மோ(ச)டி எத்தனை மோ(ச)டிகளடி?


1.அம்பானி பிஸ்கட்டுக்கு வாலாட்டிய -- - - -.

உச்சநீதிமன்ற நீதிபதி தீர்ப்பை திருத்திய  பதிவாளர்கள் மோசடி !


-எரிக்சன் நிறுவனத்திற்கு, செலுத்த வேண்டிய ரூ. 550 கோடியை உச்ச நீதிமன்றம் கொடுத்த அவகாசத்தில் திருப்பிக் கொடுக்காததால், ரிலையன்ஸ் குழும முதலாளி அனில் அம்பானி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இதில், அனில் அம்பானி நேரில் ஆஜராக உச்ச நீதிமன்ற நீதிபதி நாரிமன் உத்தரவு பிறப்பித்தார்.
அதன்படியே கடந்த 2 நாட்களாக உச்ச நீதிமன்றத்தில் அனில் அம்பானி ஆஜராகி வருகிறார்.


இதனிடையே, 

அம்பானி நேரில் ஆஜராக வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை, இணையதளத்தில் பதிவிடும்போது, நீதிமன்ற துணைப் பதிவாளர்களான மாயங் சர்மா, தபான் குமார் சக்ரவர்த்தி ஆகிய இருவரும், 
அம்பானிக்கு சாதகமாக தீர்ப்பையே திருத்தியுள்ளனர். 

அதாவது குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்திற்கு நேரடியாக வர வேண்டியதில்லை என்று பொருள்படும் வகையில் ‘நாட்’ என்ற வார்த்தையை அம்பானி ஆணையின்படி இடைச்சொருகலாக  உத்தரவுக்குள் சேர்த்துள்ளனர் .


நீதிமன்ற விதிமுறைகளுக்கு மாறாக இந்தத் திருத்தம் செய்யப்பட்டதை கண்டுபிடித்த நீதிபதி நாரிமன், இதனை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிரஞ்சன் கோகோய் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

இது மேலிருந்து வந்த பரிந்துரை என்று பதிவாளர்கள் கூறினாலும் ஒரு நீதிபதியின் உத்திரவை அவருக்குத்தெரியாமல் நேர் எதிராக மாற்றுவது தவறு என கண்டிக்கப்பட்டு, துணைப் பதிவாளர்கள் இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
2. மத்திய அரசின் மோசடி பென்சன் திட்டம்
                                                              

44 அடிப்படை தொழிலாளர் சட்டங்களை 4 சட்டத் தொகுப்புகளாக சுருக்க மத்திய அரசு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
இதில் ஒன்றுதான் சமூகபாதுகாப்பு சட்டத் தொகுப்பு என்பதாகும்.

 அகில இந்திய முறைசாராத் தொழிலாளர் சமூக பாதுகாப்பு சட்டம்,2008, கட்டிட, கட்டுமான தொழிலாளர் சட்டம்,பீடி தொழிலாளர் சட்டம், உட்பட பல சட்டங்களை உள்ளடக்கியதே இந்த சட்டத் தொகுப்பு. 2008 சமூக பாதுகாப்பு சட்டம் அமலாக்க, முந்தைய அரசு ஒதுக்கிய ரூ.1000 கோடியை கூட, மோடி அரசு செலவு செய்யாமல் நிதி அமைச்சகத்திற்கே திருப்பிவிட்டது.

தற்போது 2008 முறைசாராத் தொழிலாளர் சமூக பாதுகாப்பு சட்டப் பிரிவு 3(1) (ஊ)-ன்கீழ், முறைசாரா தொழிலாளர்க்கான ‘பிரதான்மந்த்ரி ஷரம்-யோகி மாந்தன் ’என்ற திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் பிப்ரவரி 1ல் பட்ஜெட்டின் ஒரு பகுதியாக அறிவித்தார்.
பிப்ரவரி 15 முதல் அமலாக்கப்படும் எனவும் அறிவித்தார்.

மைய அரசின் இந்தவேகம், 42 கோடி முறைசாராத் தொழிலாளர்களை ஏமாற்றி, அவர்களின் வாக்குகளை பெறவே.மத்திய அரசு ஏற்கனவே கொண்டுவந்த ‘அடல் பென்சன் யோஜனா’வின் செயல்பாடு குறித்து மவுனமாக உள்ளது.
 புதிய பென்சன் திட்டம் 18 வயது முதல் 40 வயது வரை, மாதவருமானம் ரூ.15,000க்குக் கீழ் உள்ள முறைசாராத் தொழிலாளர்க்குப் பொருந்தும். சுமார் 25 கோடிப் பேர் இந்த வயது வரம்பில் வருவர்.

 18 வயது முதல் 40 வயது வரை உள்ளதொழிலாளி மாதம் ரூ.55 முதல் ரூ.200 வரைதொடர்ச்சியாக 60 வயது வரை வங்கிக் கணக்கு மூலம் அரசுக்கு செலுத்த வேண்டும்.மத்திய அரசு தனது பங்காக, சமமான தொகை செலுத்துமாம்! 60 வயதில் ரூ.3000 பென்சன் கிடைக்குமாம்.

முறைசாராத் தொழிலாளர்க்கு வேலைக்கோ, வருமானத்திற்கோ நிரந்தர உத்தரவாதமில்லை.

தேசிய மொத்த உற்பத்தியில் சரிபாதி, 42 கோடி முறைசாரா தொழிலாளர்உழைப்பு மூலம் உருவாகிறது.

சாலையோர வியாபாரிகள், ரிக் சா இழுப்பவர், கட்டுமானத் தொழிலாளர், குப்பை சேகரிப்பவர், வீட்டு வேலை செய்வோர், விவசாயத் தொழிலாளர், பீடித் தொழிலாளர், கைத்தறி தொழிலாளர், சுமைப்பணி தொழிலாளர் போன்ற பல்வகை முறைசாராத் தொழிலாளரும் அரசின் பென்சன் திட்டத்தில் சேரலாம்!விவசாயத் தொழிலாளர்கள், அவர்களுக்கான தனியான அகில இந்திய சமூக பாதுகாப்புச் சட்டம் கோரி நாடு முழுவதும் போராடிவருகிறார்கள்.

பெரும்பாலான முறைசாராத் தொழிலாளர்படிக்காதவர்கள்.

ஸ்மார்ட் போன் மூலம் வங்கிக்கணக்கு செயல்படுத்த தெரியாதவர்கள்.

வங்கிகளுக்கு சென்று பங்களிப்பு தொகை செலுத்த அவர்களுக்கு ஏது நேரம்?

 வங்கிகளேஇல்லாத கிராமங்கள் ஏராளமாக உள்ளன.தற்போது மாநில அரசின் முறைசாரா நல வாரியங்கள் மூலம் பென்சன் பெற்றுவரும் தொழிலாளர்களின் மாதபென்சன், மோடி அரசின் திட்டத்தால் எவ்வகையிலும் உயராது.

40வயதுக்கு மேல் உள்ள தொழிலாளரே பென்சன் குறித்து சிந்திப்பர்.அரசு நிர்ணயித்துள்ள பங்களிப்பு தொகை,உதாரணமாக 40 வயது தொழிலாளி மாதம் ரூ.200, 20 ஆண்டுகள் செலுத்தினால், 60 வயதில்அவருக்கு கிடைக்கும் ரூ.3000 பென்சனின்உண்மை மதிப்பு, எந்த பங்களிப்பும் இல்லாமல், தொழிலாளி இன்று பெற்றுவருகிற ரூ.1000த்தை விட குறைவானதாகவே இருக்கும்.

எல்.ஐ.சி கிளை அலுவலகங்கள், எல்.ஐ.சிமுகவர்கள், பி.எப்/ இ.எஸ்.ஐ கள அலுவலகங்கள் மற்றும் மாவட்ட தொழிலாளர் அலுவலகங்களில், முறைசாராத் தொழிலாளரை பென்சன் திட்டத்தில் சேர்க்க வசதி செய்து கொடுப்போர் இருப்பார்களாம்.

திட்டத்தில் சேரதொழிலாளி விருப்ப படிவத்தை பூர்த்தி செய்து,ஆதார் எண், வங்கி சேமிப்பு கணக்கு / ஜன் தன் கணக்கு எண் போன்றவை குறிப்பிட்டு கையொப்பம் இட்டுக் கொடுத்துவிட்டால், மாதா மாதம் அவரது வங்கி கணக்கிலிருந்து மத்திய அரசின் பென்சன் நிதிக்கு தொழிலாளியின் பங்களிப்பு தொகை எடுக்கப்பட்டுவிடும்.மத்திய அரசு தனது இடைக்கால பட்ஜெட்டில், முறைசாராத் தொழிலாளர் பென்சன் திட்டத்திற்காக ரூ.500 கோடி மட்டுமேஒதுக்கியுள்ளது.

 முறைசாராத் தொழிலாளர் சமூக பாதுகாப்பிற்காக ஆண்டுதோறும் ரூ.1.5லட்சம் கோடி மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்பது நாட்டின் ஒட்டுமொத்த தொழிற்சங்க, இயக்கத்தின் பொது கோரிக்கையாகும்.

20 கோடிப்பேர் பங்கேற்ற ஜனவரி-8-9 அகில இந்திய பொது வேலை நிறுத்தத்திலும் இக்கோரிக்கை இடம் பெற்றிருந்தது.

முறைசாராத் தொழிலாளர்க்கு அவர்களின் பங்களிப்பு எதுவும் இன்றி, அரசு மாத பென்சன்ரூ.6000 வழங்கவேண்டும் என்ற கோரிக்கையும் வேலை நிறுத்த கோரிக்கைகளில் ஒன்று.பெண் தொழிலாளர்க்கு 55 வயதில் பென்சன் வேண்டும் என்ற கோரிக்கை உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு குடும்பம் ஆண்டுதோறும் ரூ.5லட்சம்வரை இலவச மருத்துவ சிகிச்சை பெறும் காப்பீடு திட்டம்தான் மத்திய அரசின் ‘ஆயுஸ்மான் பாரத்’ திட்டம். மத்திய மாநிலஅரசுகள் பொது சுகாதாரம் பலப்படுத்துவதற்கு பதிலாக, உள்நாட்டு, பன்னாட்டு காப்பீடு கம்பெனிகளுக்கு மக்களின் வரிப்பணம் தாரை வார்க்கும் திட்டமே இது.

பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீம யோஜனாமற்றும் பிரதான் மந்த்ரி சுரக்ஷா பீம யோஜனா திட்டங்களின் கீழ், இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம், விபத்து மரணத்திற்குரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனஅரசு கூறுகிறது.

இவைகளும் காப்பீடு திட்டங்களே.

காப்பீட்டு கட்டணம் ஆண்டுதோறும் ரூ.342 தொழிலாளி செலுத்த வேண்டும் என கூறப்படுகிறது. ஜீவன் ஜோதிபீம யோஜனாவில் 18வயது முதல் 50வயது வரை உள்ள தொழிலாளியே சேரமுடியும்.
 ஆண்டு தோறும் மே 31க்குள், அவரது வங்கிமூலம் ரூ.330 காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்தினால், அடுத்த ஆண்டு மே-30க்குள்இறந்தால் நிவாரணங்கள் கிடைக்கும்.

 ஒவ்வொரு ஆண்டும் மே.31க்குள் தொழிலாளி தனது பங்களிப்பு செலுத்திவந்தால் மட்டுமே, அந்தந்த ஆண்டுக்கு ஆயுள் காப்பீடு கிடைக்கும்.

முறைசாராத் தொழிலாளர்கள் தங்களதுபங்களிப்பு தொகை என எதுவும் செலுத்தாமல்,அரசு மூலம் இயற்கை மரண நிவாரணம் ரூ.2லட்சம், விபத்து மரண நிவாரணம் ரூ.5லட்சம்கிடைக்க வேண்டும் என்பதே நமது கோரிக்கை.
நாடாளுமன்ற தேர்தலுக்காக மோடி அரசுபோடும் வேஷங்களை, போலியான வாக்குறுதிகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். கண்ணியமான சமூக பாதுகாப்பு திட்டங்களுக்காக தொழிலாளி விவசாயிகள் விவசாயதொழிலாளர் இணைந்து போராடுவோம்.
                                                                                                               -ஆர்.சிங்காரவேலு்.

====================================================
ன்று,
பிப்ரவரி-15.
செர்பியா தேசிய தினம்

அமெரிக்காவில் செயின்ட் லூயிஸ் நகரம் அமைக்கப்பட்டது(1764)
ரஷ்யாவில் அதிபர் பதவி ஏற்படுத்தப்பட்டது(1994)
 யூட்யூப் சேவை அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது(2005)
====================================================
3.மாணவர்களின் கல்வியில் மண்ணைப் போட்ட மோடி அரசு!
2018-19ஆம் நிதியாண்டுக்கான மத்தியஅரசின் வரவு - செலவுகள் குறித்த, தணிக்கை அறிக்கையை, மத்திய தலைமைக் கணக்கு தணிக்கை அதிகாரி தற்போதுவெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், அதில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
மோடி அரசு, விளம்பரம் மற்றும்  தனது நிர்வாக செலவுகளுக்காக, ரூ. 99 ஆயிரத்து 610 கோடியை ஊதாரித்தனமாக செலவிட்டுள்ளது ஒருபுறம் என்றால், மற்றொரு புறம் 18 வகையான திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவிடாமல் அப்படியே வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் திட்டங்களுக்கும், நிர்வாகச் செலவுக்கும், பட்ஜெட்டில் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு நிதி ஒதுக்கீடுசெய்யப்படுகிறது. அதற்குமேல் நிதிதேவைப்பட்டால், அதற்கு நாடாளுமன்றத் தின் அனுமதியைப் பெற்று எடுத்துக் கொள்ளலாம்.

நாடாளுமன்றத்திற்குத் தெரியாமல் எந்த செலவினமும் மேற்கொள்ளப் படக் கூடாது.

 ஆனால், மத்திய மோடி பாஜக அரசானது, 2017-18 நிதியாண்டில் அனுமதிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டைக் காட்டிலும், கூடுதலாக ரூ. 99 ஆயிரத்து 610 கோடியை செலவிட்டிருப்பதாக, மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி கூறியுள்ளார். 
அவைகள் பாஜக அரசு விளம்பரம்,வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்கு மடை மாற்றி விடப்பட்ட செலவினங்கள்.

மேலும், நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல், சட்டத்தை மீறிய வகையில் இந்த செலவுகளை மத்திய அரசுசெய்திருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். 

இதே மோடி அரசானது, நாடாளுமன்றம்அனுமதி வழங்கியும், மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை செலவிடாமலும் நாட்டைக் கெடுத்துள்ளது.

மொத்தம்18 வகையான திட்டங்களுக்கு ஒதுக்கப் பட்ட நிதியை, மோடி அரசு செலவிடவே இல்லை என்று கணக்குத் தணிக்கை அதிகாரி கூறியுள்ளார்.
11 திட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்ட நிதியில், ரூ. 11 ஆயிரத்து17 கோடியை குறைவாக செலவு செய்துள் ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவை அனைத்தையும் விட முக்கியமானது என்னவென்றால், கல்வி நிதிக்காக நாட்டு மக்களிடம் வசூலிக்கப்பட்ட வரித் தொகை ரூ. 94 ஆயிரத்து 38 கோடியை செலவு செய்யாமல் அப்படியே மோடி அரசு வைத்திருக்கிறதாம். 

நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கல்வித்துறைக்கென்று, வசூலிக்கப்பட்ட வரியை மாணவர்களுக்கு செலவிடாமல், நீட் எல்லாம் கொண்டுவந்து மாணவர்கள் கவனத்தை திசைதிருப்பி மோடி அரசு ஏமாற்றி உள்ள   தகவல் வெளியாகியுள்ளது மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?