவும்,பாஜக எண்ணினால் ஒரு பொய்யான தகவலை மக்களிடம் உண்மையாகும் வல்லமை இருப்பதாகவும் பகிரங்கமாகவே சொல்லியிருக்கிறாரே.
====================================================

ன்று,
பிப்ரவரி-03.


அமெரிக்காவின் முதலாவது காகித நாணயம், மசாசூசெட்சில் அறிமுகப்படுத்தப்பட்டது(1690)

 அமெரிக்காவின் விடுதலையை ஸ்பெயின் அங்கீகரித்தது(1783)

வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது(1930)

பேரறிஞர்அண்ணா நினைவு  தினம்(1969)


பேரறிஞர் அண்ணா  நினைவு...

பேரறிஞர் அண்ணா இப்போது இருந்திருந்தால், ஆரிய பார்ப்பனீய சக்திகளுக்கு எதிராய், அவர் எழுதிய "ஆரிய மாயை, வர்ணாஸ்ரமம்"... பார்ப்பனீய ஹிந்துத்துவாக்களின் குரூர செயல்களை விவரிக்கும், "சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்", ஆதிக்க மதவாத சக்திகளின் முதுகெலும்பை முறிக்கும், "வேலைக்காரி, பிடி சாம்பல், மாஜிக் கடவுள்கள், தீ பரவட்டும், நீதிதேவன் மயக்கம், கம்பரசம், கடவுளின் லீலைகள், புராணங்கள் போதைதரும் லேகியம்".. ஆரிய வட நாட்டின் ஆக்கிரமிப்பை, பண்பாட்டு மொழி திணிப்புகளை எதிர்க்கும், "இன்பத் திராவிடம், திராவிட தேசியம், ஏ.தாழ்ந்த தமிழகமே!, தமிழரின் மறுமலர்ச்சி, பெரியார் ஒரு சகாப்தம்"... 
போன்ற அவரின் பல நூல்களை மறுப்பதிப்பு செய்து வெளியிட்டு, ஆரிய வட நாட்டு ஹிந்துத்துவா சக்திகளுக்கு எதிராக களம் கண்டிருப்பார் பேரறிஞர் அண்ணா..
பார்ப்பனீயர்களின் சூது-வாது குறித்து தனது ஆரிய மாயை நூலில் கீழ் வருமாறு எழுதுகிறார் அண்ணா.

பேராசைப் பெருந்தகையே போற்றி!
பேச நா இரண்டுடையாய் போற்றி!
தந்திர மூர்த்தி போற்றி!
தாசர்தம் தலைவா போற்றி!
வஞ்சக வேந்தே போற்றி!
வண்கன நாதா போற்றி!
கொடுமை குணாளா போற்றி!
கோழையே போற்றி போற்றி!
பயங்கொள்ளிப் பரமா போற்றி!
படுமோசம் புரிவாய் போற்றி!
சிண்டு முடிந்திடுவோய் போற்றி!
சிரித்திடு நரியே போற்றி!
ஒட்டுவித்தை கற்றோய் போற்றி!
உயர் அநீதி உணர்வோய் போற்றி!
எம் இனம் கெடுத்தாய் போற்றி!
ஈடில்லாக் கேடே போற்றி!
இரை இதோ,போற்றி! போற்றி!!
ஏத்தினேன் போற்றி! போற்றி!!
-அறிஞர் அண்ணா, ஆரிய மாயை.

====================================================
 ஆர்எஸ்எஸ்சை  விரட்டிய சாமியார்கள்!
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் (பிரயாக்ராஜ்), விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நடத்திய ஆன்மிக மாநாட்டில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்.
அப்போது
 “2019 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும், இல்லையென்றால் தேர்தலுக்காக ராமர் கோயில்கட்டுகிறார்கள் என எதிர்க்கட்சிகள் நம் மீது குற்றம் சுமத்தும். தேர்தலில் வெற்றி பெற்ற உடனேயேகோயில் கட்டும் வேலைகள் தொடங்கிவிடும்”
என்று கூறியுள்ளார்.
அங்கு கூடியிருந்த சாமியார்கள் பெரும் கூச்சலில் ஈடுபட்டுள்ளனர்.
 “கோயில்கட்டுங்கள் அல்லது வெளியேறுங்கள்” என சாமியார்கள்கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசிய பகவத், “ராமர்கோயில் கட்டும் கோரிக்கையில் ஆர்எஸ்எஸ் துளியும் கீழே இறங்காது; எனவே கோயில் கட்டும் அரசை தேர்வு செய்வது அவசியம்” என்று பாஜக-விற்கு வாக்குசேகரித்துள்ளார்.

கொதித்தெழுந்த சாமியார்கள்,      ''அப்படியானால், ராமர் கோயில் கட்டும் தேதியைச் சொல்லுங்கள், தேதியைச்சொல்லுங்கள்” என்று இடைவிடாது முழக்கமிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மாநாட்டை விட்டு வெளியேறுங்கள் என் றும் பகவத்திற்கு எதிராக திரண்டு ஆர்.எஸ்.எஸ் விளம்பர அறிக்கைகளை கிழித்துப்போட்டுள்ளனர்.
இதனால் அதிர்ந்து போன மோகன் பகவத் மேடையைவிட்டு வெளியேறினார்.

 இந்தச் சம்பவம் மோகன்பகவத்,ஆர்.எஸ்.எஸ்,ராமர்கோவிலை வைத்து பிழைப்பு நடத்தும் காவிகளை,பாஜகவை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------