ஆசிரமம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்

மோடி அரசு திவால் அறிக்கை.?
மோடி அரசு உண்மைத் தரவுகளை மக்களுக்குத் தெரிவிக்காமல் மறைப்பதிலும், அதற்குப் பதிலாக வெத்துவேட்டு வாக்குறுதிகளைஅளிப்பதிலும் புகழ்பெற்ற ஒன்றாக மாறியிருக்கிறது.

இந்த அணிவகுப்பில் இப்போது 2019-20க்கான இடைக்கால பட்ஜெட்டும் சேர்ந்து கொண்டிருக்கிறது.
நிதி அமைச்சர் பொறுப்பில் இருப்பவர் (பியுஸ் கோயல்), மோடி அரசாங்கத்தின் சாதனைகள் குறித்து தன்னுடைய உரையில் பீற்றிக்கொண்டிருப்பதுடன், மக்களுக்கு ஒரு வளமான எதிர்காலம் என்ற பெயரில் உறுதிமொழிகளை அள்ளித்தெளித்திருக்கிறார்.
இது அவதிக்குள்ளாகியிருக்கிற நாட்டு மக்கள் மத்தியில் ஒரு கொடூரமான நகைச்சுவையாகும்.
பாஜகவின் கடைசி பட்ஜெட்டால்  தாக்கிய பியூஸ்கொயல்

வெள்ளியன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் இந்த ஆண்டிற்கான இறுதி பட்ஜெட் கிடையாது.
 ஏனெனில் இதனைத் தாக்கல் செய்திடும் அரசாங்கமும், இதனைப் பரிசீலித்திடும் மக்களவையும் இன்னும் இரு மாதங்களில் முடிவுக்கு வரப்போகின்றன.


17ஆவது மக்களவைத் தேர்தலின்போது மக்கள் தங்கள் மனதை வெளிப்படுத்துவதைத் தொடர்ந்து புதிதாக அமையவுள்ள அரசாங்கம்தான் 2019-20க்கான வருவாய் ஈட்டல் மற்றும் செலவினங்களுக்கான ஒதுக்கீடுகள்தொடர்பாக இறுதிச் சித்திரத்தை அளித்திட முடியும் என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

மக்களின் தீர்ப்பு எப்படி அமைந்திடுமோ என்பது தொடர்பாக பாஜகவின் அச்சமும் விரக்தியும் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதற்கு இந்த இடைக்கால பட்ஜெட் சாட்சியமாக அமைந்திருக்கிறது.

வருவாய் வீழ்ச்சி ஆனால் பணக்கார்களுக்கு வரி இல்லை.

இந்த பட்ஜெட்டில் தரப்பட்டுள்ள ஏப்ரல்-நவம்பர் மாதங்களுக்கான விவரங்களிலிருந்து, 2018-19இல் மத்திய வரிகளிலிருந்து மொத்த வருவாய், முந்தைய இதே கால அளவுடன் ஒப்பிடும்போது, வெறும் 7.1 சதவீத அளவிற்கு மட்டுமேஉயர்ந்திருக்கிறது.
எனினும், 2018-19க்கான திருத்திய மதிப்பீட்டின்படி 2017-18க்கான வருவாயைவிட 17 சதவீதம் வளர்ச்சி மதிப்பிடப்பட்டிருக்கிறது.
இவ்வாறுசெய்தபின்னரும்கூட, ஓராண்டுக்கு முன் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டைவிட 23,067 கோடி ரூபாய் குறைவாகத்தான் வருவாய் வந்திருக்கிறது.

இந்த அரசு கடந்த ஆண்டு செய்ததைப் போலவே இந்த ஆண்டும், வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி வருவாய் தொடர்பாக ஊதிப்பெரிதாக்கப்பட்ட இலக்கங்களை அளித்திருக்கிறது. வருமான வரி வருவாய் குறைந்தபட்சம் 50 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்திருக்க வேண்டும்.

 மத்திய ஜிஎஸ்டி வருவாய்கள் குறித்த திருத்தப்பட்ட மதிப்பீடுகள், பட்ஜெட் மதிப்பீடுகளைவிட, அதாவது ஒருலட்சம் கோடி ரூபாயைவிட, மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது.
ஆயினும் 2018 ஜனவரி வரையிலும் வசூலான தொகைகூட உண்மைக்கு மாறான விவரம் என்று தான் காட்டுகின்றன.

அரசாங்கம் இதுதொடர்பான விவரங்களை மூடிமறைக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இல்லையென்றால் பணமதிப்பு நீக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அரசு விளக்க வேண்டிய தேவை ஏற்படும். இவ்வாறு வருவாய் வசூலில் குறைவு ஏற்பட்டுள்ள போதிலும், அரசாங்கம் பணக்காரர்கள்மீது செல்வவரி விதிப்பதற்கு முன்வராமல் 2016ல் விலக்கு அளித்தது போலவே இப்போதும் அளித்திருக்கிறது.

பணக்காரர்கள் இரண்டாவதாக வீடு வைத்திருந்தாலும் வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறார்கள். இப்படியாக மோடி அரசாங்கம் ஏழைகளிடமிருந்து கசக்கிப் பிழிந்து, பணக்காரர்களை மேலும் வளமானவர்களாக மாற்றிடும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.

மேலும் அதிர்ச்சியளிக்கக்கூடிய அம்சம் என்னவென்றால், வரிவருவாய் குறைந்ததன் காரணமாக ஏற்பட்டுள்ள சுமையை மாநில அரசுகளின் மீது ஏற்றியிருப்பதாகும். 2018-19இல் மத்திய அரசாங்கத்தின் நிகர வருவாய்கள் பட்ஜெட் மதிப்பீடுகளை விட சற்றே கூடுதலாக இருக்கிறது.
எனவே இதில் 26,639 கோடி ரூபாய் மாநில அரசுகளின் பங்காக விண்ணப்பிக்கப்பட வேண்டும்.
அதேபோன்று, ஜிஎஸ்டி காப்பீடு நிதிக்கு 38265கோடி ரூபாய் மாற்றப்பட வேண்டும்.
ஆனால் இவற்றை மத்தியஅரசு செய்யப்போவதில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால்,மாநில அரசுகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகையை ஒதுக்கிடாமல் தன் நிலையைக் காப்பாற்றிக்கொள்ள மத்தியஅரசு முயல்கிறது.
இதுதான் இவர்கள் கூட்டாட்சித் தத்துவத்திற்கு அளித்திடும் மரியாதையாகும்.இது தெரியாமல்,புரியாமல் தமிழ்நாடு முதல்வர் வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவருக்குதமிழ் நாடு நலனை விட தன்னைக்காப்பாற்றிக்கொள்வதுதானே முக்கியம். கொள்கை.

விவசாயிகள்: 2018 டிசம்பர் 1இலிருந்து விவசாயிகளுக்காக வருமான ஆதரவு திட்டத்தை அமல்படுத்துவதற்காக 20 ஆயிரம் கோடி ரூபாய் புதிதாக ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ள போதிலும், 2018-19க்கான மொத்தசெலவினத்தில் திருத்திய மதிப்பீடுகள், பட்ஜெட் மதிப்பீடுகளைவிடத் தாண்டவில்லை.
 மற்ற செலவினங்களை வெட்டியிருப்பதன் மூலம், குறிப்பாக ஜிஎஸ்டி காப்பீடு நிதிக்கு மாற்றியிருப்பதன் காரணமாக, இந்த ஒதுக்கீடு வந்திருக்கிறது. இந்த ஒதுக்கீடும் இந்தத் திட்டமும்கூட மோசடியானவையே.

நான்கு பேர் கொண்டஒருவிவசாயக் குடும்பத்திற்கு நாளொன்றுக்கு நான்கு ரூபாய் அவருடைய வாழ்வாதாரத்திற்காக அளிக்கப்போகிறோம் என்று சொல்வதை வேறெப்படிச் சொல்வது?

 விவசாயிகளின் வருமானங்களை அழித்தொழித்துள்ள விவசாய நெருக்கடியைத் தீர்த்திட எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல்; விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை அளிப்பது தொடர்பாக அளித்திட்ட உறுதிமொழிகளுக்குத் துரோகமும் செய்துவிட்டு, மூடி மறைத்திடவே அரசு முயன்று கொண்டிருக்கிறது.

ஓய்வூதியத் திட்டம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள பிரதம மந்திரி ஸ்ரம் யோகி மந்தன் என்கிற திட்டமும் மற்றுமொரு வெத்துவேட்டு வாக்குறுதித் திட்டமேயாகும்.

ஒரு நபர் ஒவ்வொரு மாதமும் 100 ரூபாய் பங்களிப்பினைச்செய்து வந்தால், 32ஆண்டுகள்கழித்து அவருக்கு மாதந்தோறும் 3000 ரூபாய் ஓய்வூதியம் அளிக்கப்படுமாம்.


 ஒரு நபர் இன்று அளித்திடும் 100 ரூபாய்என்பதுமுப்பது ஆண்டுகளுக்குப்பின் அதன் உண்மை மதிப்பு என்னவாக இருக்கும் என்று மோடி அரசாங்கம் எதிர்பார்க்கிறது?

இந்த உறுதிமொழியின் அடிப்படையில் இன்றைய தினம் இந்த அரசாங்கம் என்ன செய்ய இருக்கிறது? இதற்காக கூறப்பட்டுள்ள 500 கோடி ரூபாயும் தனிப்பட்ட பயனாளிகள் எவருக்கும் போய்ச்சேரப்போவதில்லை, மாறாக ஓய்வூதியம் நிதியம் அலலது சில இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கே சென்றுவிடும்.

பொருளாதார நிலைமை குறித்து அமைச்சர் கூறியுள்ளபோதிலும், தேசிய மாதிரி சர்வே ஸ்தாபனத்தின் தரவுகளைக் குறிப்பிடாமல் தவிர்த்துவிட்டார்.
அவ்வாறு குறிப்பிட்டிருந்தால் வேலை தேடுபவர்கள் வேலையை உருவாக்குபவர்களாக மாறியிருக்கிறார்கள் என்று கூறியிருக்க முடியாது.
 வேலை தேடுபவர்கள், வேலையை உருவாக்குபவர்களாக மாறியிருப்பதற்கு, அரசாங்கத்தின் கொள்கைகள் காரணமல்ல. மாறாக, வேலையிலிருந்தவர்களை வேலையிலிருந்து வெளியேற்றிவிட்டு, வேறு வழிதெரியாமல் தாங்கள் ஜீவித்திருப்பதற்காக ஏதேனும் வேலையை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளியிருக்கிறது.
நாம் வெளியே போகவேண்டிய நாள் அதோ.


இவ்வாறு இந்த பட்ஜெட்டானது மோடியின் “பக்கோடா” தத்துவத்திற்கு அதிகாரப்பூர்வமான முத்திரையைக் குத்தி இருக்கிறது.

2019-20க்கான மத்திய பட்ஜெட், மோடி அரசாங்கத்தின் திவால் தன்மையைப்பிரதிபலித்திடும் மற்றுமொரு பட்ஜெட்டேயாகும்.
விவசாய நெருக்கடியைத் தீர்ப்பதற்கோ, விவசாயிகளின்வறுமையை ஒழிப்பதற்கோ வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதற்கோ இந்த பட்ஜெட்டில் எதுவும் செய்யவில்லை.

இந்த மோசமான எதார்த்தநிலைமையை மறைத்து வருகின்ற மக்கலவைத்தேர்தலை கணக்கில் கொண்டே இந்த வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்துள்ளது பாஜக அரசு.
ஆனால் மக்கள் மோடி அரசின் நாலரை ஆண்டுகால ஆட்சியில் பலவகைப்பட்ட மோடியின் வாய்ப்பந்தல் பொய்களைக்கேட்டு அனுபவித்து நொந்து போயுள்ளார்கள்.
அவர்கள் இந்தப்போய் மூட்டை யை நம்ப மாட்டார்கள்.
அவர்கள் மனதில் உள்ளதைக்கண்டிட 2019 தேர்தல் முடிவுகள் வழிவகுத்திடும் என்று நம்புவோம்..
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 போலி சான்றிதழ் மூலம் பட்டம் பெற்றதாக கூறும் பிரதமர் மோடியின் பேச்சை மாணவர்கள் கேட்பது அபத்தம் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஆனந்த் ஷர்மா தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி கடந்த செவ்வாயன்று 2000 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோரிடையே உரையாற்றினார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆனந்த் ஷர்மா, மோடியின் கல்வி சான்றிதழ் குறித்தும் அதன் உண்மை தன்மை குறித்தும் இதுவரை ரகசியமாகவே உள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்டதற்கும் மோடிக்கு பட்டம் வழங்கியதாக கூறப்படும் பல்கலைக் கழகம் பதில் அளிக்கவில்லை. இப்படி மோடியின் கல்வியே கேள்விக் குறியாக இருக்கும் போது அவர் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது சரியானது அல்ல. என்று தெரிவித்துள்ளார். 

மேலும் மோடியின் பேச்சை மாணவர்கள் கேட்கக் கூடாது. என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தீனதயாள் உபதயா என்பவர் யார்? 
அவருக்கு எதற்கு நினைவஞ்சலி மோடி நடத்துகிறார்? 
தீனதயாள் நாட்டுக்காக என்ன செய்தார்? 
என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
காந்தி நினைவுநாளில் மீண்டும் படத்தை சுடும் அமைப்பைசசேர்ந்த பாஜக,இந்திரா காந்தி, ஜவஹர்லால் நேரு போன்ற தலைவர்களின் நினைவு நாள் குறித்து  கவனம் செலுத்தியுள்ளதா? 
என்றுஆனந்த் ஷர்மா கேள்வி எழுப்பியுள்ளார்.

இவர் கேள்விகளை எழுப்பும் முன்னரே தமிழ்நாட்டில் மோடியின் பாடம் நடத்தல் காணொளியை மாணவர்கள் எதிர்ப்பு குரல் எழுப்பி புறக்கணித்து விட்டனர்.
====================================================

ன்று,
பிப்ரவரி-02.
மெக்சிகோவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே போர் நிறுத்தப்பட்டது(1848)
முதலாவது மின்சார வீதி விளக்குகள் இந்தியானாவில் நிறுவப்பட்டன(1880)
ஏற்றுமதி-இறக்குமதி வங்கி அமெரிக்காவில் துவங்கப்பட்டது(1934)
 ஹங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்டது(1946)

====================================================
 ஆசிரமம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்
                       ஒய்வு பெற்றவுடன் ஆசிரமம் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்...
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------
 திவாலான அனில் அம்பானி.
அம்பானி சகோதரர்களில் அனில் அம்பானிக்கு சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனம், ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ். இந்த நிறுவனம், தன்னை திவால் ஆனதாக அறிவிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ரிலையன்ஸ் கம்யூனிகேசன் பட்ட கடன்களை திருப்பி செலுத்துவதற்காக, கம்பெனிக்கு சொந்தமான சொத்துகளை விற்க கடந்த 2017-ம் ஆண்டு ஜூன் 2-ந்தேதி முடிவு செய்யப்பட்டது. 
18 மாதங்கள் ஆன பிறகும், சொத்துகளை விற்க முடியவில்லை. இதனால், கடன் கொடுத்தவர்களுக்கு சிறிதளவு கூட திருப்பி செலுத்த முடியவில்லை.

இந்தநிலையில், இதுபற்றி கம்பெனியின் இயக்குனர்கள் குழு வெள்ளிக்கிழமை (நேற்று) ஆலோசனை நடத்தியது. 
அதில், கம்பெனியை திவால் ஆனதாக அறிவிக்க மும்பையில் உள்ள தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தை அணுகுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதுதான், நிர்ணயிக்கப்பட்ட 270 நாட்கள் கால அளவுக்குள் விரைவான கடன் தீர்வுக்கு உகந்த வழிமுறை ஆகும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே 40000 கோடிகளில் அரசு வங்கிகளில் அனில் அம்பானி கடன் பாக்கி உள்ளது.
இவருக்குத்தான் மோடி ரபேல் போர் விமானம் பராமரிப்பு ஒப்பந்தத்தை அரசு நிறுவனமான HAL க்கு கொடுக்காமல் கொடுத்ததுடன் விமானம் வரும் முன்னரே 3000கோடிகளை முன்பணமாக வேறு இவரின் ஆரம்பிக்கப்படவே இல்லாத நிறுவணக்கணக்கில் போட்டு உதவினார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?