நீடிக்கக்கூடாது.



நீடிக்கக்கூடாது.-1.
'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, தொல்லை கொடுக்கும் கிரண்பேடி, ஒரு நிமிடம் கூட ஆளுநர்  நீடிக்கக்கூடாது.
கிரண்பேடி, மக்களுக்கான நலத்திட்டங்களை முடக்கும் செயல்களில், தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
அதிகார துஷ்பிரயோகம் செய்து, கோப்புகளுக்கு அனுமதி தராமல், தாமதம் செய்கிறார்.
மக்கள் பிரதிநிதிகள் போராட்டம் நடத்தும் நிலையில், எதைப் பற்றியும் கவலைப்படாமல், டில்லிக்கு சென்று விட்டார்.
 புதுச்சேரி மக்களிடம் சம்பளத்தை பெற்றுக் கொண்டு, தனியார் ,பாஜக,ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
 புதுச்சேரி மக்களை, அவர் புறக்கணிக்கிறார்.காரணம் தேர்தலில் மக்களால் புறக்கணிக்கப்பட்டு டிபாசிட் இழந்தவர்  கிரண்பேடி.அந்த கோபத்தில் புதுச்சேரியில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, தொல்லை கொடுக்கிறார். ஆளுநராக செயல்படாமல் பாஜக மாநில செயளாலர் போல் செயல்படும் கிரண்பேடி இனிமேல், ஒரு நிமிடம் கூட, கவர்னராக,  நீடிக்கக்கூடாது."
.' என,முதல்வர்  நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரியில், ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே
நடந்து வரும் மோதல், மேலும் முற்றி முடிவை நோக்கி செல்கிறது.மத்திய அரசு கண்டிப்பாக தலையிடவேண்டிய கட்டாயம் வந்துள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்ப்டும் முதல்வருக்கு அதிகாரமா?மத்திய அரசால் ஆளும்கட்சி சேர்ந்தவர்களாக நியமிக்கும் ஆளுநர் என்பருக்கு அதிக அதிகாரமா என்ற கேள்விக்கு விடை காண வேண்டும்.

இதே நிலைதான் டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் , அங்குள்ள ஆளுநருக்கும் இடையே வெடித்தது .நீதிமன்றம் போயும் குழப்பமான தீர்ப்புகள்தான் வந்தன.
காரணம் டெல்லி அரசியலமைப்பு தனி.காவல்துறை மற்றும் பல மத்திய அரசு,ஆளுநர்  கட்டுப்பாடு கீழ் வருகிறது.
காரணம் இந்திய தலைநகரம் என்ற போக்கில்தான் அங்கு பல சட்டத்திட்டங்கள் உள்ளன.
முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் முழு ஒத்துழைப்பு கொடுத்து சில பிரச்னைகளில் மட்டும் நடவடிக்கைகள் எடுத்துவந்தனர் ஆளுநர்கள்.ஓரு மாநிலம் முதல்வர் மத்திய அரசுடன் தொடர்ந்து மோடி வந்தால் ,ஆட்சிக்கவிழ்ப்புக்கு ஆளுநர் பரிந்துரைப்பது மட்டுமே நடந்துள்ளது.
ஆனால் பாஜக மோடி ஆட்சியில் ஆளுநர்கள் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களின் எல்லா நடவடிக்கைகளிலும் தங்கள் மூக்கை நுழைகின்றனர்.மக்கள் நலத்திட்டங்களில் தலையிட்டு அதைக் குழப்பி மக்களிடம் ஆட்சிக்கு கெட்டப்பெயரி உருவாக்கி வருகின்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
ஆளுநர் என்பவர் மாநிலத்திற்குப்பொறுத்தவரை மத்திய அரசின் பிரதிநிதி அவ்வளவுதான்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாக்காலங்களில் அவர்தான் ஆட்சி எந்திரத்தை நகர்த்துவார்.
முதல்வர்,அமைச்சர்கள் பதவியேற்க வைத்தவுடன் அவருக்கு ஓய்வுதான்.
ஆனால் இன்றுள்ள பாஜக கட்சியைச சேர்ந்த ஆளுநர்கள் தங்களை வானளாவிய அதிகாரமிக்க முதல்வராக எண்ணி செயல் படுகின்றனர்.
தேர்தலில் மக்களிடம் வாக்குகளை வாங்கி வெல்ல முடியாமல் டெபாசிட் இழந்த கிரண்பேடி போன்றவர்கள் கட்சியின் மூலம் ஆளுநர் பொறுப்பை வாங்கிக்கொண்டு தங்களை முதல்வராக நினைத்துக்கொண்டு செய்கின்ற வரைமுறையற்ற முறைகேடுகள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் கூட ஆளுநர் கொஞ்சம் மிரண்பேடி போல் அதிகாரத்தைக்கட்டினார்.சென்றவிடமெல்லாம் குப்பைக்கூட்டினார்.
மற்றபடி அதிமுக அரசு மத்திய பாஜக சொற்படியே நடப்பதால் அவருக்கு வேலை இல்லை.
குப்பைகூட்டியதற்கே கருப்புக்கொடி என்பது அவருக்கு சற்று அதிர்வுதான்.

புதுச் சேரியில் ஆளுநர் மாளிகை எதிரில், முதல்வரின் தர்ணா போராட்டம், நான்காவது நாளாகதொடர்ந்தது.
ஆனால் அசராத கிரண்பேடி, 'சாதாரண நபர், இது போல, முதல்வர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினால்,போலீசார் என்னநடவடிக்கை எடுத்திருப்பர்' என, கைது நடவடிக்கை குறித்து மறைமுகமாக கூறியுள்ளார்.
புதுச்சேரி ஆளுநராக  கிரண்பேடி பொறுப்பேற்றவுடன், வார இறுதி நாட்களில், அதிகாரிகளுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று, ஆய்வு மேற்கொள்ள துவங்கினார்.
கவர்னர் செல்லும் இடங்களில் எல்லாம், காங்., - எம்.எல்.ஏ.,க்களும், அக்கட்சியினரும் போராட்டம் நடத்தினர்.

 இதனால், கவர்னர் மற்றும் முதல்வர் இடையிலான பனிப்போர் வெடித்தது.
அனைத்து துறை அதிகாரிகளையும் கவர்னர் மாளிகைக்கு வரவழைத்து, துறையின் செயல்பாடுகள், திட்டங் கள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, பல்வேறு உத்தரவுகளையும், கிரண்பேடி பிறப்பித்தார்.
அதிகாரிகளை உள்ளடக்கிய, 'வாட்ஸ் ஆப்' குழு ஆரம்பித்து, அதன் வாயிலாகவே, உத்தரவு களையும் பிறப்பித்தார்.
இதற்கு, முதல்வர் நாராயணசாமி, கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி என்ற முறையில், தனக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறி, அதிகாரிகளை அழைத்து, கவர்னர் கிரண்பேடி ஆலோசனை நடத்துவதும், நேரடியாக உத்தரவு பிறப்பிப்பதும் தொடர்ந்தது
.இதற்கிடையில், விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யும் அரசின் முடிவுக்கு அனுமதி மறுத்தது,
 பா.ஜ.,வை சேர்ந்த தன்னைப்போன்றே தேர்தலில் டெபாசிட் இழந்த மூன்றுபேர்களை  மாநில  அரசுக்கு தெரியாமல் முறைகேடாக நியமன எம்.எல்.ஏ.,க்களாகபதவி பிரமாணம் செய்து வைத்தது,
 வாரிய தலைவர்களின் பதவி காலத்தை நீடிக்க நிபந்தனை விதித்தது உள்ளிட்ட பிரச்னைகளால்,
ஆட்சியாளர்களுக்கும் கிரண்பேடிக்கும் இடையிலான மோதல், பகிரங்கமாக வெடித்தது.

இலவச அரிசி, இலவசவேட்டி சேலை வழங்கும் திட்டம் தொடர்பான கோப்பு, கவர்னரின் அனுமதிக்கு சென்றபோது, 'அதற்கு பதிலாக, பணமாக வழங்கலாம்' என, கிரண்பேடி கூறினார்.
இதை எதிர்த்து, ஆட்சியாளர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போல் புதுச்சேரி மக்கள் அனைவருக்கும்  பொங்கல் பரிசு வழங்குவதற்கான கோப்பை அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்குவதற்கு அனுமதியளிக்க, கிரண்பேடி மறுத்தார்.

இந்நிலையில், சட்டமன்றத்தில் முடிவெடுக்கப்பட்ட 36 முடிவுகளை  பட்டியலிட்டு, அவற்றை நிறைவேற்ற வேண்டும் என கேட்டு, கடந்த 7ம் தேதி,ஆளுநருக்கு, முதல்வர் நாராயணசாமி கடிதம் அனுப்பி இருந்தார்.

சமீபத்தில் நடந்த, சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, 'மக்களிடம் படிப்படியாக விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன் பின், ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க வேண்டும்' என, அதிகாரிகளுக்கு, முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டிருந்தார்.


இருந்தபோதும், கடந்த,11ம் தேதியில் இருந்து, புதுச்சேரியில், ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. ஹெல்மெட் அணியாத, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் விபரங்களை, போலீசார் பதிவு செய்துள்ளனர்.
அதை எதிர்த்து மாநிலம் முழுக்க பல் இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.பல்வேறு கட்சியினரும்,பொது மக்களும் அதிக அளவில் கலந்து கொண்டனர்.இது அரசுக்கு தலைவலியைத்தந்தது.ஹெல்மெட் படிப்படியாக கட்டாயம் என்று அரசு சொல்லிய நிலையில் வழக்குகளை ஆளுநரே சென்று காவல்துறையினரை வைத்து வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிப்பது ஏன் என்று கேள்விகள் எழும்பின.

ஆளுநர் ஆணைப்படியே ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக காவல்துறையினரால் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, முதல்வர் குற்றம்சாட்டினார்.
. இதனால் மோதல், மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியது.

இந்நிலையில், 'மக்கள் நலத் திட்டங்களுக்கு முட்டுக் கட்டை போடுகிறார்; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்' என, கிரண்பேடியை கண்டித்தும், கடிதத்தில் குறிப்பிட்டுள்ள, 36 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியும், முதல்வர் நாராயணசாமி, திடீர் போராட்டத்தில் குதித்தார்.

முதல்வர், நாராயணசாமியுடன், அமைச்சர்களும், காங்., - தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும் கருப்பு சட்டை அணிந்து, கடந்த, 13ம் தேதி, கவர்னர் மாளிகையான, ராஜ்நிவாஸ் எதிரில், தர்ணா போராட்டத்தை துவக்கினர். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, இந்திய கம்யூ., - மார்க்சிஸ்ட், - வி.சி., உள்ளிட்ட கட்சியினரும், தர்ணாவில் பங்கேற்று உள்ளனர்.
போராட்டம் நடத்தி வருவோரிடம் பேச்சு நடத்தாமல்,கண்டு கொள்ளாமல்  கிரண்பேடி, டில்லிக்கு சென்று விட்டார் .

இதனால், நேற்று நான்காவது நாளாக, போராட்டம் தொடர்ந்தது.
இரவில், ராஜ்நிவாஸ் எதிரிலேயே, நடுரோட்டில் படுத்து துாங்கி, காலையில் எழுந்து, மீண்டும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.அசாதாரணமான சூழல் நிலவுவதால், அதிவிரைவு அதிரடி படையினரும், மத்திய
ரிசர்வ் போலீசாரும் புதுச்சேரியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
கைது நடவடிக்கை?

ஆளுநர் மாளிகை எதிரில், அமர்ந்து, கோப்புகளில், முதல்வர், நாராயணசாமி கையெழுத்திடும் போட்டோவை, கிரண்பேடி 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டு"இது, சட்டப்படி சரியா, மிஸ்டர் முதல்வர்? சாதாரண நபர், உங்கள் அலுவலகம் எதிரில் அமர்ந்து, இதுபோல செய்தால், போலீசார் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நீங்கள் எதிர்பார்ப்பீர்கள்? அதை, செய்யுங்கள். உள்ளூர் போலீசார், தயவு செய்து நடவடிக்கை எடுப்பரா?
என்று கூறியுள்ளார்.

அத்துடன்அதிகாரிகளிடம் 'முதல்வர் அலுவலகம் முன், சாதாரண நபர் தர்ணா செய்தால், அவர் கைது செய்யப்பட்டிருப் பார்; அதுபோல், ராஜ்நிவாஸ் எதிரில் அமர்ந்துள்ள முதல்வரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கிரண்பேடி கூறியுள்ளதாக பேசப்படுகிறது.

முதல்வர் -ஆளுநர் சண்டையில் அதிகாரிகள் பாடுதான் பெரும் திண்டாட்டம்.
அதை விட  பாவம் புதுசேரி மக்கள் நலன்தான்.
மத்தியபாஜக  அரசு இந்திய மக்கள் விரும்பியோ,விரும்பாமலோ மக்காளால் தேந்தெடுக்கப்பட்ட அரசுதான்.
அது தன்னாட்சி அமைப்பான தேர்தல் ஆணையம் ,ரிசர்வ் வங்கி முதல் சிபிஐ வரை தலையிட்டு முறைகேடுகளை செய்யும் உரிமையை வைத்திருக்கும்போது தன்னைப்போன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடவடிக்கைகளை தடுக்கும் ஆளுநரை தட்டி வைப்பதே நல்லது.

ஆனால் முதல்வரையும்,ஆளுநரையும்  அவர்கள் பதவிநிலையை வைத்துப் பார்க்காமல் காங்கிரஸ்,பாஜக என்று கட்சி அடிப்படையில் பார்ப்பதால்தான் இந்த மோதல்கள்.
இப்போதைக்கு இந்த போராட்டம் நல்ல முடிவைத்தந்து இந்த மோதல் போக்கினை முடித்து வைத்துவிடும்,வைக்க வேண்டும்.
=====================================================
ன்று,
பிப்ரவரி-17.

 சூயஸ் கால்வாய் வழியாக முதலாவது கப்பல் சென்றது(1867)

நியூஸ் வீக், முதலாவது இதழ் வெளியானது (1933)

மக்கள் சீன குடியரசுக்கும், வியட்நாமுக்கும் இடையே போர் ஆரம்பமானது(1979)

 விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது(2000)

 கொசோவா விடுதலையை அறிவித்தது(2008)
====================================================
 "டிக் டாக் " கும் , "டொக் டொக்" கும்.

கட்சி கடந்து, அரசியல் கொள்கைகள் கடந்து டிக் டாக் முடக்கப்பட வேண்டும் என்பதில் மட்டம் தான் கட்சிகள் ஓரணியில் நிற்கின்றன.
 தமிமுன் அன்சாரி " டிக் டாக் முடக்கப்பட வேண்டும்" என்கிறார்.
அவர் எதைப்பேசினாலும் எதிர்த்தேப்பேசும்  தமிழிசை" முடக்கப்பட்டால் முதலில் சந்தோஷப்படுவது நானாகத்தான் இருக்கும்" என்கிறார் .
''சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள், பெண்கள், இளம் பருவத்தினரை அதிகம் பாதிக்கும் 'டிக் டாக்' செயலியைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என தமிழக தகவல் தொடர்புத் துறை அமைச்சர் மணிகண்டன் சட்டமன்றத்தில் உறுதியளித்திருக்கிறார்.
திறமைகளை வெளிப்படுத்த சரியான இணைய வெளி தளம் இது. பயனர்கள் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். அதே சமயம், டிக் டாக் நிறுவனமும் சில கட்டுபாடுகளை கொண்டு வர வேண்டும். மோசமான காணொளிகளை பதிவேற்ற செய்ய முடியாத படி செய்ய வேண்டும்.
 ஆண்களை  விட அதிகளவில் பெண்கள் டிக் டாக்கை  பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் சில பெண்கள் ஆடுவதைப்பார்த்தால் ஆபாசமாக,காமரசம் சொட்ட இருக்கிறது.இதுதான் அதிக அளவில் டிக் டாக் பயன்படுத்தும் பெண்கள் மீதான  குற்றசாட்டு.
திறமைகளை வெளிப்படுத்த தகுந்த நல்ல மேடைதான் டிக் டாக். ஆனால், அதை பயன்படுத்த அதிகளவில் சுயக்கட்டுபாடு தேவை. இதில் என்ன பிரச்சனை என்றால் சுயகட்டுப்பாட்டை தகர்க்கும் விஷயங்கள் அதிகளவில் டிக் டாக்கில் உலவுவதுதான்.அதை ஒரு போதை பொருளாக்கிவிட்டனர்.
இவ்வேளையில்  டிக் டாக் போன்ற செயலிகளை தடை செய்ய முடியாது.அப்படி செய்தலும் அதுபோல் இன்னொன்று வரும்.
 ஒரு செயலி முடக்கப்பட்டால் இன்னொரு செயலி ஆப் ஸ்டோரில் கிடைக்கும்.அது இதைவிட ஆபத்தானதாக அமையலாம்..
"டிக் டாக் பயன்படுத்தும் பெண்கள் டிக் டாக் தங்கள் வளர்ச்சிக்கு உதவுவதாக கூறுகிறார்கள்.

அது எந்த வகை உதவி என்று தெரியவில்லை.சில பெண்கள் தங்கள் திறமை அதில் தெரியவருகிறது என்கிறார்கள்.ஆனால் இச் செயலியில் வரும் பெண்கள் காணொளிகள் பெரும்பான்மை ஆபாச குத்துப்பாட்டாகத்தான் உள்ளது.இடுப்பை ஆபாசமாக அசைத்தும்,மார்பை அசிங்கமாக குலுக்கிக்காண்பதும்தான் திறமையின் வெளிப்பாடாக பலப்பெண்கள் எண்ணுவதுபோல் தெரிகிறது.
இவை வீட்டுக்குள் பெற்றோர்கள்,மற்றோர்களால் முடக்கி வைக்கப்பட்டுள்ள பெண்கள் தங்கள் மன அழுத்தத்தை வெளிக்காட்டவே டிக் டாக் செயலியை தேர்ந்தெடுக்கிறார்கள்.அதில் வெளியாகும் மனா அழுக்கை தங்கள் திறமையின் வெளிப்பட்டு என்று தவறாக எண்ணிக் கொள்கிறார்கள்.
அவர்களை உண்மையான திறமையை வெளிப்படுத்த பெற்றோர்,மற்றோர் நல்ல வழியைக்காட்ட வேண்டும்.இதே டிக் டாக்கை தங்கள் உயர்வுக்கு பயன்படுத்தவும் அவர்கள் முடியும்.அவர்களது தவறான எண்ணத்தை மற்ற வேண்டும்.
அது போனற ஆபாசங்கள் களைவது போல் இசசெயலியை மேம்படுத்துவதே தீர்வாக அமையும்"என்கிறார்  மனநல மருத்துவர்.


இணையம் மூலமாக செயல்படும் செயலிகளை அரசாங்கம் நினைத்தால் சுலபமாக முடக்க முடியும்.
 ட்ராய் அமைப்பு இருக்கிறது. அவர்கள் இணைய சேவை அமைப்பிற்கு சில கட்டளைகளை பிறப்பித்தால்போதும். ஆனால், இணையம் தேவைப்படாத செயலிகளுக்கு புது பதிப்பு கிடைக்கத்தான் செய்யும் . அதனால் அதை முடக்குவது சாத்தியமில்லாதது.
.
மீண்டும் மீண்டும் வேறு செயலிகள் வந்தால் என்ன செய்வது? என்ற நம் கேள்விக்கு.
 அதனை ட்ராய்தான் கண்காணிக்க வேண்டும். ட்ராயினால் இது முடியும். ஆனால், அதே நேரம் ட்ராய் கண்காணிக்க முடியாதபடி வி.பி.என் (Virtual Private Network) பயன்படுத்தி செயலிகளை இயக்கினால் எதுவும் செய்ய முடியாது.என்பதே விடையாகக் கிடைக்கிறது.

"டிக் டாக்" செயலி நிறுவனம் "விதிகளை மீறுவது போல் யாரேனும் பயன்படுத்தினால், அதுதொடர்பாக சுலபமாக புகார் செய்வதற்கு ஏதுவாக நாங்கள் செயலியை வடிவமைத்துள்ளோம்.
 உள்ளூர் சட்ட திட்டங்களையும் நாங்கள் மதிக்கிறோம்.

இந்தியாவில் சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதற்காக சிறப்பு அதிகாரியை நியமிக்க உள்ளோம்.

இணையத்தை முறையாக பயன்படுத்துவது தொடர்பாக பிரசாரங்களையும் மேற்கொண்டுவருகிறோம். இணைய பாதுகாப்பு தினமான பிப்ரவரி 5ஆம் தேதி #SafeHumSafeInternet என்ற தலைப்பில் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளோம். 'சைபர் பீஸ் ஃபவுண்டேஷன்' என்ற அரசுசாரா அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.
என்றே சொல்கிறது.அதுதான் நடக்கக்கூடிய செயலும்.
தடை என்பது நிரந்தரத் தீர்வாகாது.
"டிக் டாக் "தடையானால்  புது செயலி "டொக் டொக்"  வந்து ஆன்றாய்ட் கதவைத்த்ட்டும்.
இருப்பதை முறையாகப்பயன்படுத்தவேண்டும்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

 நீடிக்கக்கூடாது.-2.
புல்வாமா தீவிரவாத தாக்குதல் குறித்த நடவடிக்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொள்ளாமல், தேர்தல் பணிக்காக ஓடியிருக்கிறார் பிரதமர் பொறுப்பில் இருக்கும் மோடி.

காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40-க்கும் அதிகமான சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளார்கள்.


இந்த செயலை செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
  உளவுத்துறை எச்சரித்தும் தக்கபாதுகாப்பு நடவடிக்கை எடுக்காத நிர்வாகம் மீதும் மக்கள் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

அப்படி எடுத்திருந்தால் இந்த படுகொலை பயங்கரவாதத் தாக்குதல் நடந்திருக்க முடியாது . என்ற எண்ணம் நட்டு மக்கள் நடுவில் பரவலகப்பேசப்பட்டு வருகிறது.

 மோடியும் மக்களின் கோபத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் நடந்த தாக்குதலுக்கு 10 பேர்கள் பலியானதுக்கு அவருக்கு சேலை அனுப்பியவர்தான் மோடி பாஜக கட்சி.


ஆனால் மன்மோகன் சிங் பத்து ஆண்டுகால ஆட்சியில் பலியான ராணுவ வீரர்கள் எண்ணிக்கை 115.
மோடியின் இந்த நான்கரை ஆண்டு ஆட்சியில் பலியானவர்கள் 1120.
இவரிடம்தான் நாட்டை பாதுகாக்க வரும் தேர்தலிலும் ஆட்சியை ஒப்படைக்ககச்  சொல்கிறார்கள்.

இந்நிலையில் தீவிரவாத தாக்குதல் நடந்த இரண்டு நாட்களிலேயே தன் அரசியல் பணிகளை கவனிக்க கிளம்பிவிட்டார் பிரதமர் மோடி.

புல்வாமா தீவிரவாத தாக்குதல் குறித்த பாஜக விவாதத்தில் கலந்துகொள்ளாமல் கிளம்பிவிட்டார்.
உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில்தான் விவாதம் நடத்தப்படுகிறது. சிஆர்பிஎப் வீரர்கள் இறந்து இரண்டே நாள்தான் ஆகிறது,
 நேற்று வந்தே பாரத் அதிவேக ரயில் ப்ராஜட்டை தொடங்கி வைக்கிறார் மோடி, அந்த நிகழ்வை அவரால் ஒதுக்கி வைக்க முடியும் என்றாலும்  அதை செய்யவில்லை.காரணம் வாக்குப்பொறுக்குவதுதான்.

ஆனால் அந்த ரெயில்தான் நடுவில் பழுதாகி நின்று மோடி முகத்தில் கரியை பூசிவிட்டது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?