பிண அரசியல்




பிண அரசியலில் பிழைப்பு நடத்தும் பாஜக!
மக்களின் தேசப் பற்றை வாக்குகளாக மாற்றுவோம் .
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு, மோடி அரசின் பாதுகாப்புக் குறைபாடுகளே காரணம் என்று குற்றச்சாட்டுக்கள் வலுத்து வருகின்றன.பாதுகாப்புப் படையினர், ஒரேநேரத்தில், 78 வாகனங்களில்- அதுவும் 2400-க்கும் அதிகமானவர்கள் பயணிக்கமாட்டார்கள். அது ராணுவத்தில் இல்லாத நடைமுறையும் கூட. ஆனால், புல்வாமா சம்பவத் தில் அது நடந்துள்ளது.ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலைபாதுகாப்பு மிகுந்தது. ஒருவேளை பாதுகாப்பு இல்லையென்று வைத்துக் கொண்டாலும், பாதுகாப்புப் படையினரின் வாகனங் கள் செல்லும்போது, தனியார் வாகனங்கள் சாலையில் அனுமதிக்கப் படக் கூடாது என்பது முக்கியமான விதி என்கிறார்கள். புல்வாமாவில் அந்த விதிமீறலும் நடந்துள்ளது.பாதுகாப்புப் படையினரின் வாகனங்களுக்கு ஊடே புகுந்துதனியார் வாகனம் ஒன்று முந்துவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள் ளது.எல்லாவற்றையும் விட, பாதுகாப்புப் படையினர் பயணிக்கும் தகவல், பயங்கரவாதிகளுக்கு துல்லியமாக தெரிந்துள்ளது. இவற்றின் அடிப்படையில், புல்வாமா தாக்குதல் சம்பவத்திற்குபாதுகாப்புக் குறைபாடுகளே காரணம் என்று, உளவுத்துறையின் முன்னாள் தலைவர் விக்ரம் சூட்குற்றம் சாட்டுகிறார். காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக்கும், அதனை ஒப்புக் கொண்டிருக்கிறார். உளவுத்துறை முன்னரே எச்சரிக்கை செய்தபோதும், ‘எங்கே அலட்சியம் ஏற்பட்டது? என்பதை விசாரிக்க வேண்டும்’ என்று அவர் கூறுகிறார்.ஆனால், மத்திய பாஜக அரசும்,அதனை வழிநடத்தும் பிரதமர் நரேந்திர மோடியும், மக்களின் கேள்விகள் எதற்கும் பதில் தரவில்லை. மாறாக, புல்வாமா சம்பவம், தாங்கள் தேர்தல் ஆதாயம் அடைவதற்கான நல்வாய்ப்பு என்ற மனநிலையில், தங்கள் மீதான தவறைமறைத்து, பிரச்சனையை இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பாகமாற்றும் வேலையில் இறங்கியுள்ளனர். குறுகிய தேசியவாதத்தை கிளப்பி விட்டு வருகின்றனர். இஸ்லாமியர்கள் இல்லாத காஷ்மீர், இஸ்லாமியர்கள் இல்லாத இந்தியா என்பதையே தேசியவாதமாக கட்டமைக்கும் இவர்கள், இதனை ஏற்படுத்துவதுதான் பயங்கரவாதத்தை ஒழிக்க வழி,அதற்கு பாஜக மீண்டும் ஆட்சிக்குவர வேண்டும்; மோடி மறுபடியும் பிரதமராக வேண்டும் என்று நாடுமுழுவதும் இந்துப் பெரும் பான்மைவாதத்தை தூண்டி வருகின்றனர்.புல்வாமா சம்பவத்தில் மோடி அரசிடம் கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன. விமர்சிப்பதற்கும் ஆயிரம் காரணங் கள் இருக்கின்றன. எனினும், நாட்டின்ஒருமைப்பாடு என்ற அடிப்படையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் மோடி அரசுக்கு துணை நிற் கின்றன. குறுகிய அரசியல் பிரச்சாரத்தை முடிந்தளவு தவிர்த்து வருகின்றன.ஆனால், புல்வாமா தாக்குதல் நடந்த சில மணிநேரத்திலேயே பாஜக தலைவர் அமித்ஷா, தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு, காஷ்மீர் தாக்குதலில், காங்கிரசை சாடிப் பேசினார். அவரைத் தொடர்ந்து பாஜகதலைவர்கள் பலரும் புல்வாமா சம்பவத்தை வைத்து அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். ‘மீண்டும் மோடி’(ஹழுஹஐசூ சூஹஆடீ) என்று முழக் கத்தை வடிவமைத்துள்ளனர். பாஜகவின் இந்த பிரச்சாரத்தை, கூட்டணியில் இருக்கும் சிவசேனா கட்சியாலேயே சகித்துக் கொள்ள முடியவில்லை.“மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகப் பிரதமர் மோடி போர் தந்திரங்களைக் கையாளவும் தயங்கமாட்டார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே, ஆட்சியாளர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை உண்மையாக்கும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது” என்றுஅக்கட்சி கூறியுள்ளது.
இந்நிலையில்தான், “நாடு முழுவதும் எழுந்துள்ள தேசப் பற்று அலையை வாக்குகளாக மாற்றுங்கள்” என்று குஜராத் பாஜகதலைவர் பரத் பாண்ட்யா, பகிரங்கமாகவே பாஜகவினருக்கு உத்தரவு போட்டுள்ளார்.குஜராத் மாநில பாஜக தலைவராகவும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராகவும் இருக்கும் பரத் பாண்ட்யா, வதோதராவில் செவ்வாயன்று நடந்த, கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட் டத்தில் கலந்து கொண்டுள்ளார். அங்குதான் இவ்வாறு பேசியுள்ளார்.“ஜம்மு- காஷ்மீரில் நடந்த தாக்குதலை நீங்கள் கண்டிப்பாக பார்த்து இருப்பீர்கள். வேறுபாடுகளை மறந்து அனைத்து மக்களும் தேசியவாதத்தில் ஒன்றிணைந்துள்ளனர். பல்வேறு இடங்களில் மக்கள் பேரணி மற்றும் கூட்டம்நடத்தி தேசத்தின் மீதான காதலைகாட்டி வருகின்றனர். தேசிய உணர்வில் ஒட்டுமொத்த தேசமும் ஒன் றாக இணைந்துள்ளனர். இவ்வாறு, தற்போது வீசும் தேசிய அலையை, எவ்வாறு பாஜக-வுக்கு வாக்குகளாக மாற்ற வேண்டும் என்பதை கட்சியினர் யோசனை செய்து அதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும். இந்த அளவிற்கு தேசியவாத அலை இதற்கு முன்பு சாதகமாக அமைந்தது இல்லை. அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூச்சமே இல்லாமல், சிஆர்பிஎப் வீரர்களின்உயிர்த்தியாகத்தை கொச்சைப் படுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளார்.புல்வாமா தாக்குதல் சம்பவம், ஆளும் பாஜக அரசு மீதுஏற்கெனவே சந்தேகப் பார்வையைஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆதாயத்திற்காக, ஆட்சியாளர்களே மறைமுகமாக தாக்குதலை விரும்பினார்களோ? என்று வாதப்பிரதிவாதங்கள் நடந்து வருகின்றன. ஆனால், எதிர்க்கட்சிகளின் ஐயத்தை உறுதிப்படுத்துவதாகவே குஜராத் பாஜக தலைவரின் பேச்சு அமைந்துள்ளது.
====================================================
 ரூ. 550 கோடி மோசடி அனில் அம்பானி குற்றவாளி.
நிலுவைத் தொகையை செலுத்தாத வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சுவீடன் நாட்டைச் சேர்ந்த சோனி எரிக்சன் நிறுவனம் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனத்தின் தலைவர் அனில் அம்பானி தனக்குச் செலுத்தவேண்டிய ரூ.550 கோடியை திருப்பிச் செலுத்தவில்லை என்று கடந்த ஆண்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.

அந்த வழக்கில், சோனி எரிக்சன் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்தும் வரை இந்தியாவை விட்டு அனில் அம்பானியும், உயரதிகாரிகளும் வெளிநாடு செல்ல தடைவிதிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டது.
இந்த வழக்கை விசாரித்தஉச்சநீதிமன்றம் அனில்அம்பானியின் குற்றத்தைஏற்கெனவே உறுதிப்படுத்திவிட்டது. டிசம்பர் 15ஆம் தேதிக்குள் நிலுவைத் தொகையை செலுத்த வேண்டுமென்று கடந்த ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதியே உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

 ஆனால் அனில்அம்பானி உரிய காலத்துக்குள் நிலுவைத்தொகையை செலுத்தாத காரணத்தால், சோனி எரிக்சன் நிறுவனம் அம்பானி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அனில் அம்பானி இவ்விவகாரத்தில் குற்றவாளி என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

சோனி எரிக்சன் நிறுவனத்துக்கு ரூ.450 கோடி நிலுவைத் தொகை செலுத்த வேண்டும்அல்லது அனில் அம்பானி 3 மாதங்கள் சிறை தண்டனைஅனுபவிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.

மேலும் ரிலையன்ஸ் கம்யூனிகேசன் நிறுவனத்தின் இயக்குநர்கள் இருவருக்கு தலா ரூ.1கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரிலையன்ஸ் கம்யூனிகேசன் லிமிடெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?