"கோத்ராவைப்போல் கராச்சியை எரியுங்கள்" .
“பிரதமர் மோடி அவர்களே, கோத்ரா போல ஒரு சம்பவத்தை நிகழ்த்தி பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டினால் நாடே உங்களுக்கு தலைவணங்கும்.”
"கோத்ராவைப்போல் ராவல்பிண்டி,கராச்சியை எரியுங்கள்" -சாமியாரினி பிராச்சி
காஷ்மீர் மாணவர்கள் மீது நாடெங்கிலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட தாக்குதல், சமூக ஊடகங்களில் முசுலீம்களுக்கு எதிராக விசம பிரச்சாரம் என இந்துத்துவ கும்பல் தேர்தல் நெருங்குவதையொட்டி வெறியாட்டம் போடுகிறது.
வெறுப்பைத் தூண்டி கலவரங்களை நிகழ்த்த காத்திருக்கும் இந்துத்துவ கும்பல் தலைவர்கள் விசத்தை கக்கத் தொடங்கியுள்ளனர்.
விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த சாமியார் பிராச்சி, புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு ஒரு யோசனை கூறுகிறார். கூடவே, மோடி முன்பு நிகழ்த்திய படுகொலைகளையும் ‘பெருமை’யுடன் நினைவு கூறுகிறார்.
கைகூப்பி வணக்க தெரிவிக்கும் பிராச்சி, “பிரதமர் அவர்களே, கோத்ரா போல ஒரு சம்பவத்தை நிகழ்த்தி பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டினால் நாடே உங்களுக்கு தலைவணங்கும்” என்கிறார்.
விசுவ இந்து பரிசத்தின் ‘யுவ வாஹினி’ பெண்கள் குண்டர் படையை தலைமையேற்று நடத்திவரும் பிராச்சி, உத்தரபிரதேசத்தில் பாஜக வேட்பாளராக களம் கண்டவர்.
“ராவல்பிண்டி மற்றும் கராச்சியை எரித்தால்தான் தீவிரவாதம் முடிவுக்கு வரும்” என்றும் அந்த வீடியோவில் பிரதமருக்கு ‘யோசனை’ சொல்கிறார் பிராச்சி.
2002 -ல் குஜராத்தில் நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை காரணம் காட்டி ஆயிரக்கணக்கான முசுலீம்களை கொன்று குவித்தது இந்துத்துவ கும்பல்.
அயோத்தியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த விசுவ இந்து பரிசத் அமைப்பினர் 60 பேர் கொத்ரா ரயில் பெட்டிக்குள் வைத்து எரிக்கப்பட்டனர்.
இதை செய்தது முசுலீம்கள் எனக் கூறி, பெரும் கலவரத்தில் ஈடுபட்டது இந்துத்துவ கும்பல். ‘ஒரு வினை நிகழ்ந்தால் அதற்கு எதிர்வினையும் இருக்கும்’ என்றார் அப்போதைய குஜராத் முதல்வர் மோடி.
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் குறித்து ஃபிராண்ட்லைன் இதழில் காங்கிரஸ் தலைவர் சங்கர்சிங் வகேலா, “தடயவியல் ஆய்வு கோத்ரா ரயிலுக்கு உள்ளே இருந்துதான் தீ பற்ற வைக்கப்பட்டது என்பதைச் சொன்னது. 60 லிட்டர் பெட்ரோலும், விசுவ இந்து பரிசத் அமைப்பினர் இருந்த பெட்டிக்குள் ஒரு முசுலீமால் நுழையவே முடியாது.
தங்களுடைய சுய லாபத்திற்காக தங்களுடைய சொந்த அமைப்பினரை கொல்லத் துணிந்தவர்கள் அந்த அமைப்பின் தலைவர்கள்.
என்னை நம்புங்கள்; எனக்கு அவர்களைப் பற்றி நன்றாகத் தெரியும்” என்று பேட்டியளித்திருந்தார்.
தடயவியல் ஆய்வு, எந்தவித எரியும் திரவமும் வெளியே இருந்து உள்ளே ஊற்றப்பட்டதற்கான தடயம் இல்லை எனக் கூறியது.
அந்த வழக்கில் சில முசுலீம்கள் மீது வழக்கு பதியப்பட்டு, தீர்ப்பு வந்துவிட்டது.
தொடக்கம் முதலே கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், இந்துத்துவ காவிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என பலரும் சொல்லிவரும் நிலையில், நீதிமன்றம் பல்வேறு சாட்சியங்களை புறம்தள்ளிய நிலையில், படுகொலை நிகழ்த்திய கும்பலே அதை ஒப்புக்கொண்டுள்ளது.
குஜராத்தில் நான்காயிரத்துக்கும் அதிகமான முசுலீம்களை இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவர், அதன்பின் இரண்டு முறை முதல்வராகிறார், அதன் பின் நாட்டையே ஆளும் பிரதமராகிறார்.
குஜராத் முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு காரணமான பாஜக ,காவி கும்பல் தண்டிக்கப்படவில்லை.
அதுதான் இன்று காவி-பாஜக வன்முறை வெறியாட்டத்துக்கு அடித்தளம்.
-அனிதா
நன்றி: ஜன்தா கா ரிப்போர்ட்டர்
"ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு.
சிபிஐ விசாரணைக்கு தடை இல்லை" .
-உச்சநீதிமன்றம்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை தன்னிச்சையாக இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மேமாதம் 22 ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற அப்பாவி பொது மக்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக முதலில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில் பின்னர் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இதனை தமிழக காவல்துறையே விசாரித்தால் நியாயம் கிடைக்காது.
எனவே மத்திய புலனாய்வு பிரிவு விசாரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாகதூத்துக்குடி மாவட்டச்செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன் மதுரை உயர் நீதிமன்ற வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் மார்க்சிஸ்ட் கட்சி வழக்கறிஞர்கள் ஷாஜி செல்லன், சீனிவாச ராகவன், சுப்பு முத்துராமலிங்கம், வாமனன் ஆகியோர் ஆஜராகி மார்க்சிஸ்ட் கட்சி தரப்பில் வாதிட்டனர்.
விசாணை முடிவில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம்சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது.
மேலும் 13 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சி.பி.ஐ. நியாயமாகவும் பாரபட்சமின்றியும் விசாரணை நடத்த அறிவுறுத்தியுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------